இந்தச் சமூகம் பெண்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்குப் பஞ்சமே இல்லை. பின் தூங்கி முன் எழ வேண்டும், பொது இடத்தில் சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது, ‘அடக்க’மாக நடந்துகொள்ள வேண்டும், தலைமுடியை விரித்துப் போடக் கூடாது, மாலை ஆறு மணிக்குள் வீடு திரும்ப வேண்டும், ஆண்பிள்ளைகளுடன் விளையாடவோ, பேசவோ கூடாது என ஏராளமான கட்டுப்பாட்டுகள் காலம் காலமாக பெண்களுக்கு வலியுறுத்தப்பட்டுவருகின்றன.
கல்வி நிலையங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் இரு முக்கிய சவால்கள் முதலாவதாக அவர்களுக்கென கழிப்பிட வசதி பல அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் இருப்பதில்லை. அவ்வாறு இருக்கும் கழிப்பிடங்கள் பயன்படுத்த முடியாமல் தகுதியற்ற நிலையில்தான் உள்ளது. பெண் மாணவர்கள் தங்கள் மாதவிடாய் காலங்களில் சொல்ல முடியா துயரத்திற்க்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதனாலேயே பல பெண்கள் தங்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிறார்கள். பெண்கள் பள்ளியை தொடர முடியாத நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள்
இந்தியாவில் ஓன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் 100 ஆண் குழந்தைகளில் 39 குழந்தைதான் எட்டாம் வகுப்பவரை பள்ளியில் தக்க வைக்கப்படுகின்றனர்கள். அதிலும் 23 குழந்தைகள் மட்டுமே பத்தாம் வகுப்புக்கு அடியெடுத்து வைக்கின்றனர். இதே 100 பெண்குழந்தைகளில் வெறும் 17 குழந்தைகளே எட்டாம் வகுப்புவரை போகிறார்கள். கல்லூரிக்கு மூன்று பேர்தான் அடியெடுத்து வைக்கிறார்கள்.
சிறுவயதில் இருந்தே மென்மையான விசயங்களுக்கு அவள் பழக்கப்படுத்தப்படுகிறாள்..
நன்றாக கவனிக்கனும் மென்மையான விசயங்கள் அவளுடைய தகவமைப்பில் இல்லை..
அவள் அதற்கு பழக்கப்படுத்தப்படுகிறாள்..
வீட்ல இருக்கற இடம் தெரிய கூடாது..
சத்தமா சிரிக்க கூடாது..
பலமா தும்ம கூடாது..
கொலுசு சத்தம் கூட கேக்காம நடக்கனும் இப்படி..
சின்ன சின்ன விசயங்கள் தான் அவளை அவளாவே இருக்கவிடாம பண்ணுது..
சரி சத்தம் போட்டுகிட்டு ஆடிக்கிட்டு பாடிக்கிட்டு இருந்தா அந்த பொண்ணு என்ன ஒழுக்கங்கெட்டவளா? அய்யய்யோ அப்படி இல்லங்க பக்கத்து வீட்டுல அக்கம் பக்கத்துல இருக்கவங்க என்ன சொல்லுவாங்க.. இத கவனிக்கனும் பெண் பிள்ளைகளே.. மத்தவங்களுக்காக நாம வாழல, நம்மக்குனு சுதந்திரம் இருக்கு.. ஆனா அந்த சுதந்திரம் மத்தவங்கள பாதிக்காத வண்ணம் இருந்தா போதும்…
தொடரும்…