ஏகாதிபத்திய ஏவலர்களின் நோக்கம்

இன்றைய தமிழக சூழலில் சில புரட்சிகர அமைப்புகளை பற்றிய அறிந்து கொள்ள, அவர்களின் நிலையை ஆய்வு செய்ய பயன்படும் என்று நினைக்கிறேன்….
ஒடுக்கும் வர்க்கம், ஒடுக்கபடும் மக்களுக்காக போராடிய கம்யூனிச இயகங்களை அரசியல் ரீதியாக நேர் கொள்ள முடியவில்லை, இதனை நிரைவு செய்ய வந்தவர்களே “பின் நவினதுவவாதிகள்”.
“இடதுசாரி அறிவாளிகளை களத்தில் தோற்கடிப்பதைவிட அவர்களின் இலட்சியத்தில் இருந்தும், அமைப்பில் இருந்தும் விலக்கி இழுத்து செல்வதுதான் இந்த ஏகாதிபத்திய ஏவலர்களின் நோக்கம்,
அடையாள அரசியல் என்று விச வித்திலிருந்து விருச்சமாக எழுந்து உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் தன்னார்வ நிறுவன்ங்களுக்கு கோட்பாட்டு அடிப்படையில் பின் நவீனத்துவம் எனற சமூக விரோத தத்துவமாகும். (தோழர் திருப்பூர் குணாவின் பின் நவீனத்துவம் கம்யூனிச எதிர்ப்பின் முற்போக்கு முகமூடி நூலில் இருந்து).
இரண்டு உலக போரின் பின் பல நாடுகள் சோசலிச முகாமை நோக்கி சென்று கொண்டிருந்தது, அமெரிக்காவின் உள்ளேவும் பெரும் நிறுவனங்களால் சக்கையாகப் பிழியப் பட்ட அனைத்து தொழிலாளர்களிடமும் முதலாளித்துவத்துக்கு எதிரான தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு பெருகி கொண்டிருந்தது. இவை அமெரிக்க ஏகாதிபத்தியதிற்க்கு அச்சுறுத்தலாக இருக்கவே, கம்யூனிச விரோத கோட்பாடுகளை உருவாக்கி உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு மட்டும் அல்லாமல் தங்களது பல்கலைக்கழகங்கள் மூலம் கம்யூனிசத்துக்கு மாற்றான தத்துவத்தை உருவாக்க முனைந்தன, அங்கிருந்தே உலக நாடுகளுக்கு பல அறிவுஜீவிகளை உற்பத்தி செய்து உலகை தன் சுரண்டலுக்கு ஏதுவாக வைத்து கொள்ள கொணர்ந்த தத்துவமே “பின் நவீனதுவம்”. இவை அமெரிக்காவில் இருந்து பிரான்ஸில் புகுந்து ”தெரிதோ,பூக்கோ” பெயர் தாங்கி சற்று வளர்ச்சி பெற்று இந்தியாவை அடைந்தது. தமிழகத்தில் பின் நவீனதுவத்தின் தாக்கம் பற்றி முன்னணி புரட்சியாளர்கள் அறிவர், இன்றோ ஏகாதிபத்திய ஏவலர்கள் மார்க்சிய போர்வையில் தமிழக பல மா-லெ அமைப்புகளில் ஊடுருவி உள்ளதை தொடர் நிகழ்வுகள் நிருபித்து கொண்டுள்ளன, ஏகாதிபத்திய கைகூலிகளுடன் பல புரட்சிகர அமைப்புகள் சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சி நிரல் என்ன சொல்கின்றது???