நம்ம உடல் பற்றி..
உடல் பற்றிய தெளிவு யாருக்குமே இல்லனுதான் சொல்லனும்…
குறிப்பா மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு போதுமானதா இல்லை. தீட்டு தள்ளியிருக்கறதுன்னு சொல்லுவாங்க. அத தொடாத இத தொடாத உடனே குளிக்கனும் இப்படிலாம். முதல்ல இது பயத்தோட அணுகற விசயம் இல்ல. இது இயற்கை நமக்கு குடுத்த கொடை. அறிவியல் சார்ந்த அணுகுமுறை மிகவும் அவசியம். மாதந்தோறும் கருவுறாத கருமுட்டை சுவர்கள் உறிந்து ரத்தப்போக்கு வெளியேறும்.
அந்த ரத்தம் கெட்ட ரத்தம்னு எல்லாம் சொல்லி வைச்சுருப்பாங்க. அதெல்லாம் இல்ல அதுவும் நம்ம உடம்புல ஓடுர ரத்தம் போலத்தான் தூய்மையானது. அந்த நாட்களில் பெண்களோட மனசும் உடம்பும் சோர்ந்து இருக்கும். வயிற்றுவலி தலைவலி உடல்சோர்வு மனச்சோர்வு ஏன் தற்கொலை எண்ணம் கூட வரலாம்.
அப்போ தேவை கொஞ்சம் ஓய்வு, நல்ல விசயங்கள நினைக்கறதுதான். அப்பறம் உடம்ப சுத்தமா வச்சுகனும். நாப்கின் உபயோகிப்பது அதை 5 மணி நேரங்களுக்கு ஒரு முறை மாற்றவும் வேண்டும். அம்மாக்களே பிள்ளைகளிடம் இதை சொல்ல கூச்சப்படறாங்க. இன்னமும் இந்த நிலைதான் இருக்கு. பள்ளி கல்லூரியிலேயே பாலியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அது இன்னும் நம்ம நாட்டுல இல்ல…
தொடரும்