கட்சிக்குள் பல்வேறு விதமான கருத்து
கட்சிக்குள் பல்வேறு விதமான கருத்து

கட்சிக்குள் பல்வேறு விதமான கருத்து

தோழர் மாஒசேதுங் நமக்குப் போதித்ததுபோல, “கட்சிக்குள் பல்வேறு விதமான கருத்துகளுக்கு இடையிலும் இடைவிடாது எதிர்ப்பும் போராட்டமும் நிகழ்கின்றன. இவை சமுதாயத்தில் வர்க்கங் களுக்கிடையிலும், புதியவை பழையவை இரண்டுக்குமிடையி லும் உள்ள முரண்பாடுகள் கட்சிக்குள் பிரதிபலிப்பதேயாகும். கட்சிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லாவிட்டால், அவற் றைத் தீர்ப்பதற்கான சித்தாந்தப் போராட்டங்கள் இல்லாவிட் டால், கட்சியின் வாழ்வு நின்றுவிடும்”
ஆகவே, கட்சிக்குள் நிகழும் சித்தாந்தப் போராட்டங் களுக்கு நாம் அஞ்சவோ, ஊக்கமிழக்கவோ கூடாது. பதிலுக்கு அவை அரசியல்ரீதியில் போராடித் தீர்க்கப்படவேண்டும். பாட் டாளி வர்க்கத்திலிருந்தும், இதர உழைப்பாளி மக்களிலிருந்தும் துணிகரமாகக் கட்சி உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் அதே வேளையில், பாட்டாளி வர்க்கத்தைச் சேராத அணிகளிலிருந்தும் உறுப்பினர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். பாட்டாளி வர்க்க அணிகளைச் சேராத பகுதிகளிலிருந்து வரும் உறுப் பினர்கள் நீண்ட அபேட்சக உறுப்பினராக இருந்தபின் கட்சி யில் சேர்க்கப்படவேண்டும்.
கட்சி இடைவிடாது அதன் அணிகளுக்குப் புதிய இரத்தத் தைச் செலுத்தி, பெயரளவில் மாத்திரம் அங்கத்தினராக உள்ள பயனற்ற தோழர்களை வெளியேற்றவேண்டும். தோழர் மாஓ சேதுங் அவர்கள் துலாம்பரமாகச் சுட்டிக் காட்டியதாவது:- ‘மனிதனுக்கு இரத்தக் குழாய்களும் நரம்புகளும் உள்ளன. அவற்றினூடாக இருதயம் இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகின் றது. சுவாசப் பைகளினுல் அவன் சுவாசிக்கின்றன். கரியமில வாயுவை வெளியேற்றி, பிராணவாயுவை உட்கொள்ளுகிருன். அதாவது, அவன் அழுக்கானவற்றை வெளியேற்றி, சுத்தமான வற்றை உட்கொள்கிருன், ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியும் அது போலவே பழையவற்றை வெளியேற்றி, புதியவற்றை உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் அது உயிர்த்துடிப்புடையதாய் இருக்கும். கழிவுப் பொருட்களை வெளியேற்றி, புதிய இரத்தத்தை உட் கொள்ளாவிட்டால், கட்சி விறுவிறுப்புடையதாக இருக்காது.”
புரட்சிகர ஊழியர்களும், எழுச்சிமிக்க உறுப்பினர்களும் இருப்பதோடு, கம்யூனிஸ்ட் கட்சி, அதன் சொந்த நாட்டின் ஸ்தூலமான புரட்சி நிலைமையுடன் மார்க்ஸிஸம்-னெனினிஸம்மாஒசேதுங் சிந்தனையின் பொது உண்மைகளை இணைக்கக்கூடிய, பரீட்சித்துப் புடம்போட்டெடுக்கப்பட்ட தலைமையையும் பெற் றிருக்கவேண்டும். சரியான தலைமையின் முக்கியத்துவத்தை தாம் எவ்விதத்திலும் நிராகரிக்கவோ, சிறுமைப்படுத்தவோ கூடாது: சரியான தலைமை இல்லாவிட்டால், சுக்கான் இல்லாத ஒரு கப் பல் கடலில் தத்தளிப்பதுபோல, கட்சியும் தத்தளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *