மனித குல விடுதலைக்கான தத்துவம் மார்க்சியம்-26
இந்திய பொதுவுடைமை இயக்கம் பற்றிய ஒரு அறிமுகம்-10
“குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலில் எங்கெல்ஸ்ன் எழுத்தை கண்ட பின் அதன் அடிப்படையில் எழுதத் தொடங்கி 26 ம் பதிவுக்கு வந்து விட்டேன் இருந்தும் இதனை பற்றிய விமர்சனங்கள் குறைவாகவே வந்துள்ளன, நான் அரசு பற்றிய கேள்வியை CPI CPM- மிடம் கேட்டால் பதில் இல்லை குருங்குழுவாதம் பற்றி மா-லெ அமைப்புகளிடம் பதில் இல்லை. உண்மையில் நான் தொடர் தொடங்கும் போது ஒரு கதை சொல்லியிருப்பேன் யானையை தொட்ட குருடர்கள் பற்றி அதுபோல் இங்குள்ள தங்களை கயூனிஸ்ட் என்று அழைத்துக் கொள்ளும் தோழர்கள்….. கண் இருந்தும் செவிடர்கள், காதிருந்தும் ஊமைகள், வாயிருந்தும் குருடர்கள், ஓ ஏதொ எழுத்து பிழையா சொல்பிழையா மேல் உள்ள வாக்கியத்தில்….. பரவாயில்லை தோழர்களே வாக்கியத்தை பொருத்திக் கொள்ளுங்கள் தோழர்களே…. இவைதான் நமது விமர்சன பார்வை. தோழர்களே நாம் கம்யூனிஸ்ட்டுகளாயின் நமது பாதையை சரிதான என்பதனை நமது அசான் மாவோவிடமிருந்து அறிவொம்:-
புரட்சிகர இயக்கங்களுள்ளும் இன்று வலது, இடது சந்தர்ப்பவாதத் திரிபுகள் தலைதூக்கியுள்ளது. இவற்றை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியம் பற்றித் தோழர் மாவோ பின்வருமாறு குறிப்பிடுகின்றர்.
“ஒரு சரியான அரசியல் ராணுவக் கோட்பாடுகள் என்பது தன்னெழிச்சியாகவோ, அமைதியாகவோ வளராது; ஆனால், போராட்டம் என்ற போக்கின் ஊடே மட்டும்தான் வளரும் என்பதை – வரலாறு நமக்குக் கூறுகிறது. இந்தக் கோட்பாடுகளும் ஒரு புறத்தில் “இடது” சந்தர்ப்ப வாதத்தையும், மறுபுறத்தில் “வலது’’ சந்தர்ப்ப வாதத்தையும் எதிர்த்துப் போராடித் தொற்கடித்தாக வேண்டும். புரட்சிக்கும், புரட்சிகர யுத்தத்திற்கும் சேதப்படுத்தும் தீங்கு பயக்கும் போக்குக்களை எதிர்த்துப் போராடாமல், முற்றாக வெல்லாமல் ஒரு சரியான கோட்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதோ யுத்தத்தில் வெற்றிபெறுவதே இயலாததாகும்.”
சுருங்கச் சொன்னல் மக்களது கனவான புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடிப்பதே இன்றைய கடமை, இக்கடமைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் அனைத்து தோழர்களும் தங்களை அரசியல் களத்தில் ஆயுத பாணியாக வேண்டாமா? முயற்சிப்போம் தோழர்களே…. சரியானவற்றை ஏற்பதும் தவறானவற்றை சுட்டிக் காட்டும் படியும் கெட்டுக் கொள்கிறேன் தோழமைகளே.. தொடரும்.