கலை பற்றிய ஒரு தேடுதல்-சி.பி
கலை பற்றிய ஒரு தேடுதல்-சி.பி

கலை பற்றிய ஒரு தேடுதல்-சி.பி

ஒருபுறம் காட்டுதர்பார் டெல்லியில் அதனை எதிர்க்காமல் சட்டவாதம் பேசும் முற்போக்குவியாதிகள் மக்களை கணக்கில் கொள்ளாமல் இவர்களுக்குள் கண்ணாமூச்சி விளையாட்டு அப்பப்பொழுது மக்கள் முன் நாடகங்கள் சரி இவை நம்மை ஆட்டி படைப்பதை புரிந்துக் கொள்ள அண்மையில் மரித்த பாடகர் மற்றும் தமிழக்தை காவி பூமியாக்க துடித்த காவி நாயுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள் விரொதிகளை கணக்கில் கொள்ள புரிந்துக் கொள்ள இந்தப் பதிவு.ஐரோப்பாவில் பட்டறை உற்பத்தி வளர்ச்சியடைய அவ்வுற் பத்தியிலும் வாணிபத்திலும் ஈடுபட்டிருந்த புதிய பூர்ஷ்வா வர்க்கம் 15-16ம் நூற்றாண்டுகளில் தலையெடுக்கத் தொடங்கியது. இப்புதிய வர்க்கத்தின் தேவையை ஒட்டி அரசியல், மதம், கலை, இலக்கியம் ஆகிய மேல்மட்ட அமைப்புகள் யாவும் மாறத் தொடங்கின. மன்னராட்சிகள் வீழ்ந்து பூர்ஷ்வா ஜனநாயகம் ஜனிக்கத் தொடங்கியது. ரோமன் கத்தோலிக்க மதம் உடைந்து மாட்டின் லூதரின் புரட்டஸ்டன் மதமும் , ” புதிய ஏற்பாடும் தோன்றியது. கலை, இலக்கியத்தில் மறுமலர்ச்சிக் காலம்” ஏற்பட்டது. புதிதாகத் தோன்றிய பூர்ஷ்வா வர்க்கத்தை நீதிப்படுத்தும் கலை, இலக்கியங்கள் வளரத் தொடங்கின. ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர் உயர்ந்த நாடகாசிரியராக புதிய வர்க்கத்தால் மதிக்கப்பட்டார். ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் யாவிலும் அரச பரம்பரையில் வாழ்பவரிடையே நிகழும் ஊழல், போட்டி, போறாமை, ஆதிக்கவெறி, அவர்களின் வீழ்ச்சி யாவற்றையும் தெளி வாகக் காணலாம். ஜூலியஸ் சீசர், ஹம்லட், மக்பெத், ஒதெல்லோ. மூன்றாம் ரிச்சர்ட் முதலான நாடகங்களிலெல்லாம் பிரபுத்துவ ஆட்சியின் தில்லு முல்லு வீழ்ச்சியை காணலாம், ரோமியோ ஜூலியெட்: காதல் நாடகத்திலும் நிலப்பிரபுத்துவத்தின் கொடூரமே கூறப்படுகிறது. வேனிஸ் வர்த்தகனில் வரும் ஷைலக் மூலம் நிலப் பிரபுத்துவ வட்டிமுறை சாடப்படுகிறது. சமுதாய வளர்ச்சியோடு ஒட்டி நின்றதலேயே ஷேக்ஸ்பியர் உயர்ந் நாடகாசிரியராக கணிக்கப்பட்டார்.நிலப்பிரபுக்களைப்பற்றி கலை, இலக்கியம் படைக்கும் நிலைமாறி குட்டி பூர்ஷ்வா கதாநாயகர்கள்பற்றி கலைப் படைப்புகள் தோன்றத் தொடங்கின.இயந்திர உற்பத்தியோடு முதலாளித்துவம் தன் பூர்ஷ்வா புரட்சியை நிலை நாட்டியது. முதலாளித்துவத்தின் தனிச்சிறப்பு பொருள் உற்பத்தியை கூட்டி பெருக்கியமையாகும். மனித உழைப்பால் அடிப்படைத் தேவையை மட்டும் பூரணப்படுத்த முனைந்த, நிலபிரபுத்துவ உற்பத்தியை இயந்திர மயமாக்கி, பொருள் உற்பத்தியை முன் என்றுமில்லாதவாறு பெருக்கத் தொடங்கியது முதலாளித்துவமேயாகும்.பொருள் உற்பத்தி பெருக எல்லாம் அதன் சட்டங்கள், ஆதிக்கத்தில் வந்தன. கலை கூட அவற்றின் நியதிகளுக்கு தப்பிவிடவில்லை. கலைப்படைப்பும் ஒரு விற்பனைப் பொருளானது. அதனால் கலை அதன் உறுதியான, அத்தியாவசியமான படைப்பாற்றல் தன்மையை இழந்தது கலை வெறும் குணும்சமான (Abstract) பொய்மையான வடி வெடுத்தது.கலைக்கும் சமுதாயத்திற்கு மிடையில் முரண்பாடு கூர்மை யடைந்தது.உயர்ந்த கலைஞர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கினர்; ஒதுக்கப் பட்டனர். பூர்ஷ்வா சமூகம் அவர்களுக்கு வறுமையை, சாவையையே தந்தது. “மருத்துவன், வக்கீல், மதகுரு, கவிஞன், விஞ்ஞானி ஆகிய அனைவரையும் பூர்ஷ்வா கூலித் தொழிலாளி ஆகி விடுகிறான்” என்று மார்க்ஸ் கூறினர். முதலாளித்துவத்தில் கலை, இலக்கியம் படைப்போர் யாவரும் சுதத்திரமற்ற கூலியடிமைகளாகி விடு கின்றனர்.கலை, இலக்கியப் படைப்புகள் விற்னைப் பொருட்களாகின்றன. விற்பனைக்காக, லாப நோக் கத்திற்காகவே கலை, இலக்கியங்கள் படைக்கப் படுகின்றன. முதலாளித்துவம் தனது அகத் தேவைகளுக்காக அல்லாது புறத் தேவைகளுக்காகவே உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவ பலியிட உற்பத்தி விதிகளுக்கிணங்கவே கலையும் படைக்கப்படுகிறது: அவ் விதிகளில் சில வருமாறு:(i) முதலாளித்துவத்தில் உற்பக்தி மனிதனுக்கு சேவை செய்வதல்ல. மனிதன் உற்பத்தியின் சேவகளுக்காகிறான்.(i) மனிதனின் உபரி உற்பத்திக்காகவே உழைப்பு பயன்படுத்தப்படுகிறது.(iii) மனித உறவு நேரடியாக இல்லாது, பண்டங்களூடாக ஏற்படுத்தப் படுகிறது.(iv) தொழிலாளி தான் உற்பத்தி செய்த பொருளுக்கே அந் நியப் படுத்தப்படுகிறன். (அவனது வாழ்க்கையை கலைப் படைப்பில் காண முடியாது) (v) உற்பத்தி மக்களின் தேவையை ஒட்டி நடைபெறுவதில்லை சந்தைக்காக , நடைபெறுகிறது. உற்பத்தியில் திட்டம், ஒழுங்கு கட்டுப்பாடு கிடையாது. (vi) வாங்கும் சக்தி உள்ளவர்களை நோக்கியே உற்பத்தி நடைபெறுகிறது. (பால் இல்லாது குழந்தைகள் செத்துக் கொண்டிருக்கலாம். முகப் பவுடரை தட்டுப் பாடின்றி உற் பத்தி செய்வர். மக்கள் பசியால் மடியும் போதும் காதல், பாலுறவு பற்றி கலை, இலக்கியம் படைத்துக் கொண்டிருப்பர்.)(vi) மனித உழைப்பு அதன் அடிப்படை குணம்சமான சுதந்திரம், படைப்பாற்றலை இழந்து விடுகிறது. (கூலியடிமையான கலைஞன் ஆளும் வர்க்கத்தின் கட்டுப்பாட்டின் படியே கலை, இலக்கியம் படைக்க நிர்ப்பந்திக்கப் படுகிறன்.)(vii). முதலாளித்துவம் பொருள் உற்பத்தியை பெருக்குவதிலேயே ஆர்வமாக உள்ளது. அதாவது மனிதனது புறத் தேவைகளை நோக்கிய உற்பத்தியாகும். இதற்காக பெளதிக விஞ்ஞான வளர்ச்சியிலேயே முதலாளித்துவம் அதிக கவனம் செலுத்துகிறது. அதற்காகவே விஞ்ஞானிகள், தொழில் நுட்ப வல்லு னர்களிலேயே அதிக கவனம் செலுத்துகிறது. ,(viii) அக உணர்வுகளை வளர்க்கும் சமூக விஞ்ஞானம், கலை இலக்கியம் ஆகியவற்றைப் படைக்கும் சமூக விஞ்ஞானிகள், கலைஞர்களுக்கு அத்தனை மதிப்பு அளிப்பதில்லை. தமது விற்பனை தேவையை ஒட்டியே மதிப்பு தருகிறது. பொருட்களை விற்க முதலாளித்துவம் பயன் படுத்துவது போலவே சினிமா ஸ்டார், ஒரு சில எழுத்தாளர்களை சந்தையில் பிரபல்யப் படுத்துகிறது.(ix) பொருள் விற்பனையை முன் வைத்தே கலை, இலக்கியமும் ஆக்கப்பட்டு மலினப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பத்திரிக்கைகள், ரேடியோ, டெலிவிசன், சினிமாவில் விளம்பரங்கள் இடம் பெறுவதைக் காணலாம். சினிமாவில் வரும் காட்சிகளிலும் உயர்ந்தரக உடைகள் தளவாடங்கள் டெலிபோன், பிற நுகர் பொருட்களையும்காணலாம்.(x)அழகுணர்வின் கோட்பாடுகள் யாவும் பொருள் விற்ப்னையை நோக்கியே வளர்க்கப்படுகின்றன. வாணிபக் கலைக்கே (Commercial Arts) முதலிடம் தரப்படுகிறது. கலைக் கல்லூரிகளி லிருந்து வெளியேறியதும் கூலியடிமை வேலைக்கே கலைஞர் தேடி அலைகின்றனர்.கலை உழைப்பின் உயர்ந்த வடிவம். அதன் மூலம் கலைஞன் மனித உலகை படைக்கிறான்,முதலாளித்துவத்தில் கலைஞன் கூலியடிமையாகி பரந்த சந்ததியை நோக்கி கலைப்படைப்பை படைக்கும் படி நிர்ப்பந்திக்கப் படுகிறான். இதனல் அவன் கலை உணர்வை மிகவும் மலினப்படுத்த முனைகிறான், பாலுறவு, வன் செயல் (Sex & violence) ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தர முயல்கிறன்; கற்பனையை நாடுகிறான். சமூகம் இவற்றை எதிர்க்கும் போது தன்னைப் பிரதிபலிக்க முயல்கிறான். காலப்போக்கில் தவிர்க்க முடியாதபடி சமூகத்தை ஒட்டி அதன் இயல்பான நிலையில் அவன் வாழ கற்றுக் கொள்கிறான். தோழர்களே கலை இலக்கியம் பற்றி மாவோவின் நூல் உள்ளது வாசித்து தெரிந்துக் கொள்ளுங்கள் அன்று SPB க்காக பல தோழர்கள் முரட்டு தாக்கு தாக்கினார்கள் அவர்களுக்கு உடனடியாக எழுத முடியவில்லை மேலும் தினம் நாட்டில் நடைப்பெருவதை ஊடகம் தங்களின் வர்க்க நிலையில் இருந்து எழுதுகிறது என்று சொல்லத் தேவையில்லை.இந்தப் பதிவின் மூலம் தோழர் செ.க அவருடையவை சுருக்கம் மாற்றம் என்னுடையவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *