இன்றைய சமூக அமைப்பில் மேலாதிக்கம் செய்யும் கலாச்சாரம் ஏகாதிபத்திய நிலவுடமை கலாச்சாரமாகும் பொதுவாக ஏகாதிபத்தியம் என குறிப்பிடும்போது அமெரிக்கா உள்ளிட்டமேற்கு ஏகாதிபத்தியங்கள் பலர் குறிப்பிடுகின்றனர் அது மட்டுமன்றி இந்திய சமூக அமைப்பில் ரஷ்ய ஏகாதிபத்திய கலாச்சாரம் சமூக தளத்தில் மீது ஆதிக்கம் வகிக்கும் சக்தியாக விளங்குகிறது எனவே ஏகாதிபத்திய கலாச்சாரம் என்பதை இரண்டு வகையாக காணலாம் (1). அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு ஏகாதிபத்திய கலாச்சாரம் (2).ரஷ்ய ஏகாதிபத்திய கலாச்சாரம்.
முதலில் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் தன் கலாச்சாரத்தையும் எப்படி பரவுகிறது என்றும் பின்னர் ரஷ்ய ஏகாதிபத்தியம் கலாச்சாரத்தைப் பற்றி பேசுவோம்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது கலாச்சாரத்தை எப்படி பரப்புகின்றனர் என்று முதலில் பார்ப்போம்.
1. தனிநபர் வாதத்தை தூக்கி நிறுத்துகிறது
2.வரைமுறையற்ற ஆபாசத்தை பரப்புகிறது
3.விரக்தியை தூண்டும் பல்வேறு இயக்கங்களை நடத்தியது. 4. சமூகமாய் நோக்கமில்லாத மக்கள் மய மாகத வெறித் தனமான வன்முறையை பரப்புகிறது. 5. அறிவியல் கலந்த மூடநம்பிக்கையைப் பரப்புவது. 6. இயற்கை மீறிய கருத்துக்களும் அறிவியல் முலாம் பூசுவது. 7.மருந்து பண்பாட்டை அழுத்திப் பிடிக்கிறது. 8.மேட்டிமைத்தனத்தை சமூகத்தில் பரப்புகிறது. 9.புதிய அலை கலாச்சாரத்தை பரப்புகிறது. 10. புதிய இடது என்ற போர்வையில் மார்க்சியத்தை சிதைக்க முயல்கிறது.
இந்தக் கலாச்சார மலங்களை தாங்கி வரும் வண்டிகள் ஆக நூல்கள் பத்திரிகைகள் வீடியோக்கள் தொலைக்காட்சிகள் என்று பல்வேறு விதமான கலாச்சார பாதிப்புகளை பரப்பி வருகிறது.
இன்றைய நமது சமூகத்தில் மூடநம்பிக்கைகளுக்கும் இயற்கைக்கு மீறிய கருத்துக்களுக்கும் செல்வாக்கு இருக்கின்றது பெரும்பாலான மக்கள் நிலப்பிரபுத்துவ கலாச்சார சேற்றுக்குள் சிக்குண்டு கிடப்பது இதற்கு காரணமாகும். பெருகிக் கொண்டு வரும் அறிவியல் அறிவு இந்த மூடநம்பிக்கைகளை சிதறடிக்க வில்லை மாறாக மூடநம்பிக்கைகள் அறிவியலோடு கலந்து இயற்கையை மீறிய கருத்துகளுக்கு அறிவியல் முலாம் பூசியும் கருத்துகளை பரப்புகின்றன. கதைகள் கட்டுரைகள் செய்திகள் தொலைக்காட்சி என்று தொடர்கிறது.
இன்றைய சமூகத்தில் மக்களிடையே வசதி பெற்ற பிரிவினரிடையே மேட்டிமைத்தனத்தை ஏகாதிபத்திய கலாச்சாரம் உருவாக்கி உள்ளது. உயர்கல்வி கற்றவர்கள் போலி பசப்பு நாகரிகம் உடையவர்களாக ஏனைய மக்கள் பிரிவினரின் இருந்து தனியாக பிரித்து வைக்கிறது.
சமூகத்தில் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்து ஒரு உயர் கல்வி பெற்று அதிகாரம் மிக்க பணி கிடைத்து அவர்களின் வாழ்க்கை வசதி பெருகி விட்டால் அவர்கள் தன் இனத்தை முற்றாக மறக்க நினைப்பது இது ஒரு காரணமாகும் இது உண்மையில் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான முரண்பாடு மற்றும் உடல் உழைப்பு மூளை உழைப்பு இடையிலான முரண்பாடு ஆகியவற்றால் வெளிப்படும் வர்க்க முரண்பாட்டின் வேறு தோற்றம் ஆகும் ஆனால் மேட்டிமைத்தனத்தை ஏகாதிபத்திய அடிமைகள் ஒரு கலாச்சாரமாகவே வளர்கின்றனர், இதற்கு முதலில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் சமூகத்தில் இருந்து உயர் நிலைக்கு சென்று படித்த இளைஞர்கள் அவர் இதை புதிய அலை, புதிய இடதுகள் என்ற பெயரில் மார்க்சிய-லெனினியத்தை ஏகாதிபத்திய கலாச்சாரம் சீரழிகிறது.
புதிய அலை என்ற பெயரில் ஆபாச கலாச்சாரங்களை பரப்பப்படுகிறது பாரம்பரிய மரபுகளை கேள்விக்குள்ளாக்கும் என்ற பெயரில் அனைத்து நிராகரிக்கப்படுகிறது.இந்த அம்மண கலாச்சாரம் சமூக அராஜகத்திற்கு வழிவகுக்கிறது ஒழுக்கக் கேடுகளை உயர்த்திப் பிடிக்கிறது ஊடகங்கள் இந்த முயற்சிதான் பல்வேறு மார்க்சிய விரோத போக்குகளை வளர்த்துக் கொண்டுள்ளது
தொடரும் ……..(மூலம் கோ.கேசவன் நமது இலக்குகள்).