சிபிஎம் மீதானஅரசு பற்றிய நிலப்பாடு ஒரு விமர்சனம்
சிபிஎம் மீதானஅரசு பற்றிய நிலப்பாடு ஒரு விமர்சனம்

சிபிஎம் மீதானஅரசு பற்றிய நிலப்பாடு ஒரு விமர்சனம்

இன்று செய்தி பார்த்து கொண்டிருந்த பொழுது நாராயணன் என்ற பிஜேபி நாய் CPM மீது சுமத்திய குற்றச்சாட்டோ அல்லது உண்மை செய்தியோ அதனை தெரிந்து கொள்ள நான் CPM தோழர்களிடம் முன் வைக்கும் கேள்வியே இந்த பதிவு…நான் பல முறை அவர்களிடம் கேட்டவைதான் இது அரசு என்றால் என்ன? அவர்களுக்கு பதிலளிக்கும் முகமாகவே தோழர் லெனினின் “அரசும் புரட்சியும் ” நூலில் இருந்தே எடுத்து பகிர்ந்துள்ளேன், வாசித்து விவாதிக்கலாம்.தூத்துக்குடி குடி போராட்டத்தில் தீவிரவாதிகள் நுழைந்தது போல கேராளாவிலும் போராட்டங்களில் தீவிரவாதிகள் நுழைந்து விடுவதாக பினராயி விஜயன் கூறயதாக அந்த பிஜேபி நாய் கூறி உள்ளது… அவன் சொன்னது உண்மையாக இருக்கும், ஏனெனில் அரசு பற்றிய மார்க்சியம் அதைத்தான் சொல்கிறது..ஆகவே இந்த அரசு யாருக்கானது என்று தெரிந்து பேசலாமே..அரசும் புரட்சி நூலில் இருந்து கீழே:-வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவாய்த் தோன்றியதே அரசு,,,வரலாற்று வழிப்பட்ட தமது பகுத்தாய்வினைத் தொகுத்தளித்து எங்கெல்ஸ் கூறுவதாவது: “ஆகவேஅரசானது எவ்வகையிலும் வெளியிலிருந்து சமுதாயத்தின் மீது வலுக்கட்டாயமாய் இருத்தப்பட்ட சக்தியல்ல; இதே போல் அது எவ்வகையிலும் ஹெகல் வலியுறுத்தும் ‘அறநெறிக் கருத்தின் எதார்த்த உருவோ’, ‘அறிவின் பிம்பமும் எதார்த்தமுமோ’ அல்ல. மாறாக, சமுதாயத்தின் குறிப்பிட்ட ஒரு வளர்ச்சிக் கட்டத்தின் விளைவே அரசு. இந்தச் சமுதாயம் தன்னுடனான தீராத முரண்பாட்டில் சிக்கிக் கொண்டுவிட்டது, இணக்கம் காண முடியாத பகை சக்திகளாய்ப் பிளவுண்டுவிட்டது, இந்தப் பகைமை நிலையை அகற்றத் திறணற்றதாகிவிட்டது என்பதை ஒப்புக் கொள்வதன் விளைவே அரசு. ஆனால் இந்தப் பகைச் சக்திகள், முரண்பட்டு மோதிக் கொள்ளும் பொருளாதார நலன்களைக் கொண்ட இந்த வர்க்கங்கள், தம்மையும் சமுதாயத்தையும் பயனற்ற போராட்டத்தில் அழித்துக் கொண்டு விடாமல் தடுக்கும் பொருட்டு,மோதலைத் தணித்து ‘ஒழுங்கின்’ வரம்புகளுக்குள் இருத்தக்கூடிய ஒரு சக்தியை, வெளிப்பார்வைக்குச் சமுதாயத்துக்கு மேலானதாய்த் தோன்றும் ஒரு சக்தியை நிறுவுவது அவசியமாயிற்று. சமுதாயத்திலிருந்து உதித்ததானாலும் சமுதாயத்துக்கு மேலானதாய்த் தன்னை அமர்த்திக் கொண்டு மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும் இந்தச் சக்தியே அரசு எனப்படுவது’’ (ஆறாவது ஜெர்மன் பதிப்பு, பக்கங்கள் 177_78).3 அரசின் வரலாற்றுப் பாத்திரம் குறித்தும், அரசு என்றால் என்ன என்பது குறித்தும் மார்க்சியத்தின் அடிப்படைக் கருத்தை இது தெள்ளத் தெளிவாய் எடுத்துரைக்கிறது. வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவும் வெளியீடுமே அரசு. எங்கே, எப்பொழுது, எந்த அளவுக்கு வர்க்கப் பகைமைகள் புறநிலைக் காரணங்களால் இணக்கம் காணமுடியாதவை ஆகின்றனவோ, அங்கே, அப்பொழுது, அந்த அளவுக்கு அரசு உதித்தெழுகிறது. எதிர் மறையில் கூறுமிடத்து, அரசு ஒன்று இருப்பதானது வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவையாய் இருத்தலை நிரூபிக்கிறது. மார்க்சியத்தைத் திரித்துப் புரட்டும் போக்கு மிகவும், முக்கியமான, அடிப்படையான இந்த விவகாரத்திலிருந்து தான் தொடங்கி இரு பிரதான வழிகளில் செல்கிறது. ஒரு புறத்தில், முதலாளித்துவ சித்தாந்தவாதிகளும், குறிப்பாய்க் குட்டி முதலாளித்துவ சித்தாந்தவாதிகளும், எங்கே வர்க்கப் பகைமைகளும் வர்க்கப் போராட்டமும் உள்ளனவோ அங்கு மட்டுமே அரசு இருக்கிறதென்பதை மறுக்க முடியாத வரலாற்று உண்மைகளின் நிர்ப்பந்தம் காரணமாய் ஒப்புக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி, வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்குவதற்கான உறுப்பே அரசுஎன்று தோன்றும் வண்ணம் மார்க்சுக்குத் ‘திருத்தம்’ கூறுகிறார்கள். வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்க முடிந்திருந்தால். மார்க்சின் கருத்துப்படி அரசு உதித்தும் இருக்க முடியாது, தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கவும் முடியாது. அற்பவாதக் குட்டி முதலாளித்துவப் பேராசிரியர்களும் நூலாசிரியர்களும் கூறும் கருத்துப்படி_அருள் கூர்ந்த அவர்கள் அடிக்கடி மார்க்சை ஆதாரங் காட்டுகிறார்கள்_அரசானது வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்குவதாய்த் தோன்றுகிறது. மார்க்சின் கருத்துப்படி வர்க்க ஆதிக்கத்துக்கான ஓர் உறுப்பே, ஒரு வர்க்கம் பிறிதொன்றை ஒடுக்குவதற்கான ஓர் உறுப்பே அரசு; வர்க்கங்களுக்கு இடையிலான மோதலை மட்டுப்படுத்துவதன் வாயிலாய் இந்த ஒடுக்குமுறையைச் சட்ட முறையாக்கி, நிரந்தரமாக்கிடும் ‘ஒழுங்கை’ நிறுவுவதே அரசு. ஆனால் குட்டி முதலாளித்துவஅரசியல்வாதிகளின் அபிப்பிராயத்தில், ஒழுங்கு என்றால் ஒரு வர்க்கம் பிறிதொன்றை ஒடுக்குவதல்ல, வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்குவதே ஒழுங்கு; மோதலை மட்டுப்படுத்துவது என்றால் ஒடுக்குவோரைக் கவிழ்ப்பதற்கான குறிப்பிட்ட போராட்ட சாதனங்களையும் முறைகளையும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களிடமிருந்து பறிப்பதல்ல, வர்க்கங்களிடையே இணக்கம் உண்டாக்குவதே மோதலை மட்டுப்படுத்துவது.News 7 செய்தி லிங்க், பிஜேபி நாராயணன் பேச்சை கேட்க்க…https://m.facebook.com/story.php?story_fbid=2165114953550701&id=803317169730493

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *