ஒரு அரசு அதிகாரியுடன் உரையாடல்
ஒரு அரசு அதிகாரியுடன் உரையாடல்

ஒரு அரசு அதிகாரியுடன் உரையாடல்

அரசு பற்றி அறியாமல் எதை எதையோ எழுதி திரியும் சிலர் புரிந்துக் கொள்ள கதை வடிவில் இந்தப் பதிவு எழுத தோன்றியது.ஒரு அரசு அதிகாரியுடன் உரையாடல் நடத்தும் பொதுவுடைமையாளரின் பதிவு….”நீ ஒரு அரசாங்க அதிகாரியாக எவ்வளவு காலம் இருக்கிறாய்?”முப்பத்து மூன்று வருடங்கள்” “எந்த ஆட்சிக் காலத்தில் நீ நியமிக்கப்பட்டாய்?” “முன்னால் ஆட்சியில் இருந்த கட்சியால்!.””ஆனால் இன்றும் உங்கள் பதவி மாறவில்லை” .”இல்லை. எமது பதவி நிரந்தரமானது” “இப்போது நீ ஒரு செயலாளர் இல்லையா?” “ஆம்!””நீ இந்தப்பதவிக்கு வந்தபின் எத்தனை அரசாங்கங்கள் மாறி விட்டன?””நாலு!” “எத்தனை கட்சி அரசாங்கங்கள் மாறி மாறி வந்துள்ளன” “இருகட்சிகள்!” “ஆனால் உன்னுடைய நிலை மாறவில்லை. நீ யாருக்காக சேவை செய்கிறாய்?””அரசாங்கத்துக்காக!” “அரசாங்கம் யாருக்காக என்று கூறப்படுகிறது?” “தெரியும். மக்களுக்காக!” “நீ ஜனநாயகத்தைப் பற்றி என்ன கருதுகிறாய்?” “அது ஒரு சிறந்த அரசியல் சித்தாந்தம். ஆங்கிலேயர் நமக்குத் தந்த பரிசு. அதுதான் நமது நாட்டுக்குப் பொருத்தமானது. அதை நாம் பலப்படுத்தினால் தான் எல்லாரும் சுதந்திரமாக சுபீட்சமாக வாழ முடியும்”.”இது யார் உனக்குச் சொல்லித் தந்தது?”“எனது பட்டப்படிப்புக்கு அரசியல் ஒருபாடம். மேலும் ஜனநாயகத்தின் நன்மைகளை நான் அனுபவிக்கின்றேன்!””நீ எந்தக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராகவும் வேலை செய்துள்ளாயா? “இல்லை.””அரசாங்கங்களின் கொள்கைகளை நடை முறைப்படுத்துவதுதான் என் வேலை” “நிர்வாக இயந்திரம் அரசாங்கத்தைப் பாதுகாப்பது அது அரசாங்கத்துக்கு எதிராக இயங்கினால் அரசாங்கம் இயங்க முடியாது என்பது நான் அறிந்தவை”.“ஆம் அதிகாரத்துவம் உண்மையில் நிர்வாக அதிகாரிகளிடம் தான் உண்டு”.”இருகட்சிகள் அரசாங்கத்தில் மாறி மாறி ஆட்சி நடத்துவதாகக் கூறினீர், அவற்றின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளீர். அவற்றின் கொள்கைகளில் என்ன வேறுபாட்டைக் கண்டீர்”“அப்படி ஒரு பெரிய வேறுபாடும் இல்லை. அடிப்படையில் வித்தியாசம் இல்லை. ஏனென்றால் அவை ஜனநாயக அரசாங்கங்கள் தானே?””இதிலிருந்து நீ என்ன கருதுகிறாய்?” “ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது!” “யாருடைய ஜனநாயகம் என்று நினைக்கிறாய்?”மக்கள் ஜனநாயகம்!”“அதுதான் பொய். மக்கள் என்றால் யார்?” “இந்த நாட்டில் உள்ள அனைவரும்!”“இல்லை. மனிதர்கள் எல்லாம் மக்கள் இல்லை. மனிதர்கள் வர்க்கங்களாகப் பிரிந்துள்ளார்கள். சுரண்டும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கம் என பிரிந்துள்ளார்கள். இதில் சுரண்டப்படும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தான் மக்கள். சுரண்டும் வர்க்கம் மக்களின் எதிரிகள். இன்று சுரண்டும் வர்க்கம் தான் ஆளும் வர்க்கமாக உள்ளது. உண்மையில் மக்கள் அல்ல.” “அது எனக்குப் புரியாது!” “உனக்குப் புரியாவிட்டால் என்ன, புரிந்தால் என்ன உண்மை இதுதான்! ஆகவே ஆளும் வர்க்கத்தின் ஜனநாயகம் தான் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று திடமாகக் கூறுகிருறோம்!””அது எனக்குத் தெரியாது!” “உன் வாக்கு மூலமே உண்மையைக் கூறுகிறது”. “அரசாங்கங்கள் மாறியும் நடைமுறைக் கொள்கையில் வித்தியாசம் இல்லை என்று. அதன் அர்த்தம் என்ன? கட்சிகள் மாறியும் ஆளும் வரிக்கம் மாறவில்லை. ஆட்கள் மாறியுள்ளார்கள், அடிப்படைச் கொள்கைகள் மாறவில்லை. அதாவது ஆங்கிலேயர் விட்டுச் சென்ற சொத்துடமை அமைப்பு, முதலாளித்துவ அமைப்பு மாறவில்லை. அந்தச் சொத்துடைமையை காக்கின்ற வர்க்கம் தான் ஆட்சியில் தொடர்ந்தும் இருக்கிறது என்பது புரியவில்லையா?”“எனக்கு இந்த அரசியல் புரியவில்லை”“இதுதான் மக்கள் அரசியல். உனக்குப் புரியாதுதான்!’ “மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக்கொண்ட பாராளுமன்றம்தானே ஆட்சி நடத்துகிறது!””அது ஏமாற்றுவித்தை, மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகளே தவிர மக்கள் பிரதிநிதிகள் அல்ல’ ‘நீங்கள் கூறுவது புதுமையாக இருக்கிறது”“புதுமைதான். இந்த நாட்டு உழைக்கும் விவசாயிகளும், தொழிலாளர்களும் தான் இந்நாட்டு மக்கள். அவர்கள் பிரதிநிதிகள் தொழிலாளிகளாக விவசாயிகளாக இருக்க முடியுமே தவிர அவர்களைச் சுரண்டுகின்ற முதலாளிகளும், நிலச் சொந்தக்காரரும், பெரும் வியாபாரிகளும் அல்ல என்பது புரிகிறதா?”“ஆம்!”“இதுவரை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள், விவசாயிகளோ, தொழிலாளர்களோ அல்ல.”வேறுயார்?’ “சுரண்டல் காரர்கள், சொத்துடைமை வர்க்கத்தினர்!” “மக்கள் தானே தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள்” “அது தவறு, ஜனநாயகப் போர்வையிலே மக்கள் ஏமாற்றப் பட்டுள்ளார்கள்!’நான் ஜனநாயகத்தை நம்புகிறேன்!”நீ ஒரு நிலச் சொந்தக்காரனின் மகன். உன்வர்க்கத்தின் கொள்கையை நீ நம்பத்தான் வேண்டும். நீ இதுவரை ஆளும் வர்க்கத்தின் அரசாங்கத்துக்கே சேவை செய்துள்ளாய். அத்துடன், அந்தச் சுரண்டும் வர்க்கத்தோடு சேர்ந்து நீயும் சுரண்டியிருக்கிருய்!”ஐயோ! இல்லை’ “”உனக்கு மாதம் எவ்வளவு சம்பளம்?”“கொழுத்த சம்பளம்பெறும் நிர்வாக அதிகாரி இல்லயா?”ஆம்! நீ யாருக்குச் சேவை செய்ய வேண்டும்??? ‘மக்களுக்கு!” ‘ஆனால் நீங்கள் மக்களுக்குச் சேவை செய்யவில்லை. மக்கள் உங்களை அணுக அஞ்சுகிறார்கள். மக்களைக்கண்டால் நாய்போல் குரைக்கிறீர்கள் மக்கள் காரியங்களை விட உங்கள் சொந்தக்காரியங்கள் பெரிதாக படுகின்றன: அதிகாரத்தை உங்கள் சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்துகிறீர்கள், மக்கள் பணத்தில் முழு நேரமும் உங்கள் சொத்து, சுகம், மனைவி மக்கள் பற்றிக் கவலைப்படுகிறீர்கள்! அலுவலக நேரத்திலும் மனைவிக்கு குடும்பத்திற்க்கு சொத்து சேர்பதே தொழிலாக கொண்டுள்ளீர். சில மணி நேரம் கூட அலுவலகத்தில் இருப்பதில்லையே”“இல்லை, இதை நான் மறுக்கிறேன்!””இன்னும் கேள். நாடு எப்படிப் போனாலும் பரவாயில்லை, உங்கள் பேரில் சொத்துப் பெருகினால் போதும் என்று கவலைப் படுகிறீர்கள். மக்கள் பணத்தில் எவ்வளவை வாரிக்கொள்ள முடியுமோ அவ்வளவையும் வாரிக்கொள்கிறீர்கள். உங்களுடைய நண்பர்கள் மக்கள் அல்ல, முதலாளிகளும், பெரும்வியாபாரிகளும், பெரும் பணக்காரர்கள் உங்கள் இனிய நண்பர்களாக இருக்கிருர்கள்.”‘பொய்! பொய்! இதுவரை அப்படி ஒரு குற்றச்சாட்டும் என்மீது இல்லை. நான் விசுவாசமான அரசாங்க ஊழியன்!”’இதோ மக்கள் சுமத்தும் குற்றச்சாட்டு சுமத்துகிறார்கள் நீ கையூட்டு வாங்க வில்லையா? அரசாங்கப் பணத்தை மோசடி செய்யவில்லையா? உன் அலுவலகத்தில் ஊழல்கள் நிறைந்துள்ளதே???’அபாண்டம்!” “அப்படியா? நீ பதவிக்கு வந்த பின் உன் மனைவி பெயரில் கம்பனிகளில் பங்கு வாங்கவில்லையா? சொத்து எதுவும் வாங்கவில்லையா? புதுக்கார் வாங்கவில்லையா? இவையெல்லாம் எப்படி வந்தது? உன் சம்பளம் உன் சுகபோக வாழ்க்கைக்கே போதாது என்கிறேன். உன் வரவு செலவுக் கணக்கைக் காட்டு. நீ தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது” “ஆனால் நான்மட்டுமல்ல, வேறு பலரும் அப்படித்தான். என்னை மட்டும் குற்றம் சாட்டக் கூடாது!” “பார்த்தாயா?, உண்மைகள் உனது சொல்லுக்கு மாறாக இருக்கிறது. நீ ஏன் ஜனநாயகத்தைப் போற்றினாய் என்பது இப்பொழுது புரிகிறது. சுரண்டல் வர்க்கத்தின் ஜனநாயகம் நிலைத்திருந்தால் நீயும் சுரண்டலாம். சொத்துச் சேர்க்கலாம். ஒய்வு எடுத்தபின் தேர்தலில் நின்று ஒரு சட்டமன்ற பாராளுமன்ற பிரதிநிதியாகவும் ஏன் மந்திரியாகவும் வரலாம் இல்லையா?”‘எனக்கு அந்த யோசனை இல்லை” “உன் கதையை விடு! உன்னை விசாரணை செய்ததில் இருந்து இந்த முடிவுக்குத்தான் வருகிறோம். அரசாங்கம் ஒரு நடு நிலையான அமைப்பு அல்ல; அது வர்க்கம் சார்ந்தது. சுரண்டல் வர்க்கத்தால் அமைக்கப்படும் அரசாங்கமும், அதன் உறுப்புக்களான போலிஸ், இராணுவம், அரசாங்க இயந்திரம் என்பனவும் சுரண்டல் அமைப்பையும், சுரண்டல் வர்க்கத் தையும் பாதுகாக்க உதவுவன. அத்துடன் இந்த அமைப்புமுறை சுரண்டற்காரரின் குகைகளாகவே உள்ளது என்றால் மிகையாகாது.LikeCommentShare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *