ஒரு தோழர் கேட்ட கேள்வி.
1). இன்று இந்நூல் வாசிப்பதன் தேவைத்தான் என்ன?
2). ரசியாவில் அன்றைய நிலையில் லெனின் எழுதினார் அதனை நாம் இன்று இங்கே பொருத்த முடியுமா?
3). ரசியா சீனா முதலாளித்துவ பாதையில் பயணித்து விட்டது நீங்கள் இன்றும் அதனை தேடிக் கொண்டுள்ளீர்?
அன்றைய முதலாளித்துவம் தன்னை வளர்த்து நிலை நிறுத்திக் கொள்வதற்கு உலக நாடுகளை அடிமைப்படுத்தி அந்நாடுகளின் விலை மதிப்பற்ற வளங்கள் அனைத்தையும் சூறையாடிச்சென்றது. காலனித்துவ அமைப்பை இறுக்கிக்கொண்டது. இத்தகைய முதலாளித்துவ வளர்ச்சியையும் அதன் ஈவிரக்கமற்ற சுரண்டலையும் மார்க்சியம் நன்கு வெளிச்சமிட்டுக் காட்டியதுடன் நில்லாது அதற்கு எதிராகத் தொழிலாளி வர்க்கமும் அடக்கப்படும் காலனி நாடுகளும் போராட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியது.
இன்றைய உலகச் சூழலில் முதலாளித்துவம் ஏகாதிபத்திய நிலை நின்று தமது இராட்சத மூலதனம் கொண்டு உலக நாடுகளின் வளங்களைக் கொள்ளையிட புதிய புதிய வழிகளில் சுரண்டிக் கொண்டு நிற்கின்றது. அதுவே உலகமயமாதல் என்னும் நிகழ்ச்சித் திட்டமாகும்.
• மார்க்சியத்திற்கு ஏற்பட்ட தற்காலிகப் பின்னடைவை மீள முடியாத நிரந்தரமானது என்ற காட்டிக் கொள்வதற்கு ஏகாதிபத்தியப் பிரசாரம் பல முனைகளில் இருந்தும் ஏவப்படுகின்றது; அதனூடே உலகமயமாதல் திட்டங்களை முன்தள்ளியும் தனது சுரண்டலை நியாயப் படுத்த பல வகையான மூளைச் சலவை செய்யப் படுகின்றன.
• இராட்சத பல்தேசியக் கம்பனிகள் மூலமான பாரிய மூலதன ஊடுருவல் நடத்தப்படுகின்றது. முதலாளித்துவ நிலைப்புக்கான கருத்தியல்களும் கலாசாரச் சீரழிவுகளும் வேகமாகப் புகுத்தப்பட்டு வருகின்றன. சமூகநலன் சார்ந்த சிந்தனைகளும் கருத்துக்களும் அவற்றுக்குச் சார்பான பொதுவுடைமை எண்ணங்களும் குறிவைத்து தாக்கப்படுகின்றன. போராட்டங்கள், எழுச்சிகள், சமூகமாற்றம் என்பன மறுக்கப்பட்டு பழைமைவாதம், ஆதிக்கம், அடக்குதல் என்பன மீட்டுநிலைநிறுத்தப்படும் போக்கு வலுவடைகின்றது. இவை நமது நாடு உட்பட மூன்றாாம் உலக நாடுகளில் முனைப் படைந்திருக்கும் நிகழ்வுப் போக்குகளாகும்.
மார்க்சியம் அது தோற்றம் பெற்ற அதே இடத்தில் அப்படியே இருந்து வந்த ஒன்றல்ல. அது தனது விஞ்ஞான அடிப்படை காரணமாக வளர்ச்சியுற்றது. மாபெரும் அக்டோபர் புரட்சியின் மூலமாக லெனினியமாக வளர்ச்சி கண்டது. சீனப் புரட்சியின் ஊடாக மாவோ சிந்தனையாக விரிவுபெற்றது. இன்னும் பல நாடுகளின் புரட்சிகளில் மார்க்சியம் வளம் பெற்றது.
• எனவே, இன்றைய உலகமயமாதல் சூழலிலே மார்க்சியம் தனது ஒட்டுமொத்த வளர்ச்சியின் ஊடே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம்கொடுத்து முன்னேறிச் செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர்நோக்கி நிற்கின்றது. நமது நாட்டில் அக்கடமைக்குரிய பங்கையும் பங்களிப்பையும் வழங்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு.
இன்றைய உலக மயமாக்கல் உலகே ஒரே குடையின் கீழ் சுருங்கியுள்ள நிலையில் கருத்து ஊடுருவல் என்பது ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கடத்தப் படுவதும் ஏகாதிபத்திய சிந்தனைகளை மூன்றாம் உலக நாடுகள் மீது திணிப்பதை தவிர்க்க தடுக்க முடியாதவையே அதனை அறிந்து அதன் தவறுகளை விமர்ச்சிக்கும் அளவு வளர்ச்சி அவசியம் இதனை எதிர்த்து போராட திறன் உள்ளவர்களாக வளர வேண்டாமோ
இந்திய சமூகத்தில் மேலாதிக்கம் செய்யும் கலாச்சாரம் ஏகாதிபத்திய- நிலவுடமை கலாச்சாரமாகும். இன்றைய நிலையில் இருவேறு ஏகாதிபத்திய கலாச்சாரம் இந்திய மக்களை ஆட்டிப் படைக்கிறது. ஒன்று அமெரிக்கா மற்றொன்று ரஸ்ய சீன ஏகாதிபத்தியம்.
முதலில் அமெரிக்க உள்ளிட்ட மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் தம் கலாச்சாரத்தை எப்படி பரப்புகின்றது என்று பார்ப்போம். (1) தனி நபர்வாதத்தை தூக்கி நிறுத்துகிறது. (2)வரைமுறையற்ற ஆபாசத்தை பர்ப்புகிறது. (3)விரக்தியை தூண்டும் நடவடிக்கைகள். (4) உதிரிதனமாக வன்முறையை பரப்புகிறது. (5)அறிவியல் கலந்த மூட நம்பிக்கையை பரப்புவது. (6) மேட்டிமைதனத்தை பரப்புதல். (7)புதிய இடதுகள் என்ற போர்வையில் மார்க்சிய லெனின்யத்தைச் சிதைத்தல்.
மற்றொரு புரம் ரஸ்ய சீன ஏகாதிபத்தியம் மார்க்சிய லெனின்யத்தை திரித்து, இங்குள்ள பண்டைய இந்திய இதிகாசங்களுடன் இன்றைய அறிவியலையும், தொழிற் நுட்ப வளர்ச்சியை (இன்றைய அதி நவீன) மார்க்சிய வழியில் வளர்தெடுக்காமல் மார்க்சியத்தை திரிப்பது இவர்களின் வேலையாக உள்ளது. அதாவது புரட்சிகர உள்ளடகமின்றி புரட்சி வார்த்தைகளை பயன்படுத்துதல்; புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்தே மார்க்சியத்தை பிரித்தல். இவ்வாறு பல்வேறு வடிவங்களில் ஏகாதிபத்தியம் இந்தச் சமூகத்தின் மீது தாக்குதல்களை தொடுத்து கொண்டுள்ளது, அதனை எதிர் கொள்ள திறன் அற்று அதில் சமரசமோ அல்லது சீரழிவுக்கோ இட்டு செல்கிறது இதிலிருந்து மாறுபட்டு நிற்க்கும் அந்தச் சொற்பர்கள் இங்கே பிரதிபலிப்பதில்லை அல்லது அவர்களின் பங்களிப்பு கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை…. புரட்சிகர அமைப்புகள் இதே சமூகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளனர் அவர்கள் மார்க்சியம் பயின்றிருந்தாலும் அவர்களின் சிந்தனை போக்கு கணக்கில் கொள்ள வேண்டியதன்றோ?
இன்னும் பின்னர்….