சீனாவின் மேலாண்மை…. தோழர் ராமகிருஷ்ணன் ராஜேந்திரன்
சீனாவின் மேலாண்மை…. தோழர் ராமகிருஷ்ணன் ராஜேந்திரன்

சீனாவின் மேலாண்மை…. தோழர் ராமகிருஷ்ணன் ராஜேந்திரன்

https://m.facebook.com/photo.php?fbid=2926058497436909&set=a.608386412537474&type=3&notif_id=1585813430396481&notif_t=nf_photo_story&ref=notif

இப்போதெல்லாம் அமெரிக்கா ட்ரம்ப் சைனா மீது பழிபோடுவதை நிறுத்திக்கொண்டது. அவசர கதியில் உடைந்து விழுந்த ‘சைனீஸ் வைரஸ்’ வார்த்தைக்கு வேறு எந்த ‘இனவெறி’ எண்ணமும் இல்லை என்று ஒரு ஜோக்கரை போன்று.சப்பை கொட்டுகிறது.

ஓன்று மட்டும் உறுதியாக சொல்ல முடியும் என்ன தான் சைனா அமெரிக்காவை மிஞ்சும் சக்தியாக தன்னை மாற்றிக்கொள்ள முயற்சி செய்வதாக சொன்னாலும் எப்போதுமே அமெரிக்கா அளவிற்கு நாடுகள் மீது மனிதாபிமானமற்ற போர்களையும், பெரும் பொய்களையும், தீவிரவாத செயல்களையும், தனக்கு இணங்காத தலைவர்களை படுகொலை செய்வதையும், பொருளாதார தடைகளையும் சீன ஏற்படுத்தாது. சைனா கம்யூனிஸ்டு கட்சி முதலாளித்துவம் நோக்கி தற்போது நடை போட்டாலும் சில அடித்தள கொள்கைகள் இன்னும் மிச்சமிருப்பதே காரணம்.

வுஹான் நகரின் சுகாதாரமற்ற சந்தைகள் தான் நோயின் பிறப்பிடம் என அமெரிக்கா குறை கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மட்டுமல்ல கோரோனோ வைரஸ் வைவால்களிடமிருந்து தான் உருவாகியிருக்கும் என்கிறார்கள் உயிரியல் அறிஞர்கள். அமெரிக்காவில் வௌவால்கள் இல்லையா? அவைகளின் சுகாதாரத்தை பேண பட்ஜெட்டில் அமெரிக்கா பணம் ஒதுக்குகிறதா? பிறகு ஏன் சைனா மீது அமெரிக்கா பழி போட வேண்டும்? எல்லாம் பெரியண்ணன் அரசியல் தான்.

இங்கே சில மோடி பக்தர்கள் வுஹான் நகர மாமிச சந்தையை காணொளி போட்டு காட்டுகிறார்கள். கொரோன வைரஸின் பிறப்பிடம் இந்த சந்தை என்பதைப்போல சொல்லாமல் சொல்கிறார்கள். நான் அவர்களை அழைக்கிறேன். எங்கள் குமரி மாவட்டத்தில் தேசீய நெடுஞ்சாலை அருகில் ஒரு மீன் மற்றும் காய்கறி சந்தை இருக்கிறது. நீங்கள் பெத்தடின் அடித்து பேருந்தில் தூங்கிக்கொண்டு அந்த வழி வந்தால் கூட அதிர்ந்து விழித்துவிடுவீர்கள் அவ்வளவு மூக்கை துளைக்கும் குடலை கக்கும் நாற்றம். உலகத்தில் உள்ள எந்த கொடூர தீவிரவாத நோய்க்கிருமியை விடவும் மோசமான கிருமி உருவாக வேண்டுமென்றால் அது ‘களியக்காவிளை’ சந்தையில் தான் உருவாக வேண்டும். ஆனால் எப்படியோ அந்த நிலை இதுவரை வரவில்லை. அப்புறம் எப்படி வுஹான் சந்தைமீது பழி போடவேண்டும்?

இல்லை இல்லை. காரோணவைரஸ் விடயத்தில் சீன மீது உலக சுகாதார அமைப்பு கூட பழிபோடவில்லை. அப்படி இருக்கும்போது அமெரிக்காவின் பொய்யை, மோடியின் கைக்கூலிகள் பொய்யை வெறுப்பு அரசியல் கூத்தாக மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *