குழந்தைகளுக்கு கற்பதிலிருக்கும் நேர்மை கற்ற தேர்வகளாகிய நம்மிடமின்மையேன்?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இரவு நடந்த வகுப்பை அடுத்த நாள் காலை நடக்கும் பொழுது மீண்டும் கேட்பேன் வகுப்பின் மீள் வாசிப்பாக அமைவதால் இவை மிகவும் பயனுள்ளதாக எனக்கு அமையும்.
அது போல் இன்று காலை நேற்றைய வகுப்பை கேட்க்க அழுத்தினால் ஏதோ பிரச்சினை. வகுப்பின் லிங்கை எனது மௌபைல் தடை செய்திருந்தது சரி வேறு ஏதாவது வகுப்பை கேடகலாமே என்று அழுத்தினால் உண்மையில் சுவராசியமாக இருந்தது. அதனை பற்றியே இந்தப் பதிவு.
குழந்தைகள் உலக அறியவை பெற தங்களின் மனக்கதவை திறந்து வைத்துள்ளதாக சொல்வர். ஆம் அவர்களின் அறிவுதேடலை அவர்களை வளர்க்கிறது அறிவுள்ளவர்களாக. அதை குழந்தைகளிடம் காணலாம்.
ஆனால் நாம் சில நூல்களை படித்து விட்டாலே நமக்கு நாம் மேதைகள் என்ற எண்ணம், என்ன செய்ய?
அதுதான் நான் அந்த வகுப்பை வாசிப்போர் மீது வைக்கும் விமர்சனம் மற்றொன்று அனுபவம்.
ஒரு சிலர் வகுப்பில் கலந்துக் கொள்வது பேசப்படும் தலைப்பையோ அல்லது அதன் ஊடாக செல்வதோ அல்ல தங்களின் கருத்தை திணிக்க வேண்டும் அடுத்தவரை பற்றி கவலையேயில்லை.அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வாசித்துக் கொண்டுள்ளனர் ஒருவர் இங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியை கேள்வி கேட்கிறார்.
இன்னொன்று அந்த விளக்கம் தரும் தோழர் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை இந்திய பிரிட்டிஷ் ஆட்சியை முதலாளித்துவ வளர்சியாக பேசி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
ஆக தோழர்களே சமூக வளர்சி விதிகளும் காலம் களம் சார்ந்து புரிந்துக் கொள்வதோடு மார்க்ஸ் ஏங்கெல்ஸ்க்கு பிறகு ஆசான் லெனின் ரசியாவில் புரட்சி நடந்தேற என்னென்ன செய்தார் அதனூட புரிந்துக் கொள்வதோடு 1848ல் எழுதப் பட்ட க.க. அறிக்கை 1888 ல் எங்கெல்ஸால் எழுத்தப் பட்ட முன்னுரையை இவர்கள் திருப்பி பார்த்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவை கீழே:- 1872-ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்புக்கு நாங்கள் இருவரும் சேர்ந்து எழுதிய முகவுரையிலிருந்து கீழ்க்காணும் பகுதியை இங்குத் தருகிறேன்:
“கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருந்த போதிலும், இந்த அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்டுள்ள பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும்போல் இன்றும் சரியானவையே ஆகும். ஆங்காங்கே சில விவரங்களைச் செம்மைப்படுத்தலாம். இந்தக் கோட்பாடுகளின் நடைமுறைப் பயன்பாடு என்பது, இந்த அறிக்கையே குறிப்பிடுவதுபோல, எல்லா இடங்களிலும் எல்லாக் காலத்திலும், அந்தந்தக் காலகட்டத்தில் நிலவக்கூடிய வரலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான், இரண்டாம் பிரிவின் இறுதியில் முன்மொழியப்பட்டுள்ள புரட்சிகர நடவடிக்கைகள் மீது தனிச்சிறப்பான அழுத்தம் எதுவும் தரப்படவில்லை. அந்தப் பகுதியின் வாசகத்தைப் பல கூறுகளில் இன்றைக்கு மிகவும் வேறுபட்ட சொற்களில் எழுத வேண்டியிருக்கும். 1848 முதலே நவீனத் தொழில்துறை மகத்தான வளர்ச்சி கண்டுள்ளது; அதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் மேம்பட்ட, விரிவடைந்த அமைப்பு வளர்ச்சி பெற்றுள்ளது. முதலில் பிப்ரவரிப் புரட்சியிலும், பிறகு அதனினும் முக்கியமாகப் பாட்டாளி வர்க்கம் முதன்முதலாக, முழுதாய் இரு மாதங்கள் அரசியல் ஆட்சியதிகாரம் வகித்த பாரிஸ் கம்யூனிலும் சில நடைமுறை அனுபவங்கள் கிடைத்துள்ளன; – இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின், இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங் கடந்ததாகி விடுகிறது.
கம்யூனானது முக்கியமாக ஒன்றை நிரூபித்துக் காட்டியது. அதாவது, ’ஏற்கெனவே தயார்நிலையிலுள்ள அரசு எந்திரத்தைத் தொழிலாளி வர்க்கம் வெறுமனே கைப்பற்றி, அப்படியே தன் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது’. தவிரவும், சோஷலிச இலக்கியத்தைப் பற்றிய விமர்சனம் இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை போதுமானதல்ல என்பது கூறாமலே விளங்கும். ஏனெனில் 1847-ஆம் ஆண்டு வரைதான் அதில் அலசப்பட்டுள்ளது. அதோடு, பல்வேறு எதிர்க்கட்சிகளுடன் கம்யூனிஸ்டுகளின் உறவுநிலை பற்றிய குறிப்புகள் (நான்காம் பிரிவு) கோட்பாட்டு அளவில் இன்றும் சரியானவையே. என்றாலுங்கூட, நடைமுறையில் காலங் கடந்தவையே. காரணம், இன்றைக்கு அரசியல் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. வரலாற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது, அப்பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளில் மிகப் பெரும்பாலானவற்றைப் புவிப்பரப்பிலிருந்தே துடைத்தெறிந்துவிட்டது”.
ஆக தோழர்களே கோட்பாட்டை நடைமுறையோடு பொறுத்தி பார்க்கும் பொழுது நமது ஆசான்கள் முன் நிறுதியுள்ள சமுக விதிகளை புரிந்திருந்தால் சிறப்பாக இருக்கும் மற்றும் பின்னர்….



All reactions:
தருமர் திருப்பூர்