ஒரு ட்ராட்ஸ்கியவாதியுடன் நேர்காணல்-1
ஒரு ட்ராட்ஸ்கியவாதியுடன் நேர்காணல்-1

ஒரு ட்ராட்ஸ்கியவாதியுடன் நேர்காணல்-1

நான்-                                             ட்ராட்ஸ்கியின் தத்துவம் என்னே?

ட்ராட்ஸ்கிவாதியின் பதில் – ஸ்டாலின் மாவோ கலைப்புவாதிகள் அதனை பேசலாம்.

நான்-                                             – நான் கேட்ட கேள்விக்கு பதில் இவை இல்லையே.

ட்ராட்ஸ்கிவாதியின் பதில் – மூன்றாம் அகிலத்தை ஸ்டாலின் கலைத்தார் மாவோ அகிலத்தை கட்டவில்லை ஆக இருவருமே கலைப்புவாதிகள்

நான்-                                             – நான் கேட்ட கேள்வியை நீங்கள் புரிந்துக் கொள்ளவில்லை.

ட்ராட்ஸ்கிவாதியின் பதில் – ஸ்டாலின்ஸ்டுகளுக்கு ஒன்றுமே தெரியாது. ஸ்டாலின் அய்நாவில் பங்கெடுத்தார் அவர் ஏகாதிபத்தியங்களுடன் சேர்ந்துக் கொண்டார் உங்களுக்கு தெரியாதா?

நான்-                                             – அதை பற்றி விளாவரியாக பேசுவோம் நான் கேட்ட கேள்விக்கு பதில் இவையில்லையே.

ட்ராட்ஸ்கிவாதியின் பதில் – ஸ்டாலின் ரசிய மக்களை கொலை செய்தார் ஏன் ட்ராட்ஸ்கியையே கொலை செய்தார் தெரியுமா?

நான்-                                            – நான் கேட்ட கேள்விக்கு பதில் தராமல் வெறும் ஸ்டாலின் எதிர்ப்பு மாவோ எதிர்ப்பு மட்டும்தான் ட்ராட்ஸ்கிவாதிகளிலின் பங்களிப்போ?

ட்ராட்ஸ்கிவாதியின் பதில் – ஸ்டாலினிஸ்ட்டுகளுக்கு நாங்கள் வைக்கும் வாதம் புரியாது.

நான்                                              – இசம் என்றால் என்ன? எப்ப பார்த்தாலும் ஸ்டாலினிசம் ஸ்டாலினிசம் என்கிறீர்களே அவைதான் என்ன?

ட்ராட்ஸ்கிவாதியின் பதில் – அகிலத்தை கலைத்தது, அகிலத்தை கட்டாதது, ட்ராட்ஸ்கியை கொன்றது அய்நாவில் இணைந்தது இவையெல்லாம் என்னவாம்.

நான்                                               – நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் தருகிறேன் ஆனால் எனது ஒரே கேள்விதான் ட்ராட்ஸ்கியின் தத்துவம் என்னே அதை மட்டும் எனக்கு விளக்குங்கள்?

ட்ராட்ஸ்கிவாதியின் பதில்- ஸ்டாலினிஸ்டுகளுக்கு ஸ்டாலினை பற்றி மட்டுமே தெரியும் வேறொன்றும் தெரியாது!

நான்                                           – இறுதி வரை நான் கேட்ட கேள்விக்கு பதிலே காணோம் பரவாயில்லை நானே உங்களின் கேள்விகளுக்கு பதில் தருகிறேன் மேலும் ட்ராட்ஸ்கியின் உண்மையான பணியையும்  விளக்க முயற்சிக்கிறேன்.

அவருடனான விவாதத்தில் நான் பேசியவை கீழே:- அகிலம் கலைக்கப் பட்டதை பற்றி விளக்கம்.

கம்யூனிஸ்ட் அகிலம் அமைக்கப்பட்டபோது உலகின் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியத்தை புரிந்து கொள்வதிலும் அமைப்பு ரீதியிலும் பலவீனமாக இருந்தனஅனுபவம் மிக்க தலைமை ஊழியர்களும் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்ததுஇந்நிலையில் கூட்டு மைய உறுப்பான அகிலத்தின் வடிவில் எல்லா நாட்டு கட்சிகளின் கூட்டு முயற்சியின் மூலமே தங்களின் நாடுகளில் புரட்சி பணிகளையும்  யுத்த தந்திர செயல் தந்திர பணிகளையும் வகுத்து செயல்பட்டனர்

மூன்றாம் அகிலத்தின் ஏழாம்காங்கிரஸ்மூலம் ஒவ்வொருநாட்டின் கம்யூனிஸ்ட்கட்சியும்கொள்கைரீதியிலும் அமைப்புரீதியிலும் திடப்பட்டது ஒவ்வொரு நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியும் வர்க்கப்போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திச் செல்வதில் பெருத்த அனுபவம் பெற்று இருந்தன அவற்றில் உறுப்பினர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது.   மார்க்சியத்தின் பால் பயிற்றுவிக்கப்பட்ட தலைமை ஊழியர்கள் அதனிடத்தில் இருந்தனர் இந்தக்கட்சிகளின் நடவடிக்கைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போனது எனவே தொலை பேசி நிலைமைகளையும் மரபுகளையும் கருத்தில் கொள்வது மிகவும் அவசியமானது.

இந்நிலையில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அரசியல் செயல் தந்திர தீர்மானங்களை வகுப்பதிலும் முதன்மை கவனம் எடுத்துக் கொள்வதிலும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு நாட்டினுடைய ஸ்தூலமான நிலைமைகளையும் தனித் தன்மைகளையும் ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் உள்விவகாரங்களில் ஸ்தாபன பிரச்சினைகளில் நேரடியாக தலையிடுவதை தவிர்க்க வேண்டுமென்றும் அகிலத்தின் செயற்குழு கூறியது .

யுத்தத்தின் நிலைமைகள் தனித்தனி நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடுகளில் பெருத்த வேறுபாடு  களும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பல்வகைப்பட்ட பணிகளும் காரணமாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு செயல்  சுதந்திரமும் சமயோசிதமும் தேவைப்பட்டது.

பாசிசத்திற்கு எதிராக எல்லா தேசபக்த சக்திகளையும் ஒன்று படுத்துவதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் சுதந்திரமாக இயங்குவது தேவைப்பட்டது பாசிச எதிர்ப்பு போரில் பங்கெடுத்த சில வட்டாரங்கள் சோவியத்தையும் அகிலத்தையும் சந்தேகத்துடன் நோக்கின கம்யூனிஸ்டுகளும் ஒத்துழைக்க இவை அச்சம் கொண்டன.

பாசிச எதிர்ப்பு சக்திகளை ஒன்று படுத்துவதற்கு இருந்த எல்லா தடைகளையும் அகற்றுவது பாசிசத்தின் மீதான வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது அது மட்டுமல்லாமல் பகைவர்கள் மீது விரைவிலும் விரைவாக வெற்றி பெறும் பொருட்டு நாடு அனைத்திற்கும் உற்சாகமூட்டி மக்களை அணி திரட்டும் பணி ஒவ்வொரு தனி நாட்டின் அனைத்து தொழிலாளர் இயக்கத்தின் முன்னணி படையால் தனது அரசின் வரம்புக்குள் மிகச்  சிறப்பாகவும் பயனுள்ள விதத்திலும் நிறைவேற்றப்பட முடியும் என செயற்குழு கூறியது.

இந்த நிலையில் கம்யூனிஸ்ட் அகிலத்திலிருந்த பல நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது ஆளுவோர் அவதூறு  பரப்பினர் இந்த அவதூறுகளை மிகவும் சிறப்பாக செய்தது நாஜிக்களின் பிரசாரம்  

இதனை கருத்தில் கொண்டே டிமிட்ரோவை தலைவராக கொண்ட மூன்றாம் அகிலம் எல்லா நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும் கருத்து கேட்டது அப்பொழுது யுத்த சூழல் என்பதால் ஆறு மாத இடைவெளியில் கருத்து கேட்டு அறிந்து அகிலம் கலைக்கப்பட்டது.

 அகிலம் ஒன்று இல்லாமல் எந்த தனி ஒரு நாட்டிலும் கட்சி கட்ட முடியாது புரட்சி யும் நடத்த முடியாது என்பதால் அவர்கள் முதல் சொல்ல வந்த விஷயம்.

உண்மையில் இதற்கு பதிலாக பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமை பற்றிய கம்யூனிஸ்ட்கள் யாரும்  மறுப்பதற்கில்லை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வடிவங்களைக் கையாள வேண்டியிருக்கும் என்பதுதான் உண்மைஇதனைப் பற்றி விரிவாக காணும் முன் சில குறிப்புகளோடு சுருக்கமாக காண்போம் . 

1917 ரஷ்ய புரட்சிக்கு பின் அதாவது  சோசலிச அரசு படைக்கப்பட்ட பிறகு லெனின் தலைமையில் மூன்றாம் அகிலம் அமைக்கப்படுகிறது ஒரு தனி நாட்டில் சோசலிசப் புரட்சியை நடத்தி முடிப்பது என்பது உலக சோசலிச புரட்சியின் துவக்கமாக அமைகிறதுஎனவே ஒவ்வொரு நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மையான பணி தன் நாட்டு அரசை தூக்கி எறிவது பற்றியும் அதற்கான திட்டம் மற்றும் செயல் திட்டங்களை வகுப்பது தான் என்பதை புரிந்து இருத்தல் அவசியமாக இருக்கும்.  அதேபோலதான் மூன்றாம் அகிலம் கலைக்கப்பட்ட பிறகுதான் சீனாவும் வியட்நாமும் கொரியா கியூபா போன்ற நாடுகள் விடுதலை அடைந்தனஏகாதிபத்திய காலகட்டத்தில் ஏகாதிபத்திய முரண்பாடுகள் இந்த மாமேதை லெனின் அவர்கள் சோசலிச புரட்சி ஆரம்பத்தில் ஒரு சில நாடுகளில் அல்லது தன்னந்தனியான ஒரு நாட்டில் வெற்றி பெறுவது சாதி என்ற முடிவுக்கு வந்தார். 1915 ல் லெனினின் இந்த ஆராய்ச்சியானது மாற்றத்தை வளர்க்கவும் புதிய கண்டுபிடிப்பாகும் இருந்தது.  அன்றே ஒருவர் இதனை எதிர்த்தார் இருந்தும் அவர் ரஷ்ய புரட்சி புயலில் சிக்கிக் கொண்டு தானும் ஒரு புரட்சியாளனாக மேல் வந்தார்பின்னர் தனக்கு கிடைக்கும் நேரமெல்லாம் சோவியத்தை நிர்கதியாக பல்வேறு சதி திட்டங்களை தீட்டினார் அதை தான் இங்குள்ளோர் தூக்கி நிறுத்துகின்றனர் மார்க்சியம் என்று . அவர்தான் ட்ராட்ஸ்கி.

இந்த அவதூறுகளை நாஜிகளின் பிரசாரம் பாசிச எதிர்ப்பு கூட்டணியில் இருந்த முதலாளித்துவ வட்டாரங்களை கம்யூனிஸ்டு அபாயம் காட்டி பயமுறுத்தியது ஹிட்லர் எதிர்ப்பு கூட்டணியில் பிளவு ஏற்படுவதற்கு ஏராளமான வேலைகள் நடைபெற்றது அதுமட்டுமில்லாமல் பாசிசத்தால் கைப்பற்றப்பட்ட நாடுகளில் பாசிச எதிர்ப்பு தேசிய கூட்டணிகளை உடைக்கவும் இது பயன்பட்டது.

மாஸ்கோ பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவது என்றது.

வெளிநாடுகளிலிருந்து வரும் ஆணைகளுக்கு ஏற்ப கம்யூனிஸ்டுகள் செயற்படுகின்றனர் என்றனர்

வேற்றார் நலனை பாதுகாக்கவும்அன்னியர் கட்சிகள் என்றும் பிற்போக்கு கும்பல்கள் பிரசாரம் செய்து வந்தது அகிலம் மீதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீதும் பலவிதமான கட்டுக்கதைகளை பரப்பி கம்யூனிஸ்ட்களிடமிருந்து வெகு மக்களை பிரித்திட ஏராளமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன .

மேற்கண்ட எல்லா பிரச்சினைகளையும் கணக்கில்கொண்டு அகிலத்தின் செயற்குழு 1943இல் அகிலத்தை  கலைக்கும் பிரச்சினையும் முன்வைத்தது.

1943 மே 13 இல் அகிலத்தின் தலைமை செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

அதில் தலைமைக்குழு உறுப்பினர்கள் டிமிட்ரோவ் அகிலம் கலைப்பதற்கான தீர்மானத்துக்கு மசோதாவை முன்வைத்தார் சுதந்திரமான கருத்துப் பரிமாற்றம் வேண்டும் என்றும் கூறினார் .

அகிலம் கலைப்பது அரசியல் நோக்கில் பொருத்தம் உள்ளதா?

 சாதகமான தருணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா?

அகிலம் கலைப்பு மசோதாவில் போதுமான ஆதாரங்கள் உள்ளனவா ?.

என்ற அடிப்படையில் விவாதம் நடந்தது.  அடுத்து யுத்த சூழல் காரணமாக காங்கிரஸ் கூடுவது இயலாததால் அகிலம் கலைப்பதற்கு 31 நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்து பதில் அளித்திருந்தது.எல்லா நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தீர்மானத்தின்படி தெரிந்த பின் 3அகிலம்  கலைப்பதை 1943 ஜூன் எட்டாம் தேதியில் தலைமைக் குழு அறிவித்ததுஅதை ஒட்டி தலைமைக்குழு செயற்குழு கண்காணிப்பு கமிஷன் ஆகியவை கலைக்கப்பட்டது.

நிலைமை இப்படி இருக்க  இங்கே அகிலம் கலைக்கப்பட்டதற்கு ஒரு தனிநபரின் செயல் போல சாடி அவர் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்துவது ஏற்புடையவைதானா?இவர்களின் உண்மையான நோக்கம் என்ன?.

தொடரும்…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *