உண்மையோ தெரியாது விளம்பரமோ?
உண்மையோ தெரியாது விளம்பரமோ?

உண்மையோ தெரியாது விளம்பரமோ?

Vijayakumar R

உளவுத்துறையின்_தொடர்#அடக்குமுறையும்_அச்சுறுத்தலும்கடந்த 25 ஆண்டுகளாகவே தொடர்ந்து கண்காணித்து வரும் உளவுத்துறை – காவல்துறை கடந்த 4ஆண்டுகளாக இன்னும் அதிகமாக அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்ததுஇப்போது ஓராண்டாக கடும் நெருக்கடியை ஏற்படுத்தி டார்ச்சர் செய்கிறது உளவுத்துறை எனது தொழில் பெயிண்டிங் நான், கோவை, திருப்பூர், கேரளா என இன்ஜினியர் சொல்லும் இடங்களில் வேலை பார்த்து வருகிறேன்இப்போது அப்படி வேலை பார்க்கும் இடத்தில் உள்ள இன்ஜினியர்களை மிரட்டி வேலை கொடுப்பதைக் கெடுத்தனர்.அடுத்து தெரிந்த பழக்கமுள்ள தனிநபர்களிடம் வேலைக்கு போனதும் அவர்களையும் மிரட்டி தொடர் தொல்லை கொடுத்து அந்த வேலைகளையும் கெடுத்தனர்.அதன் பிறகு நண்பர்களிடம் வேலைக்கு போனால் அதையும் கெடுத்தனர்நண்பர் ஒருவருடன் பிளம்பர் வேலைக்கு ஒருநாள் வேலைக்கு போனபோது வேலை பார்க்கும் இடத்து ஓனரையும் வேலை கொடுத்த நண்பரையும் நான் “கஞ்சா கடத்தலில் தொடர்புடைய ஆள்” போலீஸ் கண்காணிப்பில் இருக்கும் ஆள் என மிரட்டி அந்த வேலையும் கெடுத்தார்கள்.கடந்த ஓராண்டாக இப்படி வேலையில்லாமல் செய்து 2லட்ச ரூபாய் கடனாளியாக்கிவிட்டார்கள்கடைசியாக ஆடுமாடு மேய்க்கலாம் என அந்த வேலைக்கு போகப் போவது தெரிந்ததும் அந்த வேலை கொடுக்க வந்த தோட்டக்காரரையும் மிரட்டி அதையும் கெடுக்கப் பார்க்கிறார்கள்.உறவினர்கள், நண்பர்கள், தோழர்கள் என யார் வீட்டுக்குப் போனாலும் 5, 6 பேர் தொடர்ந்து பின்தொடர்வதும் நான் புதிதாக யாரை சந்தித்தாலும் அவர்களிடம் போய் “அந்தாளு தீவிரவாதி, பயங்கரவாதி அவருடன் சேராதீர்கள், உங்களையும் கண்காணிக்க நேரிடும் உங்களுக்கு அரசு வேலையில் சேர முடியாது” என அச்சுறுத்துவதும் தொடர்கதையாகிவிட்டது.இப்போது தோழர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்குவதைக்கூட சகிக்காமல் அவர்களை மிரட்டத் தொடங்கிவிட்டனர்.1993 – 98 ல் இதே போல காவல்துறை கந்துவட்டி மாபியாக்களுடன் கூட்டணி வைத்து ” கூலிப்படை வைத்து அவனைக் கொல்லுங்கள்” வழக்கு வராமல் பார்த்துக் கொள்கிறோம் என்ற நெருக்கடியில்தான் சொந்த ஊரைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதுஅதன் பிறகு கேரளா, கோவை, திருப்பூரில் எல்லாம் விரட்டிவிட்டு கடைசியாக நம்ம சொந்த ஊர் மதுரைக்கு வந்தாகிவிட்டது.இப்போது தோழர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்குவதைக்கூட சகிக்காமல் அவர்களை மிரட்டத் தொடங்கிவிட்டனர்சொந்த ஊரிலிருந்து விரட்டி 20 ஆண்டுகளுக்குப் பிறகு பெயின்ட்டிங் வேலையைக் கெடுத்து ஆடுமாடுகூட மேய்க்க விடாமல் கெடுத்து இப்போது நண்பர்கள் தோழர்கள் வீடுகளில் தங்குவதையும் கெடுத்து வருகிறார்கள்.மதுரைக்கு அருகே வாடிப்பட்டி ஊரில்தான் இந்தப் பிரச்சனை அந்த ஊர் இன்ஸ்பெக்டர் அந்த நண்பர்கள், தோழர்களை அழைத்து ” கடந்த 1மாதமாக இவரை ஏன் தங்க வைத்திருக்கிறீர்கள் இவர் யார் எனத் தெரியுமா 3 ஸ்டேட்டில் 50 க்கும் மேற்பட்ட உளவுத்துறை போலீஸாரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார் அவரை தங்க வைக்காதீர்கள் என மிரட்டியுள்ளனர்.அவர்கள் “முடியாது அவர் அப்படித்தான் தங்குவார்” என்றதும் அவர்களின் வீட்டு ஓனர்களையும் அவர்களை வேலை பார்க்கும் இடத்திலும் மிரட்டல் வேலை செய்து வருகிறார்கள்.இதற்கிடையில் முகநூல் தோழர் ஈழத்தமிழர் ஒருவர் லண்டனில் இருந்து சுற்றுலாவுக்கு தமிழ்நாடு வந்திருந்தார் மதுரையை சுற்றிப்பார்க்க வேண்டுமென எனது நண்பர்கள் அறையில் அவரும் தங்கினார்கொரோனா லாக்டவுன் தொடங்கி விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் தொடர்ந்து 8மாதம் தங்க வேண்டியதாகிவிட்டதுபின்னர் அவர் விமானச் சேவை தொடங்கியதும் லண்டன் சென்றுவிட்டார்.அதன் பிறகு 1மாதம் கழித்து இந்திய உளவுத்துறை “RAW”வில் இருந்து 2முறை விசாரித்தனர்மொத்தத்தில் NIA தவிர RAW, IB, CBCID, Qபிராஞ்ச், கேரளா CBCID, லோக்கல் போலீஸ் ஸ்டேசன் கண்காணிப்பு என எல்லோருடையத் தொல்லையும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.டீக்குடிக்கப் போனால், சிறிது தூரம் நடக்கப் போனால் எப்போதும் 5,6 பேர் சுற்றிக் கண்காணித்தபடியே இருக்கிறார்கள்.இனி வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்ததும் உளவுத்துறை கும்பல் மீதும் வாடிப்பட்டி காவல்நிலையம் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.வழக்கறிஞர் தோழர் முருகன், மாவோயிஸ்ட்டுகளுக்காக வாதாடி வருவதால் சிறையில் 1.5 ஆண்டுகள் அடைக்கப்பட்டவரும் கடந்த மாதம் போலி என்கௌன்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தோழர் வேல்முருகனின் அண்ணனுமான வழக்கறிஞர் தோழர் முருகன் அவர்களின் முன்முயற்சியில் புகாரும் வழக்கும் நடந்து கொண்டிருக்கிறது.வழக்கு விசாரணைக்கு உகந்ததா இல்லை தள்ளுபடி செய்யப்படுமா என்பது தெரியாதுஇருந்தாலும் உள்துறை அமைச்சகம், உள்துறை செயலாளர் , டிஜிபி, மதுரை SP, DSP, மனித உரிமை கமிசன் என எல்லா துறைக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளதுஎன்ன நடக்குமென்று பொறுத்திருந்துப் பார்ப்போம்.இதை எழுதுவதற்கானக் காரணம் இவர்களை அம்பலப்படுத்துவது மட்டுமல்ல எனக்கு இந்த அடக்குமுறைகள் தொல்லைகள் பற்றி 1% கூட கவலையோ பயமோ இல்லை என்பதையும் தெரியப் படுத்தத்தான்.காரணம், “சோவியத் ரஷ்யா உடைந்தது, கம்யூனிசம் தோற்றது” என உலகில் எல்லாப் பத்திரிக்கைகளும் தலைப்புச் செய்தி வெளியிட்ட 1991ல் தான் மார்க்சியமே சிறந்தது, கம்யூனிசமே வெல்லும் என்று முடிவு வந்து கம்யூனிஸ்ட்டாக மாறினேன்.அதன்பிறகு உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மார்க்சியத் தத்துவத்திற்கும் பெரும் நெருக்கடி கொடுக்கப்பட்டது உலகமயம், தனியார்மயம், தாராளமயம் அமலாக்கப்பட்டது அதன் கலாச்சார வடிவமாக பின்நவீனத்துவக் குப்பை பரப்பப்பட்டதுஅதையெல்லாம் தத்துவம் போராட்டம் நடத்தி தோற்கடித்து மீண்டும் கம்யூனிசமே வெல்லுமென முதலாளித்துவவாதிகளையேப் பேச வைத்தோம்.1991ல் கம்யூனிச தத்துவத்திற்கு ஏற்பட்ட நெருக்கடியைவிட பெரிய பிரச்சனையை இதுவரை பார்க்கவில்லை வழக்கம் போல வலதுசாரிகளின் அடையாள அரசியல், பார்ப்பனீயம், தேசிய வெறி, ஜாதிய மதவாதம் போன்ற சல்லித்தனமானப் பிரச்சனைகள்தான் இப்போது ஆட்டம்போடுகின்றன.இதெல்லாம் கம்யூனிசத்தின் முன் பெரிய விசயங்களல்ல.மேலும் முகநூலில் எனது பதிவுகளைத் தொடர்ந்துப் படித்துவரும் உளவுத்துறைக்கு ஒரு அறிவுறுத்தல்நீங்கள் UAPA சுமத்தி 1ஆண்டு சிறையில் அடைத்தாலும், 124 வழக்குப் போட்டு பல ஆண்டுகள் சிறையில் அடைத்தாலும் வெளியே வந்தாலும் இதே வேலையைத்தான் தொடர்ந்து செய்வேன்.அச்சுறுத்துவது, நெருக்கடி கொடுப்பது, வாழ்வாதாரத்தைக் கெடுப்பதென என்ன செய்தாலும் வீண் வேலையே.முகநூலை இதுவரை 51தடவை முடக்கினீர்கள், புஷ்கின் Pageஐ கடந்த 7மாதமாக முடக்கிவைத்திருக்கிறீர்கள் இப்படி பல தோழர்களின் முகநூல் கணக்கை முடக்கினீர்கள் இதனால் எழுத்து வேலை நின்றுபோனதா?.தொடர்ந்து 24 மணிநேரமும் எனது செல்போனை ஓட்டுக் கேட்பதும் அதை வைத்துப் பின்தொடர்ந்து வருவதும் செய்து வருகிறீர்கள் இதனால் எனது எழுத்து வேலை குறைந்ததா?கடந்த ஓராண்டாக உங்களால் வேலையிழந்து வருவாய் இழந்து என்னை கடனாளியாக ஆக்கிவிட்டீர்கள்ஆனாலும் முன்பைவிட அதிகமாகத்தான் கட்சிவேலை செய்கிறேன் ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட்அப்படித்தான் இருப்பேன்அப்படித்தான் இருக்கமுடியும் உளவுத்துறையினரே இன்னும் கொஞ்சம் திறமையா வேலை செய்யுங்க …வாழ்த்துக்கள் .#புஷ்கின்_FB 10/12/2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *