உக்ரைன் போர்
உக்ரைன் போர்

உக்ரைன் போர்

இன்று போர்களமாகி உள்ள உக்ரைனின் வரலாற்று பின்னணி குறித்து பார்க்கலாம்.

ஐரோப்பாவிலேயே மிகுந்த ஏழ்மையான நாடு உக்ரைன். அதிக விவசாய நிலங்கள் இருக்கும் நாடு. ரஷ்யாவுக்கு அடுத்து ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய பரப்பளவு கொண்ட நாடு. 4 கோடிக்கும் மேற்பட்டோர் உள்ளனர். தொழில் புரட்சிக்குப் பிந்தைய நவீன காலத்தில் உக்ரைன் எப்போதும் ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது. கி.பி. ஆயிரமாம் ஆண்டுகளின் தொடக்கத்தில், கீவியன் ரஸ் என்ற பேரரசு உக்ரைனை ஆட்சி செய்தது. தற்போதைய தலைநகரின் கீவ் என்ற பெயர் அதனால் வந்ததே.

தற்போதைய உக்ரைன், பெலாரஸ், போலந்து மற்றும் ரஷ்யாவின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக கீவியன் பேரரசு இருந்தது. விளாடிமிர் தி கிரேட், அந்தப் பேரரசின் புகழ்பெற்ற அரசர். கீவியன் ரஸ் என்ற பேரரசின் பெயரிலிருந்தே ரஷ்யா என்ற பெயர் உருவானது. 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் படையெடுப்பு கீவியன் பேரரசை வீழ்த்தியது. அதன்பின் போலந்து, லிதுவேனியா, ஆஸ்திரியா, ரஷ்யா ஆகிய நாடுகளின் மன்னர்கள் உக்ரைனைப் பங்கு பிரித்துக்கொண்டார்கள்.

நாட்டின் பெரும்பகுதி போலந்து வசம்போக, எதிர்த்து உக்ரைன் மக்கள் கிளர்ச்சி செய்தனர். பல்லாயிரம் பேர் இறந்த இந்த கிளர்ச்சி ‘கொசாக் கிளர்ச்சி’ என்று வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படுகிறது.

ரஷ்ய கம்யூனிஸ்ட் ஆதரவுடன் உக்ரைன் 1918ஆம் ஆண்டு தனி நாடாக உருவானது.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்றப் பிறகுதான் உக்ரைனில் அமைதி திரும்பியது.

இரும்புத்தாதுவும் நிலக்கரியும் அதிகம் இருந்த பகுதி என்பதால், வேகமான தொழில் வளர்ச்சி உக்ரைனில் வந்தது. ஒருகட்டத்தில் ஐரோப்பாவிலேயே பெரிய தொழில் மையமாக உக்ரைன் இருந்தது. சோவியத்தின் புகழ்பெற்ற விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் பலர் உக்ரைனில் உருவானார்கள். குருசேவுக்குப் பிறகு சோவியத் யூனியனை ஆட்சி செய்த பிரஷ்னேவ் இங்கிருந்து சென்றவர்தான். 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்தபோது உக்ரைன் தனி நாடாக உருவானது.

சோவியத் யூனியனிலிருந்து 7 லட்சத்து 80 ஆயிரம் படைவீரர்கள் கொண்ட ராணுவமும், அணு ஆயுதங்களும் உக்ரைனுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. உக்ரைன், உலகிலேயே அதிக அணு ஆயுதங்கள் கொண்ட மூன்றாவது வல்லரசாக மாறியது. அணு ஆயுதங்களை வைத்திருக்க விரும்பாத உக்ரைன் எல்லா அணு ஆயுதங்களையும் அழிப்பதற்காக ரஷ்யாவிடம் கொடுத்து, நான்கே ஆண்டுகளில் அணு ஆயுதமே இல்லாத தேசமாகிவிட்டது. உக்ரைன் மக்கள்தொகையில் ஐந்து பேரில் ஒருவர் ரஷ்ய இனத்தவர். நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு ரஷ்ய மொழி பேசத் தெரியும்.

ரஷ்ய ஆதரவாளராக இருந்த உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச் 2013ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியனுடன் இருந்த உறவைத் துண்டித்தார். உக்ரைன் மக்கள் வீதிக்க வந்து போராட, இந்தப் போராட்டத்தை அமெரிக்கா தூண்டிவிடுவதாக புதின் குற்றம் சாட்டினார். பல மாதங்கள் நீடித்த போராட்டத்தால் விக்டர் அரசு வீழ்ந்தது. விக்டர் ரஷ்யாவுக்கு ஓடினார். இதனால் புதின் உக்ரைன் மீது 2014ஆம் ஆண்டு படையெடுத்தார். அதன் தெற்கில் இருந்த கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டார். அந்த மோதலின் இரண்டாவது கட்டம் தான் இப்போதைய போர்.

இதையும் படிக்கலாம்:

சோவியத் யூனியன் வீழும் வரை உலகம் இரு துருவநிலையில் மையம் கொண்டிருந்தது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப்பிறகு உலகம் அமெரிக்காவை மையம் கொண்டு ஒற்றைத் துருவமாக சில காலம் இயங்கி வந்தது.

சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகான ரஷ்யாவில் பெரும்பான்மையான காலத்தை புதின் மட்டுமே ஆட்சி அதிகாரத்தை சுவைத்து வந்திருக்கிறார். இன்னமும் அதுதான் தொடர்கிறது. தனது நாட்டின் எல்லா எதிர்ப்புக் குரல்களையும் புடின் நசுக்கியே வந்திருக்கிறார்.

உலகில் பெரும்பான்மையான இயற்கை வளங்களை தன்னகத்தேக் கொண்டிருக்கும் ரஷ்யா தனித்து வாழ்வதற்கும், தனது செல்வ வளத்தைப் பெருக்கிக் கொள்வதற்கும் எல்லா உரிமையும் உண்டு.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பு பிரதானமாக சோவியத் கூட்டமைப்புக்கு எதிராகத் தோற்றுவிக்கப்பட்டது. சோவியத்தும் வார்சா கூட்டமைப்பை ஏற்படுத்தியது. சோவியத் விழ்ச்சிக்குப்பிறகு வார்சா செயலிழந்தது.

புதிய ஒற்றைத் துருவ உலகில் அமெரிக்கா தலைமையில் உலக நாடுகள் கோலோச்சின. நேட்டோ கலைக்கப்படவில்லை. மாறாக ரஷ்யாவை அது சுற்றி வளைத்தது. ஈராக், லிபியாவை மேற்குலகம் சூறையாடியது. ஐ.நா. மன்றம் செயலிழந்தது. புதிய உலகிற்கேற்ப ஐ. நா. புத்தமைக்கப்படவில்லை. வீட்டோ அதிகாரங்களின் மூலம் பெரும் நாடுகளின் அதிகாரத் துரைத்தனங்கள் கொஞ்சமும் குறையவில்லை. முன்னாள் சோவியத் குடியரசுகளுக்கு நேட்டோ வலை விரித்தது. அதன் முக்கிய இலக்கு உக்ரைன். நேட்டோவை நோக்கி உக்ரைனை ரஷ்யா வலுக்கட்டாயமாகத் தள்ளியது. அப்படி இல்லையென்றால் உக்ரைனின் அணு ஆயுதத்தை மேற்குலகம் ஏன் களைந்தெடுக்கவேண்டும்? அணு ஆயுதம் கொண்டிருந்த உக்ரைன் நேட்டோவுக்கு இனிமையானதல்லவா?

உக்ரைன் மூலமாகத்தான் ஜெர்மனிக்கும் பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷ்யாவிலிருந்து எரிவாயு சப்ளை நடக்கிறது. அதன் மூலமாக உக்ரைனுக்கும் நல்ல வருமானம் வருகிறது. தனது கொழுத்த வருமானத்தில் உக்ரைனுக்கும் ஒரு பங்கைக் கொடுப்பதில் ரஷ்யாவுக்கு கோபம். உக்ரைனுக்கு கொடுக்கப்படும் செலவை அறவே நீக்க திட்டமிட்டு, நார்ஸ்ட்ரீம்2 திட்டத்தில் நேரடியாக ஜெர்மனிக்கு எரிவாயு சப்ளை செய்ய ரஷ்யா செயல்பட்டது. திட்டமும் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டம் அமலுக்கு வருமானால் உக்ரைனுக்கு செல்லும் வருமானம் கடுமையாகப் பாதிக்கும். இப்போது சொல்லுங்கள் ரஷ்யா இப்படி செய்தது சரியா? அதனால் தனக்கு ஆசை காட்டிக்கொண்டே இருக்கும் நேட்டோ வலையில் உக்ரைன் விழ ஆரம்பித்தது. ரஷ்யாவை தனது எதிரியாகப் பார்க்க ஆரம்பித்தது உக்ரைன். தனது முன்னாள் சகோதரனான உக்ரைனுக்கு சிறு பொருளாதார சலுகையையும் கூட தர மறுக்கும் ரஷ்யாவோடு உக்ரைன் எப்படி இணங்கிச் செல்லும்?

இன்று ரஷ்யா ஒரு பொதுவுடைமை நாடு அல்ல. அதுவும் ஒரு ஏகாதிபத்திய நாடாக வளர்ந்து வந்துவிட்டது. போரினால் அதன் மீது உலகநாடுகள் விதிக்கும் தடைகள் அதற்கு ஒரு பொருட்டல்ல. உணவு, எரிபொருள், அணு ஆயுதம், நவீன அறிவியல் அனைத்திலும் ரஷ்யா தன்னிறைவு பெற்ற நாடு. அமெரிக்க வற்புறுத்தலினால் நார்ஸ்ட்ரீம்2 திட்டம் தற்போது ஜெர்மனியால் நிறுத்தப்பட்டாலும், ராஷ்யாவுக்கு துளியும் இழப்பில்லை. ரஷ்யாவிடமிருந்து அடுத்த பல பத்தாண்டுகளுக்கு எரிவாயுவை வாங்க சீனா பல பில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

போரை உடனடியாக நிறுத்த புடின் முன்வரவேண்டும். இல்லையென்றால் பெரும் போராக உருவெடுக்க எல்லா வேர்களையும் அது கொண்டிருக்கிறது. ரஷ்யாவை நேட்டோ தாக்கினால் சீனா ரஷ்யாவுக்கு சாதகமாக மாறும். சீனாவும், ரஷ்யாவும் இணைந்து இப்போது புதிய மற்றொரு துருவமாக மாறியிருக்கிறார்கள். உக்ரைனை ரஷ்யா வெற்றி கொள்ளும்பட்சத்தில், தைவான் மீது சீனா படையெடுக்கலாம். போர் உலகின் நாலா திசைகளுக்கும் பரவ எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. ஏனென்றால் இப்போது போர் அறிவியலால், தொழில் நுட்பங்களால் நடத்தப்படுகிறது.

இதையையும் படிக்கலாம்

உக்ரைன் மீதான போருக்கு முக்கிய காரணமாக கடல்வழி வர்த்தகமும், அதற்கு உறுதுணையாக இருக்கும் கருங்கடல் துறைமுகமும் அமைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
தங்கள் நாட்டின் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு உலக நாடுகளுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்து கதறி அழுதது. இருப்பினும் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா கூட அந்நாட்டுக்கு பெரிதாக உதவவில்லை.
இதனால் போர் முடிவுக்கு வராமல் நீண்டுக் கொண்டே செல்லும் நிலைதான் தற்போது வரையில் உள்ளது.
ஒன்றுபட்டிருந்த சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் பிரிந்து சென்ற பிறகு அந்நாட்டுக்கும், ரஷியாவுக்கும் இடையே இருந்து வந்த மனக்கசப்புகளே தற்போது மோதலாக மாறி இருக்கின்றன.
உக்ரைன் ரஷியா மோதல்
இதனால் உக்ரைனில் போர் உக்கிரமாக உள்ளது. ரஷிய படைகளின் முன்னால் உக்ரைன் படையால் தாக்கு பிடிக்க முடியவில்லை. இதனால் உக்ரைனை ரஷியா முழுமையாக கைப்பற்றும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இந்த போருக்கு முக்கிய காரணமாக கடல்வழி வர்த்தகமும், அதற்கு உறுதுணையாக இருக்கும் கருங்கடல் துறைமுகமும் அமைந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த வரலாற்று பின்னணியில் ரஷியாவின் பாதுகாப்பும் அமைந்துள்ளது. இதன் காரணமாகவே ரஷியா உக்ரைன் மீது மிகவும் உக்கிரமாக போர் தொடுத்துள்ளது.
பறந்து விரிந்த கடல் பரப்பில் செவஸ்டபுல் துறைமுகத்துக்கு ரஷியா ஏன் அவ்வளவு முக்கியத்துவம் தருகிறது? அதன் பின்னணி என்ன? என்பதை பார்க்கலாம்.
ரஷியாவின் நிலப்பரப்பு என்பது மிகவும் பெரியதாகும். 17 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அந்நாட்டின் நிலப்பரப்பு பறந்து விரிந்து கிடக்கிறது. 36 ஆயிரம் கிலோ மீட்டர் கடலோரத்தையும் அந்த நாடு பெற்றிருக்கிறது.
இப்படி ரஷிய கடல் பரப்பு மிக நீளமாக இருந்த போதிலும் அதனை ரஷியாவால் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையே இருந்து வருகிறது. ரஷியாவின் கடல் பரப்பு நீளம் வடதுருவம் வரை பரவி இருப்பதால் ஆண்டு முழுவதும் கடல் உரைந்தே காணப்படுகிறது.
இதனால் இந்த கடல் பரப்புகள் ரஷியாவின் வணிக பயன்பாட்டுக்கும் எந்த வகையிலும் பயன் அற்றே உள்ளது.

உருக்குலைந்த ரஷியாவின் வீழ்ச்சிக்கு பிறகு அருகில் உள்ள உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் ரஷியாவுடன் நல்ல தொடர்பில் உள்ளன. ஆனால் ஐரோப்பிய பகுதிகளுக்கு அருகில் உள்ள ருமேனியா, லித்து வேனியா ஆகிய நாடுகள் ஐரோப்பிய மேலைநாடுகள் மற்றும் நேட்டோவுடன் தொடர்பில் உள்ளன.
இந்த நிலையில் உக்ரைனின் கிழக்கு பகுதி ரஷியாவையும், மேற்கு பகுதி ஐரோப்பா பகுதிகளையும் சார்ந்து செயல்பட்டு வருகிறது.
உக்ரைன் நாடு புவியியல் ரீதியாக தெற்கு பகுதியில் உள்ள கிரீமியாவில் செபஸ்டபுல் துறைமுகத்தை பெற்றுள்ளது. ரஷியா-உக்ரைன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி அந்த துறைமுகத்தை ரஷியா குத்தகைக்கு எடுத்துள்ளது.
அதே நேரத்தில் உக்ரைனின் இறையாண்மையை எப்போதும் பாதுகாப்போம் என்று ரஷியா உறுதி அளித்து இருந்தது.
இந்த நிலையில்தான் உக்ரைன், ஐரோப்பா மற்றும் நேட்டோ நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்காக காய்களை நகர்த்தியது. அது போன்று நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணையக்கூடாது என்று ரஷியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
ஆனால் ரஷியாவின் பேச்சை கேட்காமல் உக்ரைன் நேட்டோ நாடுகளுடன் இணைவதில் உறுதியாக இருந்தது. அதற்கான வழிமுறைகளையும் அது கையாண்டது.
இப்படி நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் நாடு சேர்ந்து விட்டதால் நேட்டோ படைகள் உக்ரைன் துறைமுகம் பகுதிக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழல் ஏற்பட்டது.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கடல்வழி வணிகத்துக்கு பெரும் துணையாக இருக்கும் செபஸ்டபுல் துறைமுகத்தை இழக்க நேரிடும் என்கிற கவலை ரஷியாவுக்கு ஏற்பட்டது.
அதே நேரத்தில் தங்கள் நாட்டு பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்று ரஷியா கருதியது. இதன் காரணமாகவே உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது.
ரஷியாவுடன் உக்ரைன் மோதல் போக்கை கடைபிடிப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2013-ம் ஆண்டு உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக முனைப்பு காட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், உக்ரைனின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையிலும் ரஷிய அதிபர் புதின் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அப்போதுதான் உக்ரைனின் கட்டுப்பாட்டில் இருந்த கிரீமியாவை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து செபஸ்டபுல் துறைமுகத்தையும் தங்கள் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தது.
அப்போதே புதின் உக்ரைனை எச்சரிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார். அளவுக்கு மீறி ஒரு விசயத்தில் கால்பதித்தால் அது உங்களையே திருப்பி தாக்கும் என்று அவர் எச்சரித்து இருந்தார். அதுதான் இப்போது உக்ரைன் விவகாரத்தில் நடந்துள்ளது என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.
இதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட உக்ரைன் ஆதரவு நாட்டினர் தங்கள் எல்லை பகுதிகளுக்குள் வராமல் ரஷியா தங்களை உறுதியாக பாதுகாத்துக் கொள்ளவே போரை நடத்தி வருவதாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்தப் போர் என்பது அழிவு போரே.

இதனை எதிர்ப்பதும் இதனை நிறுத்த சொல்வதும் ஒவ்வொரு ஒருவரின் கடமையாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *