கலை, இலக்கியம் பற்றி
++++++++++++++++++++++++++
அடிக்கடி என்னிடம் உறையாடும் ஒரு தோழர் சொல்வார் ஏன் நீங்கள் கலை இலக்கியம் பற்றி எழுதக் கூடாது அதுவும் சினிமா தூறையின் மலிவான சிந்தனைகளை பற்றி இப்படி பல முறை பேசியும் அவற்றை பற்றி நமது ஆசான்கள் மிகத் தெளிவாக பேசியுள்ளனர், இருந்தும் ஒரு சின்ன அறிமுகம்தான் இவை.
முதலாளித்துவ கலை, இலக்கியங்களில் கொலை, கொள்ளை, திருட்டு, காதல் ஏமாற்றம், கற்பழிப்புப் போன்ற பாலியல் குற்றங்கள், கடத்தல், கலப் படம், சொத்துப் பிரச்சினைகள், கேவலமான வன்கொடுமைகள், துயரமான நிகழ்வுகள் ஆகியவற்றை தொலைகாட்சி தொடர்கள் மட்டுமன்றி நடைமுறையிலும் தாராளமாகக் காண்கிறோம் இவைகளே முக்கிய சினிமாக்களிலும் பார்க்கிறோம்.
இங்கே ஒடுக்கப் பட்ட மக்களுக்கான விடுதலைக்கான ஆம் இந்த சமூகத்தில் சாத்தியமா அல்லது அதற்க்கான வழி வகை என்னவென்றாவது பேசத் துணியும் தொலைகாட்சி தொடர்களோ சினிமாக்களோ காண முடியுமா?
ஏனெனில் நாம் வாழும் சமூக அமைப்பின் அவலங்களை பேசும் இவர்கள், இந்த முரண்பாடுகள் அனைத்தும் இந்த சமுதாய அமைப்பிலுள்ள முரண்பாடுகளின் பிரதிபலிப்பேயாகும் என்பதனை சொல்ல மறந்து விடுகின்றனர். இந்த சமூகத்தை கட்டிக் காக்க
அதாவது
அமைதி பாதுகாப்பு என்ற பெயரில் இந்த குற்றச் செயல்களை முன்னிறுத்தி பயமுறுத்துகின்றனர். உண்மையில் இக்குற்றச் செயல்களுக்கு காரணமே இந்த சமூக அமைப்பு முறைதான் என்பதனை பேசுகின்றார்களா?
ஆகவே இக்குற்றங்களை எல்லாம் ஒழிப்பதற்காக இச் சமூக அமைப்பில் போலிஸ், சட்டங்கள், வக்கீல்கள், நீதிபதிகள், துப்பறியும் பிரிவுகள், ஆய்வுகூடங்கள், சிறைச்சாலைகள், சிறை அதிகாரிகள், சட்டக்கல்லூரிகள், அதற்க்கான பேராசிரியர்கள்.
இதுதான் முதாலாளித்துவ நாகரிகமாகும். வேலையற்றவர் தொகையை முதலாளித்துவம் இவ்வாறு குறைக்க முயல்கிறது என்றாலும் அந்த பிரிவினர் எந்த உழைப்பிலும் ஈடுபடாமல் மக்களின் வாழ்வியலில் நேரடி தொடர்பு கொள்பவர்கள். இவர்கள் எப்படி பட்டவர்களாக இருப்பர் என்று நான் சொல்லத் தேவையில்லை.
இவ்வாருகப் பல இலட்சம் மக்கள் பொருள் உற்பத்தியில் ஈடுபடாது ஒட்டுண்ணிகளாக பிறர் உழைப்பில் வாழ்ந்து கொண்டிருக் கின்றனர்.
கட்டடங்கள், சிறைச்சாலைகள், துப்பாக்கிகள், போலிஸ், சிறைக்காவலர் சீருடைகள், குற்றவாளிகளை வதைசெய்யும் கருவிகள், உள்ளே பூட்டு வைப்பது, பின் திறந்து விடுவது. இவ்வாறான பயனற்ற வேலைக்காக தேவையற்ற மனித உழைப்பை வீணடிக்க வேண்டியுள்ளது.
இனி இன்றைய பேசுப் பொருளுக்கு வருவோம்…
‘சித்தாந்தவாதி கருத்துக்களையும், கவிஞன் கவிதையையும் மதகுரு பிரார்த்தனைகளையும், பேராசிரியர் விரிவுரைகளையும் உற்பத்தி செய்வதுபோல குற்றவாளி குற்றத்தை உற்பத்தி செய்கிறான்’ என்று மார்க்ஸ் கூறியுள்ளார். இதைக் கட்டுப்படுத்த, முன்னர் கூறிய பல பிரிவினர் உழைப்பில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு
முதலாளித்துவத்தில் “குற்றச் செயல்” ஒரு பொருளாக்கப் படுகிறது, இந்த சமூகத்தில் குற்றச் செயல் ஒரு முக்கிய விற்பனை பொருளாகிவிடுகிறது. “குற்றச் செயல்” ஆகிய பொருள் இங்கு நல்ல விலைக்கு போகிறது.
எப்படி எனில்
பத்திரிகைகளில் முக்கிய செய்தியாகி விற்பனையாகிறது, இதன் அடிப்படையில் சிறு கதைகள், நாவல்கள், துப்பறியும் கதைகள், மர்மக்கதைகள், கார்டூன் கதைகளான கமிக்ஸ் ஆக இலக்கியச் சந்தையை நிரப்புகிறது. சினிமா, டி. வி. குறும் படங்களிலும் “குற்றச் செயல்களே?” முக்கிய விற்பனைப் பொருளாகிப் போகின்றன. பாலியல் குற்றங்கள், வன் கொடுமைகள் ஆகிய குற்றங்கள் இங்கு முக்கிய பங்குகள் வகிக்கின்றன.
ஆக,
குற்றவாளி, துன்பியல் உணர்வுகளையும் உற்பத்தி செய்கிறான், இதன் மூலம் மக்களக்கு ஒழுக்கம், அழகுணர்வு ஆகிய உணர்வு களையும் ஏற்படுத்துகிறன். இவற்றின் மூலம் ஒரு சேவையும் செய்கிறான், சட்ட மன்ற உறுப்பினர் மூலம் குற்றவியல் சட்டங்களாகவும், கலைத்துறையில் நாவல்கள்,ஊடகங்களின் தீணிக்காவும் இவ்வறு மக்கள் பிரச்சினைகளை பின் தள்ளி தற்காலிக இடத்தை பிடித்துக் கொள்கின்றன
ஆகவே, கலை இலக்கியம் என்பது மக்களின் வாழ்க்கை சிறக்கதானே அன்றி வெறுப்பதற்கல்ல என்பேன்….
பின் நீண்ட தொடர் எழுதுவேன்.