நான் எழுதும் எழுத்தென்பது பல தோழர்களுக்கு உள்வாங்க கடினமாக உள்ளது ஏனெனில் தெரிந்தோ தெய்யாமாலோ அவர்களின் அரசியலை கேள்விகேட்கிறது ஆகவே எனது எழுத்து தேடுதலை தொடராக எழுத்தும் எண்ணத்தில் உள்ளேன். ஒரு குழந்தை உலகை பார்ப்பதும் ஒரு புத்திஜீவீ பார்பதற்க்கும் வித்தியாசம் உள்ளது. நான் மார்க்சியம் பயிலுவதில் குழந்தையே, எனது தேடுதலில் ஏற்படும் கேள்விகள் கேட்டால் பல புத்திஜீவிகளூக்கு பதிலளிக்க அருவருப்பாக உள்ளது ஆகவே நான் எனது தேடுதல்களை இங்கே பதிவு செய்ய நினைத்துள்ளேன் தோழர்கள் தங்களின் விமர்சன்ங்களை முன் வைத்து எனது தவறான கருத்து இருப்பின் சரி செய்ய முன் வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.இன்றைய சமுகத்தில் குடும்பத்தில் நிலவும் பல்வேறு முரண்பாடுகளை பற்றியும் பெண்கள் நிலை பற்றியும் தொடர்ந்து எழுதுவேன். நமது பேராசன் குடும்பம் தனிசொத்து அரசுவின் முக்கிய பகுதியின் துணை கொண்டு…பூர்விக சமூகத்தின் சாராம்சத்தைப் பற்றியும் வர்க்க – பகைமுரண்பாட்டு சமூக அமைப்புகளை நோக்கிய அதன் வளர்ச்சியின் விதிகளைப் நோக்கிய அதன் வளர்ச்சியின் விதிகளைப் பற்றியும் மார்க்சிய மூலவர்கள் உருவாக்கிய தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை வரலாற்றாசிரியர்கள் இன்று திரட்டியுள்ள விவரங்கள் நிரூபிக்கின்றன.மனித வரலாற்றில் முதலாளித்துவத்துக்கு முந்திய கட்டத்தை ஆராயும் போது இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையான கோட்பாடுகளை முழுமையாகக் கையாள முடியும் என்று “குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” நூல் நன்கு நிரூபித்திருக்கிறது.குடும்பம் என்பதை ஒரு வரலாற்று கருத்தினமாக அணுகும் எங்கெல்ஸ், அதன் பல்வேறு வடிவங்களுக்கும் (பண்டைய குழு மணத்திலிருந்து துவங்கி, தனியுடைமை தோன்றிய பின் நிலைபெற்ற ஒருதாரக் குடும்பம் வரை) சமுதாய வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களுக்கும் இடையிலான அங்கக ரீதியான தொடர்பையும், இந்த வடிவங்கள் உற்பத்தி முறையின் மாற்றங்களை எப்படி சார்ந்தவை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். உற்பத்திச் சக்திகள் வளர வளர சமுதாய அமைப்பின் மீது இரத்த உறவுமுறையின் தாக்க எப்படி குறைந்துவந்தது, தனியுடைமை வெற்றி பெற்ற பின் “சொத்துடைமை அமைப்பு குடும்ப அமைப்பின் மீது முழுமையாக ஆதிக்கம் செலுத்தும்” சமுதாயம் எப்படித் தோன்றியது என்றெல்லாம் காட்டுகிறார்.தனியுடைமை ஆதிக்கம் செலுத்தும் சூழ்நிலையில் பெண்களுடைய சமமின்மையின் பொருளாதார அடிப்படையை சுட்டிக் காட்டும் அவர், முதலாளித்துவ பெண்கள் உண்மையான விடுதலையை அடைய முடியும் என்று கூறுகிறார். சோஷலிச சமுதாயத்தில்தான், பெண்கள் சமூக உற்பத்தியில் பரவலாக ஈடுபடுத்தப்படுவதையடுத்து, சமுதாய வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் பெண்களுக்கு முழு சமத்துவம் அளிக்கப்படும், வீட்டு வேலைகளிலிருந்து பெண்கள் விடுவிக்கப்படுவர், இப்பணியை சமுதாயம் மேன்மேலும் அதிகமாக தான் எடுத்துக் கொள்ளும்.தனியுடைமை அமைப்பு ஒன்றும் என்றென்றைக்கும் நிரந்தரமானதல்ல, பூர்வீக வரலாற்றின் நீண்ட காலகட்டத்தில் உற்பத்திச் சாதனங்கள் பொதுவுடைமையாக இருந்தன என்று எங்கெல்ஸ் காட்டுகிறார். உற்பத்திச் சக்திகள் வளர்ந்து, உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதையடுத்து பிறருடைய உழைப்பின் விளைபொருளை அபகரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது, எனவே தனியுடைமையும் மனிதனை மனிதன் சுரண்டுவதும் தோன்றுகின்றன, சமுதாயமானது பகைமுரண்பாட்டு வர்க்கங்களாகப் பிரிகிறது என்றார்.இதனை பற்றி தொடர்ந்து எழுதுவேன்….