உக்ரேன் போரைப் பற்றி என்று பலரும் பேசிக் கொண்டுள்ளனர் உண்மையில் இதில் நான் மூன்று விதமான போக்குகளை காண்கின்றேன்.
முதலாவது போக்கு ரஷ்யாவை ஆதரிப்பது
இரண்டாவது போக்கு ரஷ்யாவை எதிர்த்து
மூன்றாவது போக்கு ஒரு போர் என்பது மார்க்சிய அடிப்படையில் என்ன வகைப்பட்டது அதில் போரில் ஈடுபடும் பலரின் பலாபலன்களைப் பற்றி பேசுவதாக
என்ற மூன்று அம்சங்களை பற்றி பேசுவது தான் இந்த பதிவின் நோக்கம்
ரஷ்யாவை ஆதரிப்போர் பற்றி
ரஷ்யா இன்றும் சோசலிச முகாம் என்றும் ரஷ்யா ஒரு கம்யூனிச நாடு என்றும் ஏமாற்றும் இவர்கள் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள பாராளுமன்ற வாதிகளான சிபிஐ சிபிஎம் போன்ற பலரின் கருத்தாக உள்ளது உண்மையில் ரசியா சோசலிசத்தை கைவிட்டு என்றோ முதலாளித்துவப் பாதையில் சீரழிந்து போயுள்ளதை இவர்கள் காண மறுக்கின்றனர் . இப்போதும் போர் பற்றியும் இவர்களுடைய கண்ணோட்டம் மார்க்சிய அடிப்படையில் இல்லை என்பது என்னுடைய கருத்தாகும் ஆகும்.
ரசியாவை எதிர்போரை பற்றி
ஆம் போரை எதிர்க்கும் பெரும்பாலானவர்கள் ரசியாவை குற்றம் கூறி போர் ஏற்பட்ட காரணத்தை பேசாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலைப்பாடு அதாவது அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் ஊதுகுழலாக அவர்கள் காட்டும் பாதையில் இவர்களின் கருத்தாக்கங்கள் உள்ளது இவை எந்த விதத்திலும் போரின் அடிப்படைக் காரணங்களையும் அவற்றுக்கான ஏகாதிபத்திய கொள்ளையை பற்றி பேசப்போவதில்லை.
போர் என்று ரஷ்ய அமெரிக்க ஏகாதிபத்தியம் நிலைப்பாட்டை விவாதிக்கும் இந்த மூன்றாவது வகையான அவர்கள் பல சரியான மார்க்சிய அடிப்படையில் பேசுகின்றனர்