சாதி ஒழிப்பா புரட்சியா?
சாதி ஒழிப்பா புரட்சியா?

சாதி ஒழிப்பா புரட்சியா?

இரண்டு நாட்களாக ஒரு விவாதம் முற்று பெறாமல் ஓடிக் கொண்டெ இருக்கிறது அதில் நாம் வைக்கும் கருத்துகளுக்கு கிளிப்பிள்ளை போல ஒப்புவித்துக் கொண்டிருக்கும் ஒரு மார்க்சிய விரோதிக்கு பதிலாக இந்தப் பதிவை வைக்கிறேன்… இன்னும் விமர்சனம் வரும் உடன்…

மா.செ. சரவணன்

Admin · August 11 at 2:19 PM

அன்பான தோழர்களே
இந்தியா என்பது ஒரு தேசமும் அல்ல, அம்பானி,அதானி,டாடா,பிர்லாக்கள் இந்திய தேசிய முதலாளிகளும் அல்ல.!

மாறாக இந்தியா என்பது தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், பீகார், ஒரிசா, உத்திரப்பிரதேசம், காசுமீர், அசாம், பஞ்சாப்,மகராசுட்ரா உள்பட பல தேசிய இனங்களையும் பலாத்கார முறையில் அடிமைப்படுத்தி அடைக்கப்பட்ட தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியாவாகும்.!

இந்திய பாராளுமன்ற அரசியல், ஆட்சிமுறை என்பது
இந்தியத்தில் அடைக்கப்பட்டுள்ள பல தேசிய இனங்களின் சுய வளர்ச்சி உரிமையை மறுத்த,

பன்னாட்டு ஏகாதிபத்தியங்களின் கூட்டுடன் இந்திய நிலவுடமையாளர்களும், தரகுமுதலாளிகளும் சேர்ந்த கனிம கொள்ளையையும், பரந்துபட்ட உழைக்கும் மக்களின் உழைப்புச்சுரண்டலையும் கட்டிக்காக்கும் அதிகார கட்டமைப்பே இந்திய பாராளமன்ற அரசியல்,ஆட்சிகட்டமைப்பாகும்.!

இதன் பாதுகாப்பு பெட்டகமாக இருந்து வருவது பார்ப்பனிய சாதிய கட்டமைப்பாகும்.!

ஆக கம்யூனிசுடுகளான நாம் இந்திய கட்டமைப்புக்கும், சாதிய கட்டமைப்புக்கும் எதிரான செயல் திட்டத்தை நமது வர்க்கப்போராட்ட அரசியல் செயல் திட்டத்தோடு இனைத்து முன்வைப்பதே நமது மிகச்சரியான வர்க்கப்போராட்ட அரசியல் செயலுத்தியாக இருக்க முடியும்.!

இதை தவிற்த்து இந்தியத்திற்குள்ளாகவும், சாதிய கட்டமைப்பை சிதைக்காமலும் வர்க்கப்போராட்ட அரசியல் தீர்வை தேடும் வர்க்க போக்கு பலிகாரணிடம் பஞ்சாங்கம் கேட்கும் கதையாகத்தான் இருக்கும்.!

அதாவது பாராளமன்ற தேர்தல்பாதை மூலமாக பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்தை நிறுவுவோம் என்கிற போலி கம்யூனிசுடுகளின் அரசியல் போக்கு இந்திய ஆளும் வர்க்கங்களின் கொள்ளைக் கூடாரத்திற்குள்ளாகவே மாற்றைத்தேடும் குருட்டுத்தனமான மக்களை ஏமாற்றும் அரசியல் போக்காகும்.!

அதேசமயம் இந்தியாவின் பருண்மையான உண்மைத்தன்மைகளை உணர்ந்திருந்தும் இந்திய சிறைற்கூடத்திற்கு எதிரான செயல் திட்டத்தை வைக்காமல் இந்தியா முழுமைக்குமான ஒரே கட்சி ஒட்டுமொத்த புரட்சி என்கிற அரசியல் போக்கு இந்திய சூனியவாத அரசியல் போக்காகும்.!

இது ஒருபுறமிறுக்க இந்தியாவை ஒரு தேசமாகவும், அம்பானி, அதானி, டாடா,பிர்லாக்களை இந்திய தேசிய ஏகாதிபத்திய முதலாளிகளாக மகுடம் சூட்டி இந்திய சோசலீச புரட்சி என்கிற அரசியல் போக்கு இந்தியத்தின் ஒட்டு மொத்த உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தையும், உழைக்கும் மக்களையும் ஏமாற்றும் அரசியல் போக்கே ஆகும்.!

உண்மையில் நமது சமூகத்தில் வர்க்கப்புரட்சியை சாதிக்க வேண்டுமானால் தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்திய கட்டமைப்புக்கு எதிரான செயலுத்தியும்.!

ஆளும் வர்க்கத்தின் பாதுகாப்பு கவசமான சாதிய கட்டமைப்புக்கு எதிரான புரட்சிகர நடைமுறை செயலுத்திகளையும் அமைத்து செயல் பட்டால் மட்டுமே நமது சமூகத்தில் பாட்டாளிவர்க்க விடுதலை புரட்சியை சாதிக்க முடியும் என்பதே உண்மை.!

 • Palani Chinnasamy ஆரம்பித்து விட்டீர்களா இங்கேயும்!
  வர்க்க அணி சேர்க்கையை மறுக்கும் ஏகாதிபத்திய சொல்லாடல்கள் இவை
 • Palani Chinnasamy ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றுபடுத்த தடைகள் எவை அதனை கண்டுக் கொள்ளாமல் நாம் பேச வேண்டிய எல்லா வற்றையும் மூடி மறைக்கவே இவை உதவும் தோழர்
  • மா.செ. சரவணன் Palani Chinnasamy தோழர் தவறாக எதுவும் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஒற்றுமையான அணிசேர்க்கையே எமது முதன்மை நோக்கமாகும். தோழர் அலெக்ஸாண்டர் பதிவை பதிப்பித்தது விவாதிக்கவே. ஏனென்றால் எனக்கும் ஏனைய தோழர்களுக்கும் தெளிவான விளக்கங்கள் தேவை. சற்று தெளிவாக விளக்குங்கள் அதோடு தோழர் R Chandrasekaran R Chanrasekaran அழைக்கிறேன்.
  • Palani Chinnasamy மா.செ. சரவணன் தோழர் போகாத ஊருக்கு வழி கேட்டால் பதில் எப்படி சொல்வது தோழர். ஒடுக்கு முறையிலிருந்து விடுதலைக்கான தத்துவம் மார்க்சியம் அதை முதலில் ஒடுக்கு முறையில் இருந்து விடுவி அதன் பின் ஒடுக்கு முறை பற்றி பேசுவோம் என்பதே பதிவின் அர்த்தம். இந்த ஒடுக்குமுறைக்கு காரணம் யாரோ அவனை புறந் தள்ளி இரண்டாம் நிலை யில் உள்ளவனை எதிரியாக்கும் தந்திரம் இது இவை ஏகாதிபத்திய பிரித்தாளும் சூழ்ச்சி, ஒடுக்கப்பட்ட மக்களை வர்க்க அடிப்படையில் ஒரே அணியில் ஒன்றுபடாமல் தடுக்கும் உத்தியே தோழர்
  • மா.செ. சரவணன் Palani Chinnasamy நன்றி தோழர்!
  • Alex Andar Palani Chinnasamy இந்திய கட்டமைப்பின் தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கும், பல தேசிய இன உழைக்கும் வர்க்கங்களின் மீதான அடிமை உழைப்புச் சுரண்டல் ஒடுக்குமுறைக்கும் காரணகர்தா எது.? யார் என்பதை விளக்காமல் பொத்தாம் பொதுவாக ஜோசியம் சொல்லிவிட்டால் போதுமா.?
  • Active NowJanardhananpulikalaseri மா.செ. சரவணன் வாழ்த்துகள்
  • Palani Chinnasamy ஜனநாயகமற்ற ஆட்சிமுறை நிலவுவதால்தான் தேசிய இனப்பிரச்சனை எழுகிறது. ஆகவே அரசை ஜனநாயக ரீதியில் சீரமைப்பைதில் அதாவது ஜனநாயகப் புரட்சியின் வெற்றியில்தான் இப்பிரச்சனையின் தீர்வு அடங்கியுள்ளது. தேசிய இனப் பிரச்சனையை புரட்சியின் வெற்றிப் பிரச்சனையிலிருந்து தனித்துப்பார்க்காமல் அப்பிரச்சனையிலிருந்து பிரிக்க முடியாத தொடர்புடையதாக புரட்சியின் பொதுவான பிரச்சனையின் பகுதியாக பார்க்க வேண்டும். (ஸ்டாலின் – மீண்டும் தேசிய இன பிரச்சனை குறித்து) அத்துடன் ஜனநாயகத்தை பூர்த்தி செய்ய விரும்புகிற பாட்டாளிவர்க்கம் எல்லாவிடங்களிலும் தேசிய இன ஒடுக்குமுறையை அது எந்த வடிவத்தைலிருந்தாலும் விட்டுக் கொடுக்காது எதிர்க்க வேண்டும் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறது. தேசிய இன ஒடுக்குமுறை, ஒடுக்கப்பட்ட இனத்து முதலாளித்து வர்க்கத்தை மட்டுமல்ல அனைத்து மக்களது மொழியுரிமை, எழுத்துரிமை, மற்ற ஜனநாயக உரிமைகளையும் கட்டுப்படுத்துகிறது. அனைத்து வர்க்கங்களின் சுயேச்சையான வளர்ச்சிக்கு விலங்கிடுகிறது. ஒடுக்கப்பட்ட இனத்தின் பொதுவான சமூக வளர்ச்சியே பாதிக்கப்படுகிறது. இவை மட்டுமின்றி பாட்டாளிவர்க்கத்தின் பெரும்பகுதியினரை வர்க்கப் போராட்டத்திலிருந்து திசை திருப்பி வர்க்க ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கிறது. எனவே பாட்டாளிவர்க்கம் எல்லாவிடங்களிலும் சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இன சமத்துவத்தை உயர்த்தி பிடிக்கவேண்டும்
 • Palani Chinnasamy இந்திய சமுதாயத்தில் சாதியும், தீண்டாமையும் நிலவுவதற்குக் காரணம் நிலப்பிரபுத்துவத்திற்கு முதலாளித்துவத்திற்கு முந்தைய (எல்லா உற்பத்தி உறவுகள் நீடித்திருப்பதற்கு) ஏகாதிபத்தியமும் தரகுப் பெருமுதலாளித்துவமும் ஆதரவு தருவதே ஆகும். புரட்சிகரமான முறையில் தரகுப் பெருமுதலாளிகள் மற்றும் பெரும் நிலப்பிரபுக்களின் அரசை ஒழித்து ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசு நிறுவுவதன் மூலமே ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஒழிக்க முடியும். நிலப்பிரபுத்துவத்திற்கு ஏகாதிபத்தியமும், தரகு முதலாளித்துவமும், தரும் ஆதரவுக்கு முடிவு கட்ட முடியும். நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை மற்றும் எல்லா முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறை மற்றும் எல்லா முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி உறவுகளை ஒழிப்பதால், சாதிமுறைக்கும், தீண்டாமைக்கும் ஆதாரமாக இருக்கும் பரம்பரை தொழில் பிரிவினையை ஒழிக்க முடியும். மக்கள் ஜனநாயகக் குடியரசும் புரட்சிகர மக்களும் தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக கலச்சாரப் புரட்சிகளை நடத்தி சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்திரவாதம் செய்கின்ற பிற அம்சங்களான அகமணமுறை, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரைச் சடங்குகள் ஆகியவற்றின் அடித்தளத்தைத் தகர்த்துவிட்டு ஒரு புதிய ஜனநாயகப் பண்பாட்டை உருவாக்க முடியும். இவ்வாறு நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை முற்றாக ஒழித்து, புதிய ஜனநாயக அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டை உருவாக்கி, சோசலிச சமுதாயத்தை நிறுவும் நிகழ்வுப் போக்கில் சாதி மற்றும் தீண்டாமைக்கு முடிவு கட்டுவது சாத்தியமான ஒன்றாகும்.
  மக்களுக்கு, ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசு இன்றி, அவர்களால் பரம்பரை வேலைப் பிரிவினையை ஒழித்து ஒரு புதிய வேலைப் பிரிவினையை உருவாக்க முடியாது. சாதிமுறை நிலைத்து நிற்பதற்கு உத்திரவாதம் செய்யும் அகமணமுறை மற்றும் பிற அம்சங்களை ஒழித்து ஒரு புதிய பண்பாட்டையும் உருவாக்க முடியாது. ஆகையால் சாதிமுறைத் துறையில் ஜனநாயகத் தீர்வு ஒரு மக்கள் ஜனநாயகத் குடியரசு என்பதேயாகும்.
 • Palani Chinnasamy உயர்சாதி ஆதிக்கமுறையை எதிர்த்தும், சாதி மற்றும் தீண்டாமையை ஒழிக்கும் பொருட்டு பரம்பரை தொழில் பிரிவினை, அகமணமுறை (சாதிக்கு உள்ளே மட்டுமே திருமண உறவுகள் கொள்ளுதல்), உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரை சடங்குகள், தீண்டாமை ஆகியவற்றிற்கு எதிராகவும், பார்ப்பனிய உயர்சாதி ஆதிக்க முறையை எதிர்த்து ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு ஆதரவாகவும், பாடுபடுத்தி, உண்மையான முதலாளிய, ஜனநாயக் சீர்திருத்தங்கள் அரசு செய்யக்கோருவது ஒரு முதலாளிய ஜனநாயகக் கோரிக்கை ஆகும்.
 • Rchandrasekaran Rchandrasekaran தோழர் அலெக்ஸ் என்ன வகையான செயல் உத்தியை வகுக்க கூறுகிரார் அது எப்படி தேசிய இன சாதிய சிக்கல்களை தீர்க்கும் என விரிவாக விளக்கினால் புரிந்து கொல்ள இலகுவாக இருக்கும்
  • Alex Andar Rchandrasekaran Rchandrasekaran செயலுத்தியை உருவாக்கவே எனது கருத்தை விவாதித்திற்கு உட்படுத்தி வருகிறேன் தோழர்.! தற்போதைய அவசியமாக நான் கருதுவது கம்யூனிடுகளின் கவண ஈர்ப்புக்கு எதிரியின் பலமான மற்றும் பாதுகாப்பான அம்சங்களை சுட்டிக்காட்டி விவாதப்படுத்துவதின் மூலம் ஒரு திட்டத்தை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன் தோழர் சந்துரு அவர்களே.!
 • Alex Andar  சாதியம் நிலவுடமை உற்பத்தியில் உருவாகி இன்று இந்திய தரகுமுதலாளிய அரைநிலவுடமை உற்பத்தி கட்டமைப்பிலும் கருத்தியலாக கெட்டித்தட்டி வளம் வருவதை அனைவரும் அறிவோம்.! ஆனால் இந்தியத்தில் பல தேசிய இனங்களின் ஒடுக்குமுறை உழைப்புச்சுரண்டலை ஒரு குறிப்பிட்ட தேசிய இனத்தின் ஆளும் வர்க்கம் செய்யவில்லை.! மாறாக 1947,க்கு பின் ஏற்பட்ட அரசியல் அதிகார மாற்றத்தின் மூலம் பல தேசிய இனங்களையும் பலாத்காரமாக அடிமைப்படுத்தி கட்டமைக்கப்பட்ட அரசுதான் இந்திய அரச கட்டமைப்பு.! இதன் ஆளும் வர்க்கங்களாக இருப்பது அனைத்து தேசிய இனங்களிலும் உள்ள நிலவுடமை செல்வந்தர்களும், ஏகாதிபத்திய ஒட்டுன்னி தரகுமுதலாளிகளும் ஆவர்.! இப்படியான ஆளும் வர்க்கத்தை பாதுகாப்பதற்கும், அவர்கள் சர்வசுதந்திரமாக அனைத்து தேசிய இனங்களையும் ஈவு இறக்கமின்றி சுரண்டிக்கொழுப்பதற்கும் இந்தியா என்கிற கருத்திய கட்டமைப்பு அரசும், சாதியம் என்கிற கருத்தியல் கட்டமைப்பும் இருந்து வருகிறது.! இந்த இரு கட்டமைப்புகளையும் தவிற்த்துவிட்டு ஒரு பாட்டாளிவர்க்க புரட்சிகர கட்சி இருக்க முடியாது.! இந்த இரு கட்டமைப்புகளையும் சீர்குலைக்கும் செயலுத்தி மூலம்தான் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியே அடங்கியுள்ளது.! இதை செய்யாமல் மலுப்பல் வாதம் செய்வது எதிரியை மறைமுகமாக ஆதிரிக்கும் நிலைபாடாகத்தான் இருக்க முடியும்
  • Palani Chinnasamy Alex Andar உங்கள் நிலை என்பது சமூகத்தை மாற்றுவதற்கு பதிலாக ஒடுக்குமுறையின் ஒவ்வொன்ற விடுவிக்கும் செயல், அதாவது சாதி விடுதலை பின் பெண் விடுதலை அதற்கு பின் தொழிலாளர் விடுதலை விவசாய விடுதலை இப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலையை தனித்தனியாக பிரித்து அவர் அவர்கள் தேவைக்கு அவர் அவர்களே போராடிக் கொள்வது தவறியும் வர்க்க ஒற்றுமை வந்து விடக் கூடாது அல்லவா தோழர் அலெக்சாண்டர்???
   இவை யாரின் தேவைக்கானவை கொஞ்சம் சொல்லுங்க பாஸ
  • Alex Andar Palani Chinnasamy நீங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரித்து பார்த்தால் அது தனியாகி விடாது.! உண்மையில் ஒவ்வொரு முறன்பாடும் ஒன்றை ஒன்று சாந்தே உள்ளது என்பதில் இருந்து பார்த்தால் இந்திய கட்டமைப்பும், சாதிய கட்டமைப்பும் விணையாற்றும் அளவுகோளை கானமுடியும்.!
  • Palani Chinnasamy இவைதான் வர்க்க அணி சேர்க்கையை சீர்குலைக்கும் ஏகாதிபத்திய தேவைதானே கொஞ்சம் விளக்கவும்
  • Kanagu Kanagraj சாதி என்பதை வர்க்கத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக நினைப்பது, அதற்கொரு செயல்திட்டம் தேவை என்று நினைப்பதெல்லாம் வர்க்கப் போராட்டத்திலிருந்து வழி விலகத்தான் வாய்ப்புத்தரும் தோழர், சாதி மட்டுமல்ல வர்க்கங்களுக்குள் வராது என்று கூறிக்கொண்டிருக்கிற நம்பிக் கொண்டிருக்கிற எதுவும் முதலாளித்துவத்தை அசைக்கக் கூட முடியாத,-முதலாளித்திவத்திற்கு அடிபணிந்து கிடக்கம்போது, எப்படி கம்யூனிசத்திற்கு மட்டும் ஒத்துழைக்காத தனித்தன்மை வாய்ந்ததாக சாதி போன்றவை அமைய முடியும் தோழர்
 • Palani Chinnasamy Alex Andar உங்கள் நிலை என்பது சமூகத்தை மாற்றுவதற்கு பதிலாக ஒடுக்குமுறையின் ஒவ்வொன்ற விடுவிக்கும் செயல், அதாவது சாதி விடுதலை பின் பெண் விடுதலை அதற்கு பின் தொழிலாளர் விடுதலை விவசாய விடுதலை இப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலையை தனித்தனியாக பிரித்து அவர் அவர்கள் தேவைக்கு அவர் அவர்களே போராடிக் கொள்வது தவறியும் வர்க்க ஒற்றுமை வந்து விடக் கூடாது அல்லவா தோழர் அலெக்சாண்டர்???
  இவை யாரின் தேவைக்கானவை கொஞ்சம் சொல்லுங்க பாஸ.2
 • Alex Andar  தோழர் கனகு கனகராஜி அவர்களே.
 • மேலோட்டமான போக்கு என்பது முறண்பாட்டின் முழுமையான பண்புகளையோ அல்லது முறண்பாட்டின் ஒவ்வொரு கூருக்குமுரிய பண்புகளையோ ஆராயதவறுவதாகும்.! ஒரு பொருளை ஆழமாக துருவிப்பார்த்து அதிலுள்ள முறண்பாட்டின் பண்புகளை நுணுக்கமாக ஆராயும் தேவையை மறுப்பதும், இதற்கு மாறாக அதை தொலைவிலிருந்து நோக்கி முறண்பாட்டின் மேலோட்டமான தோற்றத்தை மட்டும் ஓரளவு பார்த்துவிட்டு அதற்கு உடனடியாக தீர்வுக்காண முயல்வதாகும்.! இவ்வகை செயல்முறைகள் தொல்லைகளுக்கு வழி வகுக்கும்.! ( ஆசான் மாவோ ) உண்மையில் வர்க்கத்திற்குள் பகைமுறணாக உள்ள சாதிய முறண்பாட்டை கம்யூனிசுடுகள் மேலோட்டமாக பார்ப்பதின் விளைவே இங்கே வர்க்க ஒற்றுமையும் பலப்படவில்லை, கம்யூனிசுடுகளின் வர்க்க அணிசேர்கை ஆளும் வர்க்கத்தை சீண்டிக்கூட பார்க்க முடியவில்லை.! மாறாக ஒரே வர்க்கமாக அணி சேரவேண்டிய பிற்படுத்தப்பட்ட தாழ்தப்பட்ட உழைக்கும் மக்கள் வலது சந்தர்பவாத தேர்தல் கட்சிகளையும், சாதிய கட்சிகளையுமே அண்டியுள்ளனர்.!
  • Kanagu Kanagraj Alex Andar தோழர் சாதி ரீதியான பிளவின் விளைவுகளை நாம் என்றும் குறைத்து மதிப்பிட்டதில்லை, பல்வேறு சாதிகளிலுள்ள உழைக்கும் மக்களை மட்டுமல்ல ஒரே சாதிக்குள்ளேயே கூட உழைக்கும் மக்களை நாம் ஒன்று திரட்டிவிடவில்லை என்பதை ஒப்புக் கொள்வோம், அதற்கு சாதிதான் காரணம் என்கிற சிந்தனையைத்தான் கேள்விக்குட்படுத்த வேண்டும், மேலும் முதலாளித்துவம் உழைக்கிற மக்களைப் பிளவுபடுத்த அனைத்துவிதமான வாய்ப்புகளையும் பயன்படுத்தத்தான் செய்யும், அதிலும் சாதி போன்ற ஆழமாக சமூகத்தில் வேரூன்றியுள்ள ஒன்றைப் பயன்படுத்துவது மிக எளிது, அப்படித்தான் வலதுசாரிக்கட்சிகள் உழைக்கும் மக்களைப் பயன்படுத்துகின்றனர், சாதிக்கட்சிகளை விடுங்கள் திமுக என்ன செய்தது, அண்ணாவும், கலைஞரும் கூட நாங்கள்தான் கம்யூனிஸ்ட்டுகள் என்று கூறி உழைக்கும் மக்களை அவர்கள் பக்கம் கொண்டு சென்றனர், சமூகத்தின் வளர்ச்சிப் போக்கிற்கு ஏற்ப இதுபோன்ற எதிர்ப்புகளை எதிர்கொண்டுதான் வளர வேண்டும் தோழர் வேறு வழியில்லை, இன்று சாதியை ஒழிக்க தனித்திட்டத்தை வர்க்கப் போராட்டத்தோடு இணைப்பது போல அன்று திராவிட சித்தாந்தத்தை எதிர்க்க தனியொரு திட்டமெ உருவாக்கினோமா, கிடையாது, அதுமட்டுமல்ல இனியும் இப்படி வந்து கொண்டேதான் இருக்கும் தோழர், அப்படி அவர்கள் பயன்படுத்துவதை எதிர்க்க நாம் மேலும் மேலும் வர்க்கமாக அணி திரள்வதுதான் தீர்வே தவிர சாதிக்கென்று தனித்திட்டம் என்று புறப்பட்டால் சாதிப்பிரச்சினைக்குள் சிக்கிக் கொள்வோம் தோழர், மேலும் ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள் கம்யூனிஸ்ட்டுகள் வர்க்கம் என்று பேசிப்பேசியே சாதியை கண்டுகோள்ளாமல் விட்டு இன்று வர்க்க அணி சேர்க்கையையும் கோட்டைவிட்டுவிட்டனர், சாதியையும் ஒழிக்காமல் விட்டுவிட்டனர் என்பது பலகாலமாகக் கூறப்படும் குற்றச்சாட்டே, நீங்களும் அதையேதான் கூறியுள்ளீர்கள், கம்யூனிஸ்ட்டுகளைத் தவிர்த்து-வர்க்கம் பேசாத சாதி ஒழிப்பை மட்டும் பேசியவர்களின் சாதி ஒழிப்புத் திட்டம் என்ன தோழர்? யாராவது அதுகுறித்து தெளிவாக இப்படித்தான் என்று அறுதியிட்டுக் கூறியுள்ளனரா? எனக்குத் தெரிந்து இல்லை, இருந்நால் கூறுங்கள் அறிந்து கொள்வோம், ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் சாதியைப் புரிந்து கொள்ளவில்லை அதனால்தான் தோல்வி என்று அவர்களும் குற்றம் சாட்டுகின்றனர் அதையே உங்களைப் போன்ற தோழர்களும் குற்றச்சாட்டாக வைக்கிறீர்கள்,
   ஆனால் வர்க்கப் போராட்டங்களின் வளர்ச்சி சாதியை ஒழித்துக் கொண்டுள்ளதை தொழில்மயமாக்கல் கண்முன்னால் நிரூபித்து வருகிறது, அதை நாம் ஒப்புக் கொள்வதில்லை என்பது மட்டுமல்ல காண்பது கூட இல்லை என்பதே உண்மை, அதற்காக சாதியின் விளைவுகளை கம்யூனிஸ்ட்டுகள் ஆராயதவர்களல்ல, இன்றைக்கு சாதி ஒழிப்புப் பேசுகின்றவர்களெல்லாமெ சொகுசு அரசியல் செய்த காலத்தில் சாதியை களத்தில் எதிர்கொண்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகளே, அது எந்தப்பிரிவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டாக வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம், இன்று அரசியலையொட்டிய எல்லாத் துறைகளிலும் கம்யூனிஸ்ட்டுகள் பலவீனமாக இருப்பதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும், அந்ந பலவீனம்தான் சாதிய விசயத்திலுமே தவிர சாதியை தனிப்பட்ட விவகாரமாகப் பார்ப்பது சரியல்ல தோழர்
 • Palani Chinnasamy Alex Andar அவர்களின் சொல்லாடல் பின் நவீனத்துவ கட்டுடைத்தல் அல்லவா கொஞ்சம் விளக்குங்கள்
  • Alex Andar Palani Chinnasamy எனக்கு தெறியுல தோழர் நீங்களே எப்படி என்று விளக்குங்கள்.
  • Palani Chinnasamy Alex Andar முதலில் கட்டுடைத்தல் என்னவென்று கூறுங்கள் நான் பின் நவீனத்துவம் அதன் மார்க்சிய விரோத சொல்லாடல் போக்குகளை அவசியம் எழுதுவேன் உண்மையில் மார்க்சியத்தை நேசிக்கும் போக்கில்
  • Palani Chinnasamy Alex Andar தெரியாமலேயா இது வரை கட்டுடைதல் தத்துவத்தை தூக்கி கொண்டு அழைந்தீர்கள்? உண்மையில் தெரியவில்லை என்றால் உங்களின் கடந்தகால பதிவுகள் உங்களுடையவை அல்லவையா? அவை யாரின் பதிவுகள் சற்று விளக்கவும்1Edit or delete this
  • Alex Andar Palani Chinnasamy அது என்னெங்க கட்டுடைத்தல் என்று கொச்சைத்தனமாக ஜொசியக்காரன்மாதிரி கேட்குறீங்க.? உண்மையில் இதில் இருந்தே நீங்கள் ஒரு நேர்மையான கம்யூனிசுடு இல்லை என்று தெறியவில்லையா.? இந்த உங்களின் சங்கி செயலுக்கு நான் விளக்கம் கொடுக்கனுமா.?
  • Palani Chinnasamy Alex Andar நீங்கள் ஒரு வேசதாரி புதிய தோழர்களையும் பல தோழர்களையும் திசைமாற்றும் மார்க்சிய விரோதி , மார்க்சியத்தின் பெயரில் மார்க்சிய விரோத போக்கை தூக்கி நிறுத்தும் பின் நவீனத்துவ வாதி, ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் ஒளிவு மறைவு இன்றி உண்மையை ஒற்றுக் கொள்ளும் தன்மை வேண்டும், ஏமாற்றி திசைத் திருப்பும் வேலை ஏகாதிபத்திய கைகூலிகளின் வேலை. உண்மையில்
   நீங்கள் கம்யூனிசத்தை நேசிப்பவராக இருந்தால் நான் கேட்டுள்ள கேள்விகளுக்கும் நான் உங்களின் மேல் உள்ள பதிவீற்க்கான பதிலையையும் வாசித்து விள்க்கம் தாருங்கள் தொடர்ந்து பேசுவோம், நீங்கள் ஏமாற்று பேர் வழி என்றால் வசை மாறி பொழிந்து விட்டு உங்கள் அணியை திசைத் திருப்புங்கள். மார்க்சியத்தின் மீது அக்கறை இருந்தால் உண்மையாக பதிலளிக்க காத்திருப்பேண்.
  • Alex Andar Palani Chinnasamy ஏன் இந்த 60,ஆண்டுகாலமாக போலி ஒற்றுமை போலிப்புரட்சி பேசிக்கிட்டு உழைக்கும் மக்களை ஏமாற்றி அவர்களின் முதுகில் சவாரி செய்துகொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு வருகின்றீர்களே அந்த அனுபவத்தில் இருந்து சொல்லுகின்றீர்களா.?
  • Palani Chinnasamy Alex Andarஇவைதான் உங்களின் ஏமாற்று வேலை யார் யாரை சுரண்டுகின்றனர் யாரை நாம் எதிர்க்க வேண்டும் உங்கள் மார்க்சிய முக்மூடி தேவைப்படும் இடம் இதுவன்றோ? யார் எதிரி யார் நண்பன் சொல்லுங்கள்?
  • Alex Andar Palani Chinnasamy உண்மையில் உங்களின் பித்தலாட்டங்களை எதிர்த்து போராடுவதில்தான் பாட்டாளிவர்க்கத்தின் பூரண வெற்றியே அடங்கியுள்ளது.!
  • Palani Chinnasamy Alex Andar என்ன பித்தலாட்டாம் சொல்லி விடலாமே ஏகாதிபத்திய ஏஜெண்ட்…. உங்களின் கட்டுடைதல் என்ற வார்த்தை சாலம் ஏகாதிபத்திய காணிக்கையே அந்த வார்த்தையை பயன்படுத்தும் உங்களை போன்ற ஏஜெண்ட்க்கு ஏமாற்றுவதற்க்கு பாட்டாளி வர்க்கம் தேவை வாங்கி திண்பதற்க்கு கட்டுடைக்க வேண்டும் என்னே புத்திசாலித்தனம்? உண்மையில் உங்கள் அரசியல் என்னே பாஸ்
  • Palani Chinnasamy “தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் குலைக்கும், பின்நவீனத்துவ நோக்கத்தை தோழர் மிகச் சரியாகவே சுட்டிக் காட்டியுள்ளார், “தலித்துகளுக்கு எந்த சாதி அடையாளமும் பெருமைக்குரியதாக இல்லை என்பதாலும், சாதி ஒழிப்பே ஒரே பெருமிதம் என்பதாலும் சாதி அடையாள அரசியல் என்பது மேல் சாதிக்களுக்கான அரசியலாக தெளிவோடு முன்னெடுத்தார்கள். ஆக மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்க மேல் சாதி மக்களிடையே சாதியப் பெருமையெனும் திமிரைக் காப்பாற்றி நீடிக்க செய்கிற பணிதான் ஆண்ட பரம்பரை எனும் அரசியலின் ஆரம்பம் ஆகும்.””

 • பின்நவீனத்துவம்- கம்யூனிச எதிப்பின் முற்போக்கு முகமூடி
  (இந்நூலுக்கு நான் எழுதிய முன்னுரையில் இருந்து)

  மேலும் வாசிக்க
  http://abouttamilbooks.blogspot.in/2014/08/blog-post.html தோழர் ஆ.க ஈஸ்வரன் முகனூல் பதிவு
  • Alex Andar Palani Chinnasamy தூங்குகிறவனை எழுப்பிவிடலாம் ஆனால் தூங்குகிற மாதிரி நடிக்கிறவனை எழுப்பமுடியுமா.? அதுபோல்தான் உங்களைப்போன்றவர்களின் சாதியம் குறித்தான மலுப்பல் போக்கு.! உண்மையில் சாதிய கட்டமைப்பு ஆளும் வர்க்கத்திற்கு பாதுகாப்பு கவசமாக இருந்துகொண்டு வர்க்க ஒற்றுமைக்கு இடையூராக வர்க்கத்திற்குள் பகைமுறண்பாட்டை ஏற்படுத்தி வருகிறது என்பதை உங்களின் வர்க்க அணிசேர்கையின் அனுபவத்தில் இருந்தே அறிந்து வைத்துதான் உள்ளீர்கள் ஆனால் அதை வெழிப்படுத்ததான் மனமிலௌலாமல் நலுவல் வாதம் பேசிக்கொண்டு கோடியில் புரளத்தொடங்கிவிட்டீர்கள்.! காரணம் சாதிய கட்டமைப்பில் கைவைத்தால் வர்க்க ஒற்றுமைக்கும் வர்க்க புரட்சிக்கும் வழி அமைந்துவிடும் ஆனால் ஆளும் வர்க்கம் அதை விரும்பாது அதனால் அதை செய்ய நீங்கள் விரும்பாமல் போலி வர்க்க ஒற்றுமை பேசிக்கொண்டு போலி புரட்சி நாடகமாடிக்கொண்டு காலங்கடத்தி வருகின்றீர்கள்.! ஆனால் உங்களின் இந்த சந்தர்பவாத பிழைப்புவாத போலி புரட்சி நாடகம் ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்பதை காலப்போக்கில் மக்கள் உணர்த்தான் போகிறார்கள் அது நிச்சயம் நடக்கும்.!
  • Palani Chinnasamy Alex Andar என்ன எழுதுகிறேன் என்றாவது புரிகிறதா உங்களுக்கு சாதியத்தை பற்றி எனது கருத்தும் அதற்கான தீர்வும் மேலே உள்ளதே ஏகாதிபத்திய ஏஜேண்ட், ஏன் எஜேண்ட் என்றாவது புரிந்ததா அவையும் உங்களின் தலைமையிடம் விளக்கம் கிடைத்த பிறகுதான் கூறுவீரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *