கலை, இலக்கியம் பற்றி
கலை, இலக்கியம் பற்றி

கலை, இலக்கியம் பற்றி

ஆன்புத் தோழர்களே நான் சில தவறான பதிவுகளை வாசித்தப் பின் கடந்து போக மனம் வருவதில்லை அதற்க்கு பதில் எழுதியே ஆகவேண்டும் என்று நிர்பந்தம், ஏனெனில் முன்னணியில் உள்ள ஒரு சிலரே வர்க்க முரண் அறியாமல் மயக்கத்தில் உள்ள போது அவர்களின் அமைப்பு பற்றி பேசத் தேவையில்லை.வர்க்க அடிப்படையே தெரியாமல் இவர்கள் இல்லை இவர்கள் செயல் எப்படி உள்ளது என்பதனை ஆராய்வதே இந்தப் பதிவின் நோக்கம்.கலை, இலக்கியம் மேல்மட்ட அமைப்பைச் சார்ந்தவை. ஆகவே அவை அடிப்படை அமைப்பாகிய பொருளாதார மாற்றத்தையொட்டி மாறிக் கொண்டேயிருக்கும்.சமுதாயம் ஒரு குட்டையல்ல. அது ஆறுபோன்றது; ஒடி மாறிக் கொண்டேயிருக்கும் சமுதாய மாற்றங்களை யொட்டி கலை, இலக்கியமும் மாறிக் கொண்டே யிருப்பது வியப்பல்ல.கலை, இலக்கியம் பொதுவானது என்று கூறுவோர் சமுதாய வளச்சியைத் தேக்கிவைக்க விரும்பும் ஆளும் வர்க்கத்தின் கருத்துமுதல்வாதிகளே (நிலவுடைமை முதலாளித்துவத்தின் தரகராவர்.). சமுதாயம் ஏன் மாறுகிறது? சமுதாயம் பல உள் முரண்பாடுகளைக் கொண்டது. இம் முரண்பாடுகள் சமுதாயத்தை மாற்றத்தை நோக்கி இயக்கிக் கொண்டேயிருக்கும். இச் சித்தாந்தத்தைத் தாங்கி நிற்பதுவே இயக்கவியல் பொருள்முதல்வாதமாகும்: சமுதாயம் இயக்கமற்றது, நிலையானது என்று கருதுவது கற்பனைவாதமாகும் இவை கருத்துமுதல்வாதிகளின் வேலையே.சமுதாய முரண்பாடுகள் பொருளாதார அடிப்படையிலேயே எழுவனவாகும். சரி இதனை புரிந்துக் கொள்ள இன்றைய இந்திய மக்கள் அல்லது அரசின் நிலையோடு சற்று பயணிப்போம்.இன்றும் இராமாயணம், மகாபாரதம், புராண, இதிகாச, கதைகள், கலை, இலக்கியங்களில் ஆதிக்கம் செலுத்துவதைக் காணலாம். ராமர் கோயில் தொடங்கி வைத்த விதம் இன்று ஆட்சியை பிடித்து சங்கிகளுக்கு ஆதரவுதான் என்ன?மக்களின் மனதில் குடியிருக்கும் பக்தியை வைத்து செயல்படும் யுத்திகளை கணக்கில் கொண்டால் விளங்கும்.1. பண்டைய கலை. இலக்கியங்கள், கலை உருவங்களின் ஆதிக்கம் சமுதாய வளர்ச்சியின் தேக்கத்தையே காட்டி நிற்கின்றன.2. மனிதாபிமான உணர்வு எவ்வகைச் சமுதாயத்திலும் நிரந்தரமானது என்று இவர்கள் கருதுவது வர்க்க உணர்வை வேண்டுமென்றே மறைக்க முயல்வதாகும்.‘வாழ்நிலையிலிருந்து உணர்வு தோன்றுகிறதேயன்றி உணர்வுநிலையிலிருந்து வாழ்நிலை தோன்றுவதில்லை” என்பது மார்க்ஸ் கூறிய அடிப்படைச் சித்தாந்தமாகும். ஆகவே, வாழ்நிலை மாறிக்கொண்டே செல்லும்போது உணர்வுநிலைகளும் மாறவே செய்யும். வாழ்நிலை, உணர்வுநிலைகளின் மாறுதல்களை விவரிப்பதே கலை, இலக்கியமாகும். ஆகவே, சமுதாய மாற்றத்தை விவரிக்கும் கலை. இலக்கியம் மாறிக் கொண்டேயிருக்கும். கலை, இலக்கியங்களே நிரந்தரமானது என்று கட்டி அழுவோர் சமுதாய மாற்றத்தை மறுப்பவராவர்.நிலவுடைமையில் மகாபாரதம், இராமாயணம் போன்று யாவரும் அறிந்த இதிகாசக் கதைகள், கூத்து, கிராமிய இசை நாடக மரபில் நடித்துக் காட்டப்பட்டன. முதலாளித்துவத்தில் அவை தனிமனிதர் படிக்கத்தக்க நூல்களாக முதலாளித்துவம் அச்சிட்டு பரப்புகிறது. படிப்பவர் யாவரும் இராமன் என்ற தெய்வாம்சம் பொருந்திய மன்னனும் பாண்டவர்கள் என்ற கண்ணன் ஆதரவுபெற்ற அரசகுடும்பத் தவர்களும் அரக்கர்களையும் கொடியவர்களையும் எவ்வாறு எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றனர் என்ற கருத்தை நிலைநாட்டுகின்றன. இவற்றைப் படிப்போரும் பார்ப்போரும் மன்னர்களுக்காக இரக்கப் பட்டு மெய்மறந்து அவர்களது ஆட்சியை வாழ்த்துகின்றனர்.இதிகாசக்களை வைத்துக் கொண்டு அன்றும் இன்றும் மனித உணர்வுகள் மாறாநிலை என்று பொது சமப்படுத்துவதன் மூலம் வர்க்க உணர்வு என்ற வரலாற்றுப் பொருள்முதல்வாத ஆய்வு முறையை மழுங்கச் செய்துவிடுகின்றனர். அன்றைய ஒடுக்கிய மன்னனின் புகழ்பாடி இன்றைய ஒடுக்குவோர் ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்க சிறந்த கருவியாக இதனை பயன்படுத தவறுவதில்லை இதிலிருந்து வர்க்க அடிப்படையில் புரியவைக்க வேண்டிய கடமையில் உள்ளோர் அவசியம் செய்யவேண்டிய பணி இவை.”பழமையைக் களைந்து புதியவை கொள்வோம்” என்று மாவோ பின்னர் கூறியது சோஷலிசக் கண்ணோட்டத்தை முன்வைத்து பழைமையைக் களைவாகும். சோஷலிசக் கண்ணோட்டம் என்பது இயக்கவியல் பொருள் முதவாத, வர்க்கப் போராட்டக் கண்ணோட்டமாகும். அதாவது சமுதாய அமைப்பு முரண்பாடுகளைக் கொண்டது; அவ்வமைப்பு தேங்கிகிட்பதல்ல; சமுதாயம் இயங்கிக் கொண்டிருப்பது; வர்க்க உணர்வின் எழுச்சியும் போராட்டமும் தவிர்க்க முடியாதவை என்ற கோட்பாடுகளைக் கொண்டதாகும்.ஆகவே, இக்கோட்பாட்டைக் கடைப்பிடிப்போர் பண்டைய கலை, இலக்கியங்கள் கண்மூடித் தனமாக ஆதிக்கம் பெறுவதை எதிர்க்கவே செய்வர். வர்க்க உணர்வையும் போராட்டத்தையும் மறுத்து உணர்வுகள் நிரந்தரமானவை என்று நிலைநாட்ட முயல்வதை கண்டிக்கவே செய்வர். கலை, இலக்கியம் மாறும் சமுதாய இயக்கத்திற்கு உந்து சக்தியாக விளங்க வேண்டும். அவ்வேளைய கலைத் தேவையை ஒட்டி வர்க்க உணர்வையும் வர்க்கப் போராட்டத்தையும் பலப்படுத்துவதாக அமைய வேண்டும். எல்லோருக்குமான கலை, இலக்கியம் என்று எதுவும் இருக்க முடியாது. அடுத்த ஆண்டுத் தேவைகள் இன்றைய தேவைகளுக்கு மாறுபட்டவையாகவே இருக்கும். அத் தேவைகளைப் பூரணப்படுத்து பவையாகவே கலை, இலக்கியம் அமைதல் வேண்டும்.சோஷலிச சமுதாயத்தில் கலை, இலக்கியம் தனிமனித படைப்பை மீறி கூட்டுப்படைப்பாக மாறுகிறது, சமுதாய இயங்கியலே முன் வைத்து புதிய, புதிய கலை, இலக்கியங்கள் அவ்வக்கலைத் தேவையை யொட்டி படைக்கப்படுகின்றன. அல்லது முன்னைய கலை, இலக்கியங்களில் உடனுடன் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. எல்லோருக்குமான கலை, இலக்கியம் என்று கூறுவது நிலவுடைமை, முதலாளித்துவக் கோட்பாடாகும்; மார்க்ஸின் இயக்கவியல் பொருள்முதல்வாத சித்தாத்தத்தை இக்கோட்பாடு முற்றாக நிராகரிக்கிறது. சமுதாயத்தை குட்டையாக தேக்கிவைக்க விரும்புவோரது சித்தாந்தமே இதுவாகும். புராண இதிகாசங்கள், வியாசர், கம்பன், இளங்கோ, ஆகியோரில் இன்றும் மேலெமூத்த வாரியாக, அடிப்படை அமைப்பை மறந்து ஆராய்ந்து எழுதுவோர்கள் பல்கலைக்கழகங்களி லிருந்தே பெருகி வருகின்றனர். இவர்கள் வர்க்கப் போராட்டங்கனயும் மனிதனையும் மறந்து பாத்திரங்களின் குணாம்சங்களை ஆராய்ந்து, கலை, உருவ நயங்களைக் கூறி நம்மை ஏமாற்றி நமது சிந்தனகளை திசை திருப்ப முயல்கின்றனர்; இவர்கள் நிலவுடைமை, முதலாளித்தவ அமைப்புகளின் தரகர்கள்; இவர்கள் பற்றி ஒடுக்கப்பட்ட மக்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டுல் பாட்டாளிகளின் போராட்ட வளர்ச்சியைத் தேக்கும் எதிர்ப்புரட்சிவாதிகளே இவர்களாவர்.சரி தோழர்களே இவற்றை கண்டு விரக்த்தி அடைந்து விடாதீர்கள் அவசியம் கலை பற்றிய மாவோன் நூல் வாசியுங்கள். வர்க்க புரிதலோடு நமது அனுகுமுறை சிறப்பாக இருக்கும்.நாடோ மக்கள் வாழ வழி வகையற்று நோய் பட்டுகிடக்கிறது நாமோ இசை ஞானம் தேடிக் கொண்டிருக்கிறோம்.இவை பற்றி கறுத்திடுங்கள் தோழர்களே விவாதிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *