கம்யூனிஸ்ட்டை அறிமுகம் செய்தல் ’அக்டோபர் 4, 1938, மாசேதுங், இதிலிருந்து சிலப் பகுதி தொடரும்
ஒருபுறம், ஜப்பானிய எதிர்ப்புத் தேசிய ஐக்கிய முன்னணிக்குள் சரணடைவு, பிளவு, பின்னடைவு ஆகிய ஆபத்துக்கள் நாளுக்குநாள் அதிகரிக்கின்றன. மறுபுறம் எமது கட்சி தனது குறுகிய எல்லைகளைத் தாண்டி, தேசிய அளவிலான பெரிய கட்சியாகின்றது. சரணடைவு, பிளவு, பின்னடைவு ஆகிய ஆபத்துக்களை வெற்றி கொள்ளவும் எதிர்பாராதபடி நிகழக்கூடிய நிகழ்ச்சிகளனைத்தையும் சமாளிப்பதற்கு ஆயத்தம் செய்யவும் பொதுமக்களை அணி திரட்டுவதே கட்சியின் கடமையாகும்.
தேசிய அளவிலானதும் மக்கள் திரள் இயல்புள்ளதும், சிந்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் முற்றாக உறுதிப்படுத்தப்பட்டதுமான போல்சிவியமான சீனக் கம்யுனிஸ்ட் கட்சியொன்றினைக் கட்டியமைக்க உதவுவதே அதன் கடமையாகும்.இப்படிப்பட்ட கட்சி ஒன்றைக் கட்டியமைப்பது சீனப்புரட்சியின் வெற்றிக்கு மிக அவசியம். மொத்தத்தில் அதற்குரிய அகநிலை நிலைமைகளும் புறநிலை நிலைமைகளும் இப்போதுள்ளன. இந்த மகத்தான திட்டம் உண்மையில் இப்பொழுது முன்னேற்றமடைகிறது. சாதாரண கட்சிப் பிரசுரம் ஒன்றின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட இந்த மகத்தான திட்டத்தை நிறைவேற்றுவதில் உதவுவதற்குத் தனிக்கட்சி வெளியீடொன்று அவசியம். ஆகவேதான், இப்போது ‘ கம்யூனிஸ்ட்’ வெளியிடப்படுகின்றது.எமது கட்சி ஏற்கெனவே ஒரு குறிப்பிட்ட அளவிற்குத் தேசிய அளவினதாகவும் மக்கள் திரள் இயல்புடையதாகவுமிருக்கின்றது. அதன் தலைமை மையத்தையும் அதன் உறுப்பினரில் ஒரு குறிப்பிட்ட பகுதியையும் அதன் பொது வழியையும் புரட்சி வேலையையும் பொறுத்தவரை அது ஏற்கெனவே சிந்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் உறுதிப்படுத்தப்பட்டதும் போல்ஷெவியமானதுமான ஒரு கட்சியாக இருக்கின்றது.
எமக்குத் தற்போது பல புதிய கிளைகளுள்ளன; அவை பெருந்தொகையான புதிய உறுப்பினர்களைக் கொண்டுள்ளன; அவை இன்னும் மக்கள் திரள் இயல்புடையனவாகவோ சிந்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் உறுதிப்படுத்தப்பட்டனவாகவோ அன்றி போல்ஷெவியமானவையாகவே கருதப்படக் கூடியனவாயில்லை.அதே வேளையில், பழைய கட்சி உறுப்பினர்களின் அரசியலறிவின் மட்டத்தை உயர்த்துவது, பழைய கட்சிக் கிளைகளைச் சிந்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் மேலும் நிலைப்படுத்துவது, அவற்றை மேலும் போல்சிவிச மயமாக்குவது என்ற பிரச்சனையும் இருக்கிறது. கட்சி எதிர்நோக்கும் சூழ்நிலைகளும் கட்சி தோள்கொடுக்கும் பொறுப்புகளும் புரட்சிகர உள்நாட்டு யுத்தக் காலத்திலிருந்தவற்றினின்றும் பெருமளவில் வேறுபட்டனவாயுள்ளன; தற்போதைய சூழ்நிலைகள் முன்பைவிட மிக்க் கூடிய அளவு குழப்பமுடையனவாயும் பொறுப்புகள் மிகவும் சுமையானவையாயும் உள்ளன.
இது தேசிய ஐக்கிய முன்னணிக் காலம், நாம் பூர்ஷ்வா வர்க்கத்துடன் ஐக்கிய முன்னணியொன்றை அமைத்திருக்கின்றோம்;இது ஜப்பானிய எதிர்ப்புப் போர்க்காலம், எமது கட்சியின் ஆயுதந்தாங்கிய சக்திகள் போர்முனையில் நேசப்படைகளுடன் சேர்ந்து எதிரிகளுடன் ஈவிரக்கமற்ற போரிலீடுபடுகின்றன. எமது கட்சி தேசிய அளவிலானதொரு பெரிய கட்சியாகிய காலம் இதுதான். அப்படியாகியதால்,எமது கட்சி இனிமேலும் முன்பிருந்தது போலிருக்காது.இவ்வம்சங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்துப் பார்ப்போமானால், நாமாகவே முன்வைத்த கடமை, அதாவது,“ தேசிய அளவிலானதும் வெகுசன இயல்புள்ளதும் சிந்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் முற்றாக நிலைப்படுத்தப்பட்டதுமான போல்ஷெவியமான சீனப் பொதுவுடைமைக் கட்சியொன்றினைக் கட்டியமைக்கும் ” கடமை எவ்வளவு மேன்மையானதும் மதிப்பு வாய்ந்ததும் ஆகும் என்பதை நாம் புரிந்து கொள்வோம்.
இவ்வகையான கட்சியொன்றை அமைப்பதற்கே இப்பொழுது நாம் விரும்புகின்றோம்.ஆனால், அதற்கு எப்படி வேலை செய்யத் தொடங்க வேண்டும்?எமது கட்சியின் வரலாற்றையும், அதன் பதினெட்டாண்டுக் காலப் போராட்ட வரலாற்றையும் ஆராயாது இந்தக் கேள்விக்கு எம்மால் விடை கூற முடியாது.1921 இல் நடந்த எமது முதலாவது தேசிய மாநாடு முதல் இன்றுவரை எமது கட்சியின் வரலாற்றுக் காலம் முற்றாகப் பதினெட்டு ஆண்டுகளாகி விட்டது. இந்த பதினெட்டு ஆண்டுகளில் எமது கட்சி பல மகத்தான போராட்டங்களுக் கூடாகச் சென்றிருக்கிறது. கட்சியின் உறுப்பினர்களும் அதன் ஊழியர்களும் அமைப்புகளும் இந்த மகத்தான போராட்டங்களில் புடம் போட்டு எடுக்கப்பட்டுள்ளனர், அவர்கள் புரட்சியில் மகத்தான வெற்றிகளையும் துயரார்ந்த தோல்விகளையும் அனுபவித்தனர். இந்தக் கட்சி, பூர்ஷ்வா வர்க்கத்துடன் ஒரு தேசிய ஐக்கிய முன்னணியை நிறுவியது. பின்னர் இந்த தேசிய ஐக்கிய முன்னணி தகர்ந்ததனால் பெரும் பூர்ஷ்வா வர்க்கத்துடனும் அதன் கூட்டாளிகளுடனும் ஒரு கசப்பான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது.கடந்த மூன்றாண்டுக் காலத்தில், அது பூர்ஷ்வா வர்க்கத்துடன் அமைக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணிக் காலத்திற்குள் திரும்பவும் நுழைந்திருக்கின்றது.சீனப் பூர்ஷ்வா வர்க்கத்துடனுள்ள இவ்வகையான சிக்கலான தொடர்பு மூலந்தான் சீனப் புரட்சியும் சீனப் பொதுவுடைமைக் கட்சியும் தம் வளர்ச்சியில் முன்னேற்றமடைந்திருக்கின்றன. இது ஒரு சிறப்பான வரலாற்று அம்சம். காலனிய அரைக்காலனிய நாடுகளிலுள்ள புரட்சிக்குச் சிறப்பான, எந்த முதலாளித்துவ நாட்டுப் புரட்சி வரலாற்றிலும் காணமுடியாத்தோர் தனி வரலாற்று அம்சம்.
சீனா ஓர் அரைக்காலனிய, அரைநிலப்பிரபுத்துவ நாடாக இருப்பதனாலும் அதன் அரசியல், பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிகள் சமச்சீராக இல்லாததனாலும் அதன் பொருளாதாரம் பிரதானமாக அரைநிலப்பிரபுத்துவமாகவும் அதன் பரப்பு பரந்த அளவிலும் இருப்பதனாலும் இந்தக் கட்டத்தில் சீனப் புரட்சி, இயல்பில் பூர்ஷ்வா வர்க்க ஜனநாயகப் புரட்சியாக உள்ளது,அதன் முதன்மை இலக்குகள் ஏகாதிபத்தியமும் நிலப்பிரபுத்துவமாகவும் அதன் அடிப்படை உந்து சக்திகள் பாட்டாளி வர்க்கமும் விவசாயிகளும் நகரக் குட்டி முதலாளிய வர்க்கமுமாகவும் உள்ளன. இதில் தேசிய பூர்ஷ்வா வர்க்கமும் குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட அளவு பங்கெடுக்கும்.அத்துடன் சீனப்புரட்சியின் முதன்மையான போராட்ட வடிவம் ஆயுதப்போராட்டமாகவும் இருக்கிறது. உண்மையில், எமது கட்சி வரலாறு ஆயுத போராட்ட வரலாறு என்று கூறப்படலாம்.“ சீனாவில் ஆயுதந்தாங்கிய புரட்சி ஆயுதந்தாங்கிய எதிர்ப்புரட்சியுடன் போரிடுகின்றது. அது சீனப்புரட்சியின் தனிச்சிறப்புக் கூறுகளிலொன்றாகவும் அதன் மேம்பாடுகளிலொன்றாகவும் இருக்கின்றது.”எனத் தோழர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது முற்றிலும் உண்மையானது
கட்சிக்கும் விவசாயிகளுக்குமிடையிலுள்ள உறவுகளைப் பற்றிக் கூறின் அவை கட்சிக்கும் விவசாயி யுத்தத்திற்குமிடையிலுள்ள நெருங்கிய உறவுகளாக இருக்கின்றன.இந்த இரண்டு அடிப்படைத் தனிச்சிறப்புக் கூறுகளின் காரணமாகவே, உண்மையில் அவற்றின் காரணமாகவே தான் எமது கட்சியின் அமைப்பும் போல்ஷெவியமயமாக்கமும் தனிச் சூழ்நிலைகளில் முன்னேறுகின்றன. கட்சியின் தோல்விகள் அல்லது வெற்றிகள், அதன் பின்னடைவுகள் அல்லது முன்னேற்றங்கள், அதன் சுருக்கங்கள் அல்லது விரிவுகள், அதன் வளர்ச்சி, உறுதிப்பாடு ஆகியன பூர்ஷ்வா வர்க்கத்திற்கும் கட்சிக்கும், ஆயுதப் போராட்டத்திற்கும் கட்சிக்கும் இடையிலுள்ள உறவுகளுடன் தவிர்க்கப்பட முடியாதபடி இணைக்கப்பட்டுள்ளன. பூர்ஷ்வா வர்க்கத்துடன் ஐக்கிய முன்னணி ஒன்றை அமைப்பது அல்லது அதைத் தகர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றபோது அதைத் தகர்ப்பது என்ற பிரச்சனையில் சரியான அரசியல் வழி ஒன்றைக் கைக்கொள்ளும் போது எமது கட்சி தன் வளர்ச்சியிலும் உறுதிப்பாட்டிலும் போல்ஷெவியமயமாக்கத்திலும் ஒருபடி முன்னேறுகின்றது; ஆனால், பூர்ஷ்வா வர்க்கத்துடனுள்ள உறவுகளில் தவறான வழி ஒன்றைக் கைக்கொள்ளும் போது எமது கட்சி தன் வளர்ச்சியிலும் உறுதிப்பாட்டிலும் போல்ஷெவியமயமாக்கத்திலும் ஒருபடி பின்னேறுகின்றது.அதுபோலவே, எமது கட்சி புரட்சிகர ஆயுதப் போராட்டப் பிரச்சனையைச் சரியான முறையில் கையாளும்போது தன் வளர்ச்சியிலும் உறுதிப்பாட்டிலும் போல்ஷெவிய மயமாக்கத்திலும் ஒருபடி முன்னேறுகிறது; ஆனால், அந்தப் பிரச்சனையைத் தவறாக கையாளும்போது அது ஒருபடி பின்னேறுகிறது. இவ்வாறு பதினெட்டு ஆண்டுகளாக, கட்சியின் அமைப்பும் போல்ஷெவியமயமாக்கமும் அதன் அரசியல் வழியுடன் ஐக்கிய முன்னணி, ஆயுதப் போராட்டம் ஆகிய பிரச்சனைகளைச் சரியாக அல்லது தவறாகக் கையாள்வதுடன் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த முடிவு எமது கட்சியின் பதினெட்டாண்டுக் கால வரலாற்றில் தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றது
சீனப் புரட்சியின் மகத்தான சாதனையுமாகும். மூன்று மந்திர ஆயுதங்களில் ஒவ்வொன்றையும், மூன்று பிரச்சனைகளில் ஒவ்வொன்றையும் இங்கே சுருக்கமாக ஆராய்வோம். பூர்ஷ்வா வர்க்கத்துடனும் பிறவர்க்கத்துடனும் சீனப் பாட்டாளி வர்க்கத்திற்குள்ள ஐக்கிய முன்னணி கடந்த பதினெட்டு ஆண்டுகளில் மூன்று வேறுபட்ட சூழ்நிலைகளில் மூன்று வேறுபட்ட காலகட்டங்களுக்கூடாக வளர்ச்சி அடைந்திருக்கின்றது. அதாவது, 1924 ஆம் ஆண்டுக்கும் 1927 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட முதலாவது மாபெரும் புரட்சி 1927 ஆம் ஆண்டுக்கும் 1937 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட நிலப்புரட்சிப்போர் தற்போதைய ஜப்பானிய எதிர்ப்பு போர். இந்த மூன்று கட்டங்களினதும் வரலாறு பின்வரும் நியதிகளை நிரூபித்திருக்கின்றது:சீனா உட்படுத்தப்பட்டுள்ளதான அந்நிய அடக்குமுறை அடக்குமுறைகளிலெல்லாம் மிகப் பெரியதாய் இருப்பதன் காரணமாக, சீனத் தேசிய பூர்ஷ்வா வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கும் நிலப்பிரபுத்துவ யுத்தப் பிரபுகளுக்குமெதிரான போராட்த்தில் குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட அளவிற்குப் பங்குபெறும். ஆகவே, அப்படிப்பட்ட சமயங்களில் பாட்டாளிவர்க்கம் தேசிய பூர்ஷ்வா வர்க்கத்துடன் ஐக்கிய முன்னணியொன்றை அமைத்து அதை இயலுமானவரை நிலைநிறுத்த வேண்டும்.சீனத் தேசிய பூர்ஷ்வா வர்க்கம் தன் பொருளாதார அரசியல் உறுதிப்பாடின்மை காரணமாக, பிற சரித்திர சூழ்நிலைகளில் ஊசலாட்டமும் மாறும் இயல்பும் உள்ளதாகும். ஆகவே சீனாவின் புரட்சிகர ஐக்கியமுன்னணியின் அமைப்பு தொடர்ந்து எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாக இராததோடு மாறக் கூடியதாயுமிருக்கின்றது. தேசிய பூர்ஷ்வா வர்க்கம் ஒரு காலத்தில் அதில் பங்கு ஏற்கலாம். இன்னொரு காலத்தில் பங்கு ஏற்காமலிருக்கலாம்.ஆயுதப் போராட்டம் எமது அரசியல் வழியின் ஒரு முக்கிய பகுதியாகும். பதினெட்டு ஆண்டுகளாக, எமது கட்சி ஆயுதப் போராட்டம் நிகழ்த்தப் படிப்படியாகக் கற்று அதில் ஊன்றி நின்றுள்ளது. சீனாவில் ஆயுதப்போராட்டம் இல்லாவிட்டால், பாட்டாளி வர்க்கத்துக்கு எந்தவித அந்தஸ்தும் கிடையாது; மக்களுக்கு எதுவித அந்தஸ்தும் கிடையாது; பொதுவுடைமைக் கட்சிக்கு எதுவித அந்தஸ்தும் கிடையாது.
மார்க்சிய லெனினியத் தத்துவத்திற்கும் சீனப்புரட்சியின் நடைமுறைக்குமிடையிலுள்ள ஐக்கியத்தை விபரமாகப் புரிந்து கொள்வதில் குறைபாடுடையதாயிருந்தது. இதனால் இந்தக் கட்டத்தின் கடைசிக் காலத்தில், அதாவது இந்தக் கட்டத்தின் நெருக்கடியான தருணத்தில், கட்சியின் தலைமைப் பகுதியில் அதிகாரம் செலுத்துபவராயிருந்தோர் புரட்சியின் வெற்றிகளை உறுதிப்படுத்துவதில் முழுக்கட்சியையும் வழிநடத்தத் தவறி, பூர்ஷ்வா வர்க்கத்தினால் ஏமாற்றப்பட்டுப் புரட்சிக்குத் தோல்வியைக் கொண்டு வந்தனர். இந்தக் கட்டத்தில் கட்சி அமைப்புகள் விரிவடைந்தன; ஆனால் அவை உறுதிப்படுத்தப்படவில்லை. அத்துடன் கட்சி உறுப்பினர்களும் ஊழியர்களும் சிந்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் திடமானவராக ஆவதற்கு உதவவும் அவை தவறிவிட்டன, பல புதிய கட்சி உறுப்பினர்களிருந்தனர்; ஆனால் அவர்களுக்குத் தேவையான மார்க்சிய லெனினியக் கல்வி அளிக்கப்படவில்லை. வேலையில் மிகுந்த அனுபவம் இருந்தபோதிலும் அது தகுந்த முறையில் தொகுக்கப்படவில்லை.பதவி வேட்டையாளர் பலர் கட்சிக்குள் நுழைந்தனர். ஆனால் அவர்கள் வெளியே இழுத்தெறியப்படவில்லை, கட்சி எதிரிகளினதும் நேச அணிகளினதும் சூழ்ச்சிகளாலும் சதிகளாலும் சுற்றிவளைக்கப்பட்டிருந்த போதிலும் அது போதிய விழிப்புணர்வுடையதாயிருக்கவில்லை. கட்சிக்குள் உற்சாகிகள் பெருந்தொகையாக முன்வந்தனர்; ஆனால் அவர்கள் தகுந்த சமயத்தில் கட்சியின் முதுகெலும்பாகப் பயிற்றப்படவில்லை. கட்சி ஆயுதந்தாங்கிய புரட்சிகரப் பிரிவுகள் சிலவற்றைத் தன் ஆணைக்கீழ் கொண்டிருந்தது; ஆனால் அதனால் அவற்றை இறுகப் பற்ற முடியவில்லை. அனுபவமின்மையும் புரட்சிகர அறிவாற்றலில் போதிய ஆழமின்மையும் மார்க்சிய லெனினியத் தத்துவத்தைச் சீனப்புரட்சியின் நடைமுறையுடன் சரியாக இணைப்பதில் தேர்ச்சி பெறாமையுமே இவையனைத்துக்குமான காரணங்கள்
இந்த மகத்தான போராட்டங்களின் போக்கில் எமது தோழர்களில் சிலர் சந்தர்ப்பவாதச் சேற்றில் மூழ்கினர் அல்லது குறைந்தது சிறிய காலத்திற்காவது அவ்வாறாயினர். திரும்பவும் அவர்கள் கடந்தகால அனுபவங்களிலிருந்து அடக்கமாகக் கற்றுக் கொள்ளாமையும் சீன வரலாற்று நிலைமை, சீனச் சமுதாய நிலைமை, சீனப்புரட்சியின் தனிச்சிறப்பியல்புகள், புரட்சியின் நியதிகள்ஆகியவற்றைப் புரிந்து கொள்ளாமையும் அவர்களுடைய மார்க்சிய லெனினியத் த்த்துவத்திற்கும் சீனப்புரட்சியின் நடைமுறைக்கும் இடையிலுள்ள ஒற்றுமையின் அறிவாற்றலின்மையுமே காரணங்கள் ஆகும்.ஆகவே இந்தக் கட்டம் பூராவும் கட்சியின் தலைமைப் பதவிகளில் இருந்த சிலர் அரசியல் மற்றும் அமைப்பின் சரியான வழிகளில் ஊன்றி நிற்கத் தவறினர். கட்சியும் புரட்சியும் ஒரு சமயம் தோழர் லி லி –கன்னின்“ இடது ” சந்தர்ப்பவாதத்தால் பாதிக்கப்பட்டன. இன்னொரு சமயம் புரட்சிகரப்போரிலும் வெண்பிரதேச வேலைகளிலுமிருந்த “ இடதுசாரி ” சந்தர்ப்பவதத்தால் பாதிக்கப்பட்டன
நாடு பூராவுமுள்ள மக்களிடையேயும் கட்சியின் செல்வாக்கு இன்னும் பரந்ததாகின்றது. இவையெல்லாம் மகத்தான சாதனைகள். இருப்பினும், எமது கட்சியின் புதிய உறுப்பினர் பலருக்கு இன்னும் கல்வியளிக்கப்படவில்லை. புதிய அமைப்புகள் பல இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. கட்சியின் புதிய உறுப்பினருக்கும் பழைய உறுப்பினருக்கும் இடையிலும் புதிய அமைப்புகளுக்கும் பழைய அமைப்புகளுக்குமிடையிலும் பெரிய வேறுபாடு இன்னும் நிலவுகின்றது. கட்சியின் புதிய உறுப்பினர் பலரும் ஊழியர் பலரும் இன்னும் போதியளவு புரட்சிகர அனுபவம் பெறவில்லை. அவர்கள் சீனாவின் வரலாற்று நிலைமை, சமுதாய நிலைமை ஆகியவை பற்றியும், சீனப்புரட்சியின் தனிச் சிறப்பியல்புகள் நியதிகள் ஆகியன பற்றியும் எதுவும் அறியாதவர்களாயிருக்கிறார்கள் அல்லது இன்னும் சிறிதளவேஅறிந்திருக்கின்றனர். மார்க்சிய லெனினியத் தத்துவத்திற்கும் சீனப் புரட்சியின் நடைமுறைக்குமிடையிலுள்ள ஐக்கியத்தைப் புரிந்து கொள்ளும் அவர்களின் ஆற்றல் விரிவானதாயுள்ளது என்று கூறுவதற்கே இடமில்லை.கட்சி அமைப்புகளின் விரிவாக்கத்தின்போது, மையக்குழு “ கட்சியைத் துணிச்சலாக வளருங்கள்; ஆனால் தீயவர்கள் ஒருவரையும் கட்சிக்குள் அனுமதிக்காதீர்கள் ” என்ற முழக்கத்தை வலியுறுத்தி முன்வைத்த போதிலும் உண்மையில் கணிசமான அளவு பதவி வேட்டையாளரும் எதிரிச் சதிகாரரும் கட்சிக்குள் நுழைவதில் வெற்றிக் கண்டனர். ஐக்கிய முன்னணி அமைக்கப்பட்டு, மூன்றாண்டுகள்நிலைநிறுத்தப்பட்ட போதிலும், பூர்ஷ்வா வர்க்கம் குறிப்பாக, பெரும் பூர்ஷ்வா வர்க்கம் எமது கட்சியை அழிப்பதற்கு இடைவிடாது முயல்கிறது. பெரும் பூர்ஷ்வா வர்க்கச் சரணாகதி வாதிகளினதும் பிடிவாதவாதிகளினதும் தலைமையிலான கடுமையான மோதல்கள் நம்மீது நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன; பொதுவுடைமைக் கட்சி எதிர்ப்புக் கூச்சலுக்கு ஒழிவில்லை. இவையெல்லாம் ஜப்பானிய ஏகாதிபத்தியத்திடம் சரணடைவதற்கும் ஐக்கிய முன்னணியைத் தகர்ப்பதற்கும் சீனாவைப் பின் நோக்கி இழுத்துச் செல்வதற்கும் தயார் செய்வதற்காகப் பெரும் பூர்ஷ்வா வர்க்கச் சரணாகதிவாதிகளாலும் பிடிவாதவாதிகளாலும் பயன் படுத்தப்படுகின்றன.
நாம் இன்று எமது கட்சியை எப்படிக் கட்டியமைக்க வேண்டும்? “ தேசிய அளவிலானதும் மக்கள் திரள் இயல்புள்ளதும் சிந்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அமைப்பு ரீதியிலும் முற்றாக உறுதிப்படுத்தப்பட்டதுமான போல்ஷெவிமயமான சீனப் பொதுவுடைமைக் கட்சியொன்றினை ” எம்மாலெப்படிக் கட்டியமைக்க முடியும்? கட்சியின் வரலாற்றை ஆராய்வது மூலமும், ஐக்கிய முன்னணி, ஆயுதப் போராட்டம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகவும், கட்சி கட்டுதல் தொடர்பாக, பூர்ஷ்வா வர்க்கத்துடன் ஐக்கியமாவது அதற்கெதிராகப் போராடுவது என்ற பிரச்சினையுடனும் எட்டாவது வழி இராணுவமும்புதிய நான்காவது சேனையும் ஜப்பானுக்கெதிரான கொரில்லா யுத்தத்தில் ஊன்றி நிற்பது, ஜப்பானிய- எதிர்ப்புத் தளப்பிரதேசங்களை நிறுவுவது ஆகிய பிரச்சினைகளுடனும் தொடர்புடையதாகவும்உள்ளவற்றை ஆராய்வதன் மூலம் இந்தக் கேள்விகளுக்கு விடை காண முடியும்.
எமது கட்சி எஃகைப் போன்று திடமானதாக அமையவும் எமது கட்சியின் கடந்தகால வரலாற்றிலுள்ள தவறுகள் திரும்பவும் ஏற்படுவதைத் தவிர்க்கவும், மார்க்சிய லெனினியத் தத்துவத்திற்கும் சீனப்புரட்சியின் நடைமுறைக்கும் இடையிலுள்ள ஒற்றுமையின் அடிப்படையில் எமது பதினெட்டு ஆண்டுக்கால அனுபவத்தையும் எமது தற்போதைய புதிய அனுபவத்தையும தொகுத்து, அதனைக் கட்சி முழுவதும் பரப்ப வேண்டும். இதுதான் எமது கடமை. ̒