என்ன செய்ய வேண்டும் நூலை நாம் ஏன் வாசிக்க வேண்டும்?
என்ன செய்ய வேண்டும் நூலை நாம் ஏன் வாசிக்க வேண்டும்?

என்ன செய்ய வேண்டும் நூலை நாம் ஏன் வாசிக்க வேண்டும்?

என்ன செய்ய வேண்டும் நூலை நாம் ஏன் வாசிக்க வேண்டும்?
தோழர் லெனின் தனது கட்சி கட்டுதல் அதனூடாக ஏற்பட்ட பல இன்னல்கள் கருத்து மோதல் இதற்கான அவரின் தத்துவார்த்த போராட்டமே “என்ன செய்ய வேண்டும்” என்ற நூலின் சாரம்.
நாம் இந்த நூலை வாசிப்பதின் அவசியம் என்னவென்றால் அன்று ரஷ்யாவில் லெனினால் எதிர்கொண்ட பல நிகழ்வுகள் இன்றும் நம் கண்முன் இங்கே உள்ளன எனலாம். ஆகவே ஒரு பாட்டாளி வர்க்கம் சார்ந்த அறிவு அதன் தத்துவார்த்த போராட்டம் மற்றும் நாம் அறிந்திருக்க வேண்டிய பல வரலாற்று நிகழ்வுகளை இந்த நூல் வாசிப்பதுன் ஊடாக தெளிவு பெறலாம் என்பது என் கருத்து.
லெனின் எழுதிய, “என்ன செய்ய வேண்டும்?” இந் நூல் ஐந்து அத்தியாயங்களாக உள்ளன.முதல் அத்தியாயம்- வறட்டுச் சூத்திரவாதமும் “விமர்சன சுதந்திரமும்”.இதில் இரண்டு விஷயங்கள் பேசப்படுகின்றன, ஒன்று வறட்டுச் சூத்திரவாதம், மற்றொன்று விமர்சன சுதந்திரம்.
வறட்டுச் சூத்திரவாதம், விமர்சன சுதந்திரம் என்ற சொற்களைத் தவறாகப் பயன்படுத்தி மார்க்சிய அடிப்படைகளைக் கேள்விக்கு உள்ளாக்குபவர்களை, லெனின் இந்த அத்தியாயத்தில் விமர்சிக்கிறார்.அதாவது விமர்சன சுதந்திரம் வேண்டும் என்று, புதியதாகக் கிளம்பியவர்களின் உள் நோக்கம் என்ன என்பதை லெனின் இந்த அத்தியாயத்தில் விவரிக்கிறார்.மார்க்சியத்தை, விமர்சன வழியில் அணுக வேண்டும் என்று சொல்கிற இவர்களின் கோரிக்கை என்ன வென்றால்?காலம் மாறிப் போச்சு, அதனால், கம்யூனிச கட்சி, புரட்சிரகமானதாக இருப்பதை விடுத்து, சமூகச் சீர்திருத்தங்களுக்கான கட்சியாக மாற வேண்டும். இது தான் இந்தப் புதிய போக்கினரின் அடிப்படை நோக்கம்.இதை நல்லா புரிஞ்சிக்கிட்டா… இந்த அத்தியாயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் ஆம் இங்குள்ள சிலர் பேசும் மண்ணுக்கேற்ற மார்க்சியம், மார்க்சியம் போதாது இதை கலக்க வேண்டும் அதை சேர்க்க வேண்டும் என்ற மார்க்சிய விரோதிகள் இங்கே நாம் காண்கிறோம்..
அடுத்த அத்தியாயம், “மக்களின் தன்னியல்பும் சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வு நிலையும்.”சமூக- ஜனநாயகவாதிகள் – அப்படினா.. கம்யூனிஸ்டுகள்.. அந்தக் காலத்தில் கம்யூனிஸ்டுகளைச் சமூக-ஜனநாயகவாதிகள் என்றே அழைத்தனர். பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டதானால், இந்தப் பெயரே அப்போது வழத்தில் இருந்தது.
மக்களின் தன்னியல்பு :-மக்கள் தங்களுக்கு நடக்கிற கொடுமைகளுக்கு, உடனடியாக எதிர்வினை புரிவது, தன்னியல்பு. எந்த இயக்கமோ, அமைப்போ, கட்சியோ அந்தப் பிரச்சினைக்குத் தலைமை தாங்காமல், பாதிக்கப்பட்ட மக்களே போராட்டத்தில் இறங்குவது தான் தன்னியல்பு.இங்கு நடக்கும் பல போராட்டங்கள் தன்னியல்பாய் உள்ளவற்றிக்கும் சில இடதுசாரிகள் காவடி தூக்கும் வேலையையே நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வு:-சமூக-ஜனநாயகவாதிகளின் உணர்வு என்றால், கம்யூனிஸ்டுகளின் உணர்வு, அதாவது வர்க்க உணர்வு.மக்களின் தன்னியல்பான உணர்வு என்பது ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு மட்டுமே போராடுவது, ஆனால் கம்யூனிஸ்டுகள் மக்களுக்கு, வர்க்க உணர்வை ஊட்ட வேண்டும், அவர்களை வர்க்க அரசியலுக்குக் கொண்டு வர வேண்டும். இது தான் கம்யூனிஸ்டுகளின் உணர்வு.
மூன்றாவது அத்தியாயம், “தொழிற்சங்கவாத அரசியலும் சமூக-ஜனநாயக அரசியலும்.”தொழிற்சங்கவாத அரசியல் என்பது, வர்க்க உணர்வு ஊட்டாமல், பொருளாதார தேவைகளுக்கு மட்டுமே போராடுவது. அதாவது கூலி உயர்வுக்காக மட்டும் போராடுவது. கூலி உயர்வுக்கான போராட்டத்தில் தொடங்கி,இந்த ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டுவதே இந்த அமைப்பு முறையை ஒழிவதற்கான போராட்டம் வரை கொண்டு செல்வது தான் கம்யூனிஸ்டுகளின் வர்க்க அரசியல். இங்கே என்ன செய்துக் கொண்டுள்ளது இடதுசாரிகள் சற்று தெளிவடையுங்கள் இங்கே. நான்காவது அத்தியாயம், “பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையும் புரட்சியாளர்களின் அமைப்பும்.”இதுவும் மேலே கூறப்பட்ட விஷயத்தைப் பற்றியது தான், கூலி உயர்வுக்கு மட்டும் போராடுகிற பொருளாதாரவாதிகளின் பக்குவமின்மையை வெளிப்படுத்தி, அந்தப் பக்குவமின்மையைப் போக்க வேண்டும் என்றால், புரட்சிகரக் கம்யூனிஸ்டுகள் தொழிற் சங்கங்களில் ஈடுபட வேண்டும். இந்த விஷயத்தைப் பற்றித் தான் இந்த நான்காம் அத்தியாயம் பேசுகிறது.ஐந்தாவது அத்தியாயம், “ஓர் அனைத்து ருஷ்ய அரசியல் பத்திரிகைக்கான “திட்டம்””இன்னும் பின்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *