சில கடந்தகால தவறுகளை தெரிந்துக் கொள்ள
சில கடந்தகால தவறுகளை தெரிந்துக் கொள்ள

சில கடந்தகால தவறுகளை தெரிந்துக் கொள்ள

நான் சமீபத்தில் படித்த புத்தகம் ,,,-உறவு.கா.சொ.பாலசுப்ரமணியன்-

ஜனவரி 15, 2017/CPIMLCHIDAMBARAM

நான் சமீபத்தில் படித்த புத்தகம் ,,,

இப்புத்தகம் இடதுசாரி இயக்க வரலாற்றில் படித்து விமர்சிக்க வேண்டிய ஒன்று என்றே கருதுகிறேன்.

இப்புத்தகம் தோழர் கனுசன்யாலின் வலது சந்தர்ப்பவாதம் குறித்து பேசுகிறது.அதனொடு அவ்வியக்கத்தில் பணியாற்றி விலகிய தமிழக தோழர்களை பற்றி பேசுகிறது.குறிப்பாக புரட்சி பண்பாட்டு இயக்கத்தில் இயங்கிய பேரா.கேசவன்  பேரா.கல்யாணி
பேரா.கோச்சடை பேரா. Marx Anthonysamy
ஆய்வாளர் எஸ்விஆர்  பேரா.பழமலை மறுறும் மேலும் தோழர்கள்  சித்தானந்தம் ஏலகிரி இராமன் என  பலரை பற்றி முன்னுரையில் குறிப்பிடுகிறது.
தத்துவஞான ரிதியாக விமர்சனங்களை முன்வைக்கிறது.

தங்கள் அமைப்பு சிதைவதற்கு காரணம்
கலைப்பு வாதம் காரணம் என்கிறது.

கலைப்புவாதம் இருபதாண்டுகளாக எங்கள் அமைப்பில்  செல்வாக்கு செலுத்தியதன் விளைவே பல பிளவு பின்னடைவுகளை சந்தித்தது என குறிப்பிடுகிறது.
மேலும் கலைப்பு வாதம் சர்வதேச புலப்பாடு என்கிறது.கலைப்புவாதம் பேசுபவர்கள்
வர்க்க நிலையில் குட்டி முதலாளி வர்க்க சேர்ந்தவர்களாக இருப்பதாக கூறுகிறது.

கலைப்புவாதத்தின் ஊற்றுக்கண் கோர்ப்பசேவ் துவங்கி வைத்ததாக கூறுகிறது.

கலைப்பு வாதம்  மார்க்சியத்தின் இயக்கவியல் பொருள்முதல்வாதம் வரலாற்று பொருள் முதல்வாத அடிப்படைகளை சிதைப்பது.மார்க்சியத்தோடு கான்ட்டின் சிந்தனைகளை கலப்பது – அதாவது மார்க்சியத்தை வளப்படுத்துவது என்ற பேரில் மார்க்சியவாதிகளின் முயற்சியாகிய சமூக மாற்றத்தை தடுப்பது நோக்கம் என குறிப்பிடுகிடுகிறது.

1905ல் ரசியாவில் கலைப்பு வாதம் எப்படி தலைதூக்கியதை லெனின் எப்படி எதிர்கொண்டார் எனவும் குறிப்பிடுகிறது.

இந்தியாவில் கலைப்புவாதம் குறித்து பேசும் போது பு ப இ கும்பல் கலைப்பு வாதத்தை கையில் எடுத்தது என்கிறார்.

தமிழகத்தில் பின்நவீனத்துவத்தை
அறிமுகப்படுத்தியவர்கள் அ.மார்க்சு
ரவிக்குமார் என்பது உலகறிந்த நிகழ்வு.

பின்நவீனத்துவம் குறித்த உறவு இதழ்களில் 2,4,6 களில் விமர்சித்துள்ளதும்  குறிப்பிடத்தக்கது.

பு ப இ அமைப்பு 87 களுக்கு பின்னால் செயல் இழந்து இருந்தது.அதற்கு காரணம் போல்ஷிவிக் கட்சியே காரணம் ,,,
கட்சிக்குள் இரு வழிப்போராட்டம் நடக்கிறது
(தத்துவ போராட்டம் ) பொறுமையாக இருங்கள் என்றனர்.

பாட்டாளி வர்க்க கட்சி உயிர் துடிப்புடன் செயலாற்ற
தத்துவ போராட்டம் அரசியல் போராட்டம் நடைமுறை கிளர்ச்சி என மும்முனைகளில் இருக்க வேண்டும் என ஆசான்கள் கூறுகின்றனர்.ஆனால் அது பற்றிய தெளிவு போல்ஷிவிக் கட்சி தலைமைக்கு இல்லை.
அதனால் தான் தத்துவ போராட்டம் நடக்கும் போது மற்றைய நடவடிக்கைகளை கைவிட்டது அல்லது அலட்சியப்படுத்தியது.

பு ப இ யில் இருந்தவர்களின் அரசியல் அறிவை வளர்க்கும் நிலையில் கட்சி தலைமை இல்லை .கீழ் அணியில் மாறுபட்ட வர்க்க கருத்து போக்கு தோன்றினால் அதை தடுக்க வேண்டிய பொறுப்பு தலைமைக்கு உண்டு.அதை செய்யாமல் ஒதுங்கியதே பல கருத்துப்போக்குகள் தோன்ற வாய்ப்பானது.இதிலிருந்தே அமார்க்சின் பயணம் தோன்றுகிறது.
அமார்க்சின் இம்முயற்சியை எதிர்த்து கேசவன் நானும் கூட போராடியது கடந்த கால வரலாறு.தோழர் கல்யாணி கோச்சடை போன்றவர்கள் நடைமுறைக்கு அழுத்தம் தந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களையும் பின்நவினத்துவவாதி என்றபடி பு ப இ கும்பல் என பேசுவது அபத்தமானது.கண்டனத்துக்கு உரியது.
இதற்கு ஆதாரத்தை காண முயல்வோம்.

பு ப இ யிலிருந்து தான் அதிர்வு அமைப்பு தோன்றியது.அதன் வெளியீடுகளில் ஒன்று கட்சி திட்டம் ஒப்பீடு பற்றியது.அதில் சிபிஐ  சிபிஐ எம் மற்றும் எம்எல் குழுக்கள் பற்றி பட்டியலிடுகிறது.இதை முன் வைத்தவர் பேரா.தங்கவேல் சாமி என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லா இடதுசாரி அமைப்புகளும் சனநாயகப்புரட்சியே பேசுகிறது.அதை வந்தடையும் முறையில் தான் வேறுபடுகிறது.
சிபிஐ சிபிஐ எம் வலது விலகல் என்றால் எம்எல் இடது விலகல் ஆகும்.உலகமயச் சூழலில் முன்பை விட சோசலிசப்புரட்சியே என்ற நோக்கில் எமது நிலை இருந்தது.அதை வெளிப்படுத்துவதாகவே அதிர்வில் இரு  அமர்வில் விவாதிக்கப்பட்டது எமது கட்டுரை திருத்தல்வாதம் பற்றிய கட்டுரை என்பது குறிப்பிடத்தக்கது.கருத்தை அணுகும் முறையில் அமார்க்சு ரவிக்குமார் எமது நிலையை ஆதரித்தனர்.அப்போது நிறப்பிரிகை கருத்துக் கொண்ணோட்டம் மெல்ல மெல்ல வெளிப்பட்டது.இதையும் குறிப்பிட்டு அமார்க்சும் நானும் சிபிஐ ஏசெண்ட் வேலை என தங்கவேல்சாமிகுறிப்பிட்டார்.இதற்கு பின்னர்  அமைப்பு குலைந்தது,இதில் கேசவன் எமது கருத்து விவாதிக்க தக்கது என நிலையெடுத்தார்.இந்நிலையே இல கோவிந்தசாமி கேசவன் நானும் இணைந்து பத்திரிகை துவங்கலாம் என்ற கருத்துக்கு பின்னாளில் ஏற்பட்டது.அது நிறைவேறும் முன்னரே கேசவன் காலமாகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரா.கல்யாணி கல்விசீர் கேடுகளை எதிர்த்து மக்கள் கல்வி இயக்கம் தொடங்கினார்.அந்த அமைப்பையே  போல்ஷிவிக் கட்சிக்கு  எதிரானது என்கிறார்.

பின் நவீனத்துவம் குறித்து
######################

இத்தத்துவ போக்கு வெளிப்பட காரணம்
போல்ஷிவிக் கட்சி குறிப்பிடுவது போல
குருச்சேவ் கண்ணோட்டம் அதன் உச்சமாக கோர்ப்பசேவின் கண்ணோட்டம் என்பதில் மாற்று கருத்து இல்லை.

கோர்ப்பசேவ் கருத்து செல்வாக்கு செலுத்திய நிலையில் தான் உலகமயம் முன்னுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகமயம் என்பது தற்கால முதலாளியத்தின் கொள்கை.இதை இடதுசாரிகள் எதிர்ப்பது என்றால் முதலாளி வர்க்க எதிர்ப்பு கேள்விக்குறியதே,,,,,,

உலகமயத்தை எதிர்ப்பது என்றால் அதற்கு முந்தைய முதலாளியக் கொள்கை பரவாயில்லை ஆதரிக்க தக்கது என்ற கண்ணோட்டமாக அமையாமல் எதிர்ப்பு அரசியலை –  நிலைப்பாட்டை மேற்கொள்வது அவசியம்.அதாவது வர்க்க எதிர்ப்பு  முதலாளி வர்க்கத்தின் ஒரு பகுதி கொள்கையை  எதிர்ப்பதாகிறது.க
இன்னும் சொன்னால் உலகமயம் சந்தை பொருளாதாரத்தை கொண்டு வருகிறது என்றபடியும் அரசு முதலாளிய நிறுவனங்களை தனியார்மயமாக்காதே என்பதும் ஆகிறது.இருப்பை பாதுகாப்பது – பாட்டாளி வர்க்க கட்சி கொள்கையாக இருக்க முடியாது.முதலாளிய மாற்றத்தை உள் வாங்கி கொண்ட சமூக மாற்றம் என்பதே சரியானது.உலகமயக் கொள்கைக்கு  எதிர்ப்பு – அழுத்தம் முதலாளி வர்க்க எதிர்ப்பை விட முதலாளி வர்க்க கொள்கையை எதிர்க்கிறோம் முதலாளிய வர்க்கத்தை ஆதரிக்கும் என்றாகிறது.

குருசேவ் கண்ணோட்டம் என்பது அவரின் கருத்து மட்டுமல்ல புரட்சிக்கு பிந்தைய விவசாயிகளை கசக்கி பிழிந்ததன் தொடர்ச்சியாக சலுகை பெற்ற பாட்டாளி உருவாகியதன் வெளிப்பாடே ஆகும்.இப்போக்கு தான் கிராமப்புறங்களில் விவசாயிகள் மத்தியில் தனிவுடைமை சிந்தனை வெளிப்பட ஊற்றாகும்.இதை சிங்கிஸ் ஐத்மாத்தவின் நாவல்களான குல்சாரி அன்னைவயல் உள்ளிட்ட நாவல்களில் உருக்கமாக விவரிக்கப்பட்டதை காணலாம்.இதை மாவோவின் மாபெரும் விவாதம் சோசலிச பொருளாதார விமர்சனத்தில் காண முடியும்.

தனிவுடைமைபொருள் உற்பத்தி வளர்ந்து வந்ததன் வெளிப்பாட்டின் உச்சமே கோர்ப்பசேவையும் தாண்டி  எல்ட்சினிடம்  காண்கிறோம்.

உலகமயம் ரசிய வீழ்ச்சியிலிருந்து நிலைபெறுகிறது.சீனத்தில் சந்தை பொருளாதார வளர்ச்சி என்பதிலும் நிலைபெறுகிறது.

உலகமயம் சோசலிச எதார்த்தம் செத்து விட்டது என பிரகடனப்படுத்தியது.இதை அமார்க்சு முன்னெடுத்தார்.அந்த முயற்சியை எதிர்த்து மார்க்சிய நிலையிலிருந்து போல்ஷவிக் கட்சி வாய்ப்பேச்சுகளில் தான் முன்னிருத்தியது.அதுவும் தத்துவ ரிதியாக அல்ல.அவதூறுகள் தனிமனித தாக்குதல்கள் மூலம் ,,,,,

பின்வீனத்துவ விமர்சனத்தை இருபத்தி ஐந்து ஆண்டுகள் கழித்து பேசுவது #போல்ஷிவிக்_தலைமையின் தத்துவ அறிவு வெளிச்சமிட்டு காட்டுவதே ஆகும்.

பின்நவீனத்துவம் என்பது உறவு – 4ல் குறிப்பிட்டது போல இம்மானுவேல் கான்ட்டோடு தொடர்புள்ளது.ஏன் அதோடு மட்டுமல்லாது தெரிதா ஈகிள்டனுடன் தொடர்புள்ளது என்பதே.

கலைப்புவாதம் என்பது அமைப்பு துறை வெளிப்பாடு.

கலைப்புவாதம் ஆழ்ந்து பார்த்தால் மார்க்சிய வரலாற்று பொருள் முதல்வாதத்தை புறக்கணிப்பதே ஆகும்.இன்னும் சொன்னால் சமூக எதார்த்தத்தை வெளிப்படுத்துவது பற்றியதாகும்.இது பழைய கட்சி நிலைப்பாடு அதை வந்தடைய உதவும் கருத்து கண்ணோட்டம் பற்றியது என்பது தெளிவு.
மாலெ இயக்கம் பல கட்சி – குழு கண்ணோட்டத்திற்கு இடமளித்தே இருந்தது / இருக்கிறது என்பது நடைமுறை எதார்த்த உண்மை,

உலகமயத்தை எதிர் கொள்வது – சமூக மாற்றத்தை முன்னெடுப்பது குறித்த பல மாற்று கருத்து போக்குகளின் வெளிப்பாடு எனலாம்.அது  குறித்த பரந்த விவாதமே தேவை.போல்ஷிவிக் கட்சிக்கு மாறுபாடு கொண்டதாக பல அமைப்புக்கள் உள்ளன என்பதே உண்மை. அவர்களது கருத்து தங்கள் அமைப்பு கருத்து வேறுபடுகிறது என்பதாலேயே எதிரி என சொல்ல முடியுமா?

தவறான நிலைப்பாடு கொண்டவர்கள்
நடைமுறையில் சரியாக இருக்ககூடும் என்பதே ஆகும்.
ஆனால் எதிரியாக பார்க்கின்ற நிலை குறுங்குழுவாதம்.தனது கருத்தை வர்க்க கருத்தாக மாற்ற இயலாத தன்மையும் கூட,,,
ஏன் அழுத்தமாக தனது கருத்தே சரியானது என்பது சரியானதும் அல்ல.அது மார்க்சின் சிந்தனை முறையும் அல்ல.ஏனென்றால் எந்த ஒரு கருத்திற்கும் வர்க்க மதிப்பீட்டிற்கும் மார்க்சியம் பெரும் பான்மையாக சாராம்சமாக என்பதற்கே அழுத்தம் தருகிறது.இந்த கருத்திலிருந்து விலகுவது
பின் நவீனத்துவம் சொல்லும் கருத்திற்கே ஈட்டுச் செல்லும்.பின் நவீனத்துவம் – சராம்சப்பண்புகள் இல்லை என்கிறது.குறிப்பாக  வர்க்க சாராம்ச மதிப்பீட்டை – அதாவது 70 வேலை திட்டமதிப்பீடை மறுக்கிறது என்பதே,,,,
அந்த மதிப்பீடும் நடைமுறை எதிர்பார்த்த பலனை தரவில்லை எனவே எதார்த்த வாதம் காலவதியாகிவிட்டது என சொல்கின்றனர்.
#எதிர்பார்த்த பலனை தராவிட்டாலும் #போல்ஷிவிக் நிலைப்பாடு சரியானது என்கிறது.

காலன்துரையின் ஆதிசங்கரரின் வழிமுறைக்கும் பின் நவீனத்துவ வழிமுறைக்கும்  தத்துவஞானத் துறையில் மாறுபாடு இல்லை.(காலன் துரை  பொருள் மாறிக் கொண்டே உள்ளது.இயக்கமே பொருளின் வெளிப்பாடு,சாரம்சமாக வேறுபட்ட பண்பு இருப்பதாக கருத முடியாது.)
எனவே போல்ஷிவிக் நிலைப்பாடு சரி என சொல்கிறார்.போல்ஷிவிக்
வர்க்க மதிப்பீட்டை ஏற்றுக் கொள்ளும் காலன் துரையின்  புரட்சிகர மக்கள் பாசறைக்கும்  போல்ஷிவிக் அமைப்பிற்கும் எ்னன வேறுபாடு?காலன் துரை போல்ஷிவிக் நிலைப்பாடே எனது நிலைப்பாடு என்கிறார்.பார்க்க Ravindran பதிவு ,,,,,

போல்ஷிவிக் கட்சிக்கு தத்துவஞான அணுகுமுறையில் காலன் துரையின்  அணுகு முறையில் மாறுபடுகிறது என்றே பொருள் கொள்ள முடியும்.

போல்ஷிவிக் கட்சி கலைப்பு வாதம் என்பதை அமைப்பு துறை சார்ந்ததாக பார்ப்பது தவறு என்பதே.சமூக மதிப்பிட்டில் மாறுபடுகிற சக்தியில் எதார்த்த சமூகத்தில் காணப்படுகிறது என்பதே உண்மை.அச்சக்திகளைஒன்றுபடுத்துவதே முதன்மைப்பணி.அதை விடுத்து தங்கள் அமைப்பே சரி என்பதே என்பது ஸ்டினர் கருத்திற்கே ஈட்டுச்செல்லும்.

1905 ல் லெனின் சமூக மதிப்பீடு மற்றும் போர்தந்திர பிரச்சனைகளை தீர்த்து எத்தகைய சமூக மாற்றம் தேவை அதைச் செய்ய எப்படிப்பட்ட  அமைப்பு தேவை என்பதில் கவனம் செலுத்தினார்.இந்த உண்மையை கவனம் கொள்ளாமல் புரட்சியாளர்களை அணி திரட்டுகிற பணியை புறக்கணிப்பது அதையே நியாயப்படுத்துவது புரட்சிகர பணி அல்ல

தொடரும்.

2

போல்ஷிவிக் கட்சி வெளியிட்ட கனுசன்யால் நூல் விமர்சனம் தொடர்ச்சி,,,,,

கட்சியை விட்டு வெளியேறியவர்கள் சிறு உடைமை வர்க்க பிரதிநிதிகள் என கூறுகிறது.இதில் மாற்று கட்சிக்கு போன தோழர் சித்தானந்தம் ஏலகிரி இராமன் இல.கோவிந்தசாமியும் அடக்கம்
அமார்க்சு பேரா கல்யாணியும் அடக்கம்.
தங்கள் கட்சியின் நிலைப்பாட்டிற்கு மாறுபட்ட கருத்து கொண்டோர் எல்லோரையுமே குறிப்பிடுகிறது.அதே நேரத்தில்
90 களில் கோர்ப்பசேவ் கிளாஸ்ட்நாஸ்ட்டை தொடர்ந்து கலைப்பு வாதம் தோன்றுவதாக சொல்கிறது.

கட்சி பிளவு பின்னடைவை சந்திப்பதற்கு கலைப்பு வாதமே காரணம் என்றால்
தமிழகத்தில் எம்எல் இயக்கம் எஸ்ஒசி. டிஎன்ஒசி .விடுதலை . தமிழரசன் அணி என பிளவுபடவும் காரணம் என்ன என்று கேள்வி எழும்.

அதே போல் அகில இந்திய அளவில் எம்எல் இயக்கம் பிளவு பட காரணம் என்ன என்றும் கேள்வி எழும்.அதற்கு கலைப்பு வாதம் காரணம் இல்லையா என்ற கேள்வி எழும்,
இது குறித்து கவனமாக பார்ப்போம்.

பிளவு பின்னடைவு குறித்து
###########################

சமூக இயக்கம் என்பது கட்சிகள் தோற்றம் அதன் பணிகள் எல்லாமே இயற்கையின் வரலாற்றிலிருந்து வேறுபட்டது.அதாவது இயற்கையின் வரலாற்றில் புயல். மழை. பூகம்பம் .நிகழ்வுகள் ஏற்பட #உணர்வற்ற இயற்கையின் ஒன்றின் மீது ஒன்று தாக்குதலின் காரணமாக ஏற்பட்டது எனலாம்.

ஆனால் சமூக வரலாற்றில் செயலாற்றும் மனிதர்கள் மக்களுக்காக பணியாற்றும் நடவடிக்கைகள் #உணர்வுபூர்வமான
குறிக்கோளின் வெளிப்பாடு என்றே கூற முடியும்.சமூகத்தில் குறிக்கோள் இல்லாமல் தனிமனிதர் வாழ்க்கையே இல்லை.வேறுபட்ட மனிதர்கள் – வேறுபட்ட வர்க்க சக்திகளாக இருந்தாலும் அவர்களுக்கு இடையிலான உணர்வுபூர்வமான நடவடிக்கையாகவே – வர்க்கப் போராட்ட வரலாறே சமூக வரலாறாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக கட்சி என்பது வர்க்கப்போராட்டத்திற்கு தலைமை தாங்கும் ஒன்று என்பது தெளிவு.

ஆகவே சமூக வரலாற்றில் #உணர்வுபூர்வமான குறிக்கோள் இல்லாமல் செயல் இல்லை என்பது மட்டும் உறுதியாகிறது.

சமூக வரலாற்றின் தலைவர்களாக திறமை வாய்ந்த மனிதர்களே முக்கிய பங்காற்றுகிறார்கள் என்பது தெளிவு.
அவர்களது கருத்தில் முன்வைக்கப்படும் – குறிக்கோள் – சித்தாந்த நடவடிக்கைகள் பெரும்பான்மை மக்களின் நலனை பிரதிபலித்தால் அவர்கள் பின்னால் மக்கள் திரளுவர் என்பதே ,,
தலைவர்கள் முன்வைத்த கருத்துக்கள் குறிக்கோள் அதை வெளிப்படுத்தும் விளக்கங்கள் எல்லாமே அன்றைய கால சமூக சூழலில் கருக்கொண்டவை என்பதை மறுக்க முடியாது.அதில் சமூக எதார்த்தத்தை சரியாக புரிந்து கொண்டு வெளிப்படுத்தினால் முன்வைக்கப்பட்ட குறிக்கோளை நோக்கி முன்னேறுகிறோம்.
#இலக்கை அடைந்த பின்னர் அப்போதைய சூழலில் புதிய பிரச்சனைகள் எழுகின்றன.
இப்படி தான் சமூக நடவடிக்கைகள் அமைகின்றன.

இலக்கை நோக்கி செயல்பட்ட இயக்கம் #பிளவை_பின்னடைவை சந்திக்க நேர்ந்தால் அதற்கு காரணம் என்ன என நமது #புரிதல்_மதிப்பீடு குறித்து பரிசீலிக்க வேண்டிய ஒன்றாகும்.இப்படி தான் மாலெ இயக்க செயற்பாடுகளை காண வேண்டி உள்ளது.

மாலெ இயக்கம் #தவறுக்கு_காரணம் என #கண்டுபிடித்து_இலக்கை_அடைவதன் ஒரு பகுதியாக – முயற்சியின் #விளைவாக_பல_குழுக்களாயின எனலாம்.

இப்படி பார்த்தால் பல அமைப்பு குழுக்கள் தோன்ற அமைப்பு பிரச்சனையாக பார்க்க முடியாது.70 வேலைத்திட்டத்தை பரிசீலித்து முன்னேற வேண்டும் இலக்கை அடைய #தங்களது_கடந்த_கால படிப்பினையுடன் கூடிய சமூக எதார்த்தம் பற்றிய மதிப்பீடே பல அமைப்பாக காரணம் எனலாம்.

இந்த பிரச்சனை தத்துவார்த்த பிரச்சனையாகும்.அதாவது சமூகத்தை
அறிவது நமது தேவைக்கு ஏற்ப மாற்றுவது பற்றியதாகும்.

மார்க்சியம் சமூகத்தை பெரும்பான்மையாக சாராம்சமாக மட்டுமே அறிய முடியும்.
மார்க்சியமல்லாத தத்துவஞானம்
குறிப்பாக நாம் முன்பே பார்த்தது போல் இன்றைய பின் நவீனத்துவத்திற்கு அடித்தளமான சித்தனை கான்ட்டின் சிந்தனையாகும்.அவரின் வாரிசே தெரிதா போன்றவர்கள் .இந்திய சூழலில் ஆதிசங்கரர் சிந்தனை எனலாம்.ஆதி சங்கரர் சிந்தனை மரபை தூக்கி பிடக்கும் காலன்துரை மாலெ இயக்கத்தின் போல்ஷிவிக் அமைப்பின் வேலைத்திட்டத்தை சரி என்பவர்.இந்த சிந்தனை கொண்டவர்கள் #துல்லியமாக_அறிதல் என சொல்வர்.ஆனால் அது எதார்த்த்தில் சாத்தியமில்லை எனவே சமூகத்தை அறிய முடியும் என சொல்லிக் கொண்டே அறிய முடியாது என்ற சிந்தனைக்கு தானே சாட்சியாக உள்ளனர.எனவே சமூக மாற்றம் என்பது சாத்தியம் இல்லை என்பதை கருத்தியல் அம்சமாக சுருக்கி விடுகின்றனர்.

ஆனால் மார்க்சியம் சமூகத்தை பெரும்பான்மையாக சாராம்சமாக அறிய முடியும்.நாம் அறிந்தால் நமது தேவைக்கு ஏற்ப மாற்ற முடியும்.
நமது புரிதல் குறைவு போதுமானதாக இல்லாமல் போனால் – அதுவும் சமூக மாற்ற நிகழ்விற்கு தங்கள் பின்னால் போதுமான சக்திகளை திரட்ட முடியாமல் போனால் இலக்கை அடைய முடியாது என்றே கூறுகிறது.

மாலெ இயக்க முயற்சி பின்னடைந்தது என்றால் என்ன பொருள்.?
மாலெ தலைவர்களிடையே சரி தவறை பற்றிய விமர்சனங்களே பல அமைப்பாக நீடிக்க காரணம்.
சாரு பற்றி கனுசன்யல் பற்றி ஏஎம்கே பற்றி இன்னும் எண்ணற்ற தலைவர்கள் பற்றி பரஸ்பரம் நடைமுறை நடவடிக்கைகள் சர்ச்சை தொடர்கிறது.இதே போல்
தான் தமிழக அளவில் மாலெ இயக்கம் எஸ்ஒசி டிஎன்ஒசி டிஎன்எம்எல் தமிழரசன் அணி
விடுதலை அணி மக்கள் விடுதலை அணி
பல கூறுகளாக பல அமைப்பு தோன்ற
பல சர்ச்சைக்குறிய அம்சங்களாக இருக்கின்றன.இவ்வமைப்புகளுக்குள் பிளவிற்கு இட்டு சென்ற காரணிகள் பல என்றாலும் சாரமாக #எதார்த்த_சமூக_மதிப்பீடு பற்றியசர்ச்சைகளே முக்கிய பங்கு வகின்றன எனலாம்.

ஆகவே #மாறுபட்ட_புரிதல்களே
#பல்வேறுபட்ட_அமைப்பு புரிதல்களேஅடித்தளமாகிறது தெளிவு.இதை
குறிப்பாக சொன்னால் விவசாயிகள் பிரச்சனை தொழிலாளர்களை திரட்டுவது பற்றிய பிரச்சனை பல்வேறு பட்ட அரசியல் நடவடிக்கைகள் தேசிய இன ஒடுக்கு முறை
பற்றியது சர்வதேச அரசியல் நிலைமை பற்றியது சாதியப் பிரச்சனை ரசிய சீனா சோசலிச நாடா என பல வற்றை சொல்லலாம்.

சமூக மாற்றத்தை நோக்கி முன்னேற வேண்டுமெனில் ஆரோக்கியமான விவாதம் வேண்டும்.அதை முன்னெடுப்பது முக்கியபணியாகும்.

பல அமைப்புகளும் அதன் தலைவர்களும் அவர்களது கடந்த சமூக மாற்ற முயற்சியும் செயல்பாடும் அவர்களது அர்ப்பணிப்பு தியாகம் இவற்றையும் மீறி அவர்கள் முன்வைத்த மதிப்பீடுகள் பரிசீலிக்க வேண்டும் என்பதே,விவாதத்தை முன்னெடுக்க வேண்டும்.இத்தகைய முயற்சிகளில் உணர்ச்சிவயப்படாமல் அறிவுபூர்வமாக அணுக வேண்டியது அவசியம்.

சமூக சக்திகளை மதிப்பிடுவது சமூக விஞ்ஞானத்துறை சம்பந்தப்பட்டது.

சமூக மாற்ற சக்திகளின் நிலைப்பாடுகள் உணர்வுபூர்வமான வெளிப்பாடு.இந்த #உணர்வுகளை_கவனம்_கொள்வதே_தத்துவஞானியின் பணியாகும்.

மேலோட்டமாக அமைப்புகளுக்கு இடையேயும் தனி நபர்களுக்கு இடையேயும்
#தோழமையற்ற விவாதங்கள் அவதூறு பரப்புவதாகவே அமையும்.

போல்ஷிவிக் கட்சி தங்கள் அமைப்பில் இருந்த வரை பாட்டாளி வர்க்க சக்தி என்றும்
வெளியறினால் குட்டி முதலாளித்துவ சக்தி
தொண்டு நிறுவன பணியாளர் என்பதும் சிஐஏ ஏசென்ட் தூரோகி திருத்தல்வாதி பொதுப்பட அவதூறு செய்வது மார்க்சிய தத்துவ ரிதியான அணுகு முறை அல்ல.

மார்க்சியம் பாட்டாளி வர்க்கத்தையே தலைமை சக்தி என்கிறது.
அதாவது சொத்துவுடைமையற்ற வர்க்கம்.அதன் சிந்தனை விருப்பு வெறுப்புகளை முன்னிறுத்தாமல் இயல்பாக பார்க்கிறது.பெரும்பான்மையாக சாராம்சமாக நான் என்ன செய்வேனோ அதை தான் என் இடத்தில் நீ அமர்ந்தாலும் செய்ய முடியும் என்றபடி கவனமாக சொல்லும்.#நான் என்பதற்கு அழுத்தம் தராது.அப்படி நான் என்பதற்கு அழுத்தம் தருபவர்கள் பாட்டாளி வர்க்க சக்தி அல்ல.எனவே #தனது_உணர்வு என்பதற்கு அழுத்தம் தருபவர்கள் முதலாளிய வர்க்க சிந்தனைக்கு அடித்தளமான கரு வடிவிலான சிறு உடைமை வர்க்க சிந்தனையே ஆகும்.

போல்ஷிவிக் அமைப்பு தனது அமைப்பில் இருந்த வரை தனி நபரையும் சிறு குழுவாகி அமைப்பானாலும் பாட்டாளி வர்க்க சக்தி இல்லை குட்டி முதலாளிய அமைப்பு என்பது பாட்டாளி வர்க்க சிந்தனை கொண்ட அமைப்பு அல்ல என்பது தெளிவு.

தொடரும்.
3

போல்ஷிவிக் கட்சியின் கனுசனயால் சந்தர்ப்பவாத ,,,,
விமர்சனம் – 3

கலைப்புவாத எதிர்ப்பு போராட்டம் தத்துவ போராட்டமே ஏன் அகநிலை வாத எதிர்ப்பு போராட்டமே
################################

நாம் கலைப்புவாதம் குறித்தும் அதன் தொடர்ச்சியாக மாலெ இயக்கத்தில் பிளவு
பின்னடைவு குறித்து பார்த்தோம்.

இதிலிருந்து நாம் தெளிவது
கலைப்பு வாதம் என்பது பொதுவுடைமைக் கட்சியில் சமூகத்தை அறிவது என்பதற்கும் அறிய முடியாது ( ஏற்கனவே அறிந்ததே போதும் ) என்பதற்கும் இடையிலான போராட்டமே ஆகும்.
இதை வேறு வார்த்தையில் சொன்னால்
ஒரு கட்சி நாளும் சந்தித்து வரும் சமூக மாற்றத்தை யொட்டி கட்சி கொள்கை குறிக்கோள் திட்டம் மாற்றம் வேண்டுமா வேண்டாத என்ற பிரச்சனையாகும்.

மார்க்சிய தத்துவஞானம் என்பது விஞ்ஞானங்களின் விஞ்ஞானம் என்பதை மறக்க கூடாது.காலச்சூழலுக்கு ஏற்ப வளர்த்தெடுத்து பயன்படுத்த வேண்டும் என்ற நமது ஆசான் கூறி வந்துள்ளனர்.

ஒவ்வோரு தத்துவஞானியும் – மார்க்சிய தத்துவஞானியும் உட்பட தான் சொல்வதே உண்மை சரியானது அதை ஏற்றுச் செயல்படுவதே சமூக மாற்றத்திற்கு பயன்படும் என்றே தனது கருத்தை வலியுறுத்தி கட்சியிலும் கட்சிக்கு வெளியிலும் போராடுகிறான்.
இது பொதுவுடைமை கட்சியில் உள்ள மார்க்சியவாதி ஒவ்வோருவருக்கும் பொருந்தும்.தான் அறிந்தது அனுபவத்தில் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்றபடி கட்சியில் தனது சிந்தனை கருத்தை
வெளிப்படுத்துகிறார். இது மாறுபட்ட அறிதல்களுக்குக்கு இடையிலான #உணர்வுபூர்வமான போராட்டமாகும்.இது இல்லையெனில் கட்சியின் உயிரோட்டம் இயக்கம்.செயலற்ற தன்மைக்கு செல்லும்.இதை தனி நபர் உணர்வு சம்பந்தமான போராட்டமாக குறுக்காமல்
அறிவுபூர்வமான போராட்டமாக மாற்ற வேண்டும்.இதை மாவோ வார்த்தையில் சொன்னால் புலனறிவு மட்டத்திலிருந்து பகுத்தறிவு மட்டத்திற்கு உயர்த்துவதாகும்.

ஆகவே கட்சியில் மாறுபட்ட கருத்துப்போக்கிற்கு இடையிலான போராட்டத்திற்கு தலைமை தாங்குபவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.உணர்ச்சிவயமாக தனிநபர் பிரச்சனையாக கையாள்வது அமைப்பு பிளவிற்கு ஈட்டுச் செல்லும்.இது தான் இந்திய பொதுவுடைமை இயக்கத்தில் பீடித்துள்ள நோயாகும்.இந்த நோய் தாக்குதல் விடுபட கூடுதல் கவனம் வேண்டும்.
தலைவர்கள் சமூக புறநிலைமைகளை #தனது சிந்தனை – கருத்துக்களை அகநிலையில் கட்சியில் வெளிப்படுத்துகிற நடவடிக்கையுமாகும்.இதை மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அகநிலை வாதத்திற்கு எதிராக போராடுவோம் என சொல்ல நேர்ந்தது என புரிந்து கொள்ளலாம்.
சமூக மாற்ற முயற்சியில் அகநிலையில் – அதாவது #கட்சி_பலவீனமாக இருக்கையில்
மிகுந்த முக்கியத்துவம் உடையது.

இந்த அகநிலை வாதம் எனும் – கலைப்புவாதம்
இந்திய பொதுவுடைமை கட்சி தொடங்கி மார்க்சிஸ்ட் கட்சி மாலெ கட்சி அதிலும் பல குழுக்கள் என பிளவு பின்னடைவை சந்தித்து வருகிறது.அகநிலை வாதத்தை எதிர்த்த போராட்டம் கட்சியில் நடக்கிறது.இன்னும் உயர்ந்த நிலையில் நடக்க வேண்டும்.அது தான் கட்சியின் வளர்ச்சிக்கு உந்து விசை அளிக்க கூடியது என்று கருதுகிறோம்.

அக நிலையிலிருந்து கருத்து சொல்வதற்கு ஆதாரமான விசயங்கள் புற நிலைமையில் இருக்கிறதா இல்லையா என்பது தத்துவ பிரச்சனை அல்ல நடைமுறை பிரச்சனை. மேலும் எந்த புற நிலைமைகளை கவனம் கொள்ளாமல் விடுபட்டது என்றபடி விவாதம் நடைபெற வேண்டும் அவ்வாறான நிகழ்வு நடைபெறவில்லை என்பதே உண்மை.
தத்துவார்த்த விவாதம் நிறைவு பெறவில்லை.எதார்த்த சமூகத்தைப்பற்றியும் வர்க்க வரையறைகள் குறித்தும் தீர்வு காணப்படவில்லை.ஆனால் புரட்சி பாதை குறித்த வார்த்தை வேறுபாடுகளை மீறி சிபிஐ சிபிஐஎம் சிபிஐஎம் எல் ஒத்த கருத்தே கொண்டுள்ளது.(இதை அதிர்வு அமைப்பின் வெளியிடாக தோழர் தங்கவேல்சாமி கட்சி திட்டம் ஒப்பீடு வெளியிடு விவரிக்கிறது.)
சனநாயகப்புரட்சி என்ற கருத்தியல் வார்த்தை வித்தியாசங்களை மீறி ஏன் ஒத்துப் போகிறது என்பதற்கு போல்ஷிவிக் கட்சி விளக்க வேண்டி உள்ளது.

கட்சியில் தோன்றிய கருத்து மாறுபாடுகளுக்கு வேர் சமூகத்தில் தேட வேண்டுமே தவிர தனிநபர் நடவடிக்கைகளில் தேடுவது மார்க்சிய வரலாற்று இயங்கியல் பொருள்முதல்வாத அணுகு முறையிலிருந்து வேறுபடுவதாக உள்ளது.தங்கள் கட்சியிலிருந்தால் பாட்டாளி வர்க்கம் இல்லையெனில் குட்டி முதலாளி வர்க்கம் என்பது அரிய கண்டு பிடிப்பு,,,,,

4

போல்ஷிவிக் கட்சியின்
கனுசன்யால் மீதான சந்தர்ப்பவாதம் குறித்த நூலுக்கான
விமர்சனம் 4

வர்க்க பார்வை விலகல் குறித்து
#########################
பு ப இயில் பணியாற்றிய பேராசிரியர்கள்
கோச்சடை கல்யாணி அ.மார்க்சு உள்பட பலரும் கட்சியிலிருந்து விலகினர்,,,
அவர்கள் குட்டி முதலாளி வர்க்கத்தினர்,,

அதே போல் கட்சியிலிருந்து விலகிய தோழர்கள் சித்தானந்தம் ஏலகிரி இராமன்
தமிழ்வாணன் கோவை ஈஸ்வரன் போன்றவர்களும் குட்டி முதலாளி வர்க்கத்தினரே,,,மாற்று அமைப்பு கட்டியதால்,,,குட்டி முதலாளியவாதி
திருத்தல்வாதி சந்தர்ப்பவாதி என்ற விமர்சனம் சரியல்ல.

குட்டி முதலாளி வர்க்கத்தின் பண்பு கூறு என்ன என்ன?
சமூக வரலாற்றில் நிலவுடைமை சமூகத்தில் உருவாகுகிற வர்க்கம் என்பதும் இதிலிருந்தே விரல் விட்டு எண்ணும் பெரு முதலாளி வர்க்கம் உருவாகிறது.அதிலிருந்தே பாட்டாளி வர்க்கமும் கூட உருவாகிறது.அதாவது முதலாளிய சமூக வளர்ச்சியில் பெரு முதலாளி சிறு முதலாளியை விழுங்கும் நிகழ்வின் வெளிப்பாடாக எண்ணிக்கையில் பெரும்பாலானோர் பாட்டாளி வர்க்க தரப்புக்கு தள்ளப்படுவர்.

தான் தனக்கு கீழ்பட்ட பாட்டாளியை சுரண்டுவதாகவும் தனக்கு மேம்பட்ட முதலாளிகளால் சுரண்டபடுவதாகவும் இருப்பர்.இவர்கள் வாழ்நிலை ஒரு நேரம் புரட்சிகரமாகவும் மறு நேரம் பிற்போக்காகவும் இருப்கும் என்பது வெளிப்படை.
#பாட்டாளி_வர்க்கத்திற்கு தலைமை தாங்க கூடிய தத்துவார்த்த புரிதல் கொண்ட வர்களாக குட்டி முதலாளிய தரப்பிலிருந்தே உருவாகின்றனர்.
தமது சிந்தனை செயலை பாட்டாளி வர்க்க நடைமுறைக்கு தகவமைத்துக் கொள்கின்றனர்.இவ்வர்க்கத்திலிருந்து சிறு அளவிலேயே முதலாளி வர்க்க தரப்புக்கு ஆதரவாளராக மாறுவர் என்ற உண்மையும் மறுக்க கூடியதில்லை.

அமைப்பில் இருக்கும் போது பாட்டாளி வர்க்கம் விலகினால் குட்டி முதலாளி எதிர்ப்புரட்சியாளன் திருத்தல்வாதி என சொல்வது வர்க்க கண்ணோட்டம் அல்ல,,
அவர்கள் முன் வைக்கும் அரசியல் கருத்துக்கள் தான் எதிரி என்றபடி அணுக வேண்டும்.அவர்களே எதிரி என அணுகுவது சரியல்ல,

தோழர் சித்தானந்தன் முழு நேர ஊழியராய் இருந்து கொண்டே புத்தக கடை நடத்தி சம்பாதித்தார்.ஏலகிரி இராமன் நிலம் வாங்கி விவசாயம் செய்தார் என போல்ஷிவிக் கட்சி கூறுவது விநோதமாக உள்ளது.
இப்படி குற்றச்சாட்டை முன் வைத்தால் சில கேள்விகள் எழுவது தவிர்க்க இயலாது.
ஊழியர்களின் வாழ்க்கைக்கு எத்தகைய ஊதியத்தை கட்சி அளித்தது.அவர்கள் பெற்ற ஊதியம் வாழ்க்கை தேவைக்கு போதுமானதாக இருந்ததா? .மேலும் அவர்கள் கடந்த காலத்தில் தன்னலத்தை மறந்து சமூக மாற்ற பணியை தொழிலாக செய்ய வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அப்படிப்பட்டவர்கள் ஏன் #பொருளீட்டும்_தொழிலுக்கு மாறும் #மனநிலை_உருவாகியது.
#கட்சி_தலைமை அவர்களுக்கு கொடுத்த பணி என்ன ? மேலும் கட்சி அக்காலத்தில் நடைமுறை மக்கள்பணிக்கு அதிக அழுத்தம் தராத நிலையில் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்களிடமிருந்து எப்படி லெவி பெற முடிந்தது.ஊழியர்களுக்கு எப்படி வாழ்க்கை தேவைக்கு போதுமானது என்பது பற்றியது.கட்சியின் மக்கள் பணி சுருங்கினால் கட்சி உறுப்பினர் ஆதரவாளரிடம் லெவி பெறுவது சிக்கலானது.தொடர்ந்து சில பேரிடம் மட்டுமே பணம் பெறுவதும் அதுவும் காலப்போக்கில் இயலாமல் போவதும் நடக்க கூடியதே,இந்நிலையில் முழுநேர ஊழியர்கள் பகுதி ஊழியராக மாறி தங்கள் வாழ்க்கைத் தேவைக்கு பணமீட்டுவது எப்படி தவறாகும்?இது இயல்பானதே.
இது தவறானது அவர்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என கட்சி தலைமை
பேசுவது சரியல்ல.முதற் பொறுப்பு #கட்சி_தலைமையே அதை மறைக்க கட்சி ஊழியர் மேல் பலி போடுவது அதிகார மனப்பாங்கே.மேலும் அவர்களின் இந்நிலைக்கு மாறியதிலிருந்து மறுபடியும் முழு நேர பணிக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும் என்றபடி தலைமை முயற்சிப்பது பரஸ்பரம் பேசி தீர்வு காண்பதே சரியானது. பணத்தாசை பிடித்தவன் குட்டி முதலாளி என பேசுவது வர்க்க பார்வையாக இல்லை.அவனைப் போல் நாம் வாழ முடியவில்லையே என்ற தனி மனித காழ்ப்புணர்ச்சியே ஏன் வர்க்கப்பகைமையின் வெளிப்பாடே.

இந்த வர்க்கப்பார்வையற்ற விமர்சனத்தை படிக்கும் போது சிங்கிஸ் ஐத்மாத்தவ்ன்
அன்னைவயல் கதாபாத்திரம் தான் எனக்கு ஞாபகம் வந்தது.

” இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது.உடல் வலுவுள்ள ஆண்கள் அனைவரும் கட்சியின் – அரசின் அழைப்பை ஏற்று போருக்கு சென்றனர்.பெண்களும் முதியவர்களும் தான் கிராமப்புற விவசாய பணிகளை செய்தனர்.நாட்டின் நலனுக்காக கடும் உழைப்பில் ஈடுபட்டனர். விளைச்சலில் பெரும் பகுதியை போர் முனை வீரர்களுக்கே அனுப்பினர்.கூட்டுப்பண்ணை ஊழியர்களுக்கு குறைந்த கூலியே கொடுத்தது.அது வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை.பட்டினியால் அவதியுற்றனர்.குழந்தைகள் முதியவர்கள் வாழ்வு சகிக்க முடியாததாக ஆகியது.
இந்நிலை கூட்டு பண்ணை தலைவி சோவியத் அதிகாரியிடம் கேட்கிறாள்.தரிசு நிலத்தை பண்படுத்தி கூட்டுப்பண்ணையில் உழைத்த முடிந்த ஒய்வு வேலையில் விவசாயம் செய்கிறோம் அதில் கிடைக்கும் விளைச்சல் எங்கள் குழந்தைகள் முதியவர்கள் பசியை போக்கும் என முறையிட்டார்.சோவியத் அதிகாரி சொன்னார் மாவட்ட கட்சி அலுவலகத்துக்கு போ என்று,,,
அங்கும் தலைவி செல்கிறாள்.முறையிடுகிறாள்.
கட்சி பொறுப்பாளர் சொல்கிறார் ” நீ ஸ்டாலின் கூட்டுப்பண்ணைலவிதிகளை மீறுகிறாய் என்று ”
அதற்கு தலைவி சொல்கிறாள் அவ்விதி எக்கேடுகெட்டும் போகட்டும்.#நாங்களும்_இறந்து_போனால் போர் முனைக்கு எப்படி தானியம் அனுப்புவது?குழந்தைகள் முதியவர்களும் சாக வேண்டுமா என்று ”
இது காட்டும் உண்மை
சமூக வாழ்க்கையை எந்திரவியலாக பார்க்க கூடாது என்பதே.

இதே போன்ற இன்னொரு நிகழ்வும் காணத்தக்கது.

பிரஸ்னேவ் 1960 காலத்தில் ஒரு மாட்டு பண்ணைக்கு செல்கிறார்.
அங்கே பொறுப்பாளருடன் உரையாடுகிறார்.
“எப்படி இருக்கிறது பண்ணை?
வேலைக்கு ஆள் இல்லாமல் சிரமமாக உள்ளது.
அப்படியே ஏன் ?
அறிவிலும் பண்பாட்டிலும் உயர்ந்தவர்கள்
இது மாதிரியான வேலைக்கு வர விரும்பவில்லை.
அப்படியா?
குழந்தைகளின் பால் தேவைக்கு என்ன செய்கிறார்கள்?
குழந்தைக்கு பால் இல்லையென்றாலும் வேலைக்கு வர மாட்டேன் என்கிறார்கள்.
என்ன செய்வது என்றே தெரியவில்லை ,,,
மாடுகளை கிராமத்திலிருப்பவர்களுக்கு பிரித்து கொடுத்தால் என்ன?
வேலைக்கு ஆளும் கிடைக்கும்
குழந்தைக்கு பாலும் கிடைத்து விடும் ”
அருமையான யோசனை அப்படியே செய்கிறோம் உரையாடல் முடியும்.

இத்தகைய போக்கு
– தனிவுடைமை சிந்தனை ஸ்டாலின் இருக்கும் போதே படிப்படியாக வளர்ந்தது.கட்சியின் திட்டமிடுதல் முதல் அனுபவமும் உலகப்போரும் நமது எதிர்பார்த்த விளைவை தரவில்லை என்பதை ஏற்க வேண்டும் குருசேவை பொறுப்பாக்கி ரசியாவில் வளர்ந்த தனிவுடைமை உறவு வளர்ச்சியை சிறுமைபடுத்தக்கூடாது.ஸ்டாலின் இறப்பிற்கு பின் குருசேவ்ன் வர்க்க சமரச அரசியல் உருப்பெற்றதையும் கவனம் கொள்ளலாம்.

நமக்கு இதிலிருந்து கிடைக்கும் அனுபவம்
,,,, கட்சி தலைமை திட்டமிட்ட குறிக்கோளோடு ஊழயர்களை வளர்த்தால் கட்சி வளரும்.சமூக மாற்ற முயற்சி வெற்றியை நோக்கி செல்லும்.இதை விடுத்து
கட்சி தலைமை ஊழியர்களை குறை சொல்லி தான் புனிதவானாக காட்டிக் கொள்வதும் ஊழியர்கள் தலைமை குறை சொல்லி தான் தப்பித்து கொள்வதும் சரியானதல்ல,

5

போல்ஷிவிக்கட்சியின் கனுசன்யால் சந்தர்ப்பவாதம் குறித்த நூலுக்கான விமர்சனம். 5
@@@@@@@@@@@@@@@@@@@

குட்டி முதலாளி வர்க்கத்தின் பெரும் பகுதி
பாட்டாளி வர்க்கத்தின் நேச சக்தியே.
இதில் பேராசிரியர் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சிறு வணிகம் செய்வோர் உட்பட அடக்கம் தான்.

போல்ஷிவிக் கட்சியின் வழிகாட்டுதலில் இயங்கிய பு ப இ யில் பேராசிரியர்கள் அரசு ஊழியர்கள் அதிக அளவில் இருந்தனர்.
86களுக்கு பின் இயக்கம் படிப்படியாக செயலற்ற நிலைக்கு போய்க் கொண்டிருந்தது.சாதி வர்க்கம் தெளிவு வேண்டும் என நடந்த மாநாட்டு பணிகளில் ஈடுபட்டவர் அ.மார்க்சு என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடைமுறைப்பணிகளில் ஈடுபட்டு இருந்தவர்கள் தங்களால் முடிந்த பணிகளை வரையறுத்து கொண்டு இயங்கியது.இப்படித் தான் அ.மார்க்சின் பணி இருந்தது.

டிஎன்ஒசி சார்பில் நடத்தப்பட்ட பாசிச எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டார்.மாபெரும் விவாதம் வெளியிட்டு விழாவில் பேசிய மார்க்சு “ஸ்டாலின் மறைந்த மறு நாளும் மாவோ மறைந்த மறு நாளும் முதலாளிய மீட்சி ஏற்பட்டது என்பது இயங்கியலாகாது” என பேசினார்., இது மாலெ கட்சிகளுக்கு எதிரான நெருக்கடியை தோற்றுவித்தது.மன ஒசை இதழ் அ.மார்க்சை சாடியது.பேசியது என்ன என்ற பிரசுரம் வெளியிட்டார்.அதையொட்டி நான் எழுத்தாளர் குமரன்தாசு உட்பட ஆதரித்து கடிதம் எழுதினோம். மன ஒசை இதழ் என்னை அ.மார்க்சின் அடிவருடி என குறிப்பிட்டு எழுதியதும் கவனம் கொள்ளத்தக்கது. ரசியாவில் நடப்பதென்ன என்ற சிறு புத்தகமாக வெளியிட்டார்.

மாலெ கட்சிகள் இவரது பேச்சை பலவாறாக விமர்சனம் செய்தன.
இவரும் பலவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.ரசிய சீன மாற்றங்கள் ஒட்டி சர்வதேச அளவில் ஏற்பட்ட மாற்றங்கள் அவர் சிந்தனை எழுத்தில் செயல் மாறுதலை தோற்று வித்தது.தங்களது அரசியல் நடவடிக்கைக்கு ஆதாரமாக ஊக்கமாக ஐரோப்பிய நவீன எழுத்தாளர்கள் நோக்கி தள்ளப்பட்டார்.பல கட்டுரைகள் வரைந்தார்.அப்படி தான் நிறப்பிரிகை வந்தது.பெண் விடுதலை தலித் விடுதலை குறித்து பேசும் சூழலில் பெரியார் அம்பேத்கர் எழுத்துக்களை நோக்கி தள்ளப்பட்டார்.
தலித் அரசியல் அறிக்கையை வெளியிட்டார்.
தலித் மக்கள் போராட்டங்களுக்கு உந்து விசையானது வரலாறு.

இவ்வாறான மாற்றங்கள் நடந்த போது போல்ஷிவிக் கட்சி என்ன செய்தது என்பது
பரம இரகசியம்.பு ப இ இல்லாமலே போய்விட்டது.அ.மார்க்சு பெரியாரியம் அம்பேத்காரியத்தை மார்க்சியத்துக்கு மாற்றாக முன் வைத்ததை போல்ஷிவிக் கட்சி எதிர்ப்பு காட்டாமல் வேடிக்கை பார்த்தது ஏன்?அ.மார்க்சை விமர்சிப்பவர்கள் தங்களது செயலை #சுயவிமர்சனமாக பார்க்க மறுப்பது ஏன்.இப்படி கேட்டாலே மோடி பாணியில் மார்க்சிய விரோதி என சொல்வார்கள் போலும்.

மார்க்சியம் பாட்டாளி வர்க்க தலையில்
சமூக விடுதலைக்கு போராட வழிகாட்டுகிறது.
உலகமயச்சூழலை எதிர் கொள்வதில் எல்லா இடதுசாரி இயக்கங்களின் பார்வையும் அரசியல் வழிமுறையும் ஒன்றாகவே அமைந்தன.அதற்கு போல்ஷிவிக் பார்வையும் வேறுபாடாக அமையவில்லை.அதாவது உலகமயச் சூழலில் நாட்டைக் காப்போம் தேசத்தை காப்போம் என்று உலகமயத்தை எதிர்ப்போம் என்றால் கீழ்கண்ட கேள்விகள் எழும்.
உலகமயத்தை எதிர்த்தால் #நடப்பிலிருக்கும்_சமூகத்தை அப்படியே வைத்துக்கொள்வது என்ற அரசியலுக்கே ஊக்கமளிக்கும்.இது பிற்போக்கான அரசியலாகும். இயல்பில் முதலாளி வர்க்கம் கொண்டு வரும் தன்னலத்துக்கான திட்டங்களை எதிர்ப்பது தொலை நோக்கற்ற சடங்குத்தனமானதாகவே அமையும். இடதுசாரிகள் எதிர்ப்பை மீறி பன்னாட்டு இன்னாட்டு முதலாளி வர்க்கங்கள் தம்மை வலுப்படுத்திக் கொண்டதையே பார்க்கிறோம்.
நாம் எதிர்ப்பதால் #உலகமயம்_சமூகபுறநிலைமையில்
தாக்கம் ஏற்படுத்தாது என்ற கற்பனாவாத கண்ணோட்டத்திற்கு இடமளித்தது.ஒரு புறம் கிராமப்புற சாதிய நிலவுடைமையில் மாற்றத்தை கோரியது.இதன் வெளிப்பாடாக சாதிக்கலவரங்கள் எழுந்தன.தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் பள்ளர் மோதலாகவும் வட மாவட்டங்களில் வன்னியர் பறையர் மோதலாகவும் மேற்கில் கவண்டர் அருந்ததியர் மோதலாகவும் வெடித்தது.இன்று வரை அவ்வப்போது பல்வேறு பிரச்சனை தொடர்பாக மோதல் இருந்து வருவதும் கண்கூடு.சாதிச் சங்கங்கள் அதிகமாக முளைத்தன.வலிமை அடைந்தன.குறிப்பாக பொதுவுடைமை இயக்கங்கள் பின்னால் திரண்ட தலித்கள் தனி இயக்கங்கள் கண்டனர்.

#போல்ஷிவிக்கட்சி சாதி இயக்கங்களை -#சாதிச்_சண்டைகளை_பிழைப்புவாத_ச்செயல்பாடு என்றே சமூக வரலாற்றுப்போக்கை கொச்சையாக அணுகியது.தமிழக வரலாற்றில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் கூட பார்ப்பனரல்லாத இயக்கமாக செயல்பட்ட வரலாற்று அனுபவத்தை கிரகிக்க தவறியது.இதனால் சிபிஐ சிபிஐஎம் ஏன் எம் எல் இயக்கத்தில் இருந்தவர்கள் தலித் இயக்கங்களில் திரண்டனர்.பொதுவுடைமைவாதிகளும் தலித்கள் எதிரியே என்ற கருத்திற்கு வழி விட்டது. “தலித் விடுதலை தலித்களால் தான் பெற முடியும் ” என்ற போக்கு தோன்றியது.

தலித் இயக்கம் வளர இடதுசாரிகள் உலகமயம் தோற்றுவித்த முதலாளிய வளர்ச்சியை உள்வாங்காததன் விளைவே எனலாம்.நுட்பமாக வர்க்க அரசியலை முன்னெடுக்க தவறியது. இந்த தங்களின் #தவறை_மறைக்க தலித்களை அதை முன்னெடுத்த #அ_மார்க்சை குறை சொல்வது எப்படி சரி?மேலும் சனநாயக நடவடிக்கையின் ஒரு பகுதியாக பார்ப்பதா?முற்றிலும் எதிரி வர்க்க நடவடிக்கை என பார்ப்பதா?அப்ப வரலாற்றில் செயலாற்றிய நீதிக்கட்சி திராவிடர் கழகம் பணியின் வர்க்க தன்மை பற்றி அறியும் நிலைக்கே நம்மை ஈட்டுச் செல்கிறது.வரலாற்றில் பின்னோக்கி பார்த்தால் நிலவுடைமைக்கு எதிரான முதலாளிய வளர்ச்சியை முன்னெடுத்தவர்கள் என்றே சொல்ல முடியும்.ஆகவே பின் நவீனத்துவ – தலித் அரசியலும் முதலாளிய வளர்ச்சிக்கே உந்து விசை அளித்தது.

இந்த தவறு போல்ஷிவிக் கட்சியில் மட்டும் வெளிப்படவில்லை.மக இக விலும் வெளிப்பட்டது.உறவு – 8 ஐல் . மக இகவின் மான்சாண்டோ கம்பெனி எதிர்ப்பு பிரசுர செய்தியை முன் வைத்து .,,,,
“உலகமயம் சந்தைக்கான உற்பத்தியை கொண்டு வருகிறது.நமது நாட்டில் கிராம சுய தேவைக்கான உற்பத்தி இருந்ததை அழிக்கிறது.” நமது நாட்டில் கிராம சுய தேவை உற்பத்தி என்றால் #சாதிய_உற்பத்தி_முறையே
இதை பாதுகாப்பது என்ற கண்ணோட்டம் எப்படி சரி ?சாதிய உற்பத்தி முறை காப்போம் சாதிய.ஒடுக்கு முறை ஒழிப்போம் என்ற முரண்பட்ட அரசியல் கண்ணோட்டத்திற்கே வழி வகுக்கிறது.

அ.மார்க்சு முன்னெடுத்தது முதலாளிய நடவடிக்கை என்றால் அதை கண்டு கொள்ளாத அல்லது பின் தங்கிய
இடதுசாரிகளின் அரசியலின் வர்க்க தன்மை என்ன என்று கேள்வி எழும்.சமூக வரலாற்று சக்கரத்தை பின்னுக்கு இழுப்பவர்கள் எப்படி இடதுசாரியாக இருக்க முடியும்.

தலித் அரசியலுக்கு இடம் விட்டு வைக்காத நுட்பமாக வர்க்க அரசியலை முன் வைத்திருந்தால் தலித் இயக்கங்கள் தனி இயக்கம் காண வேண்டிய தேவை இருந்திருக்காது.அ.மார்க்சும் பின் நவீனத்துவ அரசியலை முன் வைக்கும் தேவை ஏற்பட்டு இருக்காது.

தொடரும்.

6

போல்ஷிவிக் கட்சியின் கனுசன்யால் மீதான சந்தர்ப்பவாதம் குறித்த விமர்சனம் – 6
@@@@@@@@@@@@@@@@@@@@@@

“குருச்சேவ்ன் திருத்தல்வாதம் கோர்ப்பசேவின் கலைப்புவாதமாக முடிவுற்றது.”( பக்கம் x மேற்படி நூல்)

இந்த வாசகம் புரட்சிகர அமைப்புகளை களைத்தது என்பதாகும்.இது மேலோட்டமானதே ஆகும்.ஏனென்றால்
குருசேவ் திருத்தல்வாதம் இந்தியாவில் நேருவின் சோசலிசத்தை ஊக்கப்படுத்தியது.கோர்ப்பசேவின் நடவடிக்கை தனியார்மயத்தை ரசியாவில் தோற்றுவித்தது.கோர்ப்பசேவ்ன் கிளாஸ்நாஸ்ட் உலகமயத்தை நோக்கி நகர்ந்தது என்பதை மறுக்க முடியாது.அதனால் தான் போல்ஷிவிக் எழுது கிறது “நவீன திருத்தல்வாதிகள் அரசியல் ரீதியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களை காட்டிக் கொடுத்தனர்.”(பக்கம் x மேற்படி நூல்)

உலகமயம் அரசு முதலாளியத்தை அழிக்கிறது.அதாவது பொதுத்துறை அரசு துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குகிறது என்பது எதார்த்த உண்மை.கடந்த காலத்தில் குருசேவ்ன் மாறுபட்ட சமூகங்களுக்கு இடையே சமாதானம் சகவாழ்வு என்பதை சிபிஐ சிபிஐஎம் ஆதரித்தது.இக்கட்சிகள் அரசு துறை பொதுத்துறை நிறுவனங்களில் பணி செய்யும் தொழிலாளர்களை திரட்டினர்.
அந்த தொழிலாளி வர்க்க பிரதிநிதியாக மாறியதன் விளைவே நாடாளுமன்றவாதத்தில் சிபிஐ சிபிஐஎம் மூழ்க காரணம் என மாலெ இயக்கம் விமர்சித்தது.இன்று உலகமய – தனியார்மய சூழலில் அரசுத்துறை பொதுத்துறை அழிக்கிறது என்றால்
சிபிஐ சிபிஐஎம் அடித்தளமும் தகர்க்கப்படுகிறது என்பது தானே,இதன் வெளிப்பாடாக சிபிஐ சிபிஐஎம் பலவீனமடைவதை இன்று வரை காண்கிறோம்.
#கோர்ப்சேவ்ன்_கலைப்புவாதம்_புரட்சிகர_இயக்கத்தை மட்டும் பாதிக்கிறது என்பது குறுகிய பார்வை.#சிபிஐ_சிபிஐஎம்ன்_கட்சியையும்_பாதிக்கிறது என்ற எதார்த்த உண்மையை பார்க்க மறுப்பது ஏன்?

அவர்களும் தனியார்மயத்தை எதிர்க்கிறார்கள்.போல்ஷிவிக் கட்சியும் எதிர்க்கிறது.இது எதை காட்டுகிறது.
திருத்தல்வாத பார்வையை போல்ஷிவிக் ஏற்கிறது என்பதா?
இல்லை போல்ஷிவிக் பார்வையை சிபிஐ சிபிஐஎம் ஏற்கிறது என்பதா?
இல்லை #புதிய_பார்வை தேவைப்படுகிறது என்பதா?

தொடரும்.

7

போல்ஷிவிக் கட்சியின் கனுசன்யால் சந்தர்ப்பவாதம் பற்றிய நூலுக்கான விமர்சனம் – 7
@@@@@@@@@@@@@@@@@@@@

ஈழ விடுதலை குறித்து
———————————–/

“ஈழ விடுதலைப் போரின் இறுதிக் காலத்தில் அ.மார்க்சு போன்றவர்கள் இழைத்த துரோகம் மோசமானது” (மேற்படி நூல் பக்கம் xvi)

உண்மை தான் ஏற்க வேண்டிய கருத்து தான்.
சமூகம் சாதியாகத் தான் இருக்கிறது என்பவர்கள் வர்க்கப்போராட்டத்தை ஏற்க மாட்டார்கள்.இன விடுதலையையும் ஏற்க மாட்டார்கள்.அதாவது பல சாதிகள் அடங்கிய சமூகத்தை இனமாக பார்ப்பார்கள்.
அ.மார்க்சு போல்ஷிவிக் கட்சியில் இருந்தார்.
செயல்பட்டார்.அவர் இந்த முடிவெடுக்கும் அளவிற்கு போல்ஷிவிக் அமைப்பு அரசியல் எப்படி இடமளித்தது ?

“ஈழ விடுதலை போராட்டத்தை ஆதரிப்போம்
இந்திய இராணுவ தலையீட்டை எதிர்ப்போம்”
என்று 82 – 83 களில் போல்ஷிவிக் கட்சி சிறு பிரசுரம் வெளியிட்டது. சரியானது என்பதை நடைமுறை நிரூபித்துள்ளது.
இந்த கருத்தால் ஈர்க்கப்பட்டே 84 களில்
பு ப இ அமைப்பில் சேர்ந்தேன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி தெளிவாக சொன்ன அமைப்பு ஏன் பின்தங்கியது?
மேலும் மேலும் வளர வில்லை.

அந்த கருத்தை முன்னோக்கி செலுத்திய பணியாகவே தமிழரசனின் சிந்தனை அமைந்தது.அவர் இந்தியா தெற்காசியாவின் வல்லரசு என்றார்.தனது கருத்தின் கூடுதல் அழுத்தமாகவே ஈழத்தில் மட்டுமல்ல இந்தியாவிலும் தனி நாடு
என்ற கண்ணோட்டத்தை முன் வைத்தார்.அவர் போல்ஷிவிக் கட்சியில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த தனது கருத்து கண்ணோட்டத்தை திருச்சி
RYL அணி என்ற பேரில் முன் வைத்தது.இந்த கருத்து சரியல்ல தவறு என்று ஈழத்தில் இரு தேசிய இனங்கள் உள்ளது.எனவே ஈழத்தில் சாத்தியம் இந்தியாவில் சாத்தியம் இல்லை என அழுத்தம் தந்தது. விளைவு தமிழரசன் தனித் தமிழ் நாடு சாத்தியம் என்றது. இதுவே தமிழகத்தில் தமிழரசன் தனி அமைப்பு உருவாக அடித்தளம் அமைத்தது.

நடப்பில் இந்தியா இலங்கை பாகிசுதான் உள்ளிட்ட நாடுகள் கொண்ட சார்க் அமைப்பு உருவானதையும் காண்கிறோம்.
ஈழ விடுதலை போராட்டத்தை அழிக்க சார்க் அமைப்பு மட்டுமல்லாது அமெரிக்கா சீனா அமெரிக்க நாடுகளும் துணை நின்றன.வெனிசூலா கியூபா கூட தங்கள் நாட்டை காப்பதில் கவனம் செலுத்தி ஈழ விடுதைலையை ஆதரிக்கவில்லை என்பதே உண்மை.

சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் வலிமையாக தெளிவாக ஈழத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்காத போது அ.மார்க்சிடம் ஈழ விடுதலை கோரிக்கையை எப்படி எதிர்பார்க்க முடியும்.
ஈழத்தை அழித்த போது சாதி உணர்வை முன்னிலைப்படுத்தி இன விடுதலைக்கு எதிராக பின்நவீனத்துவவாதிகள் குரல் கொடுத்தது இயல்பானதே. நாம் போல்ஷிவிக் உட்பட ஈழ விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் என்ன நடந்தது?இனப்படுகொலையை தடுக்க முடியவில்லை என்பதே உண்மை.

ஈழ விடுதலை போரில் இந்திய ராணுவ தலையீடு 87ல் இருக்கும் என்பதை 83லேயே கணிக்க முடிந்த போல்ஷிவிக் அமைப்பு
2009 மிகப்பெரிய இன அழிப்பு இருக்கும் என
கணிக்க முடியாததற்கு போல்ஷிவிக் அமைப்பிற்கு சர்வதேச அரசியலை பற்றி தெளிவு குறைவு என தான் சொல்ல வேண்டி உள்ளது.

ஈழ விடுதலைக்கு எதிராக இந்தியா மாறும் என கணிக்க முடிந்ததன் அடுத்த கட்ட வளர்ச்சியாகவே #தமிழரசன் முன் வைத்த –
தெற்காசிய வல்லரசு இந்தியா என்ற கருத்து அமெரிக்கா ரசியா போன்ற ஒன்றா என்பதை விலக்கி பார்த்தால் தமிழரசன் மாலெ குழுக்களின் அரசு பற்றிய நடவடிக்கை வரையறுப்பில் கூடுதல் அழுத்தம் தந்தார் என்பதே.
நடப்பில் இந்தியா தெற்காசிய வல்லரசாக
– தெற்காசிய கூட்டமைப்பை நிறுவியது உண்மை.

ஈழத்திற்கு ஆதரவாக நாம் குரல் கொடுத்த போதும் ஒன்னரை இலட்சம் மக்களை காக்க முடியவில்லை.விடுதலை இயக்கமும் அழிக்கப்பட்டது.எனவே இந்த அனுபவங்களை கவனம் கொண்டு புதிய அரசியல் வழிமுறை தேவைப்படுகிறது.அதை தெளிவாக எந்த மாலெ அமைப்பும் முன் வைக்கவில்லை.

தனி நாடு விடுதலை கோரும் தமிழரசன் வழி அமைப்புகள் கூட இந்தியத்திற்கு எதிராக அகில இந்தியாவில் அழுத்தம் தரக் கூடிய வகையில் போராடும் தேசிய இனங்களின் கூட்டமைப்பை தமிழ் தேச மக்கள் கட்சி போன்றவை வலியுறுத்துகின்றன.
இந்திய அளவில் வர்க்கப்புரட்சி அமைப்புகள் இந்திய அளவில் அமைப்பு கட்ட முடியவில்லை.தேசிய இனங்களின் விடுதலைக்கான அடித்தளத்தை நிறுவ முடியவில்லை என்பதே உண்மை.இது காட்டும் உண்மை சர்வதேச அரசியலைப்பற்றிய தெளிவு போல்ஷிவிக் கட்சி உட்பட பிற அமைப்புகளுக்கு இருப்பதாக எனக்கு தெரிந்த வரையில் இல்லை என்பதே உண்மை.

தொடரும்.

8

போல்ஷிவிக் கட்சியின் கனுசன்யால் சந்தர்ப்பவாதம் என்ற நூலுக்கான
விமர்சனம் – 8
************************************

/பலாத்காரம் ஒன்று தான் ஒவ்வோரு சமுதாயத்தை பிரசவிக்கின்ற புதிய சமுதாயத்தின் மருத்துவச்சி /

இந்த மார்க்சின் மேற்கோளை முன்னிறுத்தி போல்ஷிவிக் கட்சி பேசுகிறது.இது சொல்லப்பட்ட சூழலை கவனம் கொள்ளாமல் மேற்கோளை கையாள்வது.மாறுபட்ட சமூகங்களுக்கு இடையே சமாதானம் சக வாழ்வு என்ற குருசேவ்ன் கோட்பாடு சர்வ தேச அளவில் பொதுவுடைமை கட்சியை பலவீனப்படுத்தியது. மார்க்சியத்தின் உயிரான்மாவான வர்க்கப்போராட்டத்தை கைவிட்டது என்பதே ஆகும்.

குருச்சேவ் கோட்பாடு வர்க்கப்போராட்டத்தை மறுத்தது என்பதில் எமக்கும் கூட உடன்பாடே.
எதிர்க்க வேண்டும் என்பதில் உடன்பாடே மாற்று கருத்து இல்லை.

குருசேவ் எந்த வர்க்க நலனை முன்னிருத்தினார் என்பது கவனம் கொள்ளத்தக்கது.அவர் கட்சியிலும் அரசின் நிர்வாகத்திலும் பணி செய்த #அதிகார_வர்க்க நலனை பிரதிநிதித்துவம் செய்தார் என்பதில் போல்ஷிவிக் கட்சிக்கும் கூட எம்மைப் போன்று மாற்று கருத்து இருக்காது என்றே நினைக்கிறேன்.

சர்வதேச அளவில் திருத்தல்வாதம் தமது ஆளுமைக் கொண்டு வர அமைதி வழிப்புரட்சியை வலியுறுத்துகிறது என சொல்வது சரியல்ல.

ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை தூக்கியெறிந்து தன்னை அதிகாரத்தில் நிறுத்திக்கொள்வதே புரட்சி என்கிறோம்.
இந்த கோணத்தில் மேற்படி மேற்கோளை இணைத்து பார்த்தால் அதிகார வர்க்கம் எப்படி ரசியாவில் அதிகாரத்தை கைப்பற்றியது என்ற கேள்வி வரும்.

குருச்சேவ்ன் பிரதிநிதித்துவம் செய்த அதிகார வர்க்கம் அதிகாரத்தை கட்சியிலும்
சமூகத்திலும் பெரிய எதிர்ப்பில்லாமல் #பலாத்காரத்தை பிரயோகப்படுத்தாமல் அதிகாரத்தை எப்படி கைப்பற்றியது எனும் போது /பலாத்காரமே புதிய சமூகத்தை பிரசவிக்கும் என்பது பொருந்தவில்லை.
இந்த மேற்கோளை தவறாக பயன்படுத்துகிறது .

கோர்ப்பசேவ் கிளாஸ்நாஸ்ட் பெரிஸ்ரோயிக்காவில் கூறுவார்.
“சமூகம் மாற்றத்திற்கு கனிந்து உள்ளது.
இதை சரியாக கையாளவில்லையெனில்
மிகப்பெரிய அழிவுகள் தவிர்க்க இயலாததாகும்.பலாத்கார மூலம் புரட்சி ஏற்படும்.தேவையற்ற அழிவு ஏன்படும் என்றார்.”

எல்ட்சின் போன்றவர்கள் வளர்ந்து வந்த சிறு முதலாளி வர்க்க நலனை பிரதிநிதித்துவ படுத்தினார்கள்.அதிகார வர்க்கத்திடமிருந்து சிறு முதலாளி வர்க்கம் அதிகாரத்தே கைப்பற்றியது.இதுவும் கூட அமைதி வழியாகவே நடந்தேறியது.
#பலாத்காரம் மூலம் நடக்கவில்லை என்பதை போல்ஷிவிக் கட்சி உணர வேண்டும்.
அதே நேரத்தில் செக்கோஸலேவாகியாவில் செசஸ்கோவை பலாத்காரம் மூலமே அதிகாரத்திலிருந்து அகற்றியது என்பதை மறந்து விடக்கூடாது.

பிரான்சில் முதலாளி வர்க்கப்புரட்சி
பலாத்காரம் மூலம் நடந்தது .பாரீஸ்கம்யூனும் பலாத்காரம் மூலமே நடந்தது.பிரிட்டனில் முதலாளி வர்க்க ஆட்சி நிலவுடைமை – மன்னராட்சியை வீழ்த்தாமலே எப்படி நடந்தது.?செர்மனில் எப்படி முதலாளி வர்க்க ஆட்சி வந்தது.

இந்தியாவில் 1801ல் திப்பு மருதுவை பலாத்காரம் மூலம் வீழ்த்தி விட்டு காலனியாதிக்கம் எனும் முதலாளி வர்க்க ஆட்சி பலாத்காரம் மூலமே நடந்தேறியது.
1947 ல் ஆட்சி மாற்றம் என்பதும்
1990 களில் உலகமயம் என்பதும் பெரிய எதிர்ப்பில்லாமல் மேலும் மேலும் #தரகு_முதலாளிய_வர்க்க ஆட்சி நிலைப்படுத்தப்பட்டதையே காண்கிறோம்.

சமூக மாற்றம் – புரட்சி என்பது
பலாத்காரம் மூலம் மட்டுமே சாத்தியமாகிறது என புரிந்து கொள்வது சரியல்ல,,,,படிப்படியாக அமைதி வழியில் வர்க்க ஆட்சி ஏற்படி சாத்தியமே என்பதை மறக்க கூடாது.மேற்படி மேற்கோள் பலாத்காரம் மட்டுமே சமூக மாற்றத்திற்கு அடிப்படை என புரிந்து கொள்வது மார்க்சிய கண்ணோட்டமல்ல.

டூரிங்குக்கு மறுப்பு எனும் நூலில் எங்கெல்சு எழுதுகிறார். ” பழையது போதிய அறிவுடன்
புதியதை எதிர்க்குமானால் #அமைதியாகவும் போதிய அறிவின்றி எதிர்க்குமானால் பலாத்காரம் மூலமாகவும் நடந்தேறும் ” என கூறுகிறார்,

எனவே சமூக மாற்றம் என்பது அமைதி வழியா (ஆயுத.போராட்ட )பலாத்கார வழியா என்பது சூழலை பொறுத்தது.
சமூக மாற்றம் என்பது ஆயுத வழியாக மட்டுமே நடைபெறும் என்பது மார்க்சியத்தை புரிந்து கொள்ளாத ஒன்றே ஆகும்.
திருத்தல்வாதிகள் வழி அமைதி வழி சமூக மாற்றம் என்று மட்டும் வலியுத்துவார்கள் என சொல்வது சரியல்ல,,,,,
ஆயுத வழி என்ற பேரில் #பக்கூனியத்தை
முன் வைத்த மாலெ இயக்கம் வழி முறையை சரியானது என அளவுக்கு அதிகமாக வலியுறுத்துவதே ஆகும்.
9
போல்ஷிவிக் கட்சியின் 

கனுசன்யால் சந்தர்ப்பவாதம் குறித்த நூலுக்கான விமர்சனம் – 9
திட்டம் குறித்து

############
போல்ஷிவி்க் கட்சிக்கு திட்டம் உள்ளது.

திட்டம் இல்லை என சொல்வது மோசடி என சொல்கிறது.
70 வேலைத்திட்டம் பெரும்பான்மையாக சரி என்கிறது.
மேலும் ஏஎம்கே தலைமையிலான குழுவும் 

ஆந்திராவில் கொண்டபள்ளி சீத்தாராமையா குழுவுடன் இணைந்து வேலைத்திட்டம் முன் வைத்தது.கட்சியின் பெரும்பான்மை அடிப்படையில் சரி என்கிறது.
மேலும் பல்வேறு சிறப்புக் கூட்டம் 

மற்றும் மாநிலக்குழு கூட்டங்களின் மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தி சுய விமர்சனமாக புரட்சியின் தன்மை . குறித்தும் அதன் எதிரிகள் பற்றியும்

இயக்கு சக்திகள் குறித்தும் போர்தந்திரம் செயல் தந்திர வழி குறித்தும் 

அரசியல் திசை வழி என பலவற்றை சொல்கிறது.
ஆந்திர குழுவிலிருந்து வெளியேறிய பின் ,,,,
“1988 சிறப்புக் கூட்ட தீர்மானம் எண் 2)

1970 வேலைத்திட்டம் அடிப்படையில் சரியானது என்பதை பற்றி கருத்து வித்தியாசம் இருப்பினும் ,,,,,

அடிப்படையில் சரியானது என்ற மதிப்பீட்டிலிருந்து வகுக்கப்படும் செயல் தந்திரத்தை ஏற்று .அதை நடைமுறைப்படுத்திக் கொண்டே திட்ட பிரச்சனையை தீர்க்க வேண்டியிருப்பதால்,,,,
இதோடு நிற்கவில்லை.மேலும்
 திட்டப்பிரச்சனை குறித்து சொல்கிறது.
i)அட்லாண்டிக் சாசனம் 

ii)மார்ஷல் திட்டம் 

iii)பிரிட்டன் உட்ஸ் மாநாட்டில் உருவாக்கப்பட்ட சர்வதேச நிதி அமைப்பு மற்றும் வர்த்தக அமைப்புக்கள் 
பற்றியும் கவனம் கொள்ள வேண்டி உள்ளது

இது இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய நிலைமை ஏகாதிபத்தியத்தின் மாற்றங்கள் என்கிறது.
இந்த மாற்றங்கள்  லெனின் இறந்த இருபதாண்டுகள் கழித்து நிகழ்ந்தவை.

இது பற்றி ஆழ்ந்து ஆய்வு செய்ய வேண்டி உள்ளது என ஒப்புக் கொள்கிறது.
இது எப்படி இருக்கிறது என்றால் வடிவேலு காமெடியையே ஞாபகப்படுத்துகிறது.அதாவது திட்டம் சரி ஆனா சரியில்ல ஆய்வு அவசியம் என்று சொல்வதே,,,,,
இது இரட்டை சிந்தனையாகும்.

#மார்க்சியம்_பெரும்பான்மையாக_சாராம்சமாக மட்டுமே இந்த சமூகத்தை மதிப்பிட முடியும் திட்டத்தை முன் வைக்க முடியும் என்று அறுதியிட்டு கூறுகிறது.

ஒரு போதும் #துல்லியமாக_சமூகத்தை_மதிப்பிட முடியாது

#திட்டத்தை_முன்வைக்க_முடியாது என்றே நமது மார்க்சிய ஆசான்கள்  வழிகாட்டுகின்றனர்.ஆனால் போல்ஷிவிக் கட்சி 

சொல்வது #சரி_ஆனா_சரியாக்க_வேண்டும்

என சொல்வதாகும். இது கான்ட்டின் வாரிசான  பின்நவீனத்துவவாதிகள்  (தெரிதா  உள்ளிட்ட சிந்தனை )மற்றும் #ஆதிசங்கரர்_சிந்தனை_தத்துவஞான துணையுடன் போல்ஷிவிக் கட்சி திட்டத்தை  தூக்கிப்பிடிக்கும் மாலெ சிந்தனையாளர் #காலன்துரையை காண்கிறோம்.

போல்ஷிவிக் கட்சி தனது தத்துவஞான வழிமுறை மார்க்சியம் என்கிறது.ஆனால் நடைமுறையில் நவீன கான்ட்டியவாதத்தை தூக்கி பிடிப்பவர்கள் சொல்கிறார்கள் கலைப்புவாத எதிர்ப்பை பற்றி,,,,

இது எப்படி இருக்கு என்றால் 

திருடனே திருடிய வீட்டிலிருந்து திருடனை பிடி என குரல் கொடுத்துக் கொண்டே ஒடுவதாக உள்ளது.
குறிப்பு

சர்வதேச நிதியம் நேட்டோ  காட் அமைப்பு குறித்து வேறொரு பதிவில் விவரிப்போம்.
தொடரும்.
10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *