கனிகா கபூர் மூலம் பரவிய கொரோனா தொற்று
கனிகா கபூர் மூலம் பரவிய கொரோனா தொற்று

கனிகா கபூர் மூலம் பரவிய கொரோனா தொற்று

பாலிவுட் பாடகி கனிகா கபூர் மார்ச் 9-ம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பினார். பின்னர் அவர் லக்னோ சென்று அங்கு நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர், நடிகைகள் என 100 பேர் கலந்து கொண்டனர். கனிகா தான் லண்டனில் இருந்து வந்ததையும், தனக்கு கரோனா தொற்று சோதனை நடந்ததா என்பதையும் யாரிடமும் தெரியப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

லக்னோவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜேவும் அவரது மகனும் பாஜக எம்.பி.யுமான துஷ்யந்தும் கலந்து கொண்டனர். பின்னர் கனிகா கபூருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் வசுந்தரா ராஜேவும் அவரது மகன் துஷ்யந்தும் சுய தனிமைப்படுத்தலைக் கடைப்பிடித்தனர்.

தான் வெளிநாடு சென்று வந்ததை யாரிடமும் சொல்லாமல் மறைத்த கனிகா கபூரை இணையத்தில் பலரும் திட்டித் தீர்த்தனர். அவரைக் கைது செய்யவேண்டும் என்று பல தரப்பிலிருந்து குரல்கள் வலுத்த நிலையில் போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

லக்னோ மருத்துவமனையில் கனிகா கபூர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரோடு தொடர்பில் இருந்த 260 பேரை போலீஸார் தொடர்புகொண்டு கண்காணித்து வந்தனர்.

டெல்லி: கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு இருக்கும் பாலிவுட் பாடகி கனிகா கபூர் பல்வேறு லோக்சபா எம்பிக்கள், பிரபலங்கள் உடன் நெருக்கமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் யாரை எல்லாம் தொடர்பு கொண்டார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

பாலிவுட் பாடகி கனிகா கபூர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டது இந்தியாவை உலுக்கி உள்ளது. இதற்கு பின் மிக முக்கியமான காரணம் உள்ளது. லண்டனில் இருந்து இந்தியா வந்த கனிகா கபூருக்கு கடந்த 16ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதற்கு முன் கனிகா கபூர் கலந்து கொண்ட பல்வேறு பார்ட்டிகளில் மத்திய பாஜக தலைவர்கள், லோக்சபா எம்பிக்கள் பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் கொரோனா ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கனிகா கபூர் – கொரோனா சர்ச்சையை பின் வரும் வகையில் சுருக்கமாக விளக்கலாம்.
மார்ச் 9 கனிகா கபூர் லண்டனில் இருந்து மும்பை வந்துள்ளார். அப்போதே இவருக்கு கொரோனா இருந்துள்ளது. மூன்று நாள் மும்பையில் தங்கியிருந்த இவர் மார்ச் 11ல் லக்னோ சென்றுள்ளார்.
மார்ச் 13,14,15 தேதிகளில் இவர் லக்னோவில் பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இதில் 14ம் தேதியில் கலந்து கொண்ட பார்டியில்தான் பாஜக எம்பிக்கள் பலர் உடன் இருந்துள்ளனர்.
மார்ச் 16 கனிகா கபூருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கனிகா கபூர் கலந்து கொண்ட பார்டிகளில் மொத்தம் 300 பேர் கலந்து கொண்டுள்ளனர். இரண்டாது பார்ட்டியில் மட்டும் 35 பேர் இருந்துள்ளனர். இதில் பாஜக மூத்த தலைவரான வசுந்தரா ராஜே, அவரது மகனும் லோக்சபா எம்.பி.யுமான துஷ்யந்த், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன், பாஜக எம்பி அனுபிரியா பட்டேல் ஆகியோர் குறிப்பிட தகுந்தவர்கள். இவர்கள் எல்லாம் தற்போது தனியாக வீட்டில் இருக்கிறார்கள். தங்களை தனிமைப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் இந்த பார்ட்டியில் வேறு யாரெல்லாம் கலந்து கொண்டனர் என்ற விவரம் வெளியாகி உள்ளது . அதன்படி இந்த பார்டியில் மத்திய பாஜக அமைச்சர்கள் ராஜ்வர்தன் ரத்தோர், பாஜக எம்பி மதுரா ஹேமா மாலினி, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம், காங்கிரஸ் மூத்த உறுப்பினர் குமாரி செல்ஜா, குத்துசண்டை வீரர் எம்பி மேரி கோம் ஆகியோர் கலந்து கொண்டு உள்ளனர் .

அதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த உறுப்பினர் சஞ்சய் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் திபேந்தர் ஹூடா , ஜிதின் பிரசதா ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் மூவரும் தற்போது தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனர். இன்னொரு பக்கம் லோக்சபா எம்.பி துஷ்யந்த் இரண்டு நாட்களுக்கு முன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார்.

இதனால் சந்தேகத்தின் பெயரில் குடியரசுத் தலைவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவு வெளியாகவில்லை. இவரின் அனைத்து அப்பாய்ண்ட்மெண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராஷ்டிரியபதி பவனில் இதற்காக தீவிர சோதனை நடந்து வருகிறது. காண்டாக்ட் டிரெஸ் முறை மூலம் கனிகா யாரை எல்லாம் சந்தித்தார். அவர்கள் யாரை எல்லாம் சந்தித்தார்கள் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

இவர் 14ம் தேதி நடந்த விழாவில் பாஜகவின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, அவரது மகனும் லோக்சபா எம்.பி.யுமான துஷ்யந்த், பாஜக உத்தர பிரதேச அமைச்சர் ஜெய் பிரதாப் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதின் சிங் ஆகியோரை சந்தித்துள்ளார். துஷ்யந்த் சிங் கனிகாவை சந்தித்துவிட்டு, அதன்பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஸ்மிரிதி இராணி, ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்துள்ளார்.

அதேபோல் துஷ்யந்த் சிங் ரயில்வேத்துறை, போக்குவரத்துறை துறை அதிகாரிங்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளார். இதில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல் துஷ்யந்த் பாஜகவின் வருண் காந்தி, தீபக் ஹூடா ஆகியோரை 15ம் தேதிசந்தித்துள்ளார். கனிகா கபூரை சந்தித்த பாஜக உத்தர பிரதேச அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் அதன்பின் உத்தர பிரதேசத்தில் அமைச்சரவை மீட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார்.

அதில் இவர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள் கேசவ் மவுரியா, தினேஷ் சர்மா ஆகியோரை சந்தித்து இருக்கிறார். 14ம் தேதி நடந்த விழாவில் கிரிக்கெட் வீரர் ஒருவரும், பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் சிலரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் முழுக்க முழுக்க பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் பிரபலங்கள் மத்தியில் தற்போது கொரோனா அச்சம் எழுந்துள்ளது. இப்படி இருக்கும் பொழுது ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்கியுள்ள அந்த கேடுகெட்டவர்களை உமர் அப்துல்லா மொழியில் சொல்வதானால் கொரோனா வைரைசை விட ஆபத்தானவர்கள் இவர்கள் அல்லவா?.

கொரோனா வைரஸையும், தக்லிப் ஜமாத்தையும் இணைத்து ட்விட்டரில் ஹேஷ்டேக் வைத்து ட்வீட் செய்பவர்கள் எந்த வைரஸையும் விட மிகவும் ஆபத்தானவர்கள்… அவர்களின் உடம்பு நல்லா இருந்தாலும்.. மனசு முழுவதும் நோய்தான் நிரம்பியிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில்தான் வீட்டுக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார் உமர் அப்துல்லா என்பது நினைவிருக்கலாம்

Image may contain: 9 people, people standing
வெளியே சென்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *