இ.க.க வரலாற்றில்-2

இ.க.க தியாகமும் போராட்டமும் மறைக்கவோ மறுக்கவோ முடியாதது. மார்க்ச்சியத்தைவிட்டு தலைமை ஓடுகாலியானவற்றை முன் நிருத்தி நான் எழுதுகிறேன். இன்றளவும் அடிமட்ட தோழர்கள் கட்சிக்கு உண்மையுடன் உழைக்கின்றனர் ஆனால் இவை வீணாகி போவதைதான் நான் சுட்டிகாட்ட நினைக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு முதுபெரும் தோழரை சந்திக்க வாய்ப்பு கிடைத்து, அவரிடம் விவாதிக்கும் போது தனது இளமை கால களபணி குறித்தும் பின்னர் தலைமையின் அராஜகவாத போக்கையும் மக்கள் மத்தியில் தனிமைபட்டுள்ள நிலைமை பற்றியும் பேசினார், பின்னர் நான் கேட்டேன் தளி ராமசந்திரன் போன்ற கிரைனட் மாப்பியா, குண்டர்படை தலைவன் கம்யூனிஸ்டா? ஏன் இவனின் தேவை கட்சிக்கா அல்லது அவனுக்கா? அவனை கட்சி மேலிடம் உயர்த்தி பிடித்துள்ளது ஏன்? என்றேன்?அவரிடம் சரியான முறையில் விளக்கம் கொடுக்க முடியாமல் போகவே அதனை தவிற்த்தேன்!மேஜர் ஜெய்பால் சிங்கின் “நாடு அழைக்கிறது” படித்திருப்பீர் என்று நினைக்கிறேன், அதில் அவர் நேருக்கு எழுதிய கடிதம் வெளியிட்டிருப்பார்கள் நேருவின் உண்மை முகத்தை அவர் கிழித்திப்பார் ஆனால் தலைமையோ அதே நேருவிடம்…. நட்பா அல்லது ….1946ல் ஆங்கிலேய ஏகாத்தியபத்தியதின் எதிர்பில் கடற்படை, விமானபடை மற்றும் காலாட்படை பிரிவுகள் மக்களுடன் இணைந்து போராடுகின்றனர் ஆங்கிலேயர்களோ விழிபிதுங்கி நிற்க்கின்றனர், இங்கோ காந்தியும், நேருவும், பாட்டேலும் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக அறிக்கை விடுகின்றனர், போராட்டகாரர்களை கண்டிக்கின்றனர் பலிவாங்கிய ஆங்கில அரசை கண்டிக்க வில்லை. அந்த நேருவை CPI,CPM கொண்டாடிய முறைமைகளுக்கு காரணம் தெரிவிக்குமா? (அவர் இறந்த பின்னர் அவரை கொண்டாடியதை குறிப்பிடுகிறேன்). நாளை வேறொரு செய்தியுடன் தொடர்வேன் சி.பிநான் பதிவை இதனுடன் நிறுத்தியிருந்தேன். இனி தொடர உத்தேசித்துள்ளேன்.இதனை தொடர சில காரணம் உள்ளன தோழர்களே!!!! எனது சில கேள்விகள் உங்கள் முன்,1, 1947 ஆட்சி மாற்றம் யாருக்கானது இதை நாட்டின் சுதந்திரம் என்பதா?2. இந்திய முதலாளிகள் தரகு முதலாளிகளா? தேசிய முதலாளிகளா?3.இந்திய அரசு காலனிய, அரை காலனிய நிலைபாடுடையதா?4.இந்திய முதலாளிகள் ஏகாதிபத்தியத்தின் எதிர்பாளர்களா? இன்னும் தொடரும் இதன் பதிலில்தான் உண்மையான மார்க்சியா அறிவுள்ளது!!!!.