குறுங்குழுவாதம்- மாவோ

குறுங்குழுவாதம்
*எல்லா குறுங்குழுவாதப் போக்குகளும் அகவய வாதமே!*
மாவோ

கட்சி பள்ளி தொடங்கிவைத்து தோழர் மா.வோ. பெரும்பாலான நமது தோழர்கள் கட்சி சாராத மக்கள் மீது கர்வப் போக்கு உடையவர்களாக, இகழ்ச்சியாக அவர்களை பார்ப்பவர்களாக, அவர்களை வெறுக்கவோ, அல்லது மறுக்கவோ அல்லது அவர்களின் நல்ல அம்சங்களை கவனிக்காமல் வெறுக்கவோ, ஒதுக்கவோ செய்கிறார்கள். இது உண்மையில் குறுங்குழுவாத போக்கு ஆகும். சில மார்க்சிய புத்தகங்கள் படித்த பின்னால், அடக்கத்திற்கு மாறாக அகந்தையுள்ளவர்களாக மாறுகின்றனர். தங்கள் அறிவு அரை குறையானது என்ற உண்மையை உணராமல் மற்றவர்களை பயனற்றவர்கள் என்று ஒதுக்கி விடுகின்றனர். எந்த சமயத்திலும் கட்சி சாராத மக்களிடம் ஒப்பிடும்போது நாம் சிறுபான்மையினர்தான் என்ற உண்மையை நாம் உணர வேண்டும். ஒவ்வொரு நூறு நபருக்கு ஒரு பொதுவுடமை வாதி வீதம் இருந்தால் 45 கோடி மக்களுக்கு, 45 இலட்சம் பொதுவுடமை வதிகள் இருக்கவேண்டும். இவ்வளவு பெரிய எண்ணிக்கையை நமது கட்சி அடைந்தாலும் கூட மக்கள் தொகையில் நாம் ஒரு சதவீதம் இருப்போம் கட்சி சாராத மக்கள் 99 சதவீதம் இருப்பார்கள். கட்சி சாராத மக்களிடம் நாம் இணையாமல் இருப்பதற்கு காரணமென்ன? நம்முடன் இணைய விரும்புகிறவர்கள் அல்லது இணையப் போகிறவர்களை பொறுத்த மட்டில் நமது ஒரே வேலை அவர்களோடு ஒத்துழைப்பது தான். அவர்களை புறக்கனிப்பதற்கு எந்த ஒரு உரிமையும் இல்லை ஆனால் சில தோழர்கள் இதைப் புரிந்து கொள்ளாமல் நம்முடன் ஒத்துழைப்பவர்களை இகழ்ச்சியாகப் பார்க்கிறார்கள் அல்லது அவர்களை புறக்கணிக்கிறார்கள். இம்மாதிரி செயல்படுவதற்கு எந்த நியாயமும் இல்லை. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் ஏதாவது நியாயங்களை கொடுத்துள்ளனரா? இல்லை. மாறாக, அவர்கள் மக்களுடன் இணைவதற்கு நம்மை ஊக்கப் படுத்தியுள்ளனர். மக்களிடமிருந்து நாம் விலகுவதை அல்ல. சீனப் பொதுவுடமைக் கட்சியின் மத்திய கமிட்டி ஏதாவது நியாயங்கள் தந்துள்ளதா? இல்லை. அதன் எல்லாத் தீர்மானங்களிலும் மக்களிடமிருந்து நம்மை விலக்கி தனிமைப் படுத்தும்எந்த ஒரு தீர்மான வாசகமும் இல்லை அதற்கு மாறாக மக்களுடன் நெருங்கிய உறவு கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளது. மக்களிடமிருந்து நம்மை பிரிக்கும் எட்த ஒரு செயலுக்கும் எந்த நியாயமும் இல்லை. சில தோழர்களின் திட்டமிட்ட குறுங்குழுவாத சிந்தனையின் விளவுதான் இது. இம் மாதிரியான குறுங்குழுவாதப் போக்கு நம் தோழர்களில் சிலரிடையே அதிக அளவு உள்லது. அது நம் கட்சி வழியை தடுத்து வருகிறது. இந்த பிரச்சனையை எதிர்க்கொள்ள நம் பரந்த அளவிற்கு கட்சிக் கல்வியை எடுத்துச்செல்ல வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை – கட்சிசாராத மக்களுடனும், ஊழியர்களுடனும், இணையாமல் நாம் எதிரியை வெல்வதோ புரட்சியின் இலட்சியத்தை அடைவதோ சாத்யமில்லை – என்பதை உண்மையோடு நமது கட்சி ஊழியர்களுக்கு உணர்த்த வேண்டும். எல்லா குறுங்கூவாதப் போக்குகளும் அகவய வாதமே புரட்சியின் உண்மையான தேவைகளுடன் பொருந்தாது ஒன்று. ஆகவே அகவயவாதத்திற்கும், குறுங்குழுவாதத்திறும் எதிராக ஒரே சமயத்தில் போர் தொடுக்க வேண்டும்.
மாவோ.

6 . “மக்களிடமிருந்து மக்களுகே” அதாவது மக்களிட்மிருந்து கற்றுக் கொள்வதும் மக்களுக்குக் கற்பிப்பதும் ஆகும்.

7. மக்கள் மீது எந்த ஒரு கண்ணோட்டத்தையும் அது எவ்வள்வு சரியாக் இருந்தாலும் சரி- தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் திணிக்கக் கூடாது, இது அதிகார் வர்க்க போக்கு.