சாதிவெறியில் பார்பனியம் தேடு

சாதி அடிப்படையிலும் மத அடிப்படையிலும் இந்திய உழைக்கும் மக்களை பிளவுபடுத்த ஒரு ஓநாய் கூட்டம் அலைகிறது. அந்த கூட்டத்தையும் அதன் நோக்கத்தையும் இனம்கான வேண்டும். தமிழ்நாட்டில் தர்மபுரி மாவட்டத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞனும் ஒரு வன்னிய சாதியைச் சேர்ந்த பெண்ணும் காதலிப்பதை பிரச்சனையாக்கி பா.ம.வும் வன்னிய சாதிவெறி அமைப்புகளும் சாதிக்கலவரத்தை தூண்டுகிறார்கள். இந்த பிரச்சனையில் பார்ப்பனர்கள் தொடர்பில்லை. வன்னிய சாதி வெறியர்களே காரணமாக இருக்கிறார்கள். மேலும் இவர்களுக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார்? ஆய்வு செய்யவேண்டும். இவர்களின் நோக்கம் அனைத்து சாதியிலும் உள்ள உழைப்பாளர்களும் ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டுவிடக்கூடாது என்பது தெளிவாக தெரிகிறது ஆகவே இவர்களது தீய நோக்கத்திற்கு பலியாகி நமது ஒற்றுமையை விட்டுவிடாமல் நமது ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும்.