“கம்யூனிஸ்டு ஆகிய ஒருவர் விசால மனம் படைத்தவராக இருக்கவேண்டும். அவர் நேர்மையும் ஊக்கமும் உடையவராக இருக்க வேண்டும். புரட்சியின் நலன்களை தனது சொந்த உயிர்போல் கருதவேண்டும். தனது சொந்த நலன்களை புரட்சியின் நலன்களுக்குக் கீழ்ப்படுத்த வேண்டும். எங்கும் எப்பொழுதும் அவர் சரியான கோட்பாட்டின் வழி ஒழுகி, தவறான கருத்துகள், செயல்கள் எல்லாவற்றுக்கும் எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தவேண்டும். இவ்வாறு கட்சியின் கூட்டு வாழ்வை உறுதிரப்படுத்தி, கட்சிக்கும் பொதுமக்களுக்கும் இடையிலுள்ள தொடர்புகளைப் பலப்படுத்த வேண்டும். அவர் எந்த ஒரு தனி நபரிலும் பார்க்க கட்சியிலும் மக்களிலும் கூடுதலான அக்கறை யும், தன்னைவிட ப் பிறர் மீது கூடுதலான அக்கறையும் செலுத்த வேண்டும். இப்படிச் செய்தால்தான் அவரை ஒரு கம்யூனிஸ்டு என்று கருதமுடியும்.”- மாவோ