என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்? தோழர் லெனின் தனது கட்சி கட்டுதல் இதனூடாக ஏற்பட்ட பல இன்னல்கள் கருத்து மோதல் இதற்கான அவரின் தத்துவார்த்த போராட்டமே என்ன செய்ய வேண்டும் என்ற நூலின் சாரம். நாம் இந்த நூலை வாசிப்பதின் அவசியம் என்னவென்றால் அன்று ரஷ்யாவில் லெனினால் எதிர்கொண்டு பல நிகழ்வுகள் இன்றும் நம் கண்முன் இங்கே உள்ளன எனலாம். ஆகவே ஒரு பாட்டாளி வர்க்கம் சார்ந்த அறிவு அதன் தத்துவார்த்த போராட்டம் மற்றும் நாம் அறிந்திருக்க வேண்டிய பல வரலாற்று நிகழ்வுகளை இந்த நூல் வாசிப்பதுன் ஊடாக தெளிவு பெறலாம் என்பது என் கருத்து. நரோடினிசம் (நரோதினிக்) அதனுடைய தவறான போக்குகள் ஆகட்டும், 1880 லிருந்து 1890 வரை நடந்த நரோதினிக் எதிப்பு அதற்கு கொடுத்த தத்துவார்த்த அடி ஆகட்டும், 1883 இல் உருவாக்கப்பட்ட தொழிலாளர் விடுதலை குழுவானது ரஷ்யாவில் மார்க்சியத்தை பரப்புவதில் பெரும் பங்காற்றியது ஆனால் அவை தொழிலாள இயக்கத்துடன் தொடர்பு கொள்ளும் முதல் அடி எடுத்து வைத்தது. ஆனால் ரசிய முதலாளித்துவத்தின் வளர்ச்சி வேகத்தோடு தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களும் எண்ணிக்கை வெகு வேகமாக வளர்ந்தது. வெகுஜனங்கள் கிளர்ச்சி ஈடுபடும் பாதையில் தொழில் வர்க்கம் முன்னேறியது ஆனால் இவற்றை மார்க்சிய குழுக்கள் அறிந்திருக்கவில்லை உணரவில்லை….நடைமுறையில் தொடர்பற்றவர்களாகவும் இருந்தனர் அவ்வியக்கத்தை தலைமை தாங்கி நடத்தாமல் நின்று வந்தனர். 1895இல் லெனினால் தொடங்கப்பட்ட “தொழிலாளி வர்க்க விடுதலைக்கான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் போராட்ட சங்கம்” முன்னிறுத்தி செய்யும்படியான போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தியது தொழிலாளி வர்க்க இயக்கத்தோடு மார்க்சிய ரீதியாக இயங்க தொடங்கியது.மேலும் இதனை பற்றி வாசிக்க ஒரு வாட்சாப் குழு தொடங்கியுள்ளோம் விருப்பம் உள்ள தோழர்கள் இணையலாம் ஆனால் ஒரு வேண்டுகோல் அந்த குழுவில் தற்பொழுது என்ன செய்ய வேண்டும் நூல் பற்றி மட்டும் எழுதினால் தொடர்ந்து விவாதிக்க நலன் பயக்கும் அவர்கள் மட்டும் இணைய அழைக்கிறேன் தோழமைகளே… https://chat.whatsapp.com/KR6iJRCyTcM5ieHOEM5nFTவ்