தொடர்ந்து விவாதித்துக் கொண்டுள்ளோம் நான் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை நீங்கள் வேறு எதை எதையோ பேசுகின்றீர், பரவாயில்லை உங்களின் எல்லா கேள்விகளையும் அடுக்கி விடுங்கள் நான் பதிலளிக்க முயற்சிக்கிறேன்.
ட்ராட்ஸ்கியவாதியின் கேள்விகள் கீழே:-
1. ஸ்டாலின் அகிலம் கலைத்தது தவறு; அவர் கலைப்புவாதி; அகிலம் கலைத்ததால்தான் கம்யூனிச அமைப்புகள் பிளவுண்டன.
2. ஸ்டாலின்தான் கலைப்புவாதத்தின் தொடக்கம். அவர் சர்வாதிகாரி; பலரைக் கொன்ற கொலைகாரன்.
3.மாவோ அகிலம் கலைத்ததை ஆதரித்தார்; அகிலம் கட்ட முயற்சிக்கவில்லை; அவர் சர்வதேச பாத்திரம் ஆற்றவில்லை.
4. ஸ்டாலின்-மாவோவை விமர்சிக்காமல் கட்சி கட்ட முடியாது.
5. லெனின் சொன்னவாறு ஏன் ஐரோப்பா முழுதும் புரட்சி நடக்கவில்லை? தனிநாட்டில் புரட்சி சாத்தியமில்லை என்று டிராட்ஸ்கி முன்பே சொன்னார்.
6. லெனின் டிராட்ஸ்கியைத்தான் வாரிசாக பார்த்தார். ஸ்டாலினை எதிர்த்தார். லெனின் உயிலை தெரியுமா?
என் பதில்
முடியவில்லை உங்களின் ஏமாற்றுதனம் எல்லாம் எங்கிருந்துதான் எடுத்து வருகிறீர்கள் ஆதாரமற்ற குப்பைகளை.
ரசியாவிலும் சீனாவிலும் ஏற்பட்ட பின்னடைவுகளைப் பயன்படுத்திக் கொண்டு, அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளும் அவற்றின் அடிவருடி அமைப்பான பிராங்பர்ட் பள்ளியும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக மார்க்சியத்தையும் முதலாளிய பிற்போக்கு கருத்துகளையும் ஒன்றிணைக்கும் மார்க்சிய விரோத கலைப்புவாதத்தைப் பரப்பி, கம்யூனிச அமைப்புகளைப் பிளவுபடுத்தின. இது, புதிய இடது மற்றும் பின்நவீனத்துவ சூனியவாதப் பிரச்சாரம் பலப்படுவதற்கு வழி வகுத்தது. இவை அனைத்திற்கும் ஸ்டாலின் எதேச்சதிகாரி என்ற பொய் பிரச்சாரமே துவக்கப் புள்ளியாக இருந்தது.
ஸ்டாலின் மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் ஒவ்வொரு எலும்புத்துண்டை வீசுகிறது ஏகாதிபத்தியம். அதை வாயில் கவ்விக் கொண்டுதான் டிராட்ஸ்கியர்கள் ஸ்டாலின் சர்வாதிகாரி என பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஸ்டாலின் சர்வாதிகாரத்தை எதிர்ப்பது எனும் பெயரில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்ப்பதே புதிய இடது அரசியலின் அடி நாதமாகும்.
அதாவது தனி நபர் சர்வாதிகாரம் என்ற டிராட்ஸ்கியின் கருத்துகளை புதிய இடது கும்பல் எடுத்தாள்கிறது. ஸ்டாலினின் எதேச்சதிகார எதிர்ப்பு என்ற பிரச்சாரத்திற்கும் டிராட்ஸ்கியின் அவதூறுகளையே புதிய இடதுகள் பயன்படுத்தி வருகின்றன.
டிராட்ஸ்கியிசத்தை காவுத்ஸ்கிவாதம் என்றார் லெனின். காவுத்ஸ்கியிசம் என்பது ‘அதீத ஏகாதிபத்தியம்’ பேசி, ‘தனி நாட்டில் புரட்சி’ என்ற லெனினியத்தை மறுத்து, உலகு தழுவிய புரட்சியை முன்வைக்கும் லெனினிய விரோத கோட்பாடாகும். டிராட்ஸ்கியிசத்தின் ‘நிரந்தரப் புரட்சியும்’ உலகப்புரட்சி பேசி தனி நாட்டு புரட்சியை மறுக்கும் லெனினிய விரோத நிலைபாடே இந்த ட்ராட்ஸ்கியர்களின் நிலைப்படாகும்.
தொடரும் தேவைப்படும் பொழுது..