கணவன் மனைவிக்கு இடையேயான உறவு நட்பு முரணா? பகை முரணா? தோழர்களிடையே ஒரு கேள்வியை முன் வைத்திருந்தேன் அதில் இரு தோழர்களுக்கு பதிலளிக்கும் முகமாக இந்த பதிவு.
குடும்பச் சண்டைகளுக் கும் என்ன தொடர்பு?”
“ஒருவரது உழைப்பு சுரண்டப்படும்போது, அங்கு தோன்றும் உறவை பகைமை உறவு என்று நாம் கொள் கிருேம். தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் தோன்றும் உறவு பகைமை உறவு.”
“பகைமை உறவு என்றால்.”
“தொழிலாளியும் முதலாளியும் என்றும் ஒற்றுமையாக இருக்க முடியாது. ஒரு வர்க்கத்தை மற்றவர்க்கம் அழிப்பதன் மூலமே பகைமை தீர்க்கப்படும் இதே போலவே உழைப்பு அத்துமீறிச் சுரண்டப்படும் பெண்கள் உழைப்பைச் சுரண்டும் கணவருக்கோ, குடும்பத்திற்கோ எதிராகப் போராடுகின்றனர். இதனலேயே இன்றைய சமுதாய அமைப்பில் குடும்பங்களிடை ஒற்றுமையையோ, மகிழ்சியையோ காணமுடியாது.
வரலாற்றுத் தரவுகளை தொகுத்து மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரால் வெளியிடப்பட்ட பெண்ணடிமையின் ஆரம்பம் பற்றிய கருத்துக்கள் இன்றைய மனிதகுல வரலாற்றின் ஆரம்பகாலத்தில் நிலைப்பெற்றிருந்த தாயுரிமைச் சமுதாயத்தில் பெண் தலைமை பெற்றிருந்தாள். தாயை வைத்தே பிள்ளைகளை அடையாளங் காணும் குழுமணமுறையும், கூட்டுவாழ்க்கையும் அன்று இருந்தது. தமக்கென எதையும் சேர்த்து வைக்க அறியாத, கூடி உழைத்ததை கூடியே உண்டு வாழ்ந்த அப்புராதன பொதுவுடைமைச் சமுதாயம் காலப்போக்கில் தகர்ந்து போனது.
தனியுடமைச் சமுதாயம் உருவானது. ஆண் தனது சொத்துக்குரிய சரியான வாரிசை அடையாளங்காணும் தேவை ஒருதார மணக்குடும்ப முறையை உருவாக்கியது. அன்றிலிருந்து பெண் சமூக உழைப்பிலிருந்து பிரிக்கப்பட்டு வீட்டு வேலைக்கு உரியவளாக்கப்பட்டாள். ஏங்கல்ஸ் அவர்களின் கூற்றுப்படி “வரலாற்றில் தோன்றியமுதல் வேலைப்பிரிவினை அதுவானது. முதல் அடிமையும் பெண்ணானாள்’ பிற ஆடவனை நிமிர்ந்து நோக்காத அடக்கமும், கணவனுக்கு அஞ்சி, நாணி ஒடுங்கும் தன்மையும், எதிறுரை பேசாத அடிமை சிறுமதியும் பெண்களின் பண்பாக படிப்படியாகப் பேணிவளர்க்கப்பட்டது. ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்று நாம் பெருமையுடன் பேசிக்கொள்ளும் பழைய பண்பாட்டு உறவுமுறைகள் தனிமையுடைமை அமைப்பின் வெளிப்பாடாக உலகெங்கும் தோற்றம் பெற்றவையே.
அடிமைகளின் உழைப்பில் உல்லாசமாக வாழ்ந்த ஆளும் வர்க்கம் தம் அனுபவிக்கும் போகப் பொருட்களில் ஒன்றாகவே பெண்களையும் ஆக்கிக்கொண்டது அதாவது ஆணாதிக்க சமூகத்தில் பெண் அடிமையே ஆகவே இச் சமூகத்தில் ஆண் ஒடுக்குபவனாகவும் பெண் ஒடுக்கப் படுபவளாகவும் உள்ளானால். ஒடுக்குபவனும் ஒடுக்கப் படுபவனும் ஒற்றுமையாக இருக்க முடியாது என்பதே நமகளித்த அரசியல் ஆகவே இந்த சுரண்டல் அற்ற ஆண் பெண் சமத்துவமான அமைப்புமுறையிலே ஆணும் பெண்ணும் நட்பாக வாழ முடியும்…