ஒரு ட்ராட்ஸ்கியவாதியுடன் நேர்காணல்-2
ஒரு ட்ராட்ஸ்கியவாதியுடன் நேர்காணல்-2

ஒரு ட்ராட்ஸ்கியவாதியுடன் நேர்காணல்-2

நான்- ட்ராட்ஸ்கியை பற்றி லெனின் என்ன சொன்னார் தெரியுமா?

ட்ராட்ஸ்கியவாதியின் பதில்-  அகிலம் என்ற ஒன்று இல்லாமல் எந்த ஒரு தனி நாட்டிலும் கட்சி கட்ட முடியாது புரட்சி நடத்த முடியாது உங்களுக்கு தெரியுமா?

நான்- ட்ராட்ஸ்கியை பற்றி லெனின் என்ன சொன்னார்?

ட்ராட்ஸ்கியவாதியின் பதில்- ஏப்ரல் தீசஸ் தயாரித்தார், அக்டோபர் புரட்சியை நடத்தினார் உங்களுக்கு தெரியாதா?

நான்- ட்ராட்ஸ்கியை பற்றி லெனின் என்ன சொன்னார் தெரியுமா?

ட்ராட்ஸ்கியவாதியின் பதில்- லெனினுக்கு பின் ட்ராட்ஸ்கியைதான் தலைமை பொறுப்புக்கு நினைத்தார் ஆனால் அராஜகவாதி ஸ்டாலின் தலைமைக்கு வந்து விட்டார்.

நான் – புரியவில்லை உங்களின் ட்ராட்ஸ்கிய புராணம், நான் கேட்ட கேள்வியை விட்டு விட்டு எதை எதையோ பேசுகின்றீர்.

ட்ராட்ஸ்கியவாதியின் பதில்- ஐநாவில் சேர்ந்தமை முதலாளித்துவ ஏகாதிபத்திய  கூட்டு சேர்ந்தார்.

நான்- கேட்ட கேள்விகளுக்கு எந்த பதிலுமே காணோம், புதிய கதை எழுதிக் கொண்டுள்ளீர்.

ட்ராட்ஸ்கியவாதியின் பதில்-லெனினே ட்ராட்ஸ்கியை கேட்டுதான் எதையும் செய்வார் தெரியுமா?

நான் – உங்களை பற்றி ஒரு விரிவான பதில் கொடுத்து அம்பலப்படுத்த்னால் மட்டுமே உங்களின் மார்க்சிய விரோத முகமூடிகள கிளித்தெறிய முடியும்.
இனி என்பதிலாக.
“AGAINST TROTSKYISM ” நூலில் லெனின் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதை போல் அகிலமும் ட்ராட்ஸ்கியின் கட்சி விரோத போக்கை கண்டித்துள்ளது. மேலும் அவ்வப்போது நடந்த வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்துள்ளனர்.
அதன் முன்னுரையில்:-

லெனினின் படைப்புகளில் இருந்து (அவற்றின் முழுமையான அதாவது ட்ராட்ஸ்கியத்தை எதிர்த்த பகுதிகள்) மற்றும் போல்ஷிவிக் கட்சியின் மாநாடுகள் சி.சி.யின் முழுமையான கூட்டங்களிலும் எடுக்கப்பட்ட முடிவுகள், ட்ரொட்ஸ்கிசம் ஒரு மார்க்சிச எதிர்ப்பு, சந்தர்ப்பவாத போக்கு என்பதைச் சுட்டிக் காட்டுகிறது, அதன் மோசமான நடவடிக்கைகளைக் காட்டுகிறது கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக மற்றும் இரண்டாம் சர்வதேச சந்தர்ப்பவாத தலைவர்களுடனும், பல்வேறு நாடுகளின் தொழிலாளர் கட்சிகளில் திருத்தல்வாத, சோவியத் எதிர்ப்பு போக்குகள் மற்றும் குழுக்களுடனும் அதன் உறவுகளை அம்பலப்படுத்துகிறது. உள்ளூர் கட்சி அமைப்புகள் நிறைவேற்றிய தீர்மானங்கள் ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான சி.பி.எஸ்.யுவின் ஒற்றுமையை பறை சாற்றுகிறது.
கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனல் ஏற்றுக்கொண்ட முடிவுகள் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்திற்கு எதிரான சோவியத் தொழிற்சங்கங்களின் தீர்மானங்கள் ஆகியவை இதில் அடங்கும். குறிப்புகள் இந்த புத்தகத்தில் வெளியிடப்பட்ட பொருளைப் பயன்படுத்த உதவுகின்றன. ஆங்கில மூலம்
ஆக ட்ரொட்ஸ்கியம் என்பது ஒரு மார்க்சிய எதிர்ப்பும், குட்டிமுதலாளித்துவ சந்தர்ப்பவாத போக்குமே என்பதனை ஆரம்ப வரிகளே தெளிவுப் படுத்தி விட்டது. ஆகவே இங்குள்ள சந்தர்பவாத மார்க்சிய விரோத கூட்டம் கூப்பாடு போடுவதில் உண்மையில்லை, இவர்களின் எழுத்தும் பேச்சும் முழுக்க முழுக்க புரட்சிகர சக்திகளை சீர்குலைக்கும் வேலையே… ட்ராட்ஸ்கியம் மார்க்சியத்தையோ லெனினியத்தையோ தூக்கி பிடிக்கவில்லை மாறாக புரட்சியை சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டதை தவிற வேறொன்றும் செய்யவில்லை.
சோவியத் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க ட்ராட்ஸ்கி செய்த துரோகங்களை பார்ப்போம்.

அடுத்தடுத்த கட்சி விரோத செயல்களால் ட்ராட்ஸ்கியையும் அவரது ஆதரவாளர்களையும் 1926 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ந்தாவது காங்கிரஸில் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டனர்.

1934ம் ஆண்டு கட்சியின் முன்னணித் தலைவர் கிரோவ்வை படுகொலை செய்யப் படுகிறார், இதிலிருந்தே அவர்களின் அரசியல் தேவை தெரிந்தவையே.

1936 டிசம்பர் 22 ந் தேதி சோவியத் சதி வழக்கில் விசாரணையின் போது ராடக் கூறியது, ட்ராட்ஸ்கி தனக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஸ்டாலின் அரசாங்கத்தை நீக்குவது முடியாத காரியம் ஆகவே ஜெர்மன் மற்றும் ஜப்பான் உதவியுடன் முதலாளித்துவ மனோபாவத்தை பூரணமாக கைவிடாத மக்களையும் கூட்டு பண்ணையில் அதிருப்தி அடைந்துள்ள மக்களையும் மேலும் குலாக்குகளுக்கு கூட்டு பண்ணைகளை விட்டு வெளியேற துடிக்கும் மிராசுதாரர்களையும் பயன்படுத்தி ஜெர்மன் ஜப்பான் உதவியுடன் ஒப்பந்தம் அடிப்படையில் சோவியத் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் திட்டத்தை வெளிபடுத்தியுள்ளதை வெட்டவெளிச்சமாக்குகிறார்.

அடுத்த சாட்சி பிளாட்கோவுடன் 1935 டிசம்பரில் பேசிய போது ட்ராட்ஸ்கி ஜெர்மன் நாஜிக் கட்சியின் தலைவர் ஒருவருடன் செய்துள்ள ஒப்பந்தம், ஜெர்மனுக்கு சோவியத்தின் சில பகுதிகளை கொடுக்கவும், ஜெர்மன் முதலாளிகள் ரஸ்யாவில் தொழில் தொடங்க சலுகைகள் அளிக்க, யுத்த காலத்தில் ஜெர்மனியின் தேவைகேற்ப்ப சோவியத்துக்கு எதிரான பணிகளை செய்தல் என சோவியத் மக்களுக்கு எதிரான சதிகள் வெளிபடுத்தினர்.

இன்று 4ம் அகிலம் ட்ராட்ஸ்கிசம் என்றால் அவை மார்க்சியமாகுமா? மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கி உயிர் வாழும் பாசிஸத்தை ஆரத் தழுவிய ட்ராட்ஸ்கி மார்க்சியவாதியே அல்ல இவன் எதிர் புரட்சியாளனே….

தோழர் லெனின் மறைவிற்குப் பின் அவரது கருத்துக்களை எதிர்த்தோரை அரசியல் சித்தாந்த ரீதியில் எதிர்ப்பதில் ஸ்டாலின் முன் நின்றார். தனி ஒரு நாட்டில் சோசலிசம் சாத்தியமே என்பதை கட்சிக்குள்ளும் வெளியிலும் பேசி எழுதி அணி திரட்டினார்.

லெனினிசத்தின் அடிப்படைகள் என்னும் நூலை எழுதினார். இது உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இன்றளவும் உதவுகிறது. லெனினியத்திற்கு மாற்றாக ட்ராட்ஸ்கியிசம் முன் வைக்கப்பட்டதை இந்நூலில் முறியடித்தது.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *