கம்யூனிச இயக்கங்கள் வலிமையாக ஒடுக்கப்பட்ட மக்களை வர்க்க ரீதியாக திரட்டி ஆளும் வர்க்கத்திற்க சவாலாக இருந்த காலகட்டத்தில் குறிப்பாக புரட்சிகர இயக்கங்களை காலி செய்ய உழைக்கும் மக்களை பிளப்புப் படுத்த பல்வேறு தளங்களில் ஆளும் வர்க்கம் சரியாக சொன்னால் ஏகாதிபத்தியம் பிரித்து அவர்களுக்குள் உள்ள முரண்பாட்டை கையாண்டனர் எனபது மிகையன்று…
அதை நிர்மூலமாக்குவதற்காக என்ஜிஓக்களால் இறக்குமதி செய்யப்பட்டதே ‘ தலித்திய தத்துவம்’.
அனைத்திலும் தலித்திய ஆளுமை என இதன் இலக்கை வரையறுத்தார்கள்.
அதன் விளைவு , கம்யூனிச இயக்கங்கள் சிதறி சின்னாபின்னமாகின.
சரி..தலித்திய இயக்கங்களாவது வலிமையடைந்து ஆளுமையை நோக்கி சென்றதா??.. எனில்., அதுவும்.இல்லை.
ஏனைய பிற்பட்ட சாதிகளில் சாதி அமைப்புகள், சாதி கட்சிகள் பெருகியதே மிச்சம்.
கம்யூனிச கொள்கையின் கீழ் ஒரு பொதுவான மக்கள் தளத்தில் இயங்குகையில் சாதி ஒழிப்பு பிரச்சாரம்,சாதி மறுப்பு திருமணம்உள்ளிட்ட பல விசயங்களை செய்ய முடிந்தது.
அது சிதறடிக்கப்பட்டு
சாதி அமைப்புகளாக பெருகிய காலத்தில் சாதி ஆணவக்கொலைகள் உள்ளிட்ட பல ஒடுக்குமுறைகள் பெருகின. அதைத்தடுக்கத்தான் யாருமில்லாமல் போனார்கள்.
அதன் மிகச்சரியான உதாரணம்: தருமபரி நாயக்கன் கொட்டாய் சம்பவம்.
இந்தப் பகுதியில் , மாலெ இயக்கம் உள்ளிட்ட கம்யூனிச அமைப்புகள் வலிமையாக இருந்த காலகட்டம் வரை எந்த சாதிக் கலவரமும் வரவில்லை.
மாலெ அமைப்புகள் நிர்மூலமாக்கப்பட்ட பின்னான காலங்களில் சாதி கட்சிகள் வளர்ந்தபின் மிகப் பெரும் சாதிக் கலவரங்கள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் , அதைத்தடுக்கத்தான் யாராலும் முடியவில்லை.
இந்தக்கருத்தையும் ‘ சாதி ஒழிப்பு கோஷ வாதிகள்’ விமரசிக்கத்தான் செய்வார்கள்.
அப்படி விமர்சிப்பவர்கள் , சாதிகளை ஒழித்தால் மகிழ்ச்சிதான்..!!!