இச்சமூக முரண்பாடுகள் உற்பத்திச் சாதனங்கள் முதலாளிகளின் ஆதிக்கத்தில் உள்ளன. இன்றைய சமூக அமைப்பில் உற்பத்தியில் ஈடுபடும் மனிதர்கள் என்ன செய்வது, எப்படிச் செய்வது என்பதைத் தீர்மானிக்க முடியாதவர்களாயுள்ளனர். உற்பத்தி செய்த பொருளே அவர்களுக்குக் கிடைப்பதில்லை. மனிதர்களிடையே ஒற்றுமையின்றி போட்டா போட்டி, பொறாமை, கழுத்தறுப்பு நடைபெறுகிறது. மனிதர்கள் தம் உள்ளுணர்விலிருந்து அந்நியமாகின்றனர். இந்நிலையில் எல்லாக் குடும்பங்களிலும் அந்நிய மனிதர்களையே நாம் காணலாம். இன்றைய சமுக அமைப்பு உடைத்தெறியப்படாமல் சுதந்திரம், மகிழ்ச்சி, அமைதி, அன்பு, காதல். எதுவும் எக்குடும்பத்திலோ அல்லது தனிமனிதர்களிடையோ” நிலை பெறமுடியாது
“இன்றைய சமுதாய அமைப்பை எப்படி உடைத்தெறியப் போகிறோம்???
“அதற்காகவே இடதுசாரி இயகங்கள் புரட்சியை நேசிக்கும் சக்திகள் முயன்று கொண்டிருக்கிறன. இன்றைய சமூக அமைப்பு என்றேனும் உடைத்தெறியப் படுவது நிச்சயம். அதை விரைவு படுத்தவே நாம் உணர்வுபூர்வமாக ஒன்றினைந்த கட்சி அமைக்கப் போராடிக் கொண்டிருக்கிருறோம். அது அடுத்த ஆண்டும் நடைபெறலாம். ஐந்து, பத்து ஆண்டுகள் கழித்தும் நடைபெறலாம். ஏகாதிபததியத் தாக்கங்கள் வளர்ந்து முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருக் கின்றன. புறநிலை வாய்ப்பாக உள்ளது. அகநிலையை ஒருமைப் படுத்துவதுதான் பிரச்சனையாக உள்ளது. மனித வரலாற்றில் பத்து, இருபது ஆண்டுகளே குறுகிய காலமே. நாம் இப்புரட்சியை நடாத்தத் தவறினல் நமது பிள்ளைகள் நடத்திக் காட்டுவார்கள்.
மேல்கட்டுமாண அமைப்புகளான மதம், கல்வி, சட்டங்கள், கலை இலக்கியங்கள் யாவும் குடும்ப அமைப்பு உடைந்து விடாதபடி காப்பாற்றுகின்றன. குழந்தைகளைப் பேணுவதற்குக் கூட சட்டங்கள், மதங்கள் மூலம் கட்டுப்பாடுகள் உள்ளன. எவரும் அவற்றை மீறிவிட முடியாது. இதனலேயே எத்தனை பிணக்குகள், சண்டைகள் இருந்தபோதும் ஒரு சிலராலேயே அவற்றை உடைத்துக் கொண்டு வெளியேற முடிகிறது.
“சொத்தில்லாத ஏழைக் குடும்பங்களும் உடையாது இருக்கின்றனவே” என்றால்
“ஏழைகளிடம் மேல்கட்டுமாண அமைப்பு மிக வலிமையாக உள்ளது. கணவன் எஜமானுகவும் மனைவி அடிமையாகவும் உள்ளனர். கணவன் மனைவியை தன் சொத்தாகக் கருதுகிறான், மனைவியும் ஏற்று நடக்கிறாள். அடிமைச் சமுதாயத்தின் மிச்ச சொச்சங்கள் இன்னும் நிலவுகின்றன. இதனை பெண்கள் தாமாக ஏற்று கொள்கின்றனர். இதிலிருந்து ஒரளவு விடுதலை பெற்ற நிலையில் பொருளாதார ரீதியா முன்னிலை வைக்கும் பெண்கள் சிறிது சுதந்திரமாக உயர்ந்த நிலையில் உள்ளனர். தனிமனிதரால் சமுதாயத்தைத் திருத்தி அமைத்து விட முடியாது. அது பாட்டாளிகளால் மட்டுந்தான் முடியும்.இதற்க்கு காரணமான இந்த சமூக அமைப்பை தூக்கி எறிந்து ஏற்ற தாழ்வற்ற சமூகத்தை படைக்க முற்பட்டால் மட்டுமே தீர்வு…