சாதியம்
சாதியம்

சாதியம்

சாதியத்தின் தோற்றம்

தனிச்சொத்துடைமை தான் வருணமுறை தோன்றக்காரணம் என்பதில் மாற்றமில்லை.சத்திரிய அரசர்கள் தன் ஆட்சியை தொடர வருணமுறை பயன்பட்டது.வருணமுறைக்கு தேவையான சட்டத்தை கௌடில்யர் உருவாக்கிய அர்த்தசாஸ்திரம் பயன்பட்டது. அதோடு புராணங்கள் , இதிகாசங்கள் மூலமாக வருணமுறை மக்களின் வாழ்க்கை முறையாக மாறிட சத்திரிய அரசர்களுக்கு பிராமணர்கள் ஆதாரமாக விளங்கினர். ஆக,வருணமுறை தோன்ற பார்ப்பனியம், இந்துமதம் காரணமல்ல.உற்பத்திமுறையில் ஏற்பட்ட தனிச்சொத்துடைமை காரணமாகும்.
அதேபோல்….
சாதியம்,தீண்டாமை தோன்றிட நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை காரணம். அத்துடன் அகமணமுறை, பிறப்பால் உயர்வு தாழ்வு, படிநிலை வேறுபாடு,சடங்குகள் போன்றவை நிலவிட நிலப்பிரபுத்துவ பண்பாடே காரணம். இங்கும், சாதியம், தீண்டாமை நிலைத்திருப்பதற்கான காரணம், அல்லது சமூகவேர் அல்லது பொருளாதார அடித்தளம் பார்ப்பனியம், இந்துமதம் அல்ல. நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையே காரணம். அந்த அடித்தளத்தின் மேலே எழுந்த மேற்கட்டுமானம் தான் மதம் மற்றும் சாதியம்,தீண்டாமை ஆகும். ஆகவே சாதியம், தீண்டாமை ஒழிந்திட அதற்கான பொருளாதார அடித்தளத்தை வீழ்த்திவிட்டால், அதாவது நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையை தகர்த்து விட்டால் சாதியம்,தீண்டாமை ஒழியும் என அம்பேத்கர்,பெரியார் கூறியதில்லை. அவர்கள் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை ஆதரித்தனர்.
சரி இந்தியாவில் பார்பனர்கள்தான் சாதி தோன்ற காரணம் என்போர் இலங்கையில் பார்ப்பனிய மதம் இல்லையே ஆனால் சைவ வேளாளர் உண்டு அவர்களே நிலப்பிரபுத்து வர்க்கத்தினர். அங்கே புத்தமதம் உண்டு. அதே போல் புத்த சிங்களரிடையே சாதியம் உண்டு தமிழரிடமும் அங்கு சாதி உள்ளது.

ஆக சாதியம்,தீண்டாமை நிலவிட பார்ப்பனிய இந்துமதம் காரணமல்ல, நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஆப்பிரிக்காவில்,ஜப்பானில் கூட சாதியம் உள்ளது. ஆனால் அங்கே பார்ப்பனியம்,இந்துமதம் இல்லை. எனவே சாதியம் ,தீண்டாமை நிலவிட பார்ப்பனியம்,இந்துமதம் என்றார்களே பெரியாரும் அம்பேத்கரும் அது சரியா ?
வெளிநாடு ஏன்? இந்தியாவின் அஸ்ஸாம்,மிசோரம்,மணிப்பூர் போன்ற பகுதிகளில் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை உருவாகவில்லை.ஆகவே அங்கும் சாதியம்,தீண்டாமை இல்லை.எதற்காக இதைச் சொல்கிறோம்?
சாதியம்,தீண்டாமை நிலைத்திருப்பதற்கான காரணம் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையே என்பதற்காகத்தான்.

ஒரு பொருளை உற்பத்தி செய்ய நமக்கு உற்பத்தி சாதனங்களும், உழைப்பும் தேவை. உற்பத்தி முறையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றமானது உழைப்புப் பிரிவினைக்கும், வர்க்க உருவாக்கத்திற்கும் வழிகோலியது. அப்போதைய பொருளாதார அமைப்பின் வளர்ச்சிக்குப் பங்களித்த சூழ்நிலைகளானது அப்போதைய சமூக ஒழுங்காகிப் போனது. சமூக விஞ்ஞானிகள் அவ்வமைப்புகளை முறையே புராதன (ஏறக்குறைய கம்யூனிச) அமைப்பு, அடிமையுடைமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம் மற்றும் முதலாளித்துவ சமூகம் என்று விளக்கியுள்ளனர். இன்றைய உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு உற்பத்தி முறையான முதலாளித்துவம் குறித்தும், நாம் விரிவாகக் காண்போம்.

அடிப்படை வாழ்வாதாரத்திற்கான உற்பத்தி என்பது முதலாளித்துவத்தின் கீழ் செல்வக் குவிப்பிற்கான உற்பத்தியாக மாறிப்போனது. இலாபம் என்பது இயற்கையான ஒரு விதியல்ல. செல்வக் குவிப்பிற்காக முதலாளித்துவத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாகும். அதற்காக தொழிலாளர்கள் மிகவும் கொடூரமான பணிச் சூழல்களில், இரக்கமற்ற பணி நேரங்களுக்குக்கு ஆட்பட்டு கடுமையாக உழைக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அந்த உழைப்புச் சக்திகளின் அதிக உழைப்பு நேரத்தினால் ஈட்டப்படும் மதிப்பைத்தான் ‘உபரி மதிப்பு’ என்று காரல் மார்க்ஸ் விளக்குகிறார். அவ்வாறு அபகரிக்கும் அந்த உபரி மதிப்பைத்தான் முதலாளித்துவமானது இலாபம் என்று சொல்கிறது. இந்த உபரி மதிப்பு அதிகரிப்பே மேலாதிக்க சமூக உறவுகளுக்கும், அதன் படிநிலை வெளிப்பாடுகளுக்கும் காரணமாக அமைகிறது என்பதே அவரது விளக்கம்.

முந்தைய உற்பத்தி முறையிலும், முதலாளித்துவத்திலும் காணப்படும் இந்த உழைப்புப் பிரிவினையை மார்க்ஸ் தெளிவாக விளக்கியுள்ளார். அதன் சாராம்சம் பின்வருமாறு:

முதலாளித்துவத்தின் கீழ், தனியுடைமையின் அடிப்படையிலான உழைப்புப் பிரிவினையின் விளைவாக உருவாகும் உறவுமுறைகள் மேல் கீழ் அடுக்குமுறை அமைப்பிலானவை. எஜமானர் – தொழிலாளி என்று அது வரையறுக்கப்படுகிறது. முந்தைய அமைப்பிற்கும், முதலாளித்துவ அமைப்பிற்குமான முக்கிய வேறுபாடு என்னவெனில் உழைப்புக்கு ஈடாக கூலி (பணம்) எனும் புதிய முறையிலான ஒரு இழப்பீடு வழங்கப்படுகிறது; பொருட்கள் ‘சரக்கு’களாகின்றன; உற்பத்தி சாதனங்கள்2 ‘மூலதனம்’* ஆகின்றன, சுரண்டல்வாத சூத்திரம் இலாபம் என்று அழைக்கப்படுகிறது. உற்பத்தி சாதனங்களின் ‘எஜமானர்’ உழைப்புச் சக்தியை வாங்கி, உபரி மதிப்பை இலாபம் என்று அபகரிக்கும் இந்த முறையே உழைப்புச் சுரண்டல் எனப்படுகிறது. தனியுடைமையின் அடிப்படையிலான உற்பத்தி முறையும், அதன் கீழான பொருளாதார அமைப்பும் முதலாளித்துவம் எனப்படுகிறது. இதன் மூலம், முதலாளித்துவ பொருளாதாரமானது சுரண்டலின் அடிப்படையிலானது, ஏற்றத்தாழ்வு மிக்கது என்பதை சொல்லவும் தேவையில்லை.

வாழ்வதற்காக மனிதர்கள் பொருளை உற்பத்தி செய்யவும், நுகரவும் வேண்டும். உற்பத்தியும் அதனோடு தொடர்புடைய நடைமுறைகளும் பொருளாதார நடவடிக்கைகளாகும். அதனால், மனித வாழ்வின் நிர்ணய சக்தியாக அதுவே விளங்குகிறது. இவ்வாறாக, மனிதர்கள் தனிநபர் அளவிலும், சமூக அளவிலும், உற்பத்தி உறவுகளுக்கு உள்ளாகிறார்கள், அதன் மறுபெயர் உழைப்பு உறவுகள். உழைப்பு உறவுகள் சுரண்டல்தன்மை கொண்டவையாக, நியாயமற்றவையாக இருக்கின்ற போது, அதன் விளைவாக ஏற்படும் சமூக உறவுகளும் சுரண்டல்தன்மை கொண்டவையாக, நியாயமற்றதாகவே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *