காணாமல் போகும் இந்திய விவசாயம்.

காணாமல் போகும் இந்திய விவசாயம்.
————————————————————–

இன்றைய தேதியில் எல்லோரும் விவசாயத்தை பற்றி பேசுகிறோம் ஆனால் விவசாயிகள் நிலை என்னவென்றாவது தெரியுமா? வெங்காய விலை ஏறிப் போச்சு பலரும் பல கருத்தை முன் வைக்கும் நாம் உண்மையில் விவசாயி மீதோ விவசாயம் மீதோ நடந்து கொண்டிருக்கும் ஒடுக்கு முறை பற்றி தெரியுமா? இன்று விவசாய நாட்டில் விவசாயிகள் தினம் செத்துக் கொண்டிருக்கின்றான் ஆனால் நமக்கு ஆம் பணம் படைத்தவன் எதையும் வாங்கும் சக்தி உள்ளவன் எதையையும் வாங்கி தின்னும் வசதி உலக்மயமாக்கல் செய்துள்ளது.
கடந்த இருபதாண்டுகளில் நடந்துள்ள 2,70,940 விவசாயிகள் தற்கொலைகள் ஏன்? இன்றைய உலக மயமாக்கலில் நமது விவசாயிகள் செத்துக் கொண்டிருப்பது ஏன் என்பதனை தேடினால் நமக்கு தெளிவு கிடைக்கும்.
அதனை தேடி ஒரு சிறிய முயற்ச்சி.
நவீன உலகத்தில் அனைவரும் காலை எழுந்தவுடன் ஆரம்பிக்கும் பரபரப்பு இரவு தூங்கும் வரை நம்மை விடுவதில்லை. பொதுவாக நாம் அனைவரும் இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழ்நிலைக்கு மாறி விட்டோம். இதில் தற்போது கிராமங்களையும் விட்டு வைப்பதில்லை. பல வகையான வாகனங்கள், கையில் எப்போதும் பல்நோக்கு வசதி உள்ள கைபேசி (Cell Phone), உடனுக்குடன் SMS மூலமாக செய்திகள் பரிமாற்றம், Satellite Channel தொலைக்காட்சி என்று தற்போது கிராமங்களிலும் பெரும்பாலான வசதிகள் கிடைக்கப் பெற்றுவிட்டன.(இவை ஒருசாரார்)
ஆனால் விவசாயத்தில், புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக விளைச்சல் உற்பத்தி செய்தலில் நாம் பாரம்பரிய கிராமங்களை விட்டுவிட்டோம். இங்கே விவசாயி துண்டு துக்காணி நிலங்களை வைத்துக் கொண்டு உலகமய தாக்கத்தில் விதையையோ மருந்தையையோ வாங்கும் சக்தி குறைந்துவிட்டது உலகில் சில கார்ப்ரேட்கள் மட்டுமே விற்க்கும் விவசாய பொருட்களின் விலை 1000% உயர்ந்துள்ளது அதை வாங்கி விதைத்து வளர்த்து விற்க்கும் போது விலையில்லை ஏனெனில் அதன் உற்பத்தி முறையில் புதினம் இல்லை அரசு எதையையும் கட்டுபடுத்தும் எண்ணத்தில் இல்லை ஆகவே விவசாயம் இதெ பழைய பாணி வாழ்வது கடினம் (இதனை பற்றி தெரிந்தவற்றை பின் எழுதுவேன்).

விவசாயத்தை விட்டு ‘காணாமல் போகும்’ விவசாயிகள் பற்றி:

விவசாயத்தில் அழிவு என்பது கொஞ்சம் நஞ்சம் இருக்கும் இறையாண்மையை முற்றாக இழக்கும் நிலைக்கு நம்மை தள்ளி விடும்.
இன்றைய தேதியில் மொத்த மக்கள் தொகையில் 72 சதவீதம் பேர் ஊரகப் பகுதியில் வசிக்கிறார்கள் என்கிறது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு. எனில், விவசாயத் துறையின் வீழ்ச்சியென்பது 72 சதவீதம் மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கக் கூடியது. இந்நிலையில் தான் ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத் துறையின் பங்களிப்பு படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. விவசாயத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 90-களின் துவக்கத்தில் 13 சதவீதமாக இருந்தது – தற்போது அது சுமார் 8 சதவீதததிற்க்கும் கீழ் குறைக்கப்பட்டுள்ளது.
1991-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 84 கோடி. இன்றைய தேதியில் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 137 கோடி. கடந்த 30 வருடங்களில் இந்திய மக்கள் தொகை சுமார் 60% சதவீத வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இதே காலகட்டத்தில் பயிர் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்திருப்பது மத்திய திட்ட கமிஷனின் அங்கமான ‘பயன்பாட்டு மனித வள ஆராய்ச்சி மையத்தின்’ (Institute of Applied Manpower research) ஆய்வில் தெரிய வந்துள்ளது.
1991-ம் ஆண்டு துவங்கி 2012 வரையிலான கால அளவில் சுமார் ஒன்றரை கோடி விவசாயிகள் ‘இல்லாமல்’ போயுள்ளனர். கடந்த பதினோரு ஆண்டுகளில் மட்டும் சுமார் 77 லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு ‘காணாமல்’ போயுள்ளனர். திட்ட கமிஷனின் இந்த அறிக்கை, முன்பு விவசாயத்தில் ஈடுபட்டிருந்தோர் பலரும் தற்போது பல்வேறு சேவைத் துறைகளுக்கும், கூலிகளாகவும் இடம் பெயர்ந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது
இன் நிலையில் விவசாயியகளின் தற்கொலையில் விவசாய கூலிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் தற்கொலைகளை கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை. அரசு தரும் கணக்கின் படியே கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 62 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் – இதனை மொத்த மக்கள் தொகையில் உள்ள விவசாயிகளின் சதவீதம் எட்டுக்கும் குறைவானது என்கிற திட்ட கமிஷன் அறிக்கையோடு பொருத்திப் பார்த்தால் நாம் எதிர் கொண்டிருக்கும் அபாயத்தின் பரிமாணத்தை புரிந்து கொள்ள முடியும். நாடு ஒரு பெரும் நெருக்கடியை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டேயிருக்கிறது.
1991-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 84 கோடி. இன்றைய தேதியில் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 137 கோடி. கடந்த 30 வருடங்களில் இந்திய மக்கள் தொகை சுமார் 60% சதவீத வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இதே காலகட்டத்தில் பயிர் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்திருப்பது மத்திய திட்ட கமிஷனின் அங்கமான ‘பயன்பாட்டு மனித வள ஆராய்ச்சி மையத்தின்’ (Institute of Applied Manpower research) ஆய்வில் தெரிய வந்துள்ளது.
1991-ம் ஆண்டு துவங்கி 2012 வரையிலான கால அளவில் சுமார் ஒன்றரை கோடி விவசாயிகள் ‘இல்லாமல்’ போயுள்ளனர். கடந்த பதினோரு ஆண்டுகளில் மட்டும் சுமார் 77 லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு ‘காணாமல்’ போயுள்ளனர். திட்ட கமிஷனின் இந்த அறிக்கை, உலகமயமாக்கல் அமுல் படுத்தப்பட்டதற்கு பிந்தைய காலங்களில் தான் விவசாயிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த 30 வருட காலகட்டத்தில் நாளொன்றிற்கு சுமார் 2,035 விவசாயிகள் ‘காணாமல்’ போயுள்ளனர் என்பது தான் அரசின் இந்த அறிக்கை.

இதனை பற்றி தெரிந்தவர் விவதிக்களாமே தோழமைகளே-சிபி