தத்துவம் ஞானமானது கருத்து முதல் வாதம் எனவும் பொருள் முதலாவதம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் என்பது முதன்மைப்படுத்துதல் குறிக்கும் அளவுக்கு முதலில் வந்தது என்பது குறிக்காது எனினும் எது முதலில் வந்தது என்ற வினாவை பொறுத்த வரை, பொருள் முதல்வாதிகள் பொருளை அடிப்படையாகக் கொண்டே சிந்தனைகள் அனைத்தும் உருவாயின என்பதில் உறுதியுடன் உள்ளனர். மாறாக கருத்தில் இருந்தே பொருள் தோன்றியது என்றவாறான கொள்கை எல்லா வகையான கருத்து முதல்வாதிகளுக்கும் பொருந்தாது.
இந்த இரண்டு வகையான உலக பார்வையை பின்வருமாறு காணலாம்:
கருத்து முதல் வாதம் என்பது உணர்வு நிலை எண்ணம் உளவியல் ஆன்மீகம் என்பவற்றை முதன்மையாகவும் அடிப்படையாகவும் கொண்டு பருப்பொருள் இயற்கை இயற்கை விஞ்ஞானத்திலிருந்து பெறப்பட்ட அறிவை இரண்டாம் பட்சமாகவும் நிபதனைக்கு உட்பட்டதாகவும் ஏற்றுக்கொள்கிறது.
பொருள் முதல் வாதம் என்பது மனித அறிவும் உணர்வு நிலையும் பருப்பொருளை அடிப்படையாகக் கொண்டே எழுகின்றன எனக்கு கொள்கிறது. அதன்படி பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பொருள் சார்ந்த என்பதால் பிரபஞ்சத்தில் நிகழ்வுகளை இயற்கைக்குப் புறம்பான எதுவும் ஆளுவதில்லை என பொருள் முதல்வாதம் கொள்கிறது. எனவே இயற்கை நிகழ்வுகளை சரிவர புரிந்து கொள்ள இயற்கைக்கு புறம்பான எதையும் ஒரு பொருள் முதல்வாதி நாட இடம் இல்லை.
பொருள்களின் இருப்பையும் அவற்றைப் பற்றி அறிவையும் சார்ந்த தத்துவஞான தீர்வு தேடும் முறையில் கருத்து முதல்வாதம் பொதுவாக பொருள் முதல் வாதத்தினை மறுத்து நிற்கிறது. எனது அறிவின் தோற்றுவாய் மனிதனின் இருப்பு உலகினது உயிர்களது தோற்றம் என்பனப் போன்ற பல விடயங்களில் கருத்து முதல் வாதம் பொருள் முதல் வாதம் அடிப்படையில் முரண்படுகின்றன.
குறுகிய நோக்கமுடைய கருத்து முதல் வாதம், எதார்த்தத்தைப் பற்றிய தமது புரிதல் முதன் முக்கியமாக நமது உள்ளத்தின் செயல்பாட்டிலே தங்கி உள்ளது எனவும் அதற்குப் புறம்பாக பொருட்களின் இயல்பு என்பது பொருளற்றது எனவும் வாதிடும்.( இக்கொள்கையை அதன் அபத்தத்தின் எல்லைக்கே கொண்டு போகலாம்: நமது உள்ளங்கட்டு வெளியே உலகு இல்லை என்று கூறும் மாயவாதப்போக்குகளை நாம் அறிவோம்) .
இயற்பொருட்கள் அனைத்தையும் அனுபவங்களையும் உள்ளத்தின் அல்லது அதனின் உயரிய ஒன்றின்; பெயராண்மைகளாக கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் கருத்து முதல் வாதம் என்ற வகைக்குள் மெய்யியல் அடக்குகிறது. அதனால் முரண்பாடான பல வழிகளில் உலகை விளக்கம் முனையும் மதங்கள் யாவுமே கருத்து முதல் வாதம் என்ற வகைக்குள் வருகின்றன. மனம் என்பதன் இயல்பு என்ன அது மனித உடலுக்கும் இயற்கைக்கும் புறமானதா? எனும் மாறான வினாக்கள் முதலான பல விடயங்களிலும் கருத்து முதல்வாதிகள் தம்முள்ளே கடுமையாக முரண்படுகிறது என்பதை இங்கே குறிப்பிடல் அவசியம்.
பொருள் முதல்வாதம் என்பது இயற்கையையும் மனித மனத்தையும் அறிவதற்கு மட்டுமின்றி சமூகத்தை அறியவும் சமூக மாற்றத்தை இயக்குமாக்க பயன்படுத்த வேண்டும் எனில் அது ஒவ்வொரு பொருளிலும் உள்ளார்ந்த முரண்பாடான இயல்பையும் அம் முரண்பாடுகளின் உறவாடலின் அடிப்படையிலேயே வளர்ச்சியும் மாற்றும் நிகழ்கின்றன என்பதையும் ஏற்க வேண்டும். அந்த அணுகுமுறையானது இயங்கியல் கோட்பாட்டின் அடிப்படையில் ஆராயப்படுவதும் ஆகும்.
பொருள் முதல்வாதம் எல்லாம் ஒத்த கருத்துடையோ உலகநோக்கில் ஒரே தன்மையுடையதாக இல்லை அவை காலப்போக்கில் வளர்ந்து காரல் மார்க்ஸ் உலகை மாற்றுவதற்கான ஒரு கருவியாக தத்துவத்தை ஆக்கியதே மார்க்சிய தத்துவத்தின் முக்கிய போதனையாக விளங்குகிறது. மார்க்சிய தத்துவமானது, ” இதுவரை பல்வேறு தத்துவங்கள் உலகை விளக்கம் முயன்றுள்ளன ஆனால் முக்கியமானது இந்த உலகை மாற்றுவது தான், என்கிறது மார்க்சித் தத்துவம்”.