தினம் தினம் சில தோழர்களின் தேவையற்ற விவாதங்களை காணும் பொழுது அவர்களின் சிந்தனையில் பீடித்துள்ள கருத்துகளே என்பதனை விளக்க இந்த பதிவு இவை நீண்ட பதிவு சற்று புரிந்து உதவும் இவை ஆரம்ப கட்ட புரிதலுக்கே புத்திஜீவிகள் இதில் தெரிந்து கொள்ள ஒன்றும் இல்லை.கலையின் தோற்றம்:-கலைஞன் சமுதாயத்தை விட்டு அதீதக் கற்பனையில் தன் படைப்புகளே ஆக்க நேரிட்டது. இதனாலேயே நிலப்பிரபுத்துவ கலைகள், இலக்கியங்கள் யாவும் கற்பனாவாத (Romantism) நிலையில் படைக்கப்பட்டன.இனி கலையின் தோற்றம் பற்றி அறிவோம்.நடுவிலே வேட்டையாடப்பட்ட புலி; அதைச் சுற்றிவந்து ஆடுகின்றனர். அவர்களது கரங்களிலே அம்பு, வில்லு, ஈட்டி, தடிகள். ஆதி மனிதனது ஆயுதங்கள். புலியைச் சுற்றிவந்து குரல் எழுப்புகின்றனர். ஆட்டத்திலே, உடல் அசைவிலே ஒரு ஒழுங்கு: அமைதி குரல் ஒசையிலேயேயும் ஒருவித ஒழுங்கு அமைதி. குகைகளின் முன்னே நடை பெறும் அந்த ஆட்டத்திலும் ஒசையிலும் பெண்கள், குழந்தைகள் கூட பங்கு பற்றுகின்றனர், குரலிலே ஆ ஊ.ஒ. ஒலிகளே. சொற்கள் ஏதும் பிறக்கவில்லை.குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்டவர்களால் நடாத்தப்பட்ட கலை நிகழ்ச்சியல்ல இது. வெற்றிக்களிப்பு உணர்வினுல் உந்தப்பட்ட ஆதி மனிதனின் ஆட்டம்; இசை, இயற் கையானது; இயல்பானது. கலை உணர்வு மனிதனேடு பிறந்தது. புலியை வேட்டையாடி விட்டனர். அன்றைய உணவுப் பிரச்சனை தீர்ந்துவிட்டது. கைகளில் அவர்கள் வேட்டையாட எடுத்துச்சென்ற கருவிகள். அவைகள் வெற்றியைத் தந்தன.மனிதர்களிடை தேவைகள் அதிகரித்து வேலைப் பிரிவினை ஏற்படாத காலம்; சுதந்திரமான ஆதி மக்கள்; சுதந்திரமாக ஆடிப்பாடினர். அவர்களது உடலசைவிலே ஒருவித ஒழுங்குமுறை, கால்களைத் தூக்கி வைப்பதில் ஒருவித அமைதியைக் கண்டோம் . காலப்போக்கில் இதுவே கூத்து, நடனம், ஒப்பரா போன்ற உடலசைவுக்கலை வடிவங்களாக வளர்ந்தன. குரலிலே ஏற்பட்ட ஒலிநயம், ஓசை அமைதி, வார்த்தைகள் தோன்றிய பின் கவிதையாக, பல்வேறு இசை வடிவங் களாக வளர்ந்து வந்துள்ளன.அன்றைய புலி வேட்டையின் வெற்றிக்களிப்பும் , ஆட்டமும், அக்கணக் குழுவினரது ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துகிறது; தாம் தயாரித்த ஆயுதங்களின் (உற்பத்திக் கருவிகளின்) வளர்ச்சியையும் வன்மையையும் பறைசாற்றுகிறது. மறுநாள் யாவரும் மேலும் ஆர்வத்தோடு வேட்டைக்குச் செல்வதற்கு அக்கலை நிகழ்ச்சி மேலும் உந்து சக்தியாக விளங்குகிறது.ஆகவே அவர்களது புலி வேட்டை ஆகிய உழைப்பின் வெற்றியிலிருந்து இயல்பாகப் பிறந்த கலை நிகழ்ச்சி ஒரு உந்து சக்தியாகி மீண்டும் உழைப்பில் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தி விடுகிறது; உற்பத்திக் கருவிகளின் வெற்றியையும் அவற்றை மேலும் வளர்த்தெடுப்பதில் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.உழைப்பும் கலையும் இணைந்தவை;-மனிதன் சுதந்திரமாக வாழ்ந்தபோது உழைப்பும் கலையும் வாழ்வோடு ஒன்றிணைந்திருப்பதை காணலாம். உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடையாத போதும் உற்பத்தி உறவு சுமுகமாக அன்று இருந்தது. உழைப்போடு கலை உணர்வு இணைந்து உந்து சக்தியாக விளங்கு வதை ஒடம் வலிக்கும்போது மீனவர் கூட்டமாக இசை எழுப்புவதி லிருந்தும் வயலில் உழைக்கும்போது விவசாயிகள் பாடுவதிலிருந்தும் காணலாம்.உணவு, தற்காப்பு இரண்டுமே ஆதி மனிதனது அடிப்படைத் தேவைகளாக இருந்தன. இவற்றில் வெற்றி பெறுவதற்கு மனிதன் கூட்டாக, ஒரே சமூகமாக வாழவேண்டி நேரிட்டது. மனிதனின் தனிச்சிறப்பு சமூக வாழ்வும் சமூக உழைப்புமாகும். இவற்றின் மூலமே இயற்கையின் நுட்பங்களை சிறிது சிறிதாக அறிந்து, அதை வெற்றிகொண்டு, தன் தேவைக்கேற்ப இயற்கையை அடிமைப்படுத்த மனிதன் ஆரம்பித்தான். இப்பெரிய, நீண்ட போராட்டத்திலும் பயணத்திலும் அவனுக்குத் துணையாக நின்றவை அவனது (1) பயிற்சி அல்லது நடைமுறை (2) அனுபவம் அல்லது அனுபவத்தின் தொகுப்பு.உணவிற்கும் தற்காப்பிற்குமாக இயற்கையில் கண்ட கல்லை எடுத்து வீசிய மிருகம் காலப்போக்கில் தன் தேவைகளுக்காக (உணவு, தற்காப்பு) கல்லை கல்மேல் தேய்த்து கூராக்கத் தொடங்கியபோதே மனிதனுக மாறத்தொடங்கினன் உற்பத்திக் கருவிகளை உற்பத்தி செய்யும் மிருகமே மனிதன் ஆவான். தன் புறத்தேவை களுக்காக உற்பத்திக் கருவிகளை கூர்மையாக்கிய மனிதன் அக உணர்வு வெளிப்பாடுகளை வெளிப்படுத்த பல்வேறு இசைக்கருவிகளையும் ஆக்கத் தவறவில்லை.புறம், அகம்:- அனுபவ உணர்வு இரு சக்திகளாக வெளிப்படுகிறது. (1) உற்பத்திக் கருவிகள் (2) கலை வடிவங்கள். உற்பத்திக் கருவி கள் அவனது புறத்தேவைகளான உணவு, பாதுகாப்பு, உடை, வீடு நுகர்பண்டங்கள், ஆகியவற்றை ஆக்கி, மேலும் படைக்க உதவுகின்றன. கலை வடிவங்கள் அவனது அக உணர்வுத் தேவைகளை பூர்த்தி செய்து அவனது ஆக்க சக்திக்கு மேலும் உந்து சக்தியளிக்க உதவுகின்றன.மனிதர் ஒவ்வொருவரிடமும் இயல்பாகவே படைப்பாற்றல் உள்ளது. அதன்மூலமே உற்பத்திக் கருவிகளைக் கூர்மையாக்கி தன் புறநிலைத் தேவைகளுக்காக உற்பத்தியைப் பெருக்குகிறான், அக நிலையை, அக உணர்வுகளை, அனுபவ உணர்வுகளை கலை வடிவமாக வெளிக்கொணர்கிறான். இது அவனது உற்பத்தித் திறனோடு ஒட்டியது; அவற்றிற்கு உந்துசக்தி ஆவது. ஆதி மனிதனது வேட்டை ஆடிய வெற்றிக்களிப்பின் ஆட்டத்தில் இதனையே கண்டோம். வேலைப்பிரிவினை ஏற்பட்ட பின்னர் உற்பத்திக் கருவிகளை செய்வதும், கலை வடிவங்களைப் படைப்பதும் ஒருசிலரின் ஆதிக்கத்தில் எவ்வாறு வந்தது என்பதனை பின்னர் பார்ப்போம்.உற்பத்திக் கருவிகள் போலவே கலை வடிவங்களும் நுண்கலைக் கருவிகளும் வானத்திலிருந்து வந்தவையல்ல. மனிதனாலேயே படைக்கப்பட்டவை. தோலிசை (மத்தளம்), நரம்பிசைகள் (மிருகதசைநார்) மனிதனது உணவு வேட்டையிலிருந்து பிறந்த கருவிகளே. வண்டு துளைத்த மூங்கில் குழாயின் ஒலியைக் கேட்டே புல்லாங்குழலைக் கண்டான் மனிதன், கண்ணன் என்ற இடையன் புல்லாங்குழலுடன் மாடுகள் மேய்த்தான் என்பதில் வியப்பு எதுவும் இல்லை. பானை வனையத் தொடங்கியதும் கடம் என்ற கருவி தோன்றியதிலும் வியப்பில்லை.தன் சுற்றுபுறம் ஒட்டிய மிருகம், பறவை, பொருட்களுக்கு குறியீட்டு வடிவமைத்து தந்த மனிதன் காலப்போக்கில் அதை ஓவியக்கலையாக வளர்த்தான். ஒவியம் இரு பரிமாணங்களைக் கொண்ட கலை வ்டிவமே. பின் அவற்றிற்கு முழு உருவம் தரமுயன்றன். பானை வணையத் தொடங்கியதோடு கழிமண்ணில் உருவங்களை செய்தான். பின்னர் மரம், கல், பளிங்குக்கல், பித்தளை ஆகியவற்ருல் முப்பரி மாண உருவங்களை செதுக்கினன். சிற்பக்கலை வளர்ச்சியடைந்தது.உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியோடுதான் கலைகளும் வளர்ச்சியடைந்தன. கூர்மையான கருவிகள் இன்றி சிற்பக்கலை வளர்ச்சிஉற்பத்தி கருவிகள் வளர்ச்சிபெற மனிதனல் உபரியாக (அடிப் படைத் தேவைக்கு மேலதிகமாக) உற்பத்தி செய்ய முடிந்தது அன்றாட உணவுப் போராட்டம் நீங்க ஓய்வு கிடைத்தது. அவ்வேளை உற்பத்திக் கருவிகளோடு கலைகளையும் வளர்க்கத்தக்க வாய்ப்பு ஏற்பட்டது. அதோடு மனித சமுதாய வளர்ச்சியும் வேகம்பெற்றது. ஆயினும் உபரி உழைப்பு பறிக்கப்படும் நிலையில் உழைப்பிலும் கலையிலும் எவ்வாறு பாதிப்பு(ஏற்பட்டன என்பவை பற்றி பின்னர் ஆராய்வோம்.வெறும் கலை வடிவங்களில் அழகுணர்வு மட்டுமல்ல, மனிதன் தன் தேவைக்காக பண்டங்களைப் படைக்கும்போதும் தன் படைப் பாற்றலையும் கலையுணர்வையும் வெளிப்படுத்துகிறான். பானை வனை வதிலிருந்து பறக்கும் விமானத்தைப் படைக்கும்போதும் அவற்றில் அழகைப் படைத்துக் காட்டுகிறான், சேலைகள், குவளைகள், கூடைகள், விளக்குகள், மேசைகள், நாற்காலிகள், எழுதும் பேணுக்கள் ஆகிய பண்டங்களைப் படைக்கும்போதெல்லாம் புதுமையாகவும், அழகாகவும் மனிதன் படைப்பதை காண்கிறோம். கடைத்தெருவிற்குச் சென்று பண்டங்களை துணிகளை வாங்கும்போது நீங்கள் எவ்வாறெல்லாம் கவரப்படுகிறீர்கள். தேர்ந்தெடுக்க சிரமப்படுகிறீர்கள், காரணம் பண்டங்களை ஆக்குவதில் செலுத்தப்பட்ட கலை உணர்வுக்கும் உங்களது அழகுணர்வுக்கும் ஏற்படும் முரண்பாடாகும்.ஆகவே கலைகளை நாம் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.நுண் கலைகள்: ஒவியம், சிற்பம், கூத்து, நடனம், பல்வேறு இசை வடிவங்கள் (தோல், நரம்பு, குழல், கருவி, குரல் முதலியன) முதலானவை.பயன்படு கலைகள்: சேலைகள், கார், கண்ணுடி வகைகள், வீடு, தளபாடங்கள், நுகர் பண்டங்கள் ஆகியவற்றை படைக்கும்போது காட்டப்படும் தொழில் நுட்பத்தோடு இணைந்த அழகுணர்வு.நுண்கலைகள் மனித உணர்வுகளோடு ஒட்டியவை. பயன்படு கலைகள் அன்றாடம் நாம் காணும், பயன்படுத்தும் பண்டங்களோடு, பண்ட உற்பத்தியோடு சம்பந்தப்பட்டவை. ۔கலை என்பது வேறு; கலை வடிவங்கள் என்பது வேறு உள்ளடக்கமும் உருவமும் கொண்டதே கலை. கூத்து, நடனம், இசைக்கருவி இசைகளுக்கும் (வீணை, மேளம் முதலியன) உள்ளடக்கம் உள்ளது. நுண்கலைகளைச் சார்ந்த இவையும் உள்ளடக்கத்தின் மூலமே “கலை” என்ற நிலையைப் பெறுகின்றன.விலங்கு பூட்டிய அடிமைச் சமுதாயத்திலே கலை உணர்வுகளே வெளிப்படுத்தவோ, வளர்க்கவோ அடிமைகளுக்கு வாய்ப்புக்கிட்ட வில்லை. எஜமானர்களுக்கு மட்டுமே சுதந்திரம் அனைத்தும் இருந்தது. எஜமானர்கள் தம் பொழுது போக்கிற்கு பல்வேறு விளையாட்டுகளை வளர்ந்தனர். அடிமைகளை சிங்கம், புலி, எருதுகளுடன் போரிடச் செய்து பொழுது போக்குவது; அடிமைகளை போரிட்டு மடியும் வரை மோதச் செய்து வேடிக்கை பார்ப்பது; அடிமைகளின் இரத்தம் பீறிடுவதைக் கண்டு களித்து ஆர்ப்பரிப்பது ஆகியன அடிமைச் சமுதாயத்தில் வழமையாயிருந்தன.அடிமைகளின் உழைப்பு முழுவதும் எஜமானர்களால் பறிக்கப் பட்டது; அவர்களது உழைப்போடு ஒன்றிய கலை உணர்வுகள் கட்டுப் படுத்தப்பட்டது. இவற்றல் உற்பத்தி குன்றியது. மக்களின் தேவையை ஒட்டி உற்பத்தி இருக்கவில்லை. எஜமானர்களின் தேவையை ஒட்டி மட்டுமே உற்பத்தி இருந்தது உற்பத்திக்கு மேலாக நுகர முற்பட்டனர். மது, கேளிக்கை ஆடம்பரங்களில் எஜமானர்கள் பொழுதை களித்தனர். அடிமை நிலையில் மக்களுக்கு உற்பத்தியில் ஆர்வமிருக்க வில்லை. ஆகவே விலங்கு அடிமைச் சமுதாயம் வீழ்ச்சியுற்றது. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாத இத்தகைய சமுதாயமும் வீழ்ச்சியடைவது வரலாற்று நியதியாகும்.நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் அடிமைச் சமுதாயத்திலும் பார்க்க உற்பத்தி வளர்ச்சியடைந்தது. நிலப்பிரபுக்கள் (தம் வர்க்க நலனை முன் வைத்து) கலைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றனர். கலைகள் யாவும் தெய்வாம்சம் பொருந்தியவை; தெய்வத்திற்கே கலைகள் என்றனர். இதற்கு தமிழ் நாட்டையே நாம் நல்ல உதாரணமாகக்காணலாம். சிற்பிகளைக் கொண்டு கோவில்களைக் கட்டினர் தேவதாசி என்ற ஒரு சாதியினரை கோவில் களில் நடனமாடுவதற்கு என கோவில்களோடு பொட்டுக் கட்டி வைத்தனர். (இத்தேவதாசிகள் வேண்டிய வேளையெல்லாம் நிலப்பிரபுக்களின் ஆசைநாயகிகளாக வாழவேண்டிய அடிமை நிலையில் இருந்தனர் என்பது யாவரும் அறிந்ததே) மேளம், மத்தளம், நாதஸ்வரம் ஆகிய இசைக் கருவிகளுக்காக நட்டுவனுர் என்ற ஒரு சாதி மரபையே ஏற்படுத்தினர்.நிலப்பிரபுக்களுக்கு குறைந்தவர்களாகவே கலைஞர்கள் மதிக்கப் பட்டனர். ஏனெனில் அவர்கள் நிலப்பிரபுக்களின் தயவில் வாழும் அடிமைகளாகவே இருந்தனர். இதனல் நிலப்பிரபுக்களின் தேவையை ஒட்டியே கலைகள் படைக்கப்பட்டன. கலைஞறால் தன் சொந்த அனுபவ உணர்வுகளையோ, பரவலான மக்களின் உணர்வுகளையோ, தன் கற்பனைகளையோ, தான் விரும்பியபடி கலைவடிவங்கள் மூலம் வெளிக்கொணர முடியா நிலையில் சுதந்திரமற்ற அடிமை நிலையில் இருந்தே கலை வடிவங்களைப் படைக்க நிர்ப்பந்திக்கப்பட்டான். மாதவி கானல்வரியில் யாழிசைத்து, சுதந்திர உணர்வுடன் கோவலன் போல் தன் கற்பனையைப் பாட முற்பட்டதும் கோவலன் கோபித்து, அவளைத் துறந்தே வெளியேறினன் என சிலப்பதிகாரம் கூறுவது அன்றைய சமுதாய அமைப்பில் கலைஞர் பெற்றிருந்த சுதந்திர அளவை கூறி நிற்கிறது. சிலப்பதிகாரம் ஆடற்கலையின் இலக்கணங்களைக் கூறி நிற்பது மாத்திரமல்ல ஒரு வாணிபன் ஆடற்கலையில் தேர்ச்சியடைந்த தேவதாசிப் பெண்ணை தன் கலை, பாலுறவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் அடிமை நாயகியாக வைத்திருக்க முடிந்தது என்பதையும் விளக்கிக் கூறுகிறது.புலவர்கள் நிலப்பிரபுக்களே புகழ்ந்து பாடி தமது வயிறுகளை நிரப்பியினர். கம்பன் கூட இதற்கு விதிவிலக் கல்ல. விலங்கு அடிமை நிலையிலும் பார்க்க முன்னேறிய சமுதாய அமைப்பே நிலப்பிரபுத்துவமாகும். தன் பண்ணை அடிமைகள் பட்டினியால் சாகாதபடி (இறப்பின் உழைப்பதற்கு அடிமைகள் குறைவர்) நிலப்பிரபு பாதுகாப்பதோடு, அவர்கள் தன்னை எதிர்க்காதபடி தெய்வம் என்ற ஒரு பொய்மை யையும் சிருட்டித்தான். மக்களுக்காக என கோவில்களைக் கட்டுவித்தான். மக்களுக்காக என திருவிழாக்களை ஏற்படுத்தியிருந்தான். திருவிழாக் களிலே யாழிசை, நாட்டியம், மேளம், நாதஸ்வரம், கூத்து, இசைக் கச்சேரி முதலான கலை வடிவங்களையெல்லாம் அரங்கேற்றினான். மக்களின் கலைகளல்ல, நிலப்பிரபுவினல் மக்களுக்கென தயாரிககப் பட்ட கலைகளே இவை. ஆயினும் மக்கள் தம் நிலையை மறந்து இவை தமக்கான கலைகள் என இவற்றோடும் மதத்தோடும் ஒன்றிணைந்தனர்.சுதந்திரமாக, கூட்டாக வாழ்ந்த மனிதன் உபரியாக உற்பத்தி செய்யக் கூடியதாக முன்னேறிய உற்பத்திக் கருவிகளை ஆக்கிவிட்ட வேளையில் மனித வரலாற்றில், மிகப்பெரிய சிக்கலான நிலை ஒன்று ஏற்பட்டது. அதுவே வர்க்க சமுதாய அமைப்பாகும். முன்னேறிய உற்பத்திக் கருவிகள், உற்பத்தி சாதனங்களைக் கொண்டவர்கள், வாய்ப்பற்ற மற்ருெரு பகுதியினரை அடிமைகளாக்கி தமக்காக உழைக்கச் செய்தனர். இதன் மூலம் ஒரு பகுதி மக்களின் உபரி உழைப்பை மற்ருெரு பகுதியினர் அபகரிக்கத் தொடங்கினர்.சமுதாயம் வர்க்கங்களாக பிளவுபட்டது. தன் உபரி உழைப்பை பறி கொடுத்த மனிதன் உழைப்போடு ஒன்றிய கலை உணர்வாகிய ஆக்க சக்தியை – அதைப்படைக்கும் சுதந்திரத்தையும் இழந்து விட்டான்.உற்பத்தி சாதன்ங்களை ஆள்பவனே கலைகளையும் கட்டுப்படுத்தினான். கலைகளின் உள்ளடக்கம், உருவங்கள் யாவையும் நிலப்பிரபுவே தீர்மானிப்பவனாகவும் விளங்கினான்.ஆகவே கோவில்களில் காணப்படும் ஆபாசமான சிற்பங்கள், ஒவியங்கள் அங்கு நடைபெறும் நாட்டியங்கள், கச்சேரிகள், மேளங்கள், நாதஸ்வரங்கள் யாவும் நிலப்பிரபுக் களின் தேவைகளுக்காகவும் நலனுக்காகவும் நடைபெறுவதேயன்றி மக்களுக்காக அல்ல என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். நிலப்பிரபுக்களின் வீடுகளில் நடைபெறும் விழாக்களிலும் இவ்வடிமைக் கலைஞர்கள் தம் கலைகளை ஒப்புவித்தனர் என்பதை யாவரும் அறிவர். கலைஞனால் தன் சொந்த அனுபவ உணர்வுகளே. மக்களது பரவலான உணர்வுகளை கலைவடிவங்களில் வெளிக் கொணர முடியவில்லை. இந்நிலையால் நடைமுறை சமுதாயத்திற்கும் கலைஞனுக்குமிடையில் முரண்பாடு. ஏற்பட்டது. கலைஞன் சமுதாயத்தை விட்டு அதீதக் கற்பனையில் தன் படைப்புகளே ஆக்க நேரிட்டது. இதனுலேயே நிலப்பிரபுத்துவ கலைகள், இலக்கியங்கள் யாவும் கற்பனைவாத (Romantism) நிலையில் படைக்கப்பட்டன. இதிகாசங்கள்,பாரத,இராமாயணங்கள் யாவும் வெறும் கற்பனவாதக் கதைகளாக இருப்பதைக் காணலாம். சிற்ப, ஒவிய, நாடத நாட்டியங்களும் இவற்றிற்கு விலக்கல்ல.இவற்றிற்கு மேலாக கலைஞர்களுக்கு மற்றோர் பணியும் இருந்தது. அதுவே நிலவுடைமை சமுதாயத்தை நீதிப்படுத்துவதாகும். நிலப் பிரபுத்துவத்தில் வாழ்ந்த எல்லாக் கலைஞர்களும் புலவர்களும் அச்சமுதாயத்தை நீதிபடுத்தும் பணியையும் விட்டுவிடவில்லை. வள்ளுவர் கூட இந்நிலப்பிரபுத்துவ நெறியிலிருந்து வழுவவில்லை. இதென்ன பிரமாதம்! இரண்டாயிரம் ஆண்டுகளின் பின் இன்றும் கூட தமிழ் நாட்டிலும் இங்கும் நிலப்பிரபுத்துவ அமைப்பை, ஒழுக்கங்களை நீதிப்படுத்தும் கலை, இலக்கியங்களையே பெரும்பாலான கலைஞர்கள் படைத்துக் கொண்டிருக்கிருர்கள். காரணம் சமுதாய அமைப்பு இன்றும் அரை நிலப்பிரபுத்துவமாக இருப்பதாகும். கலைகள் இலக்கியங்கள் மேல்மட்ட அமைப்பை (Superstructure) சார்ந்தவையாகும். இவை அடிப்படை அமைப்பிற்கு சேவை செய்வதாக படைப்பதன் மூலமே அச்சமுதாயத்தின் மதிப்பையும் தம் குடும்பத்துப் பசியையும் தீர்த்துக் கொள்ள முடியும். தோழர்களே கீழே உள்ள வீடியோ கரோஹரம் என்ற இமயத்தின் மிக உயரமான சாலை இவை சீனா தனது தேவைக்காக அமைத்த சாலை இன்றைய உலகின் அதிசங்களில் கணக்கிடலாம் பின் பார்ப்போம்..