Palaniyandi Nagarethinam
ogdtMafSpy hr2ons,ssou h2r0etg19d ·

குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக குமரகிரி ஏரி- “சேலம் மக்கள் குழு” விடம் சிக்கி சீரழியும் அவலம்!———————————————————-#தன்னார்வ தொண்டு எனும் பெயரால், மக்களிடமிருந்து அரசியல் பார்வையை அகற்றுவதே NGOக் களின் பணியாகும்.#அரசு மீதான மக்கள் கோபம் அரசியலாக்கப்படாமல் மடைமாற்றம் செய்வதே NGOக் களின் நோக்கமாகும்.#பொதுப்பணிகளை தட்டிக் கழிக்கும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் உருவாகாமல் Shock absorbers ஆக எதிர்ப்பை தாங்கி கொள்ளும் பணியை செய்வதே NGOக் களின் பணியாகும்.————————————————————25 ஆண்டுகளுக்கு முன்னர், அம்மாப்பேட்டையிலிருந்துகுமரகிரிப்பேட்டைக்கு ஏரிக்கரையில் சைக்கிளில் பயணித்த ஒரு இளைஞனின் பசுமையான நினைவுகள் இதுவாகும். குமரகிரி ஏரியானது சுமார் 40 ஏக்கர் பரப்பில் விரிந்து பரவியிருந்தது. ஏரியைச் சுற்றியுள்ள கரடுகளிலிருந்து (Hillocks) கந்தகிரி கன்னிமார் ஓடை துவங்கி பல்வேறு ஓடைகளிலிருந்தும் தண்ணீர் ஓடிவந்து ஏரிக்குள் சேர்ந்து கொண்டே இருக்கும். குமரகிரிப்பேட்டை தலைப்பில் தரைப்பாலம் நிரம்பி, மாதக்கணக்கில் தண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கும். நீல நிறத்தில் ஏரி நீர் நிரம்பியிருக்கும். நூற்றுக்கணக்கான பலவண்ணப் பறவைகள் ஏரியில் விளையாடும். நீர் குடிக்கும்; மீன் பிடிக்கும். மரங்களில், செடிகளில் அமர்ந்திருக்கும். அழகான இயற்கை ஓவியமாக ஏரி திகழும்.புகையிலை மண்டியிலிருந்து ஏரிக்கரை வழியாகத் தோழர்களைச் சந்திக்கச் செல்லும் போது, சாலையில் பாம்புகள், தேள்கள்,நண்டுவாக்கிளிகள் கடந்து சென்று பயமூட்டும். வண்டி சக்கரங்களில் சிக்கிச் செத்த தவளைகள் ஆங்காங்கே கிடக்கும்.ஏரியில் மீன்கள் நிரம்பியிருக்கும். வெளியே றி செல்லும் நீர்வழிப் பாதைகளில் அவை துள்ளிக் குதித்து ஓடும். குமரகிரிப்பேட்டை சிறுவர்கள் அம்மணமாக குதித்து மகிழ்ச்சியுடன் ஆட்டம் போடுவார்கள்.சுற்றிலும் விளைந்து நிற்கும் நெற்பயிர்கள் ! நகரத்திற்குள் இப்படி ஒரு பச்சை பசேலென்ற அழகான காட்சியா என மனதை ஈர்க்கும்.ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில், 20 அடி தோண்டினால் போதும் ; தண்ணீர் பொத்துக் கொண்டு வெளிவரும்.#ஏரியை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள்!#மீன்கள் நிரம்பி வழிய, ஏலத்தில் போட்டியில் ஈடுபடும் சமூக விரோத சக்திகள் !#எல்லாம்_பழங்கதையாக_வெறுங்கனவாக..இப்போது இருப்பது ஏரியல்ல! வெறும் கழிவுநீர் குட்டைகளே! இயற்கையை சீரழித்தது யார்?******************************1)கந்தகிரி கன்னிமார் ஓடையில் அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை கூட அப்போது இருந்தது.மழைநீர் பிடிப்பு பகுதிகளான கந்தகிரி, நாமமலை,புதுப்பேட்டை, குமரகிரி கரடுகளில் உருவாகும் நீரோடைகளை ஆக்கிரமித்தனர், பணக்கார விவசாயிகள், அரசியல்வாதிகள்.2)சாயப்பட்டறை மற்றும் ஆலைக் கழிவுகளைச் சுத்திகரிக்காமல் நீரோடைகளில் விட்டு, ஏரியை கழிவுநீர் குட்டைகளாக மாற்றும், இலாபவெறிமிக்க சாயப் பட்டறைகள், நூற்பாலைகளின் முதலாளிகள். 3)அரசின் சொந்தப் பொறுப்பை தட்டிக் கழித்து NGOக்களிடம் நீர்நிலைகளின் எதிர்காலத்தை தாரை வார்த்திட்ட சேலம் மாநகராட்சி.4)ஏரியின் நீர்வழிப் பாதைகளை சுருக்கி நீர்வரவை தடுத்ததோடு, ஏரியை ஆக்கிரமித்து வாக்கிங் நடைபாதை, பூங்காக்கள், கலையரங்கம் எனத் தன்னிச்சையாக ஏரியின் பரப்பில் அய்ந்து ஏக்கருக்கு மேல் ஆக்கிரமித்து விட்ட, மேட்டுக் குடியினர் மனப்பான்மை மிக்க “சேலம் மக்கள் குழு” . (புகைப்படங்களை பார்க்கவும்)#மொத்தத்தில், ஏரியின் நீர்வரத்து குறைந்தது.#தொழிற்சாலைகள் வெளியேற்றும் விஷக் கழிவுகள் அதிகரித்தது .#ஏரியின் மீன்கள் செத்துப் போயின; நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக மாறியது.மீட்க வந்த “சேலம் மக்கள் குழு” செய்த தவறுகள் !*************************************சில ஆண்டுகளுக்கு முன்னர்,சேலம் மாநகராட்சியிடமிருந்து குமரகிரி ஏரி பராமரிப்பு பணியை சேலம் மக்கள் குழு பெற்றது. இது அம்மாப்பேட்டை வாழ் பணக்காரர்களைக் கொண்ட கமிட்டி ஆகும். குமரகிரிப்பேட்டை மக்கள் (stakeholders) தங்களது கோரிக்கைகளுடன் அவர்களை சந்தித்தனர். “ஆக்கிரமிப்பை அகற்றுவோம்! சாயச் சாக்கடை கழிவுகளைத் தடுப்போம்! -என மக்கள் குழுவின் ஆலோசகர் பியூஸ் சேத்தியாவும் வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால், நடந்தது என்ன?1)நன்கு அகன்று இருந்த நீர்வழிப் பாதைகள் சுருக்கப்பட்டன.நீர்வரத்து தடுக்கப்பட்டது. (புகைப் படங்களை பார்க்கவும்.) நீர் வெளியேறும் பாதையும் சுருக்கப்பட்டதால், ஏரியின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள குமரகிரிப்பேட்டை, ராமநாதபுரம், மாருதிநகர், பச்சப்பட்டி ஆயிரக் கணக்கான மக்கள் குடியிருப்புகள், ஒரு பெருமழை வெள்ளம் உருவானால் மூழ்கும் அபாயம் உள்ளது. ஏரிப் பராமரிப்பு பற்றிய தொழில்நுட்ப அறிவுடன் செயல்படவில்லை. பறவைகள் சரணாலயம் என இவர்கள் பாதுகாப்பற்ற முறையில் அமைத்த குட்டையில், கடந்த ஆண்டில் அங்கு பணியாற்றிய காவலாளி ஒருவரின் மகன் (இளைஞரான அவரும் அங்கு வேலைப் பார்த்த தொழிலாளர்) விழுந்து இறந்து போனார். இறந்து போனத் தொழிலாளர் குடும்பத்திற்கு , சேலம் மக்கள் குழு பணம் வழங்கி காவல்நிலையத்தில் வழக்கு வராமல் பார்த்துக் கொண்டது.2)சாயக் கழிவுகள் தடுக்கப்படாததால் ஏரி விசம் ஆனது. (ஏற்கனவே மீன்கள் அழிந்து போயிருந்தது.) தற்போது நீர்வாழ் உயிரினங்கள் முற்றிலுமாகவே அழிந்து போய் விட்டது. நிலத்தடி நீர் மாசுபட்டு குடிக்க தகுதியற்றதாகி விட்டது ; குளிக்க கூட தரம் இல்லை ;தோல் நோய்கள் தொற்றுகின்றன.சாதனைகளாக சொல்லப்படுவது :-************************************1)தூர் வாரி, ஏரியின் நடுவே திட்டுக்கள் அமைத்து, கோணப்புளியங்காய் போன்ற பறவைகளை ஈர்க்கும் மரங்கள் வைத்துவிட்டோம். அழகான பறவைகள் சரணாலயம் ஆக்கிவிட்டோம். படகுகள் விடுகிறோம்.2)வாக்கிங் நடைபாதை அமைத்து விட்டோம். 3)பூங்காக்கள், கலையரங்கு கட்டவுள்ளோம்.#Ecotourism ?ஏரியின் சொந்தக்காரர்கள் சொரி சிரங்குகள் நோயுடன் வாழ… அம்மாப்பேட்டை பணக்கார்கள் வாக்கிங் போக, பூங்காவில் பொழுது போக்க, படகு விட்டு மகிழ..இதற்காகவா சேலம் மாநகராட்சி குமரகிரி ஏரியை இவர்களிடம் ஒப்படைத்தது ?யார் ஏரியை யார் எடுத்து தன் மனம்போன போக்கில் செயல்பட அனுமதித்தது?தமிழக அரசே!சேலம் மாநகராட்சியே !குமரகிரி ஏரியை மீட்டு எடுக்கும் பணியை நேரடியாக ஏற்று நடத்து!(இளம்பிள்ளை ஏரி போல)சேலம் மக்கள் குழு என்ற NGO விற்கு கொடுத்த ஒப்பந்தத்தை திரும்பப் பெறு !ஆக்கிரமிப்புகளை அகற்றிட, இயற்கையை மீட்டிட வல்லுநர்கள், அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்திடுக!**************************************#பொறுப்பை_தட்டிக்கழிக்காதே!#NGOக்களிடம்_தள்ளிவிடாதே! #நீர்நிலைகளை_காப்பது அரசின் கடமை! துண்டு செய்தி:-******************குமரகிரி ஏரியை ஒட்டியுள்ள குடியிருப்பில், பல ஆண்டுகள் குடியிருந்த மூத்த குடிமகன் ஒருவர் சொன்னார் :-“தம்பி, குமரகிரி ஏரி நிரம்புனால்,தண்ணீர் பச்சப்பட்டியைத் தாண்டி வெள்ளக்குட்டை ஏரிக்கு தான் போகும். அது ஹவுசிங் யூனிட் ஆயிடுச்சி !அதனால பக்கத்தில் இருக்கிற நாராயண நகர் மழை காலத்தில் மூழ்கிப் போய்விடும். அங்க ஏராளமான சேட்டுங்க வீடு, கடை, கோவிலுன்னு இருக்கிறாங்க. குமரகிரி ஏரியை தண்ணியே இல்லாமல் ஆக்கிட்டால், முதல் ஆதாயம் சேட்டுக்களுக்குத் தான். இப்படியும் யோசித்துப் பாருங்க! “அவரது கருத்தை முழுமையாக ஏற்கமுடியவில்லை. ஆனால், உடனடியாக நிராகரித்து ஒதுக்கவும் முடியவில்லை.- சந்திர மோகன்