சாதி ஒழிப்பிற்கு இட ஒதுக்கீட்டை தீர்வாக வைத்தார் அம்பேத்கார்.
சாதி ஒழிப்பிற்கு இட ஒதுக்கீட்டை தீர்வாக வைத்தார் அம்பேத்கார்.

சாதி ஒழிப்பிற்கு இட ஒதுக்கீட்டை தீர்வாக வைத்தார் அம்பேத்கார்.

சாதி ஒழிப்பிற்கு இட ஒதுக்கீட்டை தீர்வாக வைத்தார் அம்பேத்கார். அம்பேத்காரை பின்பற்றும் தலித்தியவாதிகள் இன்றும் அந்த இட ஒதுக்கீட்டுக்கொள்கையே தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு தீர்வாக பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த கொள்கையால் தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் அரசு அதிகாரிகளாக மாறி ஆளும் வர்க்கங்களுக் சேவைசெய்து வருவதைப் பார்க்கிறோம். ஆனால் கிராமங்களில் ஏராளமான நிலமற்ற ஏழை தாழ்த்தப்பட்ட மக்கள் பண்ணையடிமைகளாக சாதி ஆதிக்கவெறிபிடித்த பண்ணை ஆதிக்க சக்திகளின் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டு சாதி இழிவுகளுக்கு உள்ளாகிறார்கள். அம்பேத்காரின் கொள்கை தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நடுத்தர மக்களின் நலனுக்கான கொள்கையாகவே உள்ளது. அதனால் நிலமற்ற ஏழை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்விதமான பயனும் இல்லை. ஏழை நிலமற்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தேவை அவர்கள் உழுது பாடுபடும் நிலத்தின் மீதான உரிமைதான். அதன்மூலமே அவர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைக்கும் சாதி இழிவு நீங்கும். இதனைத்தான் பொதுவுடமை இயக்கங்கள் பல காலம் வலியுறுத்தி அவர்களை அணிதிரட்டி போராடிக்கொண்டிருக்கிறது. இதன் மூலமாக மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாழ்வு கிடைக்கும் ஆகவேதான் சாதி ஒழிய நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்படவேண்டும் என்று கம்யூனிஸ்ட்டுகள் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆகவேதான் அம்பேத்கார், பெரியாரின் வழிகள் சாதியை ஒழிக்க பயன்படாது என்கிறோம்.

சாதாரண மக்களிடம் கொள்ளையடித்து அம்பானி, அதானி போன்ற தரகு பெரு முதலாளிகளிடம் சேர்த்திடும் ஆட்சிதான் இந்துத்துவ பாசிச மோடியின் ஆட்சியாகும். இந்த ஆட்சியை தூக்கியெறியும் நாளே இந்திய, இந்து உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களுக்கு பொன்னாளாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *