கம்யூனிசத்திற்கு எதிர்ப்பும் முதலாளித்துவமும்
கம்யூனிசத்திற்கு எதிர்ப்பும் முதலாளித்துவமும்

கம்யூனிசத்திற்கு எதிர்ப்பும் முதலாளித்துவமும்

கம்யூனிசத்திற்கு எதிர்ப்பும் முதலாளித்துவமும்+++++++++++++++++++++++++++++++++++++
தொடர்ந்து இங்குள்ள சில மார்க்சிய விரோதிகள் மார்க்சிய முகமூடி அணிதுக் கொண்டு மார்க்சியத்தை கேடாக பயன்படுத்தும் அதே வேளையில் அவர்கள் கூறும் வார்த்தை நான் அதிக மார்க்சிய நூல் வாசிக்கவில்லை இருந்தாலும் எனக்கு மார்க்சியத்தின் மீது விமர்சனம் உள்ளது மார்க்சியத்தை அப்படியே இங்கே பொருத்த முடியாது என்று ஆரம்பிக்கும் அவர்களின் ஈனதனத்தை என்னவென்று சொல்வதோ தெரியவில்லை ஆகவே வரலாற்றில் மார்க்சியத்தை எதிர் கொள்ள முதலாளித்துவம் செய்த சூசிகளை பார்ப்போம்.
கார்ல் மார்க்ஸ், ஏங்கெல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை 1848இல் வெளியானது. அவ்வறிக்கை “இதுவரையான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறு” என ஆரம்பித்து சோஷலிசத்தை அமைக்க ‘”உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்” என்று குரலெழுப்பியது.
அந்நாள் தொடக்கம் முதலாளிதுவம் மார்க்சியக் கோட்பாட்டை வெறுப்புடனும் அச்சத்துடனேயே கவனித்துவந்தது.
ஜார் ஆட்சியிலேயே மார்க்சின் “மூலதனம்” நூல் ரஷ்ய மொழியில் பெயர்க்கப்பட்டது.
மார்க்சிய சோஷலிச ஜனநாயகக் கட்சிகள் ஐரோப்பா வில் வளர்ச்சியடைந்து வந்தன.
1878இல் மார்க்சிஸ்டுகளை ஒழிக்க பிஸ்மார்க் பொலிசுக்கு அதிக அதிகாரமளித்துக் கடும் சட்டமியற்றினான்.
1914இல் முதலாவது உலக யுத்தத்தை முதலாளித்துவ நாடுகள் தம் முரண்பாடுகளைத் தீர்க்க நடத்தியபோது சிந்தப்பட்ட இரத்தத்தைக் கண்டு மக்கள் கொதித்தெழுந்தனர்,
மூன்று ஆண்டுகளில் ரஷ்யாவில் புரட்சி வெடித்தது. மன்னராட்சிகள் ஐரோப்பாவில் வீழ்ச்சியடையத் தொடங்கின.
ரசியப் புரட்சியை “பிறப்பிலேயே கொன்றுவிடவேண் டும்” என இங்கிலாந்து, பிரான்சு, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்நாட்டில் குழப்பம் ஏற்படுத்தப் படைகளையே அனுப்பின. இதிலிருந்து சோவியத் வெற்றிகண்டது.அதனையடுத்து முதலாளித்துவ நாடுகள் முசோலினியின் பாசிசத்தை 1922 வரையில் கிளப்பிவிட்டு ஆதரித்தன. இத்தாலியில் குண்டர்கள் தொழிற் சங்கங்களையும், தலைவர்களையும் அடித்து நொறுக்கினர்.
இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியெழுப்பிய கிராம்சி இருபதாண்டுச் சிறைத்தண்டனை பெற்றார். பல்லாயிரக்கணக்கானவர் அடிபட்டு, சிறையில் தள்ளப்பட்டுக் கொலைசெய்யப்பட்டனர். ‘நாகரிகத்தைக் காப்பாற்ற இறைவனால் அனுப்பப்பட்டவர்” என போப் ஆண்டவர் முசோலினியை பாராட்டினார்.
“போல்ஷவிசத்தை ஒழிக்க வந்த வீரன்” என சர்ச்சில் புகழ்ந்தார்.
ஜெர்மனியில் இட்லர் முசோலியின் பாசிசத்தைக் கடைப்பிடித்தான். யூத எதிர்ப்பைக் கிளப்பியதோடு கம்யூனிஸ்டுகளை ஒழிக்கவும் முயன்றான்.
ஜெர்மனி மீண்டும் இராணுவ பலம் பெறுவதை அமெரிக்காவும் வத்திக்கானும் ஆதரித்தன; பாசிசத்திற்கு வழிவிடப்பட்டது. மஞ்சூரியாவை ஜப்பான் 1932இல் ஆக்கிரமித்தது. ஆஸ்திரியா ஜனாதிபதி 1984இல் வீயன்னா தொழிலாளர்கள்மேல் பீரங்கி மழை பொழிந் தான். எத்தியோப்பியாவை முசோலினி கைப்பற்றினான். இட்லர் 1937இல் ஆஸ்திரியாவை முற்றுகையிட்டான். பிராங்கோவின் பாசிச ஆட்சிக்கு உதவ ஸ்பெயினுக்கு இட்லரும் முசோலினியும் படை அனுப்பினர்.
கலாசாரரீதியாக அமெரிக்க, ஐரோப்பியப் பத்திரிகைகள் கம்யூனிசத்திற்கு எதிராகவும், சோவியத்தைக் கண்டித்தும் எழுதிக்கொண்டே இருந்தன.
அன்றைய பல்கலைக்கழகங்களில் பொருளாதாரப் பேராசிரியர்கள் மார்க்சியத்தின் மூலதனத்திற்கு எதிராகப் பேசி, எழுதிவந்தனர்.
கம்யூனிசத்திற்கு எதிராகக் கண்மூடித்தனமாக இட்லர் எதிர்த்த வேளை அவன் இராணுவ பலம் பெற பிரிட்டனும் உதவியது.
இரண்டாவது உலக யுத்தத்தின்போது சோவியத்தின் இழப்பு அளவிற்கு அமெரிக்காவோ, பிரான்சு, இங்கிலாந்தோ பாதிக்கப்பட வில்லை.1800,000 சதுரமைல் நிலம், மூன்றிலொரு குடித்தொகை, அரைப் பங்கு நிலக்கரிச் சுரங்கங்களும், மின்நிலையங்களும், யந்திர உற்பத்திகளையும் இட்லர் ஒரு கட்டத்தில் கைப்பற்றியிருந்தான்; பல பெரிய நகரங்கள் கற்குவியலாகின” என எட்கா சினோ கூறியுள்ளார்.
இத்தகைய அழிவோடு இட்லரை வீழ்த்தி சோவியத் வெற்றிபெற்றது.
சோவியத் பயமுறுத்தலே ஆயுதப்போட்டியை முதலாளித்துவ நாடுகளில் ஏற்படுத்தியதென்று பொய்ப்பிரச்சாரம் செய்யப்படுகிறது. அமெரிக்க இராணுவத் தளபாட உற்பத்தியாளர்களே இவ்வாறு பிர சாரம் செய்து, நாட்டை இத்துறையில் ஊக்கப்படுத்திக் கடனாக்கியுள்ளனர். ஆண்டுதோறும் பத்தாயிரம் கோடி டாலர் கடனாளியாகும் நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.
இன்று கம்யூனிசம் தோற்றுவிட்டதாக மீண்டும் புதிய பிரச்சாரம் தொடர்கிறது.
“கம்யூனிசத்தைக் கட்டுவதில் பிரச்சினை ஏற்படலாம். அது இறந்துவிட்டதென்று கூறுவது வெறும் பொய். இருபதாம் நூற்றாண்டின் தனிச்சிறப்பான அரசியல், சித்தாந்தக் கோட்பாடு கம்யூனிசமென வரலாற்றில் நினைவுகூறப்படும்’ என்ற அமெரிக்கரின் கூற்றை எவரும் புறக்கணிக்கமுடியாது.
கம்யூனிசம் தோற்றுவிடப் போவதில்லை. ஏனெனில் அது தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்று, இயக்கவியல் பொருள்முதல் வாத சித்தாந்தம், அதன் வளர்ச்சிப்போக்கை கற்பனாவாதிகளானமுதலாளித்துவத்தால் புரிந்துகொள்ள முடியாது. இன்று இந்திய அரசின் பாசிசத்தை புரிந்துக் கொள்ள+++++++++++++++++++++++++++++++++++++++மேற்கு ஜெர்மனியில் 1933-45 வரையான காலப்பகுதியின் வரலாறு ஓர் இருண்ட அறைபோன்றது. இக்காலப் பகுதியின் வரலாறு பள்ளிகளில் கற்பிக்கப்படுவதில்லை. கற்பிக்கும் சில இடங்களிலும் மக்கள் பாசிசத்தை எதிர்த்த போதும் இட்லர் பலமுள்ள வராக இருந்தமையினால் பாசிசத்தை முறியடிக்க முடியாது போய் விட்டதாகவே போதிக்கப்படுகிறது. யாரும் பாசிசம்பற்றி விமர்சிப் பதில்லை. பாசிசம் சமுதாயத்தின் ‘ஒரு மட்டத்தின்கீழ் இருபதால் எந்நிலைமையிலும் வெளிவரலாம். (மூலம் குமரன் பத்திக்கை சரியாக்கி ஒழுக்கு படுத்தியவை நான் தவ்ற்களை சுட்டிக் காட்டலாம் தோழர்களே).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *