கவிதை நயம் நன்றாக உள்ளது ஆகவே பதிவு செய்கிறேன்.
வர்க்கம் பார்த்து வரப்போவதில்லை இந்த வைரஸ் எப்படியும் தனது போண்டியாகி போன உதார்களை மக்கள் மறந்து போவர் உயிர் பயத்தில், இன்று உயிர் பயம் பேசும் உலகே இங்கே உலகில் சரிபகுதி வாழ வழியற்று தினம் இறந்துக் கொண்டுதான் உள்ளது, இதில் மெதுவாக செத்துக் கொண்டிருந்த ஒரு பெரும் கூட்டத்தை பட்டினி போட்டு சாகடிக்க போகிறீர்களோ?
இனி கவதை வரிகள் கீழே
எப்படி கடக்கும்
இருபத்தி ஓர் நாள்
அறிவிப்பு எளிதே
அனுபவம் கொடுமையே
அரிசி பானை
காலி
அரசளவு சாமான்
டப்பாக்களும் காலி
பருப்பு டப்பா
காலி
பாசிப் பயறு டப்பா
காலி
உளுந்து டப்பா
காலி
ஊறுகாய் பாட்டில்
காலி.
எல்லாம் காலி
வாங்க நினைத்து
பாக்கெட்டை தடவ
பாக்கெட்டும் காலி.
சேர்த்து வச்ச
உண்டியலும் காலி
உப்பு டப்பாவும்கூட
காலி
கடன் கொடுக்க
ஆளில்லை
காசு கிடைக்க
வேலையில்லை.
கொரனா கொரனா
எங்கும் கூக்குரல்
கொத்து கொத்தா
செத்து மடியும் செய்தி.
வெளியே போகாதே
வீட்டில் முடங்கு
தனித்திரு தள்ளியே இரு
எல்லாம் சரிதான்.
பட்டினியால்
ஒருநாள் இருக்கலாம்
இருநாள் கிடக்கலாம்
இருபத்தோரு நாளாச்சே.
அறிவித்தவருக்கு
அம்பானி கொடுப்பார்
சப்பாத்தி
அதானி கொடுப்பார்
சப்ஜி.
ஏழைகளுக்கு
உணவு கொடுப்பவர்
யாரு?
உறங்க
இடம் கொடுப்பார் யாரு?
கேட்கும் போதெல்லாம்
வரி தருவது நாங்களே
ஏய்க்க தெரியாது.
ஏமாற்ற தெரியாது
எங்களுக்கு.
கொரனோ மட்டும்
துரத்தவில்லை
கொடிய பசியும்
துரத்துகிறது எங்களை.
உடலில் இருந்த
தெம்பெல்லாம்
ஒரே நாளில்
வற்றி போனது.
எப்படி கடப்போம்
இருபத்தோரு நாளை
இதயம் கணக்கிறது.
அறிவிப்பு மட்டும்
போதாது
அரவணைப்பும்
வேண்டும் அரசிடம்.
கஜானா காலியா
கைகாட்டுகிறோம்
இருக்கும் இடத்தை.
அம்பானியிடம் இருக்கிறது
அதானியிடம் இருக்கிறது
டாடா, பிர்லா என
குவிந்து கிடக்கிறது
கொள்ளையடித்த பணம்.
வங்கியில் சுருட்டியது
வளத்தை சுருட்டியது
வரி ஏய்ப்பு செய்தது
கொட்டிக் கிடக்கிறது கொஞ்சம்
வெட்டி எடுத்து வாருங்கள்
வாடும் ஏழைகளுக்கு தாருங்கள்.
கொரனாவில் சாவது
மட்டும் சாவல்ல.
பட்டினியால் சாவதும்
சாவுதான்.
இரண்டிலுமிருந்து
இந்தியாவை காக்க
அறிவிப்பு மட்டும் போதது
ஆக்கப்பூர்வா
அவணைப்பும் தேவை.