சமூக ஜனநாயகவாதிகளின் இரண்டு போர்தந்திரங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++
நேற்று வகுப்பில் கலந்துக் கொள்ள அழைப்பு வந்தது கலந்துக் கொண்டேன் அதன் மீதான விமர்சனம் இந்தப் பதிவு.
நான் அவர்களுக்கு சொல்ல நினைப்பது ஒரு வகுப்பை எடுக்கும் முன் அந்த ஆசிரியரின் கருத்தை தெளிவாக புரிந்து பேசுங்கள்.
இனி அதற்க்கான பதில் இதோ….. கீழே
1905ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஜனநாயக புரட்சியில் சமூக ஜனநாயகவாதிகளின் இரண்டு போர்தந்திரங்கள் என்ற நூல் வெளியானது.
இந்நூலானது அன்று மென்ஸ்வீக்குகள் போல்ஸ்விக்குகள் இடையிலான போர்த் தந்திர பிரச்சினை மட்டும் என்று பார்த்தால் இந்நூலை குறுகிய கண்ணோட்டத்தில் காண்பதாகும்.
இவை சர்வதேச வழிகாட்டுதல் கொண்டவை ஆகும். சீர்திருத்த வாதம் சந்தர்ப்பவாதம் முதலாளித்துவ ஊசலாட்டம் போன்ற போக்குகளையும் அம்லப்படுத்துவதோடு ஒரு சரியான போர்தந்திரம் என்ன வகையானவை என்று தோழர் லெனின் உலகிற்கு வழிவகையும் காட்டியுள்ளார்.
ரசிய சமூக ஜனநாயக கட்சியின் மூன்றாவது காங்கிரஸ் 1905 ஏப்ரல் மாதத்தில் லண்டன் நகரத்தில் கூடியது. அதில் கட்சியின் பெரிய அமைப்பு இருந்து சார்பாளர்கள் வந்திருந்தனர் கட்சியை பிளவுபடுத்தி பிரிந்து சென்ற ஒரு பகுதி என்று நினைவுகளை காங்கிரஸ் கண்டித்து விட்டு கையில் இருந்த வேலையை கட்சியின் போர் தந்திரங்களை பிரயோகிக்கும் வேலையை கவனிக்க முற்பட்டது இந்த காங்கிரஸ் நடைபெற்ற அதே போது ஜெனிவா நகரில் மென்ஸ்விக்குகள் அவர்கள் தங்களுடைய மாநாட்டை நடத்தினார்கள்.இதை தான் தோழர் லெனின் இரண்டு காங்கிரஸ் இரண்டு கட்சிகள் என்று சுருக்கமாகக் கூறியுள்ளார்.
காங்கிரஸும் மாநாடும் போர்தந்திரத்தைப் பற்றி ஒரே பிரச்சினைதான் விவாத்தின ஆனால் செய்யப்பட்ட முடிவுகள் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. காங்கிரஸில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஒவ்வொன்றும் மூன்றாவது கட்சி காங்கிரஸ் கட்சிக்கும் மென்ஸ்விக்கும் மாநாட்டிற்க்கும் இடையே, போல்ஸ்விக்குகளுக்கிம் மென்ஸ்விக்குகளுக்கும் இடையே இருந்த போர்தந்திர வேற்றுமைகள் எவ்வளவு தூரம் விரிவானவை என்பதைக் காட்டின
இந்த வேற்றுமைகளில் முக்கியமான விஷயங்கள் இவைதான்.
மூன்றாவது கட்சிக் காங்கிரசின் போர்த்தந்திர போக்கு ; அப்போது நடந்துவந்து புரட்சியின் தன்மை முதலாளித்துவ ஜனநாயகம் அக்குறிப்பிட்ட சமயத்தில் முதலாளித்துவ கட்டுக்கோப்புக்குள் இருந்து எதை சாதிக்க முடியுமோ அதை விட அதிகமாக எல்லையை மீறி இந்த புரட்சியால் போகமுடியாது . இந்த இரண்டு தன்மைகளும் இருந்தபோதிலும் இந்த புரட்சி வெற்றி அடைவது மிக அதிகமாக சிரத்தைக் கொண்டிருப்பது பாட்டாளி வர்க்கம் தான். ஏனெனில் இந்தப் புரட்சி கிடைக்கும் வெற்றியானது பாட்டாளி வர்க்கம் தன்னை மிகவும் ஒழுங்காக அமைப்பு ரீதியில் ஒன்று திரட்டி கொள்வதற்கு உதவி செய்யும்.
அரசியல் ரீதியாக வளர்ச்சி அடைய உதவி செய்யும் பாட்டாளி மக்களுக்கு அரசியல் தலைமை பதவியை கொடுப்பதற்கு பாட்டாளி வர்க்கத்திற்கு ஆற்றலையும் அனுபவத்தையும் கொடுக்கும் முதலாளித்துவ புரட்சியிலிருந்து சோசலிசப் புரட்சியை நோக்கி முன்னேறுவதற்கு பாட்டாளி வர்க்கத்துக்கு உதவும் என்று காங்கிரஸ் கருதியது.
முதலாளித்துவ ஜனநாயக புரட்சிக்கு பரிபூரண வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக பாட்டாளி வர்க்கம் தயாரிக்கும் போர் தந்திரத்திற்கு விவசாயிகளிடமிருந்து மட்டும்தான் ஆதரவு கிடைக்கும். ஏனெனில் புரட்சி பரிபூரணமாக வெற்றி அடையாத வரையில், நிலச்சுவான்தார்களுடன் விவசாயிகளால் கணக்குத் தீர்க்க முடியாது. அவர்களுடைய நிலத்தை அடைய முடியாது .ஆகவே விவசாய வர்க்கம்தான் அதன் இயற்கையான கூட்டாளி. புரட்சி பரிபூரண வெற்றி அடைவது மிதவாத முதலாளிகளுக்கு சிறுத்தை இல்லை ஏனெனில் மற்ற எதையும் விட அதிகமான தொழிலாளர்களையும் விவசாயிகளையும் கண்டு அவர்கள் பயப்பட்டார்கள் தொழிலாளர்களின் விவசாயிகளின் அடக்கி வைப்பதற்கு ஒரு தடையாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள் ஏதோ கொஞ்சம் ஜார் ஆட்சியின் அதிகாரங்களை குறைத்து கட்டுப்படுத்துவதுடன் அவர்கள் விருப்பம் இருந்தும் கட்டுப்படுத்தி ஜார் ஆட்சி அமைப்பதற்கு அவர்கள் முயற்சி செய்தார்கள்.
ஜனநாயகக்த்திற்க்காக முரண்பாடின்றி ஒரே பிடியாக போராடக் கூடிய ஒரே வர்க்கம் பாட்டாளி வர்க்கம் தான். அதனுடைய புரட்சிப் போராட்டத்தில் விவசாய மக்கள் சேர்ந்தால்தான் ஜனநாய கத்திற்க்காக வெற்றிகரமாகப் போராடும் வீரனாக அதனால் ஆகமுடியும் என்று லெனின் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது விவசாய வர்க்கத்தில் ஏராளமாக அரைப் பாட்டாளி வர்க்கமும் குட்டி முதலாளி வர்க்கமும் இருக்கின்றன. இந்த வர்க்கமும் நிலையற்ற வர்க்கமாக இருப்பதற்கு எது காரணமாக இருக்கிறது.( சோ.க. க. வ. பக்கம் 118)
கண்டிப்பாக தன்னுடைய கட்சியில் ஒன்று சேரும்படி இன் நிலைமையை பாட்டாளி வர்க்கத்தை நிர்ப்பந்திக்கிறது. ஆனால் விவசாய வர்க்கத்தின் நிலையற்ற தன்மை போல் அல்ல அதற்கும் இதற்கும். வித்தியாசம் உண்டு ஏனெனில் தனி உடைமையாக இருக்க பொருள்களில் ஒன்று நிலம் படைத்த பண்ணைகள் இந்தப் பண்ணைகளை பறிமுதல் செய்வதை விவசாயிகள் எதிர்க்கவில்லை அதாவது இது போன்ற தனி சொத்துக்களை அப்படியே உள்ளது உள்ளபடியே பாதுகாத்து காப்பாற்றி வைப்பதில் தற்போது விவசாய வர்க்கத்திற்கு அவ்வளவு அக்கறை கிடையாது.
இந்த அக்கறை இல்லாததனால் விவசாயி வர்க்கம் சோஷலிஸம் தன்மை கொண்டது ஆகிவிடவில்லை அதேபோல் மத்தியதர வர்க்கமாக இல்லாமல் போகவில்லை இவ்விதம் இருக்கும்போது ஜனநாயகப் புரட்சியில் மனப்பூர்வமாக பங்கெடுத்துக் கொள்ள கூடிய மிகவும் தீவிரமான சீடனாக விவசாய வர்க்கத்தினால் ஆகமுடியும் விவசாயத்திற்கு விழிப்பூட்டி வெளிச்சத்தை காட்டும் புரட்சிகரமான நிகழ்ச்சியின் வளர்ச்சி முதலாளி வர்க்கத்தின் துரோகத்தினால் பாட்டாளி வர்க்கத்தின் தோல்வி நானும் தடை செய்யப்படாமல் இருந்தால் தான் விவசாய வர்க்கம் தவிர்க்க முடியாதவாறு அத்தகைய சீடனாக முடியும்.( சோ.க. க. வ. பக்கம் 118-119).
இந்த நிபந்தனையின் பேரில் புரட்சியை குடியரசின் தாங்கி நிற்கும் கோட்டையாக தவிர்க்க முடியாதவாறு விவசாய வர்க்கம் வந்து தீரும் ஏனெனில் பரிபூரணமாக வெற்றியடையும் புரட்சி ஒன்றுதான் விவசாய சீர்திருத்தங்களில் விவசாய வர்க்கத்திற்கு யாவற்றையும் கொடுக்கும் விவசாயிகள் மனப்பூர்வமாக விரும்புகின்ற யாவற்றையும் கனவு காண்கின்ற யாவற்றையும் உண்மையிலேயே அவர்களுக்கு தேவை உள்ளதாக அளிக்க முடியும்.
போல்ஷ்விக்களின் இந்தப் போர் தந்திரம் புரட்சியிலிருந்து முதலாளித்துவ வர்க்கங்கள் பிரிந்து போக செய்துவிடும் ; இவ்விதம் புரட்சி வேகத்தை மிகவும் குறைத்து விடும் என்று மென்ஸ்விக்குகள் அடித்துப் பேசினார்கள் .புரட்சியை துரோகம் செய்து காட்டிக்கொடுக்கும் போர்த்தந்திரம் என்றும் முதலாளித்துவ வர்க்கங்களின் கேவலமான தொங்குசதையாக பாட்டாளி வர்க்கத்தை மாற்றும் போர்தந்திரம் என்று மறுத்து லெனின் வரையறுத்தார். அவை கீழ்
வெற்றிகரமான ரஷ்யப் புரட்சியில் விவசாய வர்க்கம் ஆற்றக்கூடிய பணியை உண்மையிலே புரிந்து கொண்டவர்கள் அதிலிருந்து முதலாளிகள் பிரிந்து செல்வதால் புரட்சி வெள்ளத்தின் வேகம் தணிந்து விடும் என்று கனவில் கூட கூற மாட்டார்கள் ஏனெனில் உண்மையில் பார்க்கப்போனால் புரட்சியிலிருந்து முதலாளிகள் பிரிந்து செல்லும் போது தான் பாட்டாளி வர்க்கத்துடன் தோளோடு தோள் நின்று தீவிரப் புரட்சியாளர்களாக போராடுவதற்கு விவசாய மக்கள் முன் வரும்போது தான் ரஷ்ய புரட்சி வெள்ளம் வெகு வேகமாக அடித்து புரட்டி
வழித்துக் கொண்டு போக ஆரம்பிக்கும் முதலாளித்துவ ஜனநாயக புரட்சி சகாப்தத்தில் எவ்வளவு பரந்த அளவில் வேகமாக வழித்துக்கொண்ட செல்ல முடியுமோ அவ்வளவு பரந்த அளவில் வேகமாக அப்போதுதான் விழித்துக் கொண்டு போக ஆரம்பிக்கும் அந்தப் புரட்சி வெள்ளப்பெருக்கை ஒரே நிலையாக அதன் முடிவுக்கு கொண்டு போவதற்கு முதலாளிகளுடைய தவிர்க்கமுடியாத நிலையற்ற போக்கை செயலற்றுப் போகும் படி செய்யக்கூடிய ஆற்றல் படைத்த சக்திகளை தான் ஜனநாயக புரட்சி நம்பி சார்ந்து இருக்க வேண்டும் அதாவது அந்த வர்க்கத்தை பிரிந்து போகும்படி செய்ய கூடிய சக்திகளை சார்ந்திருக்க வேண்டும் இதுதான் முதலாளித்துவ புரட்சியில் பாட்டாளி வர்க்கம் தலைவனாக விளங்குவது பற்றி லெனின் வகுத்த பிரதான போர்த்தந்திர சித்தாந்தம் முதலாளித்துவப் புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் தலைமை தாங்கி முன்னுக்கு அழைத்துச் செல்லும் படியான பணியைப் பற்றிய லெனின் வகுத்த அடிப்படையான போர் சித்தாந்தம்.( சோ.க. க. வ. பக்கம் 119-120)
இதனை விரிவாக வாசிக்க லெனின் தொகுப்பு நூல் 1 ல்
உள்ளது மேலும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு நூலில் பக்கம் 108 லிருந்து 132 வரை உள்ளது தோழர்களே.