கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டு செப்டம்பர் வரை மத்திய அரசு ரூ.6.66 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், “கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாத முதல் 50 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது. இவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது ஏன் என பிரதமர் விளக்க வேண்டும்.
போலித்தனம், ஏமாற்றுத்தனம், தப்பி ஓடுதல் ஆகியவற்றை ஊக்கப்படுத்துவதை மத்திய அரசு கொள்கையாக வைத்திருக்கிறது. பிரதமர் பதில் அளிக்காதவரை ஏற்க முடியாது. மத்திய அரசின் தவறான முன்னுரிமைகள், நேர்மையற்ற நோக்கங்களைப் பிரதிபலிக்கிறது.
கரோனா வைரஸுக்கு எதிராக தேசம் போராடி வரும்போது, மாநிலங்களுக்கு வழங்கப் பணமில்லாமல் மத்திய அரசு இருக்கிறது. ஆனால், வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்களின் ரூ.68,307 கோடியைத் தள்ளுபடி செய்துள்ளீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
50 பேரின் கடனான ரூ.68 ஆயிரம் கோடி கணக்கியல் ரீதியாக தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அந்தப் பட்டியலையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது .
கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் விவசாயக் கடன் களை ரத்து செய்யும் கோப்பில் முதல் நாள் முதல் கையெழுத்திட்டார் முதலமைச்சர் ஜெயலலிதா. இதனால் அரசுக்கு 5,780 கோடி ரூபாய் நிதிப்பொறுப்பு ஏற்படும் என்று சொல்லப்பட்ட நிலையில், “கடன் தள்ளுபடி என்பது தமிழக அரசின் கண்துடைப்பு நாடகம். பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள விவசாயக் கடன் களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” எதிர்க்கட்சிகள் குரலெழுப்பி வருகின்றன.
விவசாயிகளுக்கான கடன் தள்ளுப் படி ஒரு நாடகமாகவே அரங்கேறிய்தாக உள்ளது செய்தி கீழ் உள்ள இணைப்பில்
கடந்த 2017-18-ம் நிதி ஆண்டில் அரசு வங்கிகள் ரூ.1.20 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளதாகவும், தனியார் வங்கிகள் ரூ.23,928 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒட்டுமொத்தமாக வங்கிகள் சார்பில் கடந்த நிதி ஆண்டில் ரூ.ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 93 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2016-17-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையைக் காட்டிலும் 61.8 சதவீதம் அதிகமாகும். 2016-17-ம் ஆண்டில் ரூ.89 ஆயிரத்து 48 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஒட்டுமொத்தமாக ரூ.4 லட்சத்து 80ஆயிரத்து 93 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 83.4 சதவீதம் அதாவது, ரூ.4 லட்சத்து 584 கோடி அரசு வங்கிகளால் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல்களை ஐசிஆர்ஏ வெளியிட்டுள்ளது. கீழ் உள்ள இணைப்பில் முழு செய்தியையும் காணலாம்.