காமராசர் பிறந்த தினம்
காமராசர் பிறந்த தினம்

காமராசர் பிறந்த தினம்

காமராசர் பிறந்த தினம் பல பதிவுகள் கண்டேன் ஏனோ எதையையும் ஏற்கப் படாத மனம், இறுதியாக ஏன் நம் எண்ணத்தை பதியகூடாது என்று நினைத்த போது இந்த பதிவு Whatchat ல் இருந்தது அதனை சிறிது சரியாக்கி பதிவிடுகின்றேன்.காமராசரை விமர்சிக்கிறோம் என்றால் தனிப்பட்ட அவர் மேல் நமது விமர்சனம் கிடையாது. அவருடைய அரசியல் மீது தான் நமது விமர்சனம். காமராசரைச் சுற்றியிருந்தவர்கள் ஏழை குப்பனோ சுப்பனோ அல்ல. மிட்டா மிராசுகளும் ஆலையதிபர்களும் தான். காமராசர் கட்சியில் கக்கன் , பரமேஸ்வரன்கள் மிகச் சிலரே! கட்சியில் செல்வாக்கு செலுத்திய ஏழைப் பங்காளர்கள் பட்டியல் இதோ!கபிஸ்தலம் மூப்பனார்ஸ்ரீரங்கம் வெங்கடேச தீட்சிதர்கல்வண்டார் கோட்டை சாமிநாதன்வெண்மனி கொலைகாரன் இரிஞ்சூர் கோபால கிருஷ்ண நாயுடுபக்கிரிசாமி நாயுடுமதுரை சின்னக் கருப்பத் தேவர்கவரப்பட்டு மாரியப்ப வாண்டையார்கருப்பு அம்பலம் வெங்கடாசலத்தேவர்ஜெகவீரபாண்டிய நாடார்கும்பகோணம் ஏ ஆர் ராமசாமிகாளியண்ணன் கவுண்டர்ராமசாமி கவுண்டர்பொள்ளாச்சி மகாலிங்கம் இராஜாராம் நாயுடுஎன்.ஆர்.தியாகராசன்நீண்டு விடும். நிறுத்திக் கொள்வோம். ஏழை எளிய மக்களைச் சுரண்டிக் கொழுத்தவர்கள் இவர்கள். கடத்தல் பேர்வழிகளும் கள்ள நோட்டுக்காரர்களும் பிளாக் மார்க்கெட் பேர்வழிகள் தான் காமராசரின் பொற்கால ஆட்சியின் புரவலர்கள். கர்ம வீரரின் ஆட்சியில் தானே எல்லைப் பகுதிகளை இழந்தோம்.தேவிகுளம்பிர் மேடு,நெய்யாற்றங்கரைநெடுமங்காடுபாலக்காடுசித்தூர்திருப்பதிமூணாறு போன்ற பகுதிகளை இழந்தது காமராசர் ஆட்சியில் .44 அப்பாவி கூலி விவசாயிகளைப் படுகொலை செய்த வெண்மணி கொலைகாரக் கும்பல் காமராசரின் காங்கிரஸ் காரன் இரிஞ்சூர் கோபால கிருஷ்ணனை பாதுகாத்தவர் காமராசரின் செல்லப் பிள்ளை கருப்பையா மூப்பனார். ஏதாவது நடவடிக்கை எடுத்தனரா ஆட்சியாளர்?1974 கச்சத் தீவை தாரை வார்க்கும் போது கர்ம வீரர் என்ன போராட்டம் நடத்தினார்? அப்போது அவர் நாகர்கோவில் நாடளுமன்ற உறுப்பினர். கச்சத் தீவிற்காக என்ன செய்தார்?1957 சனவரி வால்பாறை படுகொலை . கூலி உயர்வு கேட்ட எஸ்டேட் தொழிலாளர்களை சுட் க் கொன்றது யாருடைய ஆட்சியில் . பெருந்தலைவரின் ஆட்சியில் தானே.வாட்டாக்குடி இரணியனும் சிவராமனும் களப்பால் குப்புவும் படுகொலை செய்யப்பட்ட போது காங்கிரசின் தலைவராக இருந்த காமராசர் என்ன செய்தார்? காங்கிரஸ் காமராசர் ஆட்சியிலே கம்யூனிஸ்டுகள் மீதான அடக்கு முறை தலை விரித்தாடியது. தஞ்சை விவசாயக் கூலிகளின் இரத்தமும் சதையும் சொல்லும் பண்ணையார்களின் பாதுகாவலர் யார் என்று? ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் ஒரு வர்க்கத்தின் நலன் அடங்கியிக்கிறது. காமராசரின் ஆட்சியில் ஏற்பட்ட “கல்வி வளர்ச்சியை ” இப்படி கூறலாம்….நான் காமராசரின் கல்வி தொண்டை பற்றி எழுதவில்லை அதனை சிறிது விளக்கம் கொடுத்து விடுகிறேன்.சோவியத் ஒன்றியத்தின் அடிவொற்றி சோசலிச பாணி தத்துவம் என்று மக்களின் கல்வி சமூக வளர்ச்சி என்று அவர்களின் அடிப்படை பிரச்சினைகளை அணுகி எதிர்கால சிந்தாந்தங்களை சுருக்கியது அல்லது திசை திருப்பியது….இவை இந்திய அரசின் அரச்சாணை..வர்க்கம் அறிந்து பேசுதல் நன்று ஆம் சுயநலமிகளாக உள்ள கட்சிகளும் வர்க்க அரசியல் இன்றி என்ன பேசினாலும் என்னவென்று சொல்ல…..காமராசர் ஆட்சிக் காலம் காலனியச் சூழலுக்குப் பிந்தையது. இந்தியா பிரித்தானிய காலனிய நேரடி ஆட்சியிலிருந்து மறைமுக ஏகாதியதிபத்தியத்தின் ஆட்சி, அரை காலனிய ஆட்சியின் கீழ் அப்போது சமூகத்தின் ஆதிக்கம் சோசலிசம் பேசிய நேருவும் இந்திராவும் சோவியத் ரஷ்ய பாணியில்…அதே நேரத்தில் காலனியத்தால் திணிக்கப்பட்ட முதலாளியம் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒரு புறம் முதலாளிய ஆலைத் தொழில் வளர்ச்சி . மறுபுறம் வேளாண் தொழிலில் புதிய மாற்றங்கள். இந்தக் கால கட்டத்தில் தான் காமராசர் அதிகாரத்தில் அமர்கிறார். வளர்ந்து வரும் முதலாளியத்தையும், உற்பத்தியில் செல்வாக்கு செலுத்துகிற நிலம் சார்ந்த உற்பத்தியையும், மக்கள் கல்வியையும் வளர்த்தெடுக்கும் வரலாற்றுக் கட்டத்தில் காமராசர் ஆட்சி அமைகிறது. எனவே தான் நீர்த்தேக்கங்களையம், தொழிற் கூடங்களையும் பள்ளிகளையும் அமைக்க வேண்டிய வரலாற்று கடமை அன்றைய இந்திய ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. இதனடிப்படையில்தான் ஐந்தாண்டு திட்டங்கள் தீட்டப்பட்டன. இது தவிர்க்க வியலாத வரலாற்றுப் போக்கு. நல்ல மனிதர்கள் இல்லையா? அப்படி எல்லாம் தனிநபர் அபிலாசைகளாக வரலாற்றைச் சுருக்கிப் பார்க்க முடியாது. அந்தந்த காலகட்டங்களில் செயல்படுத்தப்படும் அரசுகளின் திட்டங்களைப் புரிந்து கொள்ள முடியும். இதை விடுத்து தனிநபர் ஆளுமையாக சாதனையாக ஹீரோயிசமாக வரலாற்றைச் சுருக்குவது இயக்க மறுப்பியல் சிந்தனையாகும்.+4

LikeComment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *