உற்பத்தி முறையின் வளர்ச்சிப் போக்கில்
உற்பத்தி முறையின் வளர்ச்சிப் போக்கில்

உற்பத்தி முறையின் வளர்ச்சிப் போக்கில்

உற்பத்தி முறையின் வளர்ச்சிப் போக்கில், உற்பத்தியில் ஈடுபடாத சிலர் உற்பத்தி சாதனங்களை அபகரிப்பில் ஈடுபட்டனர், அதன் விளைவாக மூன்றாவது வகையான உழைப்புப் பிரிவினை ஒன்று உருவானது. “இங்கு, இப்போது உற்பத்தியில் ஈடுபடாத ஒரு வர்க்கம் முதன் முறையாக உதிக்கிறது, அது உற்பத்தி நிர்வாகத்தை ஒட்டுமொத்தமாக கைப்பற்றுவதோடு, உற்பத்தியாளரையும் அதன் விதிகளுக்கு கீழ்படியும் நிலைக்குத் தள்ளுகிறது


வரலாற்று வளர்ச்சியை நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல்வேறு காரணிகள் படிநிலை அமைப்பிற்கும், மேலாதிக்கத்திற்கும் காரணமாய் இருக்கின்றன.


கடந்தகால சமூகம் குறித்த சமூக விஞ்ஞான ஆய்வானது – அதாவது உற்பத்தி முறையின் அடிப்படையிலான சமூக ஆய்வானது – சந்தைக்கென உற்பத்தி நடைபெறவில்லை என்பதையும், அப்போது ‘சரக்கு’, ‘பணம்’ குறிப்பாக கூலி உழைப்பு இருக்கவில்லை என்பதையும் உணர்த்துகிறது. அதனால் அப்போது சுரண்டலோ மேலாதிக்கமோ நிலவவில்லை. “சமூகத்தின் ஆரம்ப கால உற்பத்திகள் அனைத்தும் கூட்டு உற்பத்தி முறையிலானவையே, அதேபோல் பெரிய அல்லது சிறிய அளவிலான கம்யூனிச சமுதாயங்களுக்குள்ளாக நேரடி விநியோகம் மூலமாகவே நுகர்வும் நிகழ்ந்தது.” (மூலதனம் நூலில் காரல் மார்க்ஸ்).

மனிதர்கள் வாழ்வதற்கு ‘பொருள்’ உற்பத்தி என்பது ஒரு அத்தியாவசியத் தேவையாகும். கச்சாப் பொருட்கள், கருவிகள் மற்றும் துணைக் கருவிகளின் பயன்பாடு அதற்கு முன்நிபந்தனையாகிறது. இவையெல்லாம் கிடைத்துவிட்ட போதிலும், ஒன்றுக்கொன்று அருகருகில் வைத்துவிட்டால் உற்பத்தியானது தானாக நிகழ்ந்துவிடாது. அதன் மீது யாரேனும் உழைப்பை செலுத்த வேண்டும் – ஆக, இங்கு நமக்கு உழைப்பு என்பது தேவைப்படுகிறது. இவ்வாறாக, ஒரு பொருளை உற்பத்தி செய்ய நமக்கு உற்பத்தி சாதனங்களும், உழைப்பும் தேவை. உற்பத்தி முறையின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றமானது உழைப்புப் பிரிவினைக்கும், வர்க்க உருவாக்கத்திற்கும் வழிகோலியது. அப்போதைய பொருளாதார அமைப்பின் வளர்ச்சிக்குப் பங்களித்த சூழ்நிலைகளானது அப்போதைய சமூக ஒழுங்காகிப் போனது. சமூக விஞ்ஞானிகள் அவ்வமைப்புகளை முறையே புராதன (ஏறக்குறைய கம்யூனிச) அமைப்பு, அடிமையுடைமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம் மற்றும் முதலாளித்துவ சமூகம் என்று விளக்கியுள்ளனர். இன்றைய உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு உற்பத்தி முறையான முதலாளித்துவம் குறித்தும், நாம் விரிவாகக் காண்போம்.

அடிப்படை வாழ்வாதாரத்திற்கான உற்பத்தி என்பது முதலாளித்துவத்தின் கீழ் செல்வக் குவிப்பிற்கான உற்பத்தியாக மாறிப்போனது. இலாபம் என்பது இயற்கையான ஒரு விதியல்ல. செல்வக் குவிப்பிற்காக முதலாளித்துவத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாகும். அதற்காக தொழிலாளர்கள் மிகவும் கொடூரமான பணிச் சூழல்களில், இரக்கமற்ற பணி நேரங்களுக்குக்கு ஆட்பட்டு கடுமையாக உழைக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அந்த உழைப்புச் சக்திகளின் அதிக உழைப்பு நேரத்தினால் ஈட்டப்படும் மதிப்பைத்தான் ‘உபரி மதிப்பு’ என்று காரல் மார்க்ஸ் விளக்குகிறார். அவ்வாறு அபகரிக்கும் அந்த உபரி மதிப்பைத்தான் முதலாளித்துவமானது இலாபம் என்று சொல்கிறது. இந்த உபரி மதிப்பு அதிகரிப்பே மேலாதிக்க சமூக உறவுகளுக்கும், அதன் படிநிலை வெளிப்பாடுகளுக்கும் காரணமாக அமைகிறது என்பதே அவரது விளக்கம்.

முந்தைய உற்பத்தி முறையிலும், முதலாளித்துவத்திலும் காணப்படும் இந்த உழைப்புப் பிரிவினையை மார்க்ஸ் தெளிவாக விளக்கியுள்ளார். அதன் சாராம்சம் பின்வருமாறு:

முதலாளித்துவத்தின் கீழ், தனியுடைமையின் அடிப்படையிலான உழைப்புப் பிரிவினையின் விளைவாக உருவாகும் உறவுமுறைகள் மேல் கீழ் அடுக்குமுறை அமைப்பிலானவை. எஜமானர் – தொழிலாளி என்று அது வரையறுக்கப்படுகிறது. முந்தைய அமைப்பிற்கும், முதலாளித்துவ அமைப்பிற்குமான முக்கிய வேறுபாடு என்னவெனில் உழைப்புக்கு ஈடாக கூலி (பணம்) எனும் புதிய முறையிலான ஒரு இழப்பீடு வழங்கப்படுகிறது; பொருட்கள் ‘சரக்கு’களாகின்றன; உற்பத்தி சாதனங்கள்2 ‘மூலதனம்’* ஆகின்றன, சுரண்டல்வாத சூத்திரம் இலாபம் என்று அழைக்கப்படுகிறது. உற்பத்தி சாதனங்களின் ‘எஜமானர்’ உழைப்புச் சக்தியை வாங்கி, உபரி மதிப்பை இலாபம் என்று அபகரிக்கும் இந்த முறையே உழைப்புச் சுரண்டல் எனப்படுகிறது. தனியுடைமையின் அடிப்படையிலான உற்பத்தி முறையும், அதன் கீழான பொருளாதார அமைப்பும் முதலாளித்துவம் எனப்படுகிறது. இதன் மூலம், முதலாளித்துவ பொருளாதாரமானது சுரண்டலின் அடிப்படையிலானது, ஏற்றத்தாழ்வு மிக்கது என்பதை சொல்லவும் தேவையில்லை.

வாழ்வதற்காக மனிதர்கள் பொருளை உற்பத்தி செய்யவும், நுகரவும் வேண்டும். உற்பத்தியும் அதனோடு தொடர்புடைய நடைமுறைகளும் பொருளாதார நடவடிக்கைகளாகும். அதனால், மனித வாழ்வின் நிர்ணய சக்தியாக அதுவே விளங்குகிறது. இவ்வாறாக, மனிதர்கள் தனிநபர் அளவிலும், சமூக அளவிலும், உற்பத்தி உறவுகளுக்கு உள்ளாகிறார்கள், அதன் மறுபெயர் உழைப்பு உறவுகள். உழைப்பு உறவுகள் சுரண்டல்தன்மை கொண்டவையாக, நியாயமற்றவையாக இருக்கின்ற போது, அதன் விளைவாக ஏற்படும் சமூக உறவுகளும் சுரண்டல்தன்மை கொண்டவையாக, நியாயமற்றதாகவே இருக்கும்.

ஓர் உற்பத்தி முறையும், அதன் விளைவான சமூக ஒழுங்கும் மேலாதிக்கமும் பொருளாதார அடிப்படியிலானதாகவும் இருக்கும்பொழுது, ======= போராட்டத்தை வெறும் ======= எதிர்ப்பு என்றோ அல்லது அத்தகைய கருத்தியல் வடிவங்களுக்கு எதிரான போராட்டமாகவோ மட்டும் தொடுப்பதென்பது போதாமை நிறைந்ததாகும். விவாதத்திற்காக, ======= ஒழிப்பதன் மூலம், நாம் ====== சமத்துவத்தை அடைந்துவிட்டோம் என்றே வைத்துக்கொள்வோம்,

  • போரையும், பஞ்சத்தையும் நாம் எப்படி போக்குவோம்?
  • ஏழ்மையை எப்படி ஒழிப்போம்?

செல்வக் குவிப்பென்னும் வேட்கையினால் கடிவாளமிடப்பட்டுள்ள மனிதர்கள் உருவாக்கிய சமூக ஒழுங்கானது முரண்பாடுகளால் நிறைந்திருப்பதால் அது நியாயமான விநியோகத்தை (உற்பத்தியையும்) அனுமதிப்பதில்லை. கார்ல் மார்க்ஸ் இதனை சொத்துடைமையோடு தொடர்புடைய வர்க்க முரண்பாடு என்கிறார். அத்தகைய முரண்பட்ட குழுக்களை அவர்:

1) பூர்ஷுவாக்கள் (உற்பத்தி சாதனங்களை உடையோர், இலாபம் எனும் வருவாய் ஈட்டி வாழ்பவர்கள்) 2) நிலப் பிரபுக்கள் (வாடகை அல்லது குத்தகை எனும் வருவாய் ஈட்டி வாழ்பவர்கள்) 3) பாட்டாளி வர்க்கம் (கூலிக்காக உழைப்புச் சக்தியை விற்பவர்)என்று வகைப்படுத்துகிறார்.

முரண்பாடுகள் மற்றும் அரசுருவாக்கம் பற்றிய தனித்தனியான அணுகுமுறைகளால், அரசு என்பது நேரடியாகவும், மறைமுகமாகவும் உற்பத்தி சாதனங்களின் உடைமையாளர்களால்தான் ஆளப்படுகிறது எனும் புரிதல் இன்றி நாம் அரசிடமே அரசியல் சீர்த்திருத்தம் வேண்டி நிற்கிறோம். அரசு இயந்திரங்களானவை நிலவும் அதிகார அமைப்புகளுக்கு ஆதரவாக இயங்குபவை:

“… வர்க்கப் பகைமைகளைக் கட்டுப்படுத்துவதன் அவசியம் காரணமாய் அரசு தோன்றியது; அதே சமயத்தில் அந்த வர்க்கங்களுக்கு இடையில் நடைபெற்ற மோதல்களின் மத்தியிலிருந்தே அது தோன்றியது. ஆகவே, அது பொது விதியாகவே, மிகவும் வலிமையான, பொருளாதார ரீதியில் ஆதிக்கம் செலுத்துகின்ற வர்க்கத்தின் அரசாகிறது. அந்த வர்க்கம் அரசன் மூலமாக அரசியல் ஆதிக்கம் செலுத்துகின்ற வர்க்கத்தின் அரசாகிறது. இவ்வழியிலே ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை நசுக்கிச் சுரண்டுவதற்கு அது புதிய சாதனங்களைப் பெறுகிறது.”

அரசும் அதன் நிர்வாகக் குழுவான நீதித்துறை மற்றும் இராணுவம் ஆகிய அனைத்து அரசு இயந்திரங்களும் ஆளும் வர்க்க நலனுக்காகவே பணி புரியும் என்பதை எங்கல்ஸ் இங்கு தெளிவாக விளக்குகிறார். தொடர் போராட்டங்கள் துண்டு துண்டான சில சீர்திருத்தங்களைப் பெற்று தரலாம். ஆனால், முதலாளித்துவ பொருளாதார அமைப்பு நிலவும் வரை நாம் சமத்துவத்தை அடைய முடியாது. முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த தர்க்கமானது பிரித்தாளும் தந்திரத்தை உள்ளடக்கியது, அப்போதுதான் அடிமட்ட கூலி பெறும் கீழ் வர்க்கம் எனும் ஒரு நிரந்தர பின்தங்கிய வர்க்கத்தை அப்படியே வைத்திருக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *