அவசியம் இதனை வாசித்து சீர் படுத்த வேண்டும்- சி.பி
வர்க்க உணர்ச்சியும் அரசியல் விழிப்பும் :
நான்கு வகை வர்க்க உறவுகள் உள்ளன எனக் கண்டோம் : (1) நிலவுடைமையாளர் - வாரத்திற்கு பயிரிடுபவன் (2) சிறு பண்ட உற்பத்தியாளன் - சந்தை உறவு (3) முதலாளி - கூலி உழைப்பாளி W (4) கூலி உழைப்பு உறவிற்காக பயிற்றப்படுபவர்.
நாம் ஆராய்ந்த வர்க்க உறவுகள் முக்கியமாக, மனிதன் வாழும் புறநிலையான சுற்ருடலும் கட்டுப்பாடுகளும் ஆகும். கட்டுப்பாடுகளும் சுற்ருடலும் மக்கள் சிந்தனையில் பிரதிபலிப்பன. இதையே சமுதாய உணர்வு என்கிருேம்; இது அக நிலை சார்ந்தது.
வர்க்க உறவுகள் சமூக உணர்வை வளர்ப்பதற்கு முக்கியமா னவை; அவசியமானவை. ஆயினும் அவை தாமாக உணர்வை வளர்ப்ப தில்லை. இத்தகைய உணர்வை வளர்ப்பதற்கும் அடிப்படையான இரு காரணங்கள் இருக்க வேண்டும் :
(1) புறநிலை அல்லது இயக்க அமைப்பு ஆகிய காரணங்கள் (ஆதிக்கம், பொருளாதார நெருக்கடி, வறுமை உட்பட)
(2) அகநிலை சார்ந்தவை (மக்களின் கல்வி, நம்பிக்கை, சித்தாந் தம் ஆகியன)
எத்தகைய காரணங்கள், சூழல்கள் உள்ளவேளை எவ்வாறு அர சியல் விழிப்பு ஏற்படுகிறது? எவ்வாறு ஏற்படுகிறது? வர்க்கங்களின் புற நிலை சார்ந்து தாமாகவே விழிப்பு ஏற்படுவதாக பலர் வாதிடு கின்றனர். வறுமை இத்தகைய உணர்வை ஏற்படுத்துவதாக வாதிப் பர். புறநிலைக் காரணங்களில் இது ஒன்ருக இருந்தபோதும் அரசியல் விழிப்பிற்கு மிக அவசியமானதோ, முக்கியமானதோ அல்ல. இதற்கு மாருக வறுமை அமைதிக்கும் சாத்த நிலைக்கும் இட்டுச் செல்வ தாகவும் எம்மால் காட்ட முடியும். இத்தோடு மேலும் சில சூழல்கள் வேண்டும் என்பர். ஒன்று சமுதாய அடிப்படை மாற்றத்தால் வாழ்க் கைத் துன்பங்களையும் வறுமையையும் ஒழிக்க முடியும் என்ற கருத் தாகும்.
மற்ருெரு கருத்து - சில புறநிலை காரணங்கள் - அதாவது பொரு ளாதார அமைப்பிலுள்ள முரண்பாடுகள் அரசியல் உணர்வுக்கு இட்டுச்
( 14 )
செல்லும் என்பதாகும். முதலாளித்துவ உற்பத்தியில் சுரண்டல் உற் பத்தி உறவு தவிர்க்க முடியாததாகும். ஆகவே இது மட்டும் அர சியல் விழிப்பை ஏற்படுத்திவிடாது.
மக்கள் மனதில் எவ்வாறு அரசியல் உணர்வு வளர்கிறது? அவை (1) உற்பத்திச் சாதனங்களின் அபிவிருத்திக் கூடாக புறநிலை வேலை முறைகள் (2) பெரிய கைத்தொழில்களில் ஈடுபடுவதகுல் ஏற்படும் வளர்ச்சியடைந்த தொடர்பு முறை.
அதாவது உற்பத்தி அமைப்பு, அதன் அளவு, தொழில்நுட்பம் ஆகியன. ஆளுல். இதே குறிக்கோள்களுடன் எதிர் மறையான முடிபு களுக்கும் இட்டுச் செல்லப்படுகிறது.
முதலாளித்துவத்தில் முரண்பாடுகள் கூர்மை அடைகின்றன, அரசியல் விழிப்பை மழுங்கச் செய்கின்றன என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இவ்வமைப்பு மக்களின் தேவைகளை திருப்திப்படுத்துகிறது. நுகர் பொருட்களை வழங்கி வர்க்கக் கூர்மையை மழுங்கடிக்கிறது; வாழ்க்கை முறைகளை சமன்படுத்துகிறது என்றும் கூறலாம்.
புறநிலைக் காரணங்களை தேடுவது எம்மை எதிர்மறைக்கும் இட்டுச் செல்லலாம்; புறநிலை,"அகநிலைக் காரணிகளிடையுள்ள உறவே எம்மை வழிநடத்தும். விழிப்புணர்வு படிப்படியாக வளர்கிறது. வர்க்க முரண் பாடுகள் புறநிலை உறவுகளுக்கு அழைக்கின்றன. இந்த அனுபவங் களால் வர்க்க உணர்வு விழிப்படைகிறது. தொழிலாளர் முதலாளி களிடை உள்ள பகைமை உறவுகளை விழிப்படையச் செய்வதன் மூலம் அரசியல் விழிப்பு ஏற்படலாம். சுரண்டப்பட்ட வர்க்கங்கள் முழு அமைப்பையும் மாற்ருது பகைமை உறவை ஒழிக்க முடியாது என்பதை முழுமையாக உணர வேண்டும்.
சித்தாந்தம், வரலாறு, பொருளாதாரக் கோட்பாடுகளை கல்வி கற்ற பூஷ்வா சித்தாந்திகளின் பிரதிநிதிகள் பரப்புவதன் மூல மும் வர்க்கத்தை நினைவு பூர்வமாக நேரடியாக அணிதிரட்டுவதன் மூலமும் விழிப்புணர்வு வளர்வதை பல இடங்களில் காண்லாம்: உதாரணமாக மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் மற்றும் அக்காலத் திலுள்ள பண்பட்ட பூஷ்வாக்களை கூறலாம். அவர்கள் அக்காலத்து சித்தாந்தம், அரசியல் கோட்பாடு, பொருளாதாரம் ஆகியவற்றை ஆராய்ச்து புதிய சித்தாந்தத்தை பரப்பினர். அவை பாட்டாளிகனது உணர்வுகளை அவ்வேளை விழித்தெழச் செய்தது. முதலாளித்துவ உற்பத்தி உறவு முறைகளிலிருந்து புதிய வர்க்கம் தோன்றியது.
நாம் ஆய்ந்த வர்க்கங்களின் அரசியல் விழிப்பிற்கு மீண்டும் வருவோம்.
Af - 8 ES VA
Page 9
1505ல் இருந்து போர்த்துக்கேசர், ஒல்லாந்தர், பிரிட்டிஷார் ஆதிக்கத்தில் 1947 வரை காலனி ஆட்சியில் நாம் இருந்தோம் அவர் களது நீதிபரிபாலனம் அரசியல் அமைப்புகள் இங்கு புகுத்தப்பட்டன. அதாவது எமது சமூக வர்க்க உறவுகளுக்கு ஒவ்வாத அமைப்புகள் புகுத்தப்பட்டன. உதாரணமாக ஒல்லாந்தர் உரோம டச்சு சட்டங்களை புகுத்தினர்; பிரிட்டிஷார் 1931இல் அனைவருக்கும் சர்வஜன வாக் குரிமை வழங்கி தமது பாராளுமன்ற அமைப்பை ஏற்படுத்தினர். அவரவர்களது நாட்டில் நிலவிய வர்க்க உறவுகளின் தேவையை ஒட்டியே இவை புகுத்தப்பட்டன. இங்கு பெரும்பாலான பண்ட உற் பத்தி சந்தைக்காகவும் பரிவர்த்தனைக்காகவும் நடைபெற்றபோது உரோம டச்சுச்சட்ட அமைப்பு தேவைப்பட்டது நிலவுடைமை கட்டுப் பாடுகள் தளர்ந்து கூலி உழைப்பு தலையெடுத்தபோது பாராளுமன்ற ஜனநாயகம் தோன்றியது. அவ்வேளை சர்வஜன வாக்குரிமையும் வழங்கப்பட்டது.
எமது சுரண்டல் முறையை நுணுகி ஆராயும்போது பலவகையாக உபரியை அபகரிக்கும் முறைகளை காண் கிருேம் மூன்று முறைகளை முன் கூறினுேம். அவைகூட தூய்மையாக இல்லை இம் மூன்று சுரண்டல் முறைகளும் வெவ்வேறு வகையான உணர்வுகளை அரசியல் விழிப்பு மூலம் வெளிப்படுத்தியுள்ளன.
நிலவுடைமை - வார விவசாயி :
வாரவிவசாயி நிலப்பிரபுவை அறிவான். அவனது தயவிலேயும் கருணையிலுமே வாழ்வதாக வாரவிவசாயி கருதுவான். நிலத்தை பயிரிட அனுமதிவழங்கி நிலப்பிரபு பங்கு பெறுவான் தேவை ஏற் படும்போது நிலப்பிரபுவே அவனது ஒரே பாதுகாவலன்.
வர்க்க உறவு இவ்வாறு இருக்கும்போது வழமையாக நிலப்
பிரபு வர்க்கத்தவனே தேர்தலில் நிற்பான். அவனை நம்பி வாழ்பவர் யாவரும் அவனுக்கே வாக்களிப்பர். தமது உயர்வு தாழ்வு யாவும் அவளுேடு சேர்ந்தது என்று கொள்வர். டட்லி செனநாயகா இறந்த
போது 10 லட்சம் மக்கள் மரணத்தில் பங்கு பற்றி தமது குடும்பத் தலைவன் என அழுதனர்.
சிறு பண்ட உற்பத்தி :
உற்பத்திக் கருவிகளை உடையவன். தன் உற்பத்திப் பண்டங்களை சந்தையில் விற்பவன். சுதந்திரமானவன் என எண்ணுபவன். உப ரியை இனங் கண்டு தனிமைப்படுத்த முடியாதவனுக்கு விற்பவன். குறைந்த விலைக்கு விற்று அதிக விலையில் தேவைகளை வாங்குபவன்.
A 1A Y
உள்ளூர் வியாபாரி தரகளுக விளங்கி சுரண்டலின் சின்னமாக மாறு கிருன் அவன் வட்டிக்கும் பணம் கொடுப்பதால் தன் லாபத்தை நிலத்திலே முடக்குகிருன் , தன் உற்பத்திக்குறைவு, சுரண்டலுக்காக சிறு உற்பத்தியாளன் இவனையே இனங்காண்கிருன் , வெளி ஊராரே சில்லறை வியாபாரிகளாகின்றனர். இலங்கையில் முஸ்லிம், தமிழர், கரையோரச் சிங்களவரே சிறு வியாபாரிகளாக விளங்குவதால் பகை மை உணர்வு இவர்கள்மேல் தாக்கப்பட்டு இந்த சமூக இனங்களின் மேல் விழுகிறது. முதலாளித்துவ அரசியல் யாவும் இந்தப் பகைமை உறவை வகுப்பு வாதமாக பரப்பி பாராளுமன்ற முறையை நடத்து கின்றனர்.
முதலாளித்துல உறவுமுறை - பூஷ்வா :
பூஷ்வா வர்க்கத்தில் இரு குழுக்கள் உள்ளன. இருவகையினரும் உற்பத்தி சாதனங்களில் தனி உடைமையையும் கூலி உழைப்பையும் வாங்கும் உரிமையை நம்புவர். இருவரும் பிரிட்டிஷ் பாராளுமன்ற முறையை வரவேற்பவர். இவை யு என் , பி., சுதந்திரக் கட்சியாகும்.
இவர்களிடை உள்ள வேறுபாடு உபரியை அபகரித்து மூலதன மாக்கும் முறையிலேயே ஆகும். யு என் , பி தரகு முதலாளித்துவத்தை சார்ந்ததாகும். பிரிட்டிஷாருடன் சேர்ந்து சுரண்டுபவர். பிரிட்டிஷ் முறையில் கல்வி கற்ற அதிகாரிகள், உத்தியோகத் தர், கமிஷன் ஏஜெண்டுகள், பிரிட்டிஷ் பெருந்தோட்ட, வாணிப நிலையங்களுக்கு கொந்தராத்து எடுப்பவருமாகும். கல்வி முறையால் பிரிட் டிஷார் ஏற் படுத்திய வங்கி, இன்சுரன்ஸ் நிலையங்களிளுல் பயன் பெற்றவர் பின் வாய்ப்பான பொருளாதார சுரண்டலுக்கு வந்தவர்கள். அவர்களது
அரசியல் விழிப்பு ஏகாதிபத்தியத்திற்கு சார்பானதாகும்.
சுதந்திரக்கட்சியினது பூஷ்வாக்களது ஆரம்பம் வேருனது. முத லாளித்துவ வ ள ர் ச் சி , சிறு பண்ட உற்பத்தியாளர், சிறு வியா படரிகள், சிறு கைத்தொழில், சிறு தோட்ட விவசாயம் ஆகியவை பலம் வளர்வதை பாதித்தது ஆங்கிலம் தெரியாததினுல் உயர்மட். முதலாளித்துவ முறைகள் இச் சிறு நிலையங்களில் ஆதிக்கம் பெற முடியாது போனது. ஏனெனில் உத்தியோக மொழி ஆங்கிலமாகும். 1956ல் அரசுயந்திரத்தை இவர் கைப்பற்றியதும் சிங்களத்த்ை அரச மொழியாக்கினர். முறையாக தமது ஆதிக்கத்தை வளர்த்து தரகு முதலாளிகளையும் அவர்கள் சார்பானவர்களையும் ஒதுக்கினர்.
அவர்களது அரசியல் விழிப்பு உபரியை அபகரிக்கும் முறையோடு இணைந்தது. சிறு கைத்தொழிலாளர், கூலி உழைப்பாளர் மூலம் விவசாயமும், பெரிய கைத்தொழில்கள் அதிகாரத்துவ அரசு யந்திரம் மூலமும் நடைபெற்றது. இது கலந்த பொருளாதாரம் என்று கூறப்படுகிறது. யப்பான போல சுதந்திரமாக முதலாளித்துவம் வளர முடியாத நாடுகளில் இது சோசலிசப்பாதை, முதலாளித்துவமற்ற பாதை என்று கூறப்படுகிறது. சோஷலிச நாடுகளின் உதவி அரசுப்பகுதியில் பொய்மை வளர்ச்சியையே காட்டியது.
Related