கம்யூனிசம் நோக்கிய பயணம்++++++++++++++++++++++++சோசலிசம் என்ற வார்த்தை இன்று நாகரிக வாழ்க்கையாகி விட்டது பலரும் பலவாறு விளக்கம் கூறி மக்களை மயக்குகின்றனர். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் கருதிய சோசலிசம் என்ன என்பதை மட்டும் இங்கு ஆராய்வோம். சோசலிசம் சமுதாய வளர்ச்சிப் பாதையின் எல்லையல்ல. முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்தை நோக்கி முன்னேறும் பயணத்தில் இடைப்பட்ட கால கட்டமே சோசலிசம். கம்யூனிசம் பற்றி மார்சியம் கூறும் தத்துவத்தை எவராலும் திரித்துக் கூறி மயக்கமேற்படுத்தி விட முடியாது. கம்யூனிசத்தின் பிரதான அமைப்புகள் என்ன?(1). வருடங்கள் மறைந்துவிடும்.(2). அரசு சிதறிவிடும்.(3). உழைப்பு அல்லது தொழிலாளரைத் தரம் பிரிக்கும் பாகுபாடுகளிலிருந்து விடுபட்டு விடுவோம்.(4). நகருக்கும் நாட்டுப்புறத்திற்கும் இடையில் நிலவும் வேறுபாடுகள் நீக்கப்பட்டு விடும் .(5).உடல் உழைப்பு, மூளை உழைப்பு ஆகிய இரண்டிற்கும் இடையில் நிலவும் வேறுபாடு ஒழிக்கப்பட்டு விடும்.(6). தேவைக்கேற்ற உற்பத்தி, வினியோகம் முதலியன. முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்குச் செல்லும் பாதை குறுகியதல்ல. நீண்ட பயணம் இப்பயணம் ஆரம்பிப்பதற்கு ஆரம்ப நியதிகள் உள்ளன. முதலாவது முதலாளித்துவம் ஒழிக்கப்பட்டு தொழிலாள, விவசாய அரசியல் ஆதிக்கம் பெறுவதாகும். தொழிலாள, விவசாயகள் அரசு எந்திரத்தின் மேல் கைவைப்பதல்ல, உடைத்தெரிய வேண்டும் என்று லெனின் கூறினார். இன்று பல நாடுகளில் மக்கள் ஆதரவோடு அரசை கையேற்றவர்கள் அரசு எந்திரத்தின் மேல் கை வைப்பவர்களே. மார்க்ஸ் லெனின் கருவியை சோசலிச பாதை இதுவல்ல அரசு எந்திரத்தை உடை தெரிவதாகும். தொழிலாளர் விவசாயிகளின் புரட்சியாலும் தமது சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதாலும் கம்யூனிச பாதையில் காலடி எடுத்து வைக்க முடியும். மக்கள் ஆதரவு பெற்றவர்கள் முதலாளித்துவ அரசு எந்திரத்தின் மேல் கை வைப்பது என்பது புலியின் நெற்றியை தடவுவது போன்றது. அதனால் புலியை வென்று விட்டதென்பதல்ல. இத் தவறான கருத்தினாலேயே உலகில் பல நாடுகளிலும் மக்கள் ஆதரவு பெற்ற அரசுகள் வீழ்ச்சியுறுவதைக் காண்கிறோம். நமது நாட்டில் உள்ள பல ஓட்டு அரசியல் கட்சிகளை இன்றைய நிலையை கருத்தில் கொள்க…..