“ஏன் அப்பா வேலைக்குப் போக வேண்டும்? அதனால்தான் நாங்கள் ஏழையாயிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்.” என்று புன்னகையுடனே மகன் கேட்டான்.
அதற்க்கு அவன் தாயர், “வேலைக்குப் போகும் எல்லோருமே ஏழையாகவே உள்ளனர். அப்பா வேலைக்குப் போகாவிட்டால் மேலும் ஏழையாகிவிடுவோம். சாப்பாட்டிற்கு எதுவுமில்லாமல் போய்விடும்”.என்றார்.
இந்த பதில் கேட்ட மகன், “வேலை செய்யாமல் இருப்பவர்களிடமே எல்லாப் பொருட்களும் அதிகமாக இருக்கிறதே” என்று கேட்டான்.
“அது உண்மையே. ஒருவேலையும் செய்யாதவர்களிடம் எல்லாம் இருக்கிறது. எங்கிருந்து அவர்கள் பெறுகிறார்கள்? எப்படிப் பெறுகிறார்கள்?”
“எனக்குத் தெரியாது’?-மகன் தலையாட்டினான். “அப்பா வேலைக்குப் போகாவிட்டால் அல்லது ஒரு வேலையும் இல்லாவிட்டால், நோய் வந்து வேலை செய்யாவிட்டாலும் எதுவும் வாங்க முடியாது. நாங்கள் எப்படி வாழ முடியும்?’
“எங்கள் நாற்காலிகள் கட்டில்கள் கூட விற்கக் கூடியதாக இல்லை என் வெல்வெட் சட்டையைமட்டும் அடைகு வைக்கலாம்.’
“எல்லாவற்றையும் விற்றாலும் சில நாட்களுக்கே வாழ முடியும். பின் என்ன செய்வது?” . . . . . .
“அப்பா லண்டனில் இருந்தபோது நடந்ததுபோலகஷ்டப்பட வேண்டியதே.”
“அப்போது வேலை செய்யாதவர்களிடம் எப்படி எல்லாம் இருக்கிறது?
மகன் கேட்டான். “பல வழிகள் உள்ளன. அப்பா லண்டனில் இருந்தபோது சாப்பாட்டிற்குப் பணமில்லாது என் சோபா நாற்காலியை விற்றது நினைவிருக்கா.”
“நினைவிருக்கிறது.” “கடைக்காரனுக்கு என்ன விலைக்கு விற்றோம் தெரியுமா?”
འ།
‘ஐந்து சிலிங்கிற்கு.” “கடையில் மறுநாள் பார்த்தபோது அதில் என்ன விலை போட்ப்பட்டிருந்தது தெரியுமா?”
*பதினைந்து சிலிங்.” “வேலை செய்யாமல் பணம் பெறும் முறையில் இது ஒன்று? *மற்ற வழிகள் என்ன?” “பணம் இல்லாதவர்களை வேலைக்கு வா என அழைத்து பணம் உள்ளவர் வேலை செய்விக்கின்றனர். அன்று மட்டும் வாழத்தக்க அளவாகவே கூலி தருகின்றனர். இதனல் மறு நாளும் வேலை வாங்க முடிகிறது பின் வேலை முடிந்ததும் அவர்களைப் பட்டினி கிடக்க அனுபிவிட்டு அவர்கள் செய்த பொருளை அதிக பணத்திற்கு விற்றுவிடுகின்றனர். இது வேலை செய்யாது அதிக பணம் சேர்ப்பதற்கு மற்றோரு வழியாகும்.”
‘ஆனல் இப்படியில்லாது பணக்காரராக வேறு வழியில்லையர்? *மற்றவர்களை ஏமாற்றாமல் பணக்காரராக எவரும் வர முடியாது.” “எங்கள் பள்ளிக்கூட வாத்தியார் பற்றி என்ன கூறுவாய்? அவர் எந்த வேலையும் செய்வதில்லையே.”
“அவர் பயனுள்ள, தேவையான வேலை செய்யவில்லையா? ஒவ்வொரு நாளும் அத்தனை பிள்ளைகளுக்கும் பாடம் சொல்லித் தருவது எத்தனை கஷ்டமானது.”
அது பயனுடையதே, கஷ்டமானதும் தான். சில வேளை கவலைப் படுபவராகவும் காணப்படுகிறார். எங்க தேவாலய சுவாமியார் பற்றி என்ன கூறுவாய்?”
“பயனுள்ள வேலை செய்யாது வாழ்பவரில் அவர் ஒருவர். அப்படிப் பட்டவர்களில் இவர் மிக மோசமானவர்.”
மகன் வியப்போடு தாயைப் பார்த்தான். அவனுக்குப் பெற்றோர் சுவாமியோடு நெருக்கமாகப் பேசுவதும் பள்ளியில் மதிப்பளிப்பதாக ஆசிரியர் கற்பிப்பதும் நினைவில் வந்தன.
*ஏன் அம்மா?* வேலை செய்யாதவர் வைத்திருக்கும் அழகான பொருட்களை யெல்லாம் உழைப்பவர்களே செய்தார்கள் என்பதை நீ அறிவாய்தானே”
“ஆமாம்” “அப்படி உழைத்தவருக்கு நல்ல உணவில்லை. அழுக்கடைந்த உடையே உடுக்கின்றனர், குடிசைகளிலேயே வசிக்கின்றனர்.”
“ஆமாம்”
*சில வேளைகளில் அவர்களுக்கு உண்ணவே உணவு கிடைப்பதில்லை கந்தையைக் கட்டிக் கொண்டு வீடில்லாது அலைகின்றனர்.”
“பணக்காரர் வாழ்வதற்காகவே ஏழைகளைக் கடவுள் படைத்தார் என்று சுவாமியார் கூறித்திரிகிறார், வேலை செய்யாத பணக்காரருக்காக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்று தொழிலாளர்கட்குப் போதிக்கிறார். மட்டமான உணவிற்கும் கந்தலுக்கும் குடிசைக்குமாக கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று கூறுகிறார், கிடைத்ததை கொண்டு ஏழைகள் அடக்கமாக வாழவேண்டும். குறைபடக் கூடாது. அப்படி வாழ்ந்தால் இறந்தபின் மோட்சம் என்று கூறும் இடத்திற்கு கடவுளால் அழைக்கப்படுவார்கள் என்று பிரசாரம் செய்கிறர்.”
“வேலையில்லாது சுகமாக வாழ்பவர் பற்றி என்ன சொல்லுகிறர்? மகன் சிரித்துக் கொண்டே கேட்டான்.
‘தான் கூறுபவற்றை நம்ப வேண்டும். தொழிலாளரிடமிருந்து பறித்தெடுக்கும் பணத்தில் ஒரு பங்கு தனக்குத்தரின் அவர்களையும் கடவுள் மோட்சத்தில் சேர்த்துக் கொள்வார் எனவும் சொல்கிறர்.”
“அம்மா, அது நியாயமாக இல்லையே.” “அது உண்மையில்லை. உண்மையாயிருக்க முடியாது.
*ஏன் அம்மா?* — “பல காரணங்களைக் கூறலாம். முதலில் சுவாமியாருக்கே அதில் நம்பிக்கையில்லை. அவர் பைபிளை நம்புவதாகப் பாசாங்கு செய்கிறார். பைபிளைப் படித்தால் உண்மை தெரியும். யேசு எமது தந்தை, உலகில் உள்ள மக்கள் அனைவரும் அவரது பிள்ளைகள், சகோதர சகோதரியர். எஜமான் வேலையாள் என்பதையே சகோதரர் சகோதரியர் என்று கட வுள் கருதினர் என்று சுவாமியார் கூறுகிருர், மேலும் யேசு தன்னை வழி படுபவர்கள் நாளையைப் பற்றிச் சிநதிக்கப்படாது, தமக்குப் பணம் சேர்க்கப்படாது. சுயநலமில்லாது மற்றவர்க்கு உதவ வேண்டும் என்று கூறியுள்ளார். யேசு மேலும் சொன்னர், த ன் னை வழிப டு பவருக்கு ஏதாவது துன்பம் செய்தால் அவர்களை மன்னித்து விட வேண்டும் என்று யேசு சொல்வதுபோல் நடந்தால் உல கம் இயங்காது என்று சுவாமியார் சொல்கிறர். துன்பம் செய்பவர்களை சிறையில் இடவேண்டும். வேறு நாட்டவராயின் துப்பாக்கி எடுத்துக் கொல்ல வேண்டும். அவர்கள் வீடுகளை எரிக்க வேண்டும் என்கிருர். யேசுவை அவர் நம்பவில்லை. நம்புவதாகக் காட்டிக் கொள்கிருர்.”
‘சுவாமியார் ஏன் பொய்யாக நடந்து இப்படிப் பேசித் திரிகிறர்?
“வேலை செய்யாது வாழ அவர் விரும்புகிருர், “இவர் ஏமாற்றுகிருர் என்று மற்றவர்களுக்குத் தெரியாதா? * მრyr# அறிவார்கள். சுவாமியார் சொல்வது பொய் எனப் பணக் காரர் அறிவர். ஆனல் நம்புவதாக நடித்துப் பணம் தருவர். ஏனென், முல் தொழிலாளிகளிடம் சென்று அவர்களைச் சிந்திக்கவிடாது, பய முறுத்தி, உழைக்கும்படி சுவாமியார் சொல்லிக் கொண்டேயிருப்பார்.”
“தொழிலாளர் இவற்றை நம்புகிருர்களா? ‘பெரும்பாலானேர் நம்புகின்றனர். உன்னைப்போல சிறுவனுயிருக் கும் காலத்திலிருந்தே கடவுள் பணக்காரருக்கு உழைப்பதற்காகவே படைத்துள்ளார் என்று பெற்ருர் போதிக்கின்றனர். பாடசாலைக்குச் சென்ருலும் ஆசிரியர் இதையே படிப்பிக்கிருர், அதை நம்பி வேலைக் குச் சென்று அவர்களுக்காக உழைக்கின்றன்ர். அதஞ்லேழே தொழிலா ளர் பிள்ளைகளும் உணவு, உடையில்லாது துன்பப்படுகின்றனர், சிலர் சாப்பிட முடியாத அளவிற்கு உணவும், உடுக்க முடியாத அள்விற்கு உடையும் வைத்திருக்கின்றனர், வீணுக்கியும் வீசுகின்றனர்.”
‘நான் வளர்ந்து வேலைக்குப் போகும்போது பணக்காரர் எதையும் பறிக்க விடமாட்டேன். அவர்கள் எதையாவது பறிக்க முயன்ருல் நல்ல பாடம் கற்பிப்பேன்.”
அவன்
ஆத்திரம் பொங்கக் கூறியபடி தன் விளையாட்டுச் சாமான் களை ஒவ்வொன்முக பெட்டியுள் வேகமாக வீசினன்.