சமூகத்தில் பெண்
சமூகத்தில் பெண்

சமூகத்தில் பெண்

உலகின் மனிதகுல வரலாறானது மகத்துவம் வாய்ந்தது. கூட்டு உழைப்பில் வாழத்தொடங்கிய துவக்ககால இனக்குழு, நாடோடி, நிலவுடைமை ஆகிய முச்சமூகப் படிநிலைகளில் மானுடச்சமூகம் வளர்ச்சி பெற்றது. நிலவுடைமைச் சமூகத்தில்தான் குடும்ப அமைப்பு உருவானது. இக்குடும்பத்தில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களைப் பெண் பாதுகாப்பதோடு குடும்ப நிருவாகத்தையும் பெண் பார்ப்பதாக அமைந்தது. இதுவே தாய் வழிச்சமூகமாகும். நிலவுடைமைச் சமூகத்தின் தொடக்க காலத்தில் தான் தாய்வழிச் சமூகம் நிகழ்ந்தது. இச்சமூகம் வளர்ச்சி பெற்ற நிலையில் பெண்ணின் உழைப்பு சுரண்டப்பட்டுக் குடும்ப அரசியல், பொருளாதாரம், உடலமைப்பு போன்ற அடிப்படையில் பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள். இவ்வாறு பெண்ணை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கப் போக்கே தந்தைவழிச் சமூகமாகும். இந்நிலையில் உலகளவில் பெண்ணை அடிமைப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பெண்ணைப் பொருளாகவும் பார்க்கக்கூடிய சமூகமாக இம்மானுடச்சமூகம் திகழ்கிறது.

மனிதகுலப் பரிணாம வளர்ச்சியின் உயிர் நாடியாகப் பெண் திகழ்வதோடு, சமுதாயத்தின் முக்கிய ஆக்கப் பணிகளிலெல்லாம் பெண் முதன்மை இடம் பெற்றிருந்தாள் என அறிய முடிகின்றது. பெண் ஆணைச் சார்ந்து இருப்பதில்லை சந்ததித்தோற்றம்தாயைமுன்வைத்துஅறியப்படுகிறது. பெண் வேட்டையாடியபோதுகுழந்தைகளைத்தன்கட்டுப்பாட்டிற்குள்வைத்திருந்தாள். தந்தைஎன்பவர்இல்லை. இந்நிலையிலேயே தாய்வழிச் சமூகம் நிகழ்ந்திருந்தது. தந்தைவழிச்சமூகமானது ஆண் ஆதிக்கத்தை உள்ளடக்கிக் கொண்டு பெண் , குழந்தை, அடிமை, குடும்பப்பணிப்பெண்ஆகியோர்மீதுஆட்சிசெய்துஅவர்களைஅடக்குகிறது எனக் (ஏங்கல்ஸ் – 1877)” கூறுகின்றனர். இந்நிலையில்தாய்வழிச்சமூகத்தில்பெண்சுதந்திரமாகவாழ்ந்திருந்ததையும்,தந்தைவழிச்சமூகத்தில்தான் பெண் அடிமையாக்கப்படுவதும் தெளிவாகின்றது.

பாலினம் என்பது உயிரியல் அடிப்படையானது. ஆண், பெண் அமைப்பைக் குறிக்கின்றது. இவ்வேறுபாட்டில் பெண் ஆணுக்குத் துணைவியாக்கப்படுகிறாள். ஓர் ஆண் பெண்ணை விரும்புவது வரவேற்கப்படுகிறது. தாய்மை புனிதமாகக் கருதப்படுகிறது. பெண் உற்பத்திக் களமாக எண்ணப்படுவதில்லை. பெண், ஆணைச் சார்ந்து வாழ்கிறாள். இவை யாவும் ஆண் பெண் பாலின வேறுபாடாக ஆணாதிக்க அமைப்பு கருதுகிறது. பாலியல் வேறுபாட்டில் ஆண், பெண் ஏற்கும் பணியை இயற்கையில் வேறுபாடுடையதாகவும், கற்பிக்கப்படுகிறது.

குடும்பத்தில் பெண் ஏற்கும் இயற்கையான பணிவேறுபாடு குழந்தை பெறுவதையும், வளர்ப்பதையும் சுட்டிக் காட்டுகிறது. இதற்கு ஆண், பெண் மற்றும் குழந்தைகள் மீதும் செலுத்தும் அதிகாரம் காரணம். அதனால் பெண்ணின் உழைப்பையும் உற்பத்தியையும் ஆண் தன் ஆளுகையின் கீழ்க்கொண்டு வந்து பெண்ணைத் துணைநிலை நிறுத்துகிறான்.

முதலாளித்துவ அமைப்பில் பெண் அடிமையாக்கப்பட்ட நிலை

 நிலவுடைமைச் சமூகம் வளர்ச்சி பெற்ற பின்பு, குடும்பம், பொருளாதாரம், அரசு நிறுவன அமைப்பு வரலாற்று அடிப்படையிலான ஆணாதிக்கப் போக்கினைப் பற்றி ஏங்கல்ஸ் குறிப்பிடுவது வரலாற்றுக்கு முந்திய புராதனமான சமூகங்களில் பெண்ணுக்குச் செயலூக்கமான பங்கிருந்தது. அது பின்னர் வேளாண்மைச் சமூக மாற்றத்தால் புதிதாக உருவான குடும்பம், நிலவுடைமை, அரசு ஆகியவற்றால் ஆணின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிலைமையே பெண்ணுக்கான முழு வாழ்வாக அமையலாயிற்று என்று ஏங்கல்ஸ் கூறுகிறார்.

 பெண் எல்லா இடங்களிலும் அனைத்துச் சமூகத்திலும் ஒடுக்கப்பட்டாள். நவீன முதலாளித்துவத்தில் மேலும் ஒடுக்கப்பட்டாள். பெண்கள் குறைந்த கூலி பெறும் தொழிலாளர்களாய் நியமனம் செய்யப்பட்டு, சுரண்டப்பட்டார்கள், பலர் வீட்டு வேலை செய்பவர்களாய் மாறினர். பணம்,மதிப்பீடுகளை முடிவு செய்கிற போது பெண் வெளியே சென்று பணி செய்ய வேண்டிய நிர்பந்தம் நேர்ந்தது. நாள் முழுவதும் செய்யப்படுகிற வீட்டு வேலைகளுக்குச் சம்பளமில்லாததால், அவள் உழைப்பிற்கு மதிப்பில்லாமல் போனது. முதலாளித்துவச் சமுதாயம் தேவை. இனவேறுபாடு போன்றே பாலின வேறுபாடும் முதலாளித்துவச் சமூகத்திற்கு முக்கியமாய் அமைந்து, பெண்கள் குறைந்த கூலிக்கு வரும் உழைப்பாளிகளாக்கப்பட்டு அவர்களைப் பயன்படுத்தி லாபம் பெறுவது முதலாளித்துவப் போக்காகிவிட்டது.

மார்க்சு, ஏங்கல்சு ஆகியோர் வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தில் பெண்ணைப்பற்றி, பெண்ணின் சமூகத் தகுதி நிலையைப் பற்றி விளக்கும்போது, உயிர் உற்பத்தி செய்வதிலும், சமூகத்தில் உற்பத்தி சக்திகளை உருவாக்குவதிலும், சுதந்திரமாகவும் சமஉரிமை பெற்றும் வாழ்ந்து வந்த பெண்கள் மேற்கூறிய முதலாளித்துவத்தின் போக்கினாலும் தனிச் சொத்துரிமையாலும், துணை நிலையினராகவும், சார்பு மாந்தராகவும் மாறிப் போயினர். இம்மாற்றம் வரலாற்று நிகழ்ச்சியில் தவிர்க்கவியலாத  மாற்றமாகியது என விளக்குகின்றனர்.

பெண் எல்லா இடங்களிலும் அனைத்துச் சமூகத்திலும் ஒடுக்கப்பட்டாள். நவீன முதலாளித்துவத்தில் மேலும் ஒடுக்கப்பட்டாள். பெண்கள் குறைந்த கூலி பெறும் தொழிலாளர்களாய் நியமனம் செய்யப்பட்டு, சுரண்டப்பட்டார்கள், பலர் வீட்டு வேலை செய்பவர்களாய் மாறினர். பணம்,மதிப்பீடுகளை முடிவு செய்கிற போது பெண் வெளியே சென்று பணி செய்ய வேண்டிய நிர்பந்தம் நேர்ந்தது. நாள் முழுவதும் செய்யப்படுகிற வீட்டு வேலைகளுக்குச் சம்பளமில்லாததால், அவள் உழைப்பிற்கு மதிப்பில்லாமல் போனது. முதலாளித்துவச் சமுதாயம் தேவை. இனவேறுபாடு போன்றே பாலின வேறுபாடும் முதலாளித்துவச் சமூகத்திற்கு முக்கியமாய் அமைந்து, பெண்கள் குறைந்த கூலிக்கு வரும் உழைப்பாளிகளாக்கப்பட்டு அவர்களைப் பயன்படுத்தி லாபம் பெறுவது முதலாளித்துவப் போக்காகிவிட்டது.

பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் பற்றியும் அவற்றிலிருந்து விடுதலை பெறுவது என்பதும் பேசாப் பொருளாக இருந்து வந்தது. ஆனால் இன்று ஓரளவுக்குத் தானும் சமூகத்தின் சில மட்டங்களிலே பெண் விடுதலை பற்றிய குரல்கள் மேலெழும்பி ஒலிக்கவே செய்கின்றன.

சோசலித்தின் தற்காலிகப் பின்னடைவிற்குப் பின், மாக்சியம் தோல்வி கண்டு விட்டதென பிரசாரம் முன் எடுக்கப் பட்டு சூழலில் பெண் விடுதலைபற்றிய நவீன கருத்தியல்கள் பின்நவீனத்துவப் பின்புலத்தில் பெண்ணிய விடுதலை பற்றிய தீவிர கருத்துகள் வலிந்து முன்வைக்கப்பட்டன. மேற்குலகிலே பேசப்படும் பெண்ணியக் கருத்துக்களை அரச சாரா நிறுவனங்கள் மூலம் சிலர் நம்மிடையே நட்டுவைக்க முயன்றனர். அதன் மூலம் குறிப்பிட்ட மேல்தட்டுப் பெண்ணியக்காரர்கள் தங்களளவில் தம்மை உயர்த்திக் கொண்டனர். .

மார்க்சியம்தான் பெண்ஒடுக்குமுறையின் சமூக அடித்தளத்தைத் தெளிவாக அடையாளப்படுத்திய உலகப் பார்வையை வழங்கியது. வெறுமனே சுட்டிக் காட்டியது மட்டுமன்றி நடைமுறைப் போராட்டங்கள் புரட்சிகள் வாயிலாக பெண் ஒடுக்கு முறைகளை உடைத்தெறிந்து ஆண்-பெண் சமத்துவத்தை நாட்டிலும் வீட்டிலும் நடைமுறைப்படுத்த வழிகாட்டியது. சோசலிசத்தின் கீழ் தான் முன்பு எப்பொழுதும் அனுபவித்திராத சுதந்திரத்தைப் பெண்கள் அனுபவிக்க ஆரம்பித்தனர்.

இன்று பெண்கள் விடுதலைக்கு பேசுவோரும் உண்மையில் பெண்கள் விடுதலை என்பது இந்த சமூக மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே சாத்தியம் என்பதே இந்தப் பதிவு.

முதலாளித்துவ அமைப்பின் தொழில்துறை வளர்ச்சியும், சுரண்டல் அமைப்பும் ஒரு ஆணின் உழைப்பில் மட்டும் தங்கிநின்று ஒரு குடும்பம் வாழமுடியாத நிலையை உருவாக்கியபோது பெண்களும் வீட்டுக்கு வெளியே சமூக உழைப்பிலும் ஈடுபட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இத்தகைய இரட்டைச் சுமைகளும், ஆணதிகாரமும் அழுத்தியதால் பெண் விடுதலை இயக்கங்கள் பிரிட்டன், அமெரிக்கா போன்ற தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே முதலில் எழுந்தன. இன்று தீவிர பெண்நிலைவாதிகள், மார்க்சியப் பெண்நிலைவாதிகள் என்று பல பிரிவாக இவர்கள் வளர்ந்து வருகின்றனர். இதில் தீவிர பெண் நிலை வாதத்தை ஆதரிப்போர் ஆண்களால் முன்னெடுக்கப்படும் சமூகவிடுதலை இயக்கங்களை ஆதரிக்க மறுப்பதுடன், பாலியல் பிறழ்வுகளை ஊக்குவிக்கும் நிலைப் பாட்டைக் கொண்டுள்ளவர்களாகவும், மார்க்சியப் பெண்நிலை வாதிகள் தமது தனித்துவத்தைப் பேணுவதுடன் ஆண்களுடன் இணைந்து தமது பொதுப் போராட்டங்களை ஏற்றுக்கொள்வதுடன் புதிய ஒழுக்கமுறைக்கு வழிகோலுபவர் களாகவும் இருந்து வருகின்றனர்.
தவறான பழமைக்கருத்துக்களில் இருந்து முற்றாக விடுபடாத நமது சமூகத்தில் பெண்விடுதலைக்கு எதிரான கருத்துடையவர்களாகவும் இருக்கின்றனர். உயிரியல், உளவியல், உடற்கூற்றுக் காரணங்கள் எதைக்கூறினும் இரத்தமும், சதையும், உடலும், உயிரும், உணர்வும் கொண்ட ஒரு மானிட உயிரி என்ற வகையில் பெண் சுதந்திரமானவள். ஒடுக்கப்படும் பெண்களுக்கு ஒடுக்குதலுக்கு எதிராகப் போராடும் உரிமை உண்டு. பெண்கள் தமது விடுதலைக்கு தாமே போராட வேண்டும்.
பெண்விடுதலை என்பது சமூகவிடுதலையின் ஒருபகுதி என்றவகையில் பெண்கள் தமது விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை ஒடுக்கு முறைகளுக்கு எதிரான ஏனைய போராட்டங்களுடனும் தம்மை இணைத்துக்கொள்ள வேண்டும். பகுதியும், முழுமையும் இணையும் இத்தகைய போராட்டங்களினால்தான் முற்றுமுழுதான சமூக விடுதலையை விரைவுபடுத்த முடியும்.
நாம் வாழும் சமூகத்தில் பெண் ஒடுக்குமுறை போன்று பல்வேறு ஒடுக்குமுறைகள் நிலவுகின்றன. ஒரு சமூகத்தின் பொருளாதார அமைப்பு, கல்வி, கலை, கலாசாரம், மத நம்பிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்தி இயக்குகின்ற அதிகார நிறுவனம் அரசாகும். அந்த வகையில் அதன்கீழ் உள்ள அனைத்து அடக்குமுறைகளுக்கும் அரசே காரணமாகின்றது. முதலாளித்துவ அரசுகள் எங்கும் வசதி படைத்த ஒரு சாராரின் நலன்களைப் பேணுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன.
 
மனிதகுல விடுதலைக்கு வழிகாட்டிய மார்க்சியத் தத்துவம், மக்களை ஒடுக்கும் அரசுகளை ஒழித்து, மக்கள் தமக்கான அரசுகளை உருவாக்கும் வழிமுறையை காட்டி நின்றது. அந்த வழியிலே நின்று விடுதலைபெற்ற நாடுகளில் பெண் ஒடுக்குமுறை முற்றுமுழுதாக இல்லாவிட்டாலும் பெருமளவு குறைந்துள்ளது.
 
இன்று வரலாற்றின் போக்கைப் புரிந்துகொண்டு மார்க்சியத்தை எதிர்க்க ஏகாதிபத்திய அரசுகள் பலவகையான பொருளாதாரச் சீர்த்திருத்தங்களைச் செய்ய முன்வந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான அரசு சாரா உதவி நிறுவனங்கள் உலகின் பின்தங்கிய நாடுகள் அனைத்திலும் கிளைவிட்டுப் பரவியுள்ளன. இதன்மூலம் சிறுசிறு உதவிகளை வழங்கி விட்டு பெருந் தொகையான இலாபங்களைக் கொள்ளையடித்துச் செல்வதுடன், தமது கலாசார சிந்தனைகளை பரப்புவதிலும் இவர்கள் வெற்றி கண்டுள்ளனர். குறிப்பாக குட்டி முதலாளித்துவ சிந்தனைகள் இன்று உலகெங்கிலும் ஊட்டி வளர்க்கப்படுகின்றது.
முழுமனித குலத்தையுமே ஒடுக்குகின்ற போர்வெறி கொண்ட அவர்கள் பொதுவுடமை அரசுகளையும், பொதுவுடமை அமைப்பை நோக்கிய விடுதலைப் போராட்டங்களையும் பலவீனப்படுத்து வதற்காக தாமும் சில ஒடுக்குமுறைகளுக் கெதிராக போராட்டங்களை வளர்த்தெடுக்க நேரடியாகவும், 

மறைமுகமாகவும் ஆதரவு நல்குகின்றனர்.

நிலப் பிரபுத்துவ அமைப்பு கட்டிக்காத்த கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைகளை முதலாளித்துவம் தகர்த்த போதிலும் குடும்பப் பொறுப்பு முரண்பாடுகள் நிறைந்த தனிக் குடும்ப அலகை தனது நலனுக்காகக் கட்டிக்காக்கவும் முற்படுகிறது. பழமைப் பிடிப்பும், பொருளாதாரப் பிணைப்பும் கொண்ட இக்குடும்ப உறவுமுறைகள் தமது அதிகாரத்தை நிலைநிறுத்தவும், உழைக்கும் வர்க்கத்தின் சமூக மாற்றத்திற்கான எழுச்சியையும், பேராற்றலையும் மழுங்கடிக்கவும் உதவும் என்பதை இவ் அரசுகள் உணர்ந்துள்ளன.

முன்பு தாய், தந்தையர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் என்று இருந்த கூட்டுக்குடும்பங்கள் இன்று பொருளாதாரக் காரணங்களினால் சிதைவுற்று கணவனும் மனைவியும் கொண்ட தனிக்குடும்பங்கள் உருவாகின்றன. இதனால் கணவனின் பெற்றோர், உற்றார், உறவினருக்குக் கீழ்ப்படிந்து சேவை செய்யும் நிலையிலிருந்து பெண் விடுதலைபெற்று வருகின்றாள். சோசலிச நாடுகளில் ஒருபுதிய குடும்ப உறவுமுறைக்கான திட்டமிட்ட கல்விமுறையும், வயது வந்த பெண்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பும் உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் பொருளாதாரக் காரணங்களுக்காக வயது வந்த இளம்பெண்கள் பெற்றோரிடம் வாழும் நிலைமாறுகின்றது. தனிச் சொத்து வடிவம் அங்கு இன்மையினால் பெற்றோரின் தலையீடு இன்றியே வாழ்க்கைத் துணைவனைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அவள் பெறுகின்றாள். திருமணத்தின் பின்னும் சமூக உழைப்பில் அவள் தொடர்ந்தும் ஈடுபடுவதால் பொருளாதாரக் காரணங்களுக்காகக் கணவனில் தயவில் வாழ வேண்டிய அடிமை நிலையிலிருந்தும் அவள் விடுபடுகிறாள்.

அரசினாலும், தொழிற்சாலைகளினாலும் நடத்தப்படும் பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்கள், சிற்றுண்டிச் சாலைகள், தொழில் பார்க்கும் பெண்களின் வேலைப்பழுவைக் குறைக்கின்றது. சமத்துவ உணர்வு பெற்ற வாழ்க்கைத் துணைவன் வீட்டு வேலைகளிலும் பங்காளியாகின்றான். முதியவர்களானபோது அவர்களைப் பராமரிக்க முதியோர் இல்லங்கள் உண்டு. இதனால் சமூக நலனை நோக்கித் திட்டமிடப்படாத நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ அமைப்புக்களில் அடிமையாக இருந்த பெண் அங்கு விடுதலை பெற்றவளாக வாழ்கிறால் .

அரசே அவர்களது நலன்களை உறுதிசெய்வதால் தனியுடமை அமைப்பு காலம் காலமாக வளர்த்துவந்த சுயநலம் உணர்வு தளர்வடைகின்றது. பிறர்நலம் பேணும் பொது நோக்கு உருவாகின்றது.

தனியுடமைப் பொருளாதார அமைப்பின் தோற்றத்தோடு உருவாகிய பெண்ணடிமை முறையை பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைநிறுத்திப் பாதுகாக்க உதவிவரும் பொருளாதார கலாசார நடைமுறைகளுள் சீதனமுறையும் ஒன்று, சமுதாய உழைப்பிலிருந்து பெண்கள் பிரிக்கப்பட்டு சொத்துக்களோடு சொத்துக்களாக-போகப்பொருட்களாக-வீட்டு அடிமைகளாக்கப்பட்ட நிலப்பிரபுத்துவ அமைப்பில் இது பெரு வழக்காகியது.

அன்று சமயச் சடங்குகளிலும், திருமண வைபவங்களிலும் கோதானம், பூதானம் என்று பல்வேறு தானங்களையும் செய்தவர்கள், அவ் அட்றிணைப் பொருட்களோடு ஒன்றாகப் பெண்களைக்கருதி கன்னிதானம் செய்யும் வழக்கத்தையும் கொண்டிருந்தார்கள். இன்றுவரை அவை சடங்குகளாக நம்மிடையே நிலவிவருகின்றன. பெண்களைப் பரிவர்த்தனைப் பொருட்களாகக் கருதும் இத்தகைய நடைமுறைகள் காலத்துக்கும், இடத்துக்கும் ஏற்ப பல்வேறு வடிவங்களைக் கொண்டிருந்தன. பெண்களின் பெற்றோருக்கு ஈடு கொடுத்து பெண்களை வாங்கும் வழக்கமும் உலகின் பல்வேறு இனக்குழுக்களிடையே நிலவியது போன்றே எம்மிடையே சில பிரிவினரிடம் நிலவி வந்தது. இளங்கோவடிகளின் சிலப் பதிகாரத்தில் இத்தகைய இருவழக்குகளும் வெவ்வேறு வடிவத்தில் அருகருகே இருக்கக் காண்கிறோம். பெரும் சீதனத்தோடு கண்ணகியை மணமுடித்த கோவலன், பொருள் கொடுத்தே மாதவியைப் பெற்றுக் கொள்கிறான்.

நிலவுடமையாளர்கள் பொன்னையும், மண்ணையும், பொருளையும் மட்டுமல்ல, அவர்களின் கீழ் இருந்த அடிமை குடிமைகளையும்

அன்று சீதனமாகக் கொடுத்தார்கள். இந்த நூற்றாண்டின் தொடக்க காலம்வரை இத்தகைய கொடியமுறை இந்த மண்ணில் நிலவிவந்ததற்கான சான்றாதாரங்கள் நிறைய உள்ளன.

இந்த சீதனமுறை ஆரம்பத்தில் எண்ணிக்கையில் மிகக் குறைந்த ஆளும் வர்க்கத்தினரால் மட்டுமே பேணப்பட்டு வந்தது. மிகப்பெரும் எண்ணிக்கையைக் கொண்ட உழைக்கும் மக்கள் மத்தியில் இம்முறை பின்பற்றப்படவில்லை. காரணம் உரிமையற்று அடிமைகளாக இருந்த அவர்களிடம் சொத்துக்கள் இருக்கவில்லை. சந்ததி சந்ததியாக அவர்கள் உழைத்தும், அவர்களுக்கு நிலங்கள் சொந்தமாக இருக்கவில்லை. தமிழக சிதம்பரம் ஆலயத்துக்குக்கூட ஏக்கர் கணக்கான நிலங்களை எழுதிவைத்த நிலவுடமையாளர்கள் இந்த மண்ணை உழுது வாழ்வு தந்த உழைப்பாளி மக்களுக்கு அவர்கள் குந்தியிருந்த நிலங்களைக்கூட சொந்தமாகக் கொடுக்கவில்லை. இதனால் சமூகத்தின் அடிமட்டத்தில் வாழ்ந்த மக்களால் அண்மைக் காலம்வரை இச்சீதனமுறை பின்பற்றப்படவில்லை.

ஒரு இனத்தின் பண்பாடு, கலாசாரம் என்பது சாரம்சத்தில் அதன் ஆளும் வர்க்கத்தின் மேலாண்மைக்குரிய பண்பாட்டுக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்து வருகின்றது. இவற்றை நாம் இருவகையாக அடையாளம் காணமுடியும். மனித சமூகம் தன் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் பெற்ற அனுபவங்கள், வாழ்க்கையின் உயரிய விழுமியங்கள், நாகரீகக் கூறுகளை ஒரு புறமாகவும், பலபேர் உழைப்பில் சிலபேர் வாழும் ஏற்றத் தாழ்வான சமூக அமைப்பை சிதைந்து போகாமல் பேணிக்காக்க உதவும், பொருளாதார ஒடுக்குமுறை அம்சங்களை உள்ளடக்கிய பண்பாட்டுக் கூறுகளை வேறாகவும் கொள்ள முடியும். சாதி, சமயசடங்குகள், சம்பிரதாயங்கள், பண்பாட்டுக் கூறுகளை வேறாகவும் கொள்ள முடியும். சாதி, சமயசடங்குகள், சம்பிரதாயங்கள், பண்பாட்டு மரபுகள் ஒவ்வொன்றின் பின்னாலும் சமத்துவமற்ற நிலையும், பொருளாதாரக் காரணிகளோடு பின்னிப் பிணைந்த ஒடுக்குமுறை

வடிவங்களும் தொடர்ந்து வருவதை நாம் கவனிக்கலாம். இவை சாதீயம், பெண்ணடிமை, சீதனமுறை என்பவற்றில் மிகவும் கூர்மையாகவே வெளிப்படுகிறது.

இதன் வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளாமல் ஆளும் வர்க்க கலாச்சார நடைமுறைகளை உயர்வாக எண்ணி விமர்சனம் ஏதுமின்றி அதன் ஒடுக்குமுறை அம்சங்களை விலக்கிக் கொள்ளாமல் அப்படியே பின்பற்றி வாழும் ஒருபோக்கு என்றும் இருந்து வருகிறது. இத்தகைய குருட்டுத்தனமான பின்பற்றலுடன் கூடிய படிமுறை வளர்ச்சிப்போக்கே பல்வேறு அடிமைத்தனங்களும் எதிர்ப்பின்றி காலம்காலமாக வேரூன்றி இருப்பதற்கு காரணமாகிறது.

ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருந்த மக்களே சிறிது வாய்ப்பும், வசதியும் பெற்றபின் மற்றவர்களை ஒடுக்கும் மனப்பான்மை உடையவர்களாக மாறுகின்றனர். அதுபோன்ற ஒருகாலத்தில் பொருளாதாரக் குறுக்கீடின்றி, சீதன முறையைப் பின்பற்றாமல் தமது திருமணங்களை முடித்த உழைப்பாளி மக்கள், மத்தியதர வர்க்க உணர்வு நிலைக்குத் தள்ளப்பட்டதும் சீதனவிலங்கை தமக்குத் தாமே மாட்டிக்கொண்டு துயர்படுகின்றனர்.

இத்தகைய கலாசார ரீதியான ஒடுக்குமுறைகள் ஒப்பீட்டளவில் நேரடியான ஆயுத பலாத்காரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒடுக்குமுறைகளைவிட பன்மடங்கு பலம் வாய்ந்ததாகும். மூன்றாம் உலகநாடுகளில் குறிப்பாக ஆசியப் பெண்கள் மத்தியில் ஆணாதிக்க, பொருளியல் அடக்குமுறை அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட கலாச்சார நடைமுறைகளை பொன்விலங்காக ஏற்று சகித்து வாழும் நிலை இன்றும் தொடர்கிறது. மனுநீதிமுதல் இன்றைய தமிழ் சினிமாவரை இலக்கியங்களும், மதக்கருத்துக்களும், சடங்கு முறைகளும் இவர்களுக்கு இவற்றையே தொடர்ந்தும் போதித்து பயிற்றுவித்து வருகின்றன. பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் தனியுடமை அமைப்பின் பொருளாதார நலன்களோடு பின்னிப் பிணைந்து கிடக்கும் சீதனமுறை போன்ற பல்வேறு ஒடுக்குமுறை வடிவங்களை சமுதாயத்திலிருந்து இல்லாதொழிப்பதற்கு மக்கள் மத்தியில் ஓர் புதிய கலாசார விழிப்புணர்ச்சி ஏற்படவேண்டும்.

பெண் ஒடுக்குமுறையின் பல்வேறு வடிவங்களுள் சீதனமுறை ஒன்றே பெண்களை மட்டுமல்லாமல் அவர்களது பெற்றோர்களையும், உடன்பிறந்தவர்களையும் குறிப்பாக ஆண்களையும் பாதித்து வருகின்றது. மணவயதை எட்டியும் மணமாகாதிருக்கும் பெண்களைப் போலவே உடன்பிறந்த சகோதரிகளின் சீதனத்துக்காக மணமாகாது உழைக்கும் ஆண்களும் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். எனவே இதற்கு எதிராக ஏற்படும் விழிப்புணர்வு பெண்ணடிமை முறையின் ஏனைய வடிவங்களுக்கும் எதிரான முழுச் சமூகத்தின் எதிர்ப்பாகவும், சமூகத்தில் நிலவும் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான சமுதாய மாற்றத்திற்கான விழிப்புணர்வாகவும் பரிணமிக்கிறது.

சமூகத்தில் நிலவும் பெண் ஒடுக்குமுறையின் ஒரு வடிவமான “சீதனம்” பற்றியதே இந்தப் பதிவு..

இன்றைய வரலாற்று வளர்ச்சிப் போக்கில் ஏற்பட்டுவரும் பொருளாதார, கலாசார மாற்றங்களோடு இச் சீதனமுறையும் தொற்றுநோய் போலப் பரவி முழுச் சமுதாயத்தையுமே ஆரோக்கியமற்ற நிலைக்குத் தள்ளுகின்றது. உலக மய தாரள மயக் பொருளாதாரக் கொள்கையினால் ஏற்பட்டுவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பும், “பொருளாதார அகதி வாழ்வும் நமது மக்களில் ஒரு பகுதியினரின் வர்க்க நிலைமைகளில் மாற்றங்களைச் செய்து வருகின்றன. பின்தங்கிய கிராமங்கள் வரை இறுகிக் கிடந்த வர்க்க ஏற்றத் தாழ்வை கருத்தியல் ரீதியாகவாவது அடித்து நொருக்குகின்றன. இதனால் பெரும்பாலான தொழிலாள விவசாயிகளின் வாழ்க்கை நிலை உயராவிடினும், தாமும் வெளிநாடு சென்று 
வந்தால் தமது வாழ்க்கைநிலை உயர்ந்துவிடும் என்று கருதுகின்றனர். உழைப்பின்மீது இருந்துவந்த பிடிப்பு தளர்வடைந்து உடலை வருத்தாமல் பொருளைச் சேர்க்க எண்ணும் மத்தியதர வர்க்க உணர்வு-குட்டிமுதலாளித்துவ மனப்பான்மை பெரும்பாலானவர்களிடம் வளர்ந்து வருகிறது.
இத்தகைய ஒரு சூழலில் சீதனமுறையை தமது
பொருளாதாரநிலையை உயர்த்த உதவும் ஏணிப்படியாக இவர்கள் கருதுகின்றனர். பொருளாதார வளர்ச்சி என்பது எப்பொழுதும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. அதற்குப் பெண்களையும், அவர்களது பெற்றோர்களையும், உடன்பிறந்தவர்களையும்
ஏணிப்படிகளாக மிதிக்கும் இச்சீதனமுறை தொடரவேண்டுமா? குறுக்கு வழியில் பணம் சேர்ப்பதற்கும், கொள்ளை லாபம் ஈட்டுவதற்கும், அடுத்தவன் உழைப்பைச் சுரண்டி வாழ்வதற்கும் இதற்கும் வேறுபாடு என்ன? இச்சீதனமுறைக்கு சமூகம் வழங்கும் அங்கீகாரம் சமூகத்தில் நிலவும் ஏனைய ஊழல்களுக்கும் உற்சாகம் தருவதில்லையா? இதுபோன்ற கேள்விகள் இன்று இளம் சந்ததியினர் மத்தியில் பரவலாக எழுகின்றன.



<!-- /* Font Definitions */ @font-face {font-family:Latha; panose-1:2 11 6 4 2 2 2 2 2 4; mso-font-charset:0; mso-generic-font-family:swiss; mso-font-pitch:variable; mso-font-signature:1048579 0 0 0 1 0;} @font-face {font-family:"Cambria Math"; panose-1:2 4 5 3 5 4 6 3 2 4; mso-font-charset:0; mso-generic-font-family:roman; mso-font-pitch:variable; mso-font-signature:-1610611985 1107304683 0 0 415 0;} @font-face {font-family:Calibri; panose-1:2 15 5 2 2 2 4 3 2 4; mso-font-charset:0; mso-generic-font-family:swiss; mso-font-pitch:variable; mso-font-signature:-520092929 1073786111 9 0 415 0;} @font-face {font-family:inherit; panose-1:0 0 0 0 0 0 0 0 0 0; mso-font-alt:"Times New Roman"; mso-font-charset:0; mso-generic-font-family:roman; mso-font-format:other; mso-font-pitch:auto; mso-font-signature:0 0 0 0 0 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-unhide:no; mso-style-qformat:yes; mso-style-parent:""; margin-top:0in; margin-right:0in; margin-bottom:10.0pt; margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:"Times New Roman"; mso-bidi-theme-font:minor-bidi;} span.4yxr {mso-style-name:_4yxr; mso-style-unhide:no;} span.4yxo {mso-style-name:_4yxo; mso-style-unhide:no;} .MsoChpDefault {mso-style-type:export-only; mso-default-props:yes; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:"Times New Roman"; mso-bidi-theme-font:minor-bidi;} .MsoPapDefault {mso-style-type:export-only; margin-bottom:10.0pt; line-height:115%;} @page Section1 {size:8.5in 11.0in; margin:1.0in 1.0in 1.0in 1.0in; mso-header-margin:.5in; mso-footer-margin:.5in; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} -->
அன்பு தோழர்களே நான் எழுத தொடங்கிய பொழுது நான் சேகரித்த பல கருத்துகளுடன் இன்று நடைமுறையில் உள்ளவற்றையும் இணைப்பதுதான் சரியாக பட்டது ஆகவே இந்தப் பதிவில் நமது சமூக அமைப்பில் பெண்கள் மீது நடக்கும் ஒடுக்குமுறை மற்றும் இதற்க்கு மாற்றாக பெண்கள் இந்த சுமைகளில் இருந்து விடுபட்டு செயல்படும் சோவியத் சமூகம் பற்றிய கீழ் உள்ள இணையத்தில் வாசித்து உங்களின் கருத்துகளை தெரிவிக்கவும் தோழர்களே.
சிறுவயதில் இருந்தே மென்மையான விசயங்களுக்கு அவள் பழக்கப்படுத்தப்படுகிறாள்..
நன்றாக கவனிக்கனும் மென்மையான விசயங்கள் அவளுடைய தகவமைப்பில் இல்லை..
அவள் அதற்கு பழக்கப்படுத்தப்படுகிறாள்..
வீட்ல இருக்கற இடம் தெரிய கூடாது..
சத்தமா சிரிக்க கூடாது..
பலமா தும்ம கூடாது..
கொலுசு சத்தம் கூட கேக்காம நடக்கனும் இப்படி..
சின்ன சின்ன விசயங்கள் தான் அவளை அவளாவே இருக்கவிடாம பண்ணுது..
இந்தச் சமூகம் பெண்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குப் பஞ்சமே இல்லை. பின் தூங்கி முன் எழ வேண்டும், பொது இடத்தில் சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது, ‘அடக்க’மாக நடந்துகொள்ள வேண்டும், தலைமுடியை விரித்துப் போடக் கூடாது, மாலை ஆறு மணிக்குள் வீடு திரும்ப வேண்டும், ஆண்பிள்ளைகளுடன் விளையாடவோ, பேசவோ கூடாது என ஏராளமான கட்டுப்பாட்டுகள் காலம் காலமாக பெண்களுக்கு வலியுறுத்தப்பட்டுவருகின்றன.
கல்வி நிலையங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் இரு முக்கிய சவால்கள் முதலாவதாக அவர்களுக்கென கழிப்பிட வசதி பல அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் இருப்பதில்லை. அவ்வாறு இருக்கும் கழிப்பிடங்கள் பயன்படுத்த முடியாமல் தகுதியற்ற நிலையில்தான் உள்ளது. பெண் மாணவர்கள் தங்கள் மாதவிடாய் நேரங்களில் சொல்ல முடியா துயரத்திற்க்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதனாலேயே பல பெண்கள் தங்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். பெண்கள் பள்ளியை தொடர முடியாத நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்.



<!-- /* Font Definitions */ @font-face {font-family:Latha; panose-1:2 11 6 4 2 2 2 2 2 4; mso-font-charset:0; mso-generic-font-family:swiss; mso-font-pitch:variable; mso-font-signature:1048579 0 0 0 1 0;} @font-face {font-family:"Cambria Math"; panose-1:2 4 5 3 5 4 6 3 2 4; mso-font-charset:0; mso-generic-font-family:roman; mso-font-pitch:variable; mso-font-signature:-1610611985 1107304683 0 0 415 0;} @font-face {font-family:Calibri; panose-1:2 15 5 2 2 2 4 3 2 4; mso-font-charset:0; mso-generic-font-family:swiss; mso-font-pitch:variable; mso-font-signature:-520092929 1073786111 9 0 415 0;} @font-face {font-family:inherit; panose-1:0 0 0 0 0 0 0 0 0 0; mso-font-alt:"Times New Roman"; mso-font-charset:0; mso-generic-font-family:roman; mso-font-format:other; mso-font-pitch:auto; mso-font-signature:0 0 0 0 0 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-unhide:no; mso-style-qformat:yes; mso-style-parent:""; margin-top:0in; margin-right:0in; margin-bottom:10.0pt; margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:"Times New Roman"; mso-bidi-theme-font:minor-bidi;} p {mso-style-priority:99; mso-margin-top-alt:auto; margin-right:0in; mso-margin-bottom-alt:auto; margin-left:0in; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:"Times New Roman","serif"; mso-fareast-font-family:"Times New Roman";} .MsoChpDefault {mso-style-type:export-only; mso-default-props:yes; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:"Times New Roman"; mso-bidi-theme-font:minor-bidi;} .MsoPapDefault {mso-style-type:export-only; margin-bottom:10.0pt; line-height:115%;} @page Section1 {size:8.5in 11.0in; margin:1.0in 1.0in 1.0in 1.0in; mso-header-margin:.5in; mso-footer-margin:.5in; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} -->
பொதுவாகப் பெண்கள் மணவாழ்க்கையை ஏற்ற பின்பு கல்வி கற்றிருந்தாலும் கற்காவிட்டாலும் அடுக்களையில்தான் தம் வாழ்நாட்களைப் போக்குகின்றனர். இப்போக்கைப் பொருளாதாரத்தில் இடைநிலையாகவும் கீழ்நிலையாகவும் உள்ளோரிடத்துக் காணலாம். மேட்டுக்குடியில் பிறந்த பெண்கள் பெரிதும் அடுக்களைப் பக்கம் செல்வது என்பது அரிது. அதற்காக அவர்கள் வேலைக்காரர்களை வைத்துள்ளனர். இது இரு வீட்டாரின் சம்மதத்தால் நிகழும் திருமணத்திலும் இதே…
, பொருளாதார உற்பத்தியில் பெண்ணின் உழைப்பை அங்கீகரிக்கின்ற போதிலும், அதிகமாக வீட்டுப்பணியில் ஈடுபடுவதையே சமூக நியதியாக்கியிருக்கிறது. எனவே பெண்களின் உழைப்பு ஆணாதிக்கச் சமுதாயத்தைச் சார்ந்தது.
பெண் என்பவள் எந்த நிலையில் இருந்தாலும், பொருளாதாரம், தொழில், கல்வி என்று சிறந்து விளங்கினாலும் சுயதீனமாய் இந்த சமூக கட்டமைப்பில் இருந்து உண்மையான சுதந்திரத்தோடு பயணிப்பது கடினம் என்பதே வேதனையான உண்மை.
எனவே பெண்ணினம் அடிமைமுறையிலிருந்து
விடுதலை பெற பெண்ணினம் முழுவதையும் சமுக உற்பத்தியில் மீண்டும் புகுத்துவதுதான் பெண் விடுதலைக்குறிய முதல் நிபந்தனையாகும்
முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு வந்து கொண்டிருக்கின்ற அழிவுக்கு பிறகு பால் உறவுகளை ஒழுங்குபடுத்துவதை பற்றி நாம் ஊகமாக சொல்ல கூடியது,
உற்பத்தி சாதனங்களை பொதுவுடமையாக்கும் பொழுது கூலியுழைப்பும் பாட்டாளி வர்க்கமும் மறைந்து விடுகின்றன,
பெண்கள் பணத்திற்காக தம்மை விற்க வேண்டிய அவசியமும் மறைந்து விடுகிறது, விபச்சாரமும் மறைத்து விடுகிறது. ஒருதாரமணம் நலிந்துபோவதற்க்கு பதிலாக முடிவில் ஆணுக்கும் சேர்த்து எதார்த்தமாகிறது,
குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலிலிருந்து எங்கெல்ஸ்

இதற்க்கு தீர்வு
"கம்யூனிசத்தின் மூலமாக மட்டுமே பெண்கள் மெய்யான விடுதலை பெறமுடியும் என்பது இந்த விரிவுரைகளில் நன்கு வலியுறுத்தப்பட வேண்டும் . மானுடர்கள் என்ற முறையிலும் சமுதாய உறுப்பினர்கள் என்ற முறையிலும் பெண்களுக்கு உள்ள நிலைக்கும் உற்பத்தி சாதனங்களில் தனியார் உடமைக்கும் நிலவும் துண்டிக்க முடியாத இணைப்பு பற்றிய பிரச்சினையை நீங்கள் தீர்க்கமாய் பகுத்து ஆராய வேண்டும் . பெண் விடுதலைக்கான முதலாளித்துவ இயக்கத்திலிருந்து நம்மைப் பிரித்திடும் தக்கதோர் எல்லைக்கோட்டை இது அளித்திடும் , மற்றும் இதன் மூலம் நாம் பெண்கள் பிரச்சினையை சமுதாய , தொழிலாளி வர்க்கப் பிரச்சினையின் ஒரு பகுதியாக கொண்டு பரிசீலிப்பதற்கான அடிப்படையையும் நிறுவிக்கொள்ளலாம். இப்பிரச்சனை பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்ட துடனும் புரட்சியுடனும் உறுதியாக இணைத்து பிணைக்கப் படுவதை இவ்வாறு இது சாத்தியமாகி விடும். பெண்களது கம்யூனிஸ்ட் இயக்கம் பொதுவான வெகுஜன இயக்கத்தின் ஒரு பகுதியாய் அமைந்த வெகுஜன இயக்கமாக நடந்தேற வேண்டும் . பாட்டாளி வர்க்கத்தாரின் இயக்கம் மட்டும் அல்லாது சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வருவோர் அனைவரது , முதலாளித்துவத்துக்கு பலியானோர் எல்லோரது இயக்கத்தின் ஒரு பகுதியான வெகுஜன இயக்கமாய் இது இருத்தல் வேண்டும் . பாட்டாளி வர்க்கத்தினது வர்க்கப் போராட்டத்திலும் கம்யூனிச சமுதாயத்தை சமைப்பது என்னும் அதன் வரலாற்றுச் சிறப்புக்குரிய ஆக்கப் பணியிலும் பெண்களது இயக்கத்துக்கு உள்ள முக்கியத்துவம் இதில்தான் அடங்கியுள்ளது. புரட்சிகர பெண் குலத்து மாணிக்கங்கள் நமது கட்சியினுள் , கம்யூனிஸ்ட் அகிலத்தினுள் இருக்கிறார்கள் என பெருமிதம் கொள்ள நமக்கு முழு உரிமை உண்டு . ஆனால் இது மட்டும் போதாது, நகரையும் கிராமப்புறத்தையும் சேர்ந்த கோடானு கோடியான உழைப்பாளி பெண்களை நாம் நமது போராட்டத்திலும் இன்னும் முக்கியமாய் சமுதாயத்தின் கம்யூனிசப் புணரமைப்பிலும் அணிதிரள செய்தாக வேண்டும் .பெண்கள் இன்றி மெய்யான எந்த வெகுஜன இயக்கமும் இருக்க முடியாது."
-லெனின் கிளாரா ஜெட்கினிடம், என் நினைவுகளில் லெனின் நூலிலிருந்து....

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *